Friday, October 18, 2019

எது ஒரு எழுத்தாளனை உருவாக்குகிறது?

எது ஒரு எழுத்தாளனை உருவாக்குகிறது? அப்படி எழுதுவதில் எது வாசகர்களால் கொண்டாடப்படும் எழுத்தாகிறது? இந்த மாதிரிக் கேள்விகளுக்கு,  ஒரு முறையல்ல, ஒவ்வொரு முறையும் எழுத்தாளர் பாலகுமாரன் நேர்மையாகவே  பதில் சொல்லியிருக்கிறார் என்பதாலேயே முந்தைய பதிவில் சில வீடியோக்களையும் கொடுத்தே சொல்லியிருந்தேன். ஆனால் வலைப்பதிவுககளில் வாசிக்க வருகிறவர்கள் பெரும்பாலும் ஒரு அவசரகதியிலேயே பார்த்து விட்டுப் போய்விடுகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட  விஷயம்! என் விஷயத்தில் இன்னும் அதிக அவசரத்துடனேயே எட்டிப்பார்த்து விட்டு ஓடி விடுகிறார்கள் என்பதும்! இதில் வீடியோக்களை எங்கே நின்று பார்ப்பார்களாம்? பத்ரி சேஷாத்திரியுடன் தந்திடிவிக்காக 2014 அக்டோபரில்  பாலகுமாரன் ராஜபாட்டையில் வருகிற 50 நிமிட வீடியோவில் ஆரம்பத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் சொல்கிறார்! கொஞ்சம் பாருங்கள்!    

 

ஆனால் எல்லா எழுத்தாளர்களும் இதே மாதிரித் தெளிவாக யோசித்துப் பதில் சொல்லியிருக்கிறார்களா? தேடிப் பார்த்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக, தான் எழுத வந்த கதையைச்  சொல்லியிருப்பார்கள். நீங்களாகக் கண்டுபிடித்தால் ஒழிய, முழு உண்மையும் சொன்னவர் எவருமில்லை!
                                                             

ரமணி சந்திரன்! பெயரை வைத்து ஆணா பெண்ணா என்று ஊகம் செய்யக் கூட விடாமல் ஆரம்பநாட்களில் தன் முகத்தைக் காட்டாமலேயே கதைகள் எழுதி வந்திருக்கிறார். 91 கதைகள் இதுவரை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. சத்தமே இல்லாமல், இவருக்கு ஒரு வாசகர் கூட்டம் இன்னமும் இங்கே இருக்கிறது. என் குடும்ப உறவுகளிலேயே ஒரு மூதாட்டி இவரது வாசகர். ஆனாலும் இவருடைய கதை ஒன்றைக் கூட நான் படித்ததில்லை என்பதையும்  இங்கே சொல்லியாகவேண்டும். 


காரணம் சாம்பிளாக நாலைந்து கதைகளை புரட்டிப் பார்த்து எல்லாம் ஒரேமாதிரியான டெம்ப்லேட்டில் எழுதப் பட்டவை என்பதால்! ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் இவரைப் படிப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்!  அந்த நாட்களில் லக்ஷ்மி (எ) டாக்டர் திரிபுரசுந்தரி பெண்களை மையமாக வைத்து தொடர் கதைகளாக நாவல்களை எழுதினார். அவர் மட்டுமல்ல அநுத்தமா, ஆர் சூடாமணி என்று அந்தநாளைய பெண் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஆகி வந்ததாக குடும்ப உறவுகளை வைத்துக் கதை பின்னுகிற டெம்பிளேட், அத்தனை ராசியானது. ராணியில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து, அப்படியே கலைமகள், குமுதம், கல்கியிலும் எழுதியிருக்கிறார்.

''சொன்னா நம்பமாட்டீங்க... நான் என் தங்கைக்கு எழுதின கடிதங்கள்தான் என்னை எழுத்தாளராகவே ஆக்கியிருக்கு தெரியுமா?'' இப்படி ரமணி சந்திரன் தான் எழுத்தாளரான விதத்தைச் சொல்கிறார் ''அப்போ நாங்க தஞ்சாவூர்ல இருந்தோம்... இவருக்கு தினத்தந்தியில விளம்பரம் பிரிவில் உத்தியோகம்... மெட்ராஸ்ல இருந்த என் தங்கை சந்திராவுக்கு, வீட்ல நானும் என் இரண்டு குழந்தைகளும் என்ன செஞ்சோம், ஏது செஞ்சோம்னு ஆரம்பிச்சு,எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மரம் ஏன் பூ பூக்கலேங்கிற கவலை வரைக்கும் விலாவரியா லெட்டர் எழுதுவேன்! அதை என் தங்கை படிச்சுட்டு அவளோட வீட்டுக்காரர்கிட்டேயும் காட்டி வாசிப்பாளாம்... 'அடடா... நேர்ல பார்க்கிற மாதிரி என்ன அழகா விவரிச்சு எழுதியிருக்காங்க.. உங்க அக்காகிட்டே நல்ல எழுத்துத் திறமையிருக்கு. நான் எடிட்டரா இருக்கிற பத்திரிகைக்கு கதை எழுதச் சொல்லு’னு அவர் சொல்லியிருக்கார். எழுதிப் பார்த்தப்போ எனக்கும் கோர்வையாக எழுத வந்தது. சரின்னு எழுதி அனுப்பிட்டேன்..''  அந்த எடிட்டர் ராணி வார இதழின் ஆசிரியர் அ,மா,சாமி! (அ.மாரிசாமி)  தினத்தந்தி சி பா ஆதித்தன் இவருடைய தாய் மாமன் என்பது உபரித்தகவல்.  

1968 இல் தி  ஜானகிராமன் கல்கியில் எழுதியிருந்ததன் ஒரு பகுதியாக   என்னிடம் இருக்கும் அம்மா வந்தாள் நாவலின் பின் அட்டையில் எடுத்துப் போட்டிருந்தது கீழே: 


"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும்.தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியோர்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும்தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் (பிறர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத்  தான் இருக்கும்."   

எது ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்குகிறது? சராசரி வாசக மனநிலையிலிருந்து ஒரு தேர்ந்த வாசகனாக்கும் எழுத்து எது? நீங்கள் படித்ததில் இருந்து கண்டுகொண்ட விதம் எப்படி என்பதை பகிர்ந்து கொள்ளுங்களேன்!

வாசிப்பின் சுகத்தைப் பகிர்ந்து கொள்ள வாருங்கள்! மீண்டும் சந்திப்போம்.                

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)