சீரியசாக அரசியல் பேசவோ எழுதவோ சரியான மூடு வராத தருணங்களில் கார்டூன்களும், படங்களும் அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? வெறும் பத்துலட்ச ரூபாய்தானா? பானாசீனா மீது INX மீடியா விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதில் வெறும் 9.96 லட்ச ரூபாய்தான் லஞ்சமாகக் கை மாறியது என்று சொல்லியிருக்கிறார்களாம்! சதீஷ் ஆசார்யா கார்டூனில் கேலி செய்கிறார்.
பாவம்! கர்நாடகாவில் இருந்துகொண்டு கார்டூன் வரைந்தால் இப்படித்தான் ஆகும் போல! என்ன தெனாவட்டில் சரத் பவார் தாங்கள்தான் ஆட்சியமைக்கப் போவதாகச் சொல்லி இருப்பார் என்று கார்டூனிஸ்ட் கற்பனை செய்தாராம்?
சுண்டைக்காய்ப் பணத்துக்கெல்லாம் கைநீட்டுகிறவரா அப்புச்சி? அமித் ஷாவை லந்தடிக்கிறேன் பேர்வழி என்று செட்டி நாட்டு கோமானையும் கேவலப்படுத்தி விட்டாரோ?
இந்த ஒரு கார்டூனிலாவது உண்மையைச் சொல்லி இருப்பதால், முந்தைய இரு கார்டூன்களை மன்னித்து விடலாம்! என்ன சொல்கிறீர்கள்?
படத்தில் இருப்பவர்கள் கருணாநிதியின் மகள் செல்வியும் அவரது கணவர் முரசொலி செல்வமும்! வலப்பக்கம் அவர்கள் பெயரில் முரசொலி உள்ளிட்டு நாளிதழ்களில் வெளிவந்த பொறுப்பு துறப்பு அறிவிப்பு. பதிவர் உண்மைத்தமிழன் என்னமோ முகநூலில் இப்படி உருகுகிறார்:
லவ்வோ லவ்வுய்யா..!!!
மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து திருமணம் செய்தார்கள். இந்தக் கல்யாணத்திற்கு முதலில் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. தாத்தா கலைஞருக்கு கடிதம் மேல் கடிதம் எழுதி அவர் மூலமாக பெற்றோர்களின் மனதைக் கரைத்து கல்யாணம் செய்து கொண்டார் செல்வியின் மகள் எழிலரசி
காதல் கதை கடைசியில் இப்படி வந்து முடிந்திருக்கிறது..!
ஒரே மகளுடைய மாப்பிள்ளையை இப்படி உதறுவானேன்? இப்படி ஏய்ப்பதில் கலீஞர்களாக ஒட்டு மொத்தக் குடும்பமும் உறவுகளும் இருப்பதை வேறெங்காவது பார்த்ததுண்டா?
உபிக்களிடம் கேட்கக் கூடாத கேள்விதான்!
ஆனாலும் கேட்கிறார்களே! என்ன செய்ய? ! மீண்டும் சந்திப்போம்.
இந்தப் பதவி ரொம்ப இலகுவாக இருக்கிறது. ஆனால் அர்த்தமுள்ள பதிவு.
ReplyDeleteஇங்கே அரசியல் வெறும் வெட்டி அக்கப்போர்களிலேயே குறுகிப் போய் நிற்பதில். வேறென்னதான் செய்ய முடியும் ஜோதிஜி? !!
Delete