Thursday, October 31, 2019

#அரசியல்இன்று கூட்டணி என்றாலே குடைச்சல் தான்!

மஹாராஷ்ட்ரா அரசியல் குழப்பங்கள், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆனபின்னாலும் தீர்ந்த பாடில்லை. சிவசேனா ஒரு முழம் இறங்கி மூன்று முழம் கொம்பேறிப் பேசிக் கொண்டிருக்கையில் சிவசேனாவின் ஆதித்ய தாக்கரேவுடன் அதன் MLAக்கள் +7 சுயேட்சைகள் (சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்) கும்பலாக மும்பையில் ஆளுநர் மாளிகைக்குப் போயிருக்கிறார்கள்! இந்த விவகாரத்தில் The Print தளத்தின் சேகர் குப்தா நேற்று ஒரு 22 நிமிட வீடியோவில் சிவசேனா என்ன நினைப்பில் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்பதை சொல்கிறார்!

  
காங்கிரஸ் கட்சி இன்னமும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிவசேனா பின்னால் அலைகிறது. குமாரசாமியை முதலமைச்சராக்கிப்பார்த்த   formula கர்நாடகத்திலேயே எடுபடவில்லை என்கிறபோது மஹாராஷ்டிராவில் மட்டும் எடுபடுமா என்ன? 


Oct 31, 20196:50 pm (IST)
Shiv Sena MLA Aditya Thackeray says that the delegation met the Governor to request him to provide financial assistance to the losses faced by the farmers in view of the drought situation.  "We have requested the Governor that whatever losses the farmers have faced, the government should try to help them. Our priority is to help people," Thackeray said.  என்கிறது News 18 செய்தி. அல்லாப்பேரும் ஜோரா ஒருக்கா கைதட்டுங்க! 


காங்கிரஸ் கட்சி என்றால் இரண்டுவிஷயங்கள் தான் நினைவுக்கு வரும்! முதலாவது, ராகுல் காண்டி கட்சித்தலைவராகப் பொறுப்பைத் தட்டிக்கழித்து விட்டு ராஜினாமா செய்து விட்டு ஓடியது! அடுத்தது அடிக்கடி எங்காவது வெளிநாட்டுக்கு சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவது! இப்போதும் இந்தோனேசியாவுக்கு தியானம் செய்யப் போயிருக்கிறாராம்! 17 நிமிட வீடியோவில் புலம்பித தள்ளுகிறார்கள். இந்த லட்சணத்தில் பப்பி பிரியங்கா. பிஜேபியில் சுதந்திர போராட்ட வீரர்கள் யாரும் இல்லாததால் தான் காங்கிரசிலிருந்து சர்தார் படேல் போன்றவர்களைத் திருடுகிறார்கள் என்ற மாதிரிப் பேசியிருப்பது செம காமெடியாக இருக்கிறது! 


ஆச்சரியம்! சோனியா & வாரிசுகளுக்கு, பிஜேபி கொண்டாடிய பிறகுதான் வல்லபாய் படேல், லால் பகதூர் சாஸ்திரி, ஏன் ஒரிஜினல் காந்தி ஞாபகமே வருகிறது! ல்லாப்பேரும் ஜோரா இன்னொருக்கா கைதட்டுங்க! 

  இந்தவார துக்ளக் அட்டைப்பட நையாண்டி     

மீண்டும் சந்திப்போம். 
         

Wednesday, October 30, 2019

இப்போது என்ன அவசரம்? தேர்தல்களும் சீர்திருத்தங்களும்!

நம்மூர் ஆனந்த விகடன் தளத்தில் கூட அபூர்வமாக ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் உருப்படியான செய்தி, அதுவும் இந்தக்காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக வந்து விடுகிறது என்பது கொஞ்சம் ஆனந்தமான அதிர்ச்சி தான்! முதலில் செய்தி என்ன என்று பார்த்து விட்டு, அப்புறம் அதில் ஆனந்தம், அதிர்ச்சி எல்லாம் எங்கே இருந்தது என்பதைப் பார்த்து விடலாம்! நாம் தமிழர் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையத்தால் ரத்துசெய்ய முடியாது... ஏன்? இதுதான் அந்த செய்தியின் தலைப்பு!


இங்கே ஆவி  செய்தியைப் போட்டுச் சொல்ல நினைப்பது, சீமான் கட்சிப்பதிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ்காரன் குதித்துக் கொண்டிருக்கிற மாதிரியான அற்ப ராஜ விசுவாசக் குரல் அல்ல! இது இங்கே உள்ள தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்,  தேர்தல் ஆணையத்தின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருப்பது, கட்சித் தாவல்  தடைச் சட்டம் என ஒன்று   இருந்தும் இல்லாமல் ஆக்கி விடுகிற  சித்து வேலைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள உதவுகிற மாதிரி ஒரு தொடக்கம்! அதற்கான  செய்தி இது  என்பதால்  கொஞ்சம் ஆனந்தம்! 

கோளாறுகள் ஒரு அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிற தொடக்க நிலையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. கோளாறு இருப்பது தெரிய வந்தாலும் கூட கட்சியைப்  பதிவு செய்கிற தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் அப்படி ஒரு பல்லில்லாத அமைப்பால் என்ன பிரயோசனம்? மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் 62, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 2,301 என மூன்று வகைகளிலும் சேர்த்து,மொத்தம் 2,370 கட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. அரசியல் கட்சிகளுக்கு பெறப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிவிதிவிலக்கு முதலான சலுகைகளை அனுபவிப்பதற்காகவே இதுமாதிரியான கட்சிகள் புற்றீசல் மாதிரி ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டதைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு சிறிதளவுகூட இல்லை. தேர்தல் சீர்திருத்தங்கள் மிகமிக அவசியம் அவசரம் என்றாலும் கூட, இங்கே உள்ள அரசியல் கட்சிகள் எதுவும் கண்டுகொள்வதில்லை. ஏன் என்பதைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிற செய்தி என்பதால், ஆனந்தம் கலந்த அதிர்ச்சி!

மேலே சுட்டியில் செய்தியை வாசித்துவிட்டு நீங்கள் நினைப்பதென்ன என்பதைச் சொல்லத்தான் கொஞ்சம் மனது வையுங்களேன்!


     
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் தனிப்பட்ட முறையில் காஷ்மீருக்கு விஜயம் செய்திருப்பதோ, ராகுல் காண்டி ப்ரியங்கா வாத்ரா அப்புறம் NDTV, The Prnt உள்ளிட்ட ஊதுகுழல்கள் எல்லாமாகச் சேர்ந்து குய்யோ முய்யோவென கூக்குரல் எழுப்பியதோ இங்கே எத்தனைபேர் காதில் விழுந்ததாம்? சதீஷ் ஆசார்யாவின் கார்டூன் கூட அதே ரகம் தான்! மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறவர்கள் இருக்கிற தேசம் தானே இது!


உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே என்று கன்னியர்கள் பாட்டுப்பாடுகிற மனம் கவர்ந்த  சால்வை அழகராக வலம் வந்த சீனாதானாவா இது? சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்றைக்கு கூடுதலாக ஒருநாள் கஸ்டடி விசாரணை கோரி அமலாக்கத்துறை விண்ணப்பித்ததை நிராகரித்து 14 நாட்கள் அதாவது  நவம்பர் 13 வரை நீதிமன்றக்காவலுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டதாம்!  ஆனாலும் உடல்நிலையைக் கருதி திஹார்சிறை அதிகாரிகள் அவருக்கு மருந்துகள், மேற்கத்தியக் கழிவறை, தனிச்சிறை, பாதுகாவலர்கள் ஆகியவற்றை வழங்கவும், வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவை வழங்கவும் நீதிமன்றக் கருணை கிடைத்திருக்கிறதே! அதுபோதாதா? !!  

  
அக்டோபர் 31 நாளை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உதயம்! கலகம், குழப்பம், தீவிரவாதம் இவைகளிலிருந்து விடுபட்டு இந்தப் பகுதிகளில்     தேசிய ஒற்றுமை தழைக்க   வாழ்த்துவதோடு அதற்காகப் பிரார்த்தனையும்  செய்து கொள்வோம். 

மீண்டும் சந்திப்போம்.   
        
     

Tuesday, October 29, 2019

ஹலோ! ஹலோ! eye testing!

நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் இந்தப் பக்கங்களின் font size பற்றிய feed back முந்தைய பதிவில் கிடைத்திருக்கிறது. Normal  


கூகிள் Chrome பயன்படுத்துவதில் சிக்கல் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதையே firefox  இல் பார்க்கும் போது எழுத்துக்கள் மிகச் சிறிதாகத் தெரிவதை நானே பார்க்கிறேன். small  

இங்கே மூன்று வெவ்வேறு சைஸ் எழுத்துக்களைப் பயன் படுத்தி இருப்பதில் எது உங்களுக்குப் படிப்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்கிறது? Smallest  


கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி உதவும் மனமுள்ள நண்பர்களுக்கு அட்வான்ஸ் நன்றி! இதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? ! Normal

smallest, small, Normal, Large என பிளாக்கரில் கிடைக்கும் 4 வகையையும் பயன்படுத்தி firefox இல் பார்த்தால் Large ஒன்றைத்தான் அது 100% இல் சட்டை செய்கிறது. மற்றவைகள் மிகச் சிறிதாகத்தான்! Consent to be ..nothing தளம்  firefox இல் இன்னமும் சிறிதாக. அதை விட இந்தப்பக்கங்களில் ட்வீட்டர் பக்கங்களில் இருந்து நேரடியாக எடுத்துப் போட்டிருப்பதை firefox மிகக் கேவலமாக நிராகரிக்கிறது.
மொபைலில் வாசிப்பதற்குத் தடங்கல் எதுவுமில்லை.       

இந்தக் கோளாறுக்கு என்ன செய்யலாம்? small   

மீண்டும் சந்திப்போம் Large     

Monday, October 28, 2019

இருக்கும் இடம் தேடி வரும் செய்திகள்!

ஹிந்து ஆங்கில நாளிதழை விடுங்கள்! அது சிவப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு  மவுன்ட்ரோடு மாவோ என் ராமால் நடத்தப்படுகிற ஒருமாதிரியான கலப்படம்! சீனா பற்றியும் பேசுவார்கள்! உள்ளூரில் சீனாதானா மாதிரி கடைந்தெடுத்த ஊழல் ஆசாமிக்கு  ஜாமீன் கேட்டுத் தலையங்கம் கூட எழுதுவார்கள்! ஆனால் நம்மூர்  ஆங்கில  ஊடகங்கள் (TOI, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மாதிரி) சீனாவின் உள்ளூர் அரசியல் விவகாரங்களையும் அவ்வப்போது கவனித்துச் செய்திகளும் போடுகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியப்படுத்துகிற சமாசாரம்! இங்கே தமிழில் திமுகவின் காலடியைச் சுற்றிவந்து செய்திபோட்டால் போதுமென்று கிடக்கிற ஊடகங்களுக்கு இது நிறையவே வித்தியாசமானது இல்லையா? 

இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் 
முழு அளவிலான கூட்டம். ப்ளீனம் என்று சொல்வார்கள்.
இன்று திங்கள் தொடங்கி வியாழன் வரை நான்கு நாட்கள் 
கூடி விவாதிக்கப்போகிறார்கள் என்பதில் என்ன 
அத்தனை சுவாரசியம் இருக்கிறது? 

ஹிந்து ஆங்கில நாளிதழ் PTI செய்திகளை மேற்கோள் காட்டி Chinese Communist Party kicks off delayed conclave to discuss Hong Kong protests, trade war என்று தலைப்பிலேயே ரொம்பவும் பில்டப் கொடுத்து சொல்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம், வரைவுத் திட்டம் இவையெல்லாம் மிக மிக அலுப்பூட்டுகிற சாங்கியம். இதற்கு முன்னால் 2018 பிப்ரவரியில் நடந்த இதேபோன்ற கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஷி ஜின்பிங் ஆயுட்காலம் உள்ள வரை சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அதன்மூலம் சீன அதிபராகவும் நீடிப்பதற்கும்  வழிவகை செய்யும் சாஸனத் திருத்தம் செய்யப்பட்டது. மா சேதுங், டெங் சியாவோ பிங் இருவருக்குப் பின்னால் சீனாவின் Paramount Leader அந்தஸ்தும், ஷி ஜின்பிங்கின் சிந்தனைகள் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதிய வேதமாக அறிவிக்கப்பட்டதுமான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதால், இந்தக் கூட்டத்திலாவது சீனப் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், விவாதம் நடந்து வெளியே தெரிய வந்தால் மட்டுமே எதிர்பார்ப்புக்களை எந்த அளவுக்கு இந்த ப்ளீனம் நிறைவேற்றப் போகிறது என்பதும்  தெரியவரும். The official Xinhua News Agency said the party’s 19th Central Committee opened its fourth plenary session Monday. It said Xi Jinping, the party’s leader and China’s president, discussed a draft document on strengthening party rule but gave no details.என்கிறது வாஷிங்டன் போஸ்ட் செய்தி  


நல்ல நாளிதழ்தான்! வாட்டர்கேட் ஊழல் என்று ரிச்சர்ட் நிக்சன் செய்த தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்ட நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட்! டொனால்ட் ட்ரம்ப் மீதுள்ள வெறுப்பு அபு பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதில் மிக விசித்திரமான obituary செய்தி வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது!


பிரிட்டிஷ் அரசியலும் சரி, அதன் அரச குடும்பத்தின் சர்ச்சைகளும் சரி மிக மிக விசித்திரமானவை. #Brexit  போரிஸ் ஜான்சன் வேண்டுகோளுக்கு  இணங்க ஐரோப்பிய ஒன்றியம், வருகிற ஜனவரி 31 வரை காலக்கெடுவை நீட்டித்திருக்கிறது. ஆனால் போரிஸ் ஜான்சனின் கனவுகளுக்கு வரவிருக்கும் பொதுத்தேர்தல் இடம் கொடுக்காதாமே! சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று எந்த நேரத்தில் மார்தட்டிச் சொன்னார்களோ?! இன்று கூனிக்குறுகிப்போய்க் கொண்டே இருப்பது காலத்தின் கட்டாயம்! 

        
Westminster தேர்தல்முறை  அரசியலின் அபத்தங்களை இங்கே மகாராஷ்டிராவில் சிவசேனா  மிகநன்றாகப் பயன்படுத்திக் கொண்டு ரவுசு காட்டுவதும்  பிஜேபி தொடர்ந்து அமைதி காத்து வருவதும் இங்கே இன்றைய அரசியலின் விசித்திரம்! 


இன்று கந்த சஷ்டி. திருச்செந்தூர் சூர சம்ஹாரம்.  

மீண்டும் சந்திப்போம். 

Saturday, October 26, 2019

அடடே! வாருங்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அடடே! மதி வரைந்த படத்தோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 


உறவு, சுற்றம், நட்புகளோடு இந்தத் தீபாவளித் திருநாள் மிக மகிழ்ச்சியான நாளாக அமைய இதயபூர்வமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!


வாழி நலம் சூழ!

மீண்டும் சந்திப்போம்.  

Friday, October 25, 2019

கதம்பமாக சில விஷயங்கள்! அரசியல்! கார்டூன்கள்!

பொதுத்துறை நிறுவனங்களை நாசமாக்கியதில் காங்கிரஸ் ஆட்சியாளர்களுடைய ஊழல் திருவிளையாடல் ஒருபாதி காரணமென்றால், பொறுப்பற்ற ஊழியர்களும் தொழிற் சங்கங்களும் மறுபாதி காரணம் என்பதை எப்போது சரியாகப் புரிந்துகொள்ளப் போகிறோம்?  BSNL, மற்றும் MTNL இரு நிறுவனங்களும் இணைக்கப்படும்என்ற மத்திய அரசின் முடிவின் மீதான ஒரு கடுமையான எதிர்ப்புக் குரலை நேற்று முகநூலில் பார்த்தேன்.


   
ஒரு அரசின் வேலை நிர்வாகமே தவிர வணிகம் செய்வதல்ல என்ற கருத்து இங்கே வலுத்து வருவதை இந்தப் பகிர்வுக்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 

இது சுரேந்திரா ஹிந்து ஆங்கில நாளிதழுக்காக வரைந்தது.


கார்டூன்களிலும் கூட farting சாத்தியமே என்பதை சதீஷ் ஆசார்யா அடிக்கடி நிரூபித்து வருகிறார். இவர் சொல்கிற மாதிரி புஸ்வாணமாகிப் போனதை ஊதிப்பெரிதாக்குவது யார்? மோடி வெறுப்பாளர்களா? அல்லது பிஜேபியா?

    
அடடே! அப்படியா!! என்பதற்குமேல் இந்தப்படத்தின் மீதான கருத்தாக வேறு என்னத்தைச் சொல்வதாம்?


ஹரியானா தேர்தல் முடிவுகள் மாதிரி ஒரு இழுபறியான நிலை வரும்போதுதான் கட்சி தங்களுக்கு சீட் கொடுக்காததை எதிர்த்துப் போட்டியிட்டு ஜெயித்த கலகக் குரல்களும் மதிக்கப்படுகின்றன என்பது தேர்தல் ஜனநாயக விசித்திரங்களில் ஒன்று! மேலே படத்தில் மத்தியில் உள்ள 5 பேருமே பிஜேபியின் கலகக் குரல்கள்தான்! அதனால் இங்கே    துஷ்யந்த் சவுதாலா சிலுப்பிக் கொள்கிற மாதிரி அவர் ஒன்றும் அவ்வளவு ஒர்த் இல்லை, கிங் மேக்கரும் இல்லை! 10 சீட் மட்டும் ஜெயித்துவிட்டு மேலும் 6 சுயேட்சைகள் ஆதரவு தனக்கிருப்பதாக சவடால் பேசுவதுமே தேர்தல் ஜனநாயகத்தின் முதிர்ச்சி பெறாத விசித்திரம்!

  
டிபிக்கல் சதீஷ் ஆசார்யா கார்டூன்! முழுக்க முழுக்க உண்மை இல்லாதது என்பதை மேலேயே சொல்லியாகி விட்டது! நம்மூர் திராவிடங்கள் மாதிரி மோடி வெறுப்பை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் கார்டூனிஸ்டுக்கு இருக்கிறது போல!


இன்றைக்கு வெளியான விஜய் படம் படுமோசம் என்பதாக செய்திகள் வந்து கொண்டிருப்பது மட்டும் தான் இந்த நாளின் சுவாரசியமாக இருக்கிறது போல! 

மீண்டும் சந்திப்போம்.  
         

Thursday, October 24, 2019

மீண்டும் ராதா ரவி! ரங்கராஜ் பாண்டே! கார்டூன்! காமெடி கலாட்டா!

சிரிப்பு, சர்ச்சைகளுக்கும் ராதாரவிக்கும்  அப்படி என்ன தான் பொருத்தமோ வில்லங்க ராசியோ  தெரியாது! ராதா ரவி என்ன பேசினாலும், எங்கே பேசினாலும், பலத்த சிரிப்பும் வரும்! பல சமயங்களில் பெரும் சர்ச்சைகளும் வரும் என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த விஷயம் தான்!  பழைய நினைவுகளை கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம் விவகாரமாகவும் ஆக்கிப் பேசுகிற கலை எல்லோருக்குமே கைவந்து விடுகிறதா என்ன? !! 


வீடியோ 33 நிமிடம். சுவாரசியமாகத்தான் இருக்கிறது. இதிலும் சர்ச்சை கிளம்புமா என்பதெல்லாம் இதுவரை எனக்குத் தெரியாத  விஷயம்! ராதா ரவியை திட்டிக் கொண்டாவது ரசிக்க முடிகிற மாதிரியே, கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவையும் ரசிக்க வேண்டியிருப்பதை என்ன சொல்ல?


இது ஒரு சிவசேனா ஆசாமி சென்ற ஞாயிறு அன்று சாம்னா நாளிதழில் எழுப்பியிருந்த கேள்வியைவைத்து வரைந்த படம்.உத்தவ் தாக்கரே கேட்கிற மாதிரி எதற்காக?  இங்கே  நண்பர்கள் விஷயம் புரியாமல் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காக மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான்! காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டாளிகளும் நச்சுக் களைகள் மாதிரி! திரும்பத் திரும்பக்  களையெடுக்காமல் விட்டுவைத்தால் விஷ விருட்சமாக வளர்ந்துவிடக் கூடியவை! சதீஷ் ஆசார்யா இன்னொரு கார்டூனில் வேறு செம காமெடி செய்திருக்கிறார்!


சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் திரை நட்சந்திரங்களைச் சந்தித்ததைப் பற்றிக் கேலியாக வரைந்த கார்டூன் இது! ஒரிஜினல் காந்தி கூட ஏதோ சினிமாவில் நடித்த மாதிரிச் சொல்லிக் கொண்டால்தான் சந்திக்க முடியும் என்பது போல ஒரு உள்குத்து! போகட்டும்! ஒரிஜினல் காந்தி மீது நிஜமாகவே அத்தனை அக்கறை இருந்தால் இங்கே சில டூப்ளிகேட்டுகள், பாட்டி, மகன், பேரன் பேத்தி என்று மூன்று தலைமுறைகளாகவே காந்தி பெயரை தங்கள் குடும்பப் பெயராக வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை அல்லவா முதலில் கேள்வி கேட்டிருக்க வேண்டும்? 


இன்றைக்கு ரங்கராஜ் பாண்டே ஒரு 14 நிமிட  வீடியோவை எந்த ஒரு ஊடகமும் என்னை நம்பாது என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார். பார்த்தபிறகுதான் அது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  சென்ற 2018 ஏப்ரலில் பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் பேசியதன் சுருக்கம் எனத் தெரிந்தது! பழசுதான்! தந்திடிவியில் இருந்த பழைய நாட்களில் பேசியது தான்! இப்போது கேட்கிற சமயத்திலும் கூட  சுவாரசியமாகத் தான் இருக்கிறது! கேட்டுப்பாருங்களேன்!

பதிவு கொஞ்சம் பொழுதுபோக்க உதவியாக இருந்ததா?

மீண்டும் சந்திப்போம்.                  
      

Wednesday, October 23, 2019

தான் பின்னிய வலையிலேயே சிக்கும் முட்டாள் பாரம்பரியம்!

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி இங்கே பலருக்கும் அத்தனை ஒசத்தியான அபிப்பிராயம் இருந்ததில்லை! நரேந்திர மோடி மீது இப்போது காட்டப்படும் வெறுப்பை, மோடிக்கு முன்னாடியே சுப்ரமணியன் சுவாமி மீது இங்கே திராவிடங்கள் உமிழ்ந்த கதை நினைவிருக்கிறதா? வழக்கு ஒன்றில் சென்னை நீதிமன்றம் ஒன்றில் வாதிட வந்தவர் மீது முட்டை வீசி முட்டையடி நடத்திய திராவிட வீரம் அத்தனை எளிதில் மறந்து போய்விடக் கூடியதா என்ன?     


நீங்கள் அவரை வெறுக்கிறீர்களோ அல்லது விரும்புகிறீர்களோ எதுவானாலும் சரி, தனியொரு மனிதனாக நின்று இந்திரா வாரிசுகளை நீதிமன்ற வாசற்படியேற வைத்து சோனியாவையும் ராகுல் காண்டியையும் ஜாமீனில் வெளியே இருக்கிற அளவுக்குக் கொண்டுநிறுத்தியவர் சுப்ரமணியன் சுவாமி தான்! இந்திரா வாரிசுகளுக்கு இருந்த செல்வாக்கு அதிகாரபலம் நேரு பாரம்பரியம் எல்லாவற்றையும் எதிர்க்க சில அரசியல் கட்சிகளுக்குப் பலவருட காலம் தேவைப்பட்டது. ஆனால் சில வருடங்களிலேயே டாக்டர் சுவாமி இந்திரா வாரிசுகளை நீதிமன்றப் படிகளில் மண்டியிட வைத்திருக்கிறார் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!


8. Whatever Subramanian Swamy does, he does it with proper evidence and complete preparation. Though he is not a lawyer he has been successful in all his cases. This case of Swamy has tightened the noose around Rahul Gandhi's neck.
65
1.4K
6.8K
Show this thread
7. If he accepts that he is a British citizen, then his Indian citizenship will get cancelled. On top of this, his MP position would be stripped and he could go to jail for having fooled the country and the Parliament all these years.
26
1K
3.8K
Show this thread
6.If Rahul Gandhi decides to forego his properties in UK and wants to continue being an MP in India he has to lie that he is not a British citizen. In such a scenario,the Government of India can seize his foreign properties since Rahul Gandhi's signature is there on the documents
10
978
3.5K
Show this thread
5. Assuming that he had purchased the office for running his business why is it closed since 2004. Where did the income come from for which he has paid income tax in UK and filed income tax return. This proves that this was laundering of black money.
8
959
3.4K
Show this thread
4. Now let's come to the question that if he has property in UK why did he hide it from the Government. What was the reason behind this and what was the business he was doing in UK? Because his office is located 90 miles outside London in a remote village where no one resides.
6
952
3.5K
Show this thread
1. The Indian law is very clear that any Indian citizen who wishes to purchase property abroad has to take permission from both the Home Ministry and External Affairs Ministry which Rahul Gandhi has not done.
33
1.1K
3.7K
Show this thread

என்ன விவரம் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம். இல்லை, கண்மூடித் தனமாக வெறுப்பை உமிழ்ந்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள் என்றால்  இங்கேயே அபீட்டாயிக்கலாம்!

மீண்டும் சந்திப்போம். 
         

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!

கவியரசர் கண்ணதாசனின் இந்தத் திரைப்படப் பாடல் வரிகள் நினைவில் இழையோட ,  இது தொடர்பாக முந்தி எழுதிய பதிவொன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிர...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (225) அனுபவம் (212) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (88) எண்ணங்கள் (45) செய்திகளின் அரசியல் (42) புத்தகங்கள் (35) மனித வளம் (30) செய்திகள் (25) சிறுகதை (20) எது எழுத்து (19) ரங்கராஜ் பாண்டே (19) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) விமரிசனம் (13) Change Management (12) கமல் காசர் (12) புத்தக விமரிசனம் (12) தொடரும் விவாதம் (11) பதிவர் வட்டம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) அக்கம் பக்கம் என்ன சேதி (9) ஊடகப் பொய்கள் (9) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகங்கள் (8) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) (சு)வாசிக்கப்போறேங்க (6) திராவிட மாயை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) சமூக நீதி (5) தேர்தல் முடிவுகள் (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மீள்பதிவு (5) வாசிப்பு அனுபவம் (5) ஸ்ரீ அரவிந்த அன்னை (5) இர்விங் வாலஸ் (4) எங்கே போகிறோம் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கண்டு கொள்வோம் கழகங்களை (4) கவிதை நேரம் (4) காங்கிரஸ் (4) கூட்டணிப் பாவங்கள் (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) இடதுசாரிகள் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) சீனா (3) சீனா எழுபது (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) ஞானாலயா (3) தரிசன நாள் (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) லயோலா (3) Defeat Congress (2) Tianxia (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஒளி பொருந்திய பாதை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சிறுபான்மை அரசியல் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பாரதியார் (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)