Wednesday, October 30, 2019

இப்போது என்ன அவசரம்? தேர்தல்களும் சீர்திருத்தங்களும்!

நம்மூர் ஆனந்த விகடன் தளத்தில் கூட அபூர்வமாக ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் உருப்படியான செய்தி, அதுவும் இந்தக்காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக வந்து விடுகிறது என்பது கொஞ்சம் ஆனந்தமான அதிர்ச்சி தான்! முதலில் செய்தி என்ன என்று பார்த்து விட்டு, அப்புறம் அதில் ஆனந்தம், அதிர்ச்சி எல்லாம் எங்கே இருந்தது என்பதைப் பார்த்து விடலாம்! நாம் தமிழர் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையத்தால் ரத்துசெய்ய முடியாது... ஏன்? இதுதான் அந்த செய்தியின் தலைப்பு!


இங்கே ஆவி  செய்தியைப் போட்டுச் சொல்ல நினைப்பது, சீமான் கட்சிப்பதிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ்காரன் குதித்துக் கொண்டிருக்கிற மாதிரியான அற்ப ராஜ விசுவாசக் குரல் அல்ல! இது இங்கே உள்ள தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்,  தேர்தல் ஆணையத்தின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருப்பது, கட்சித் தாவல்  தடைச் சட்டம் என ஒன்று   இருந்தும் இல்லாமல் ஆக்கி விடுகிற  சித்து வேலைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள உதவுகிற மாதிரி ஒரு தொடக்கம்! அதற்கான  செய்தி இது  என்பதால்  கொஞ்சம் ஆனந்தம்! 

கோளாறுகள் ஒரு அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிற தொடக்க நிலையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. கோளாறு இருப்பது தெரிய வந்தாலும் கூட கட்சியைப்  பதிவு செய்கிற தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் அப்படி ஒரு பல்லில்லாத அமைப்பால் என்ன பிரயோசனம்? மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் 62, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 2,301 என மூன்று வகைகளிலும் சேர்த்து,மொத்தம் 2,370 கட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. அரசியல் கட்சிகளுக்கு பெறப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிவிதிவிலக்கு முதலான சலுகைகளை அனுபவிப்பதற்காகவே இதுமாதிரியான கட்சிகள் புற்றீசல் மாதிரி ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டதைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு சிறிதளவுகூட இல்லை. தேர்தல் சீர்திருத்தங்கள் மிகமிக அவசியம் அவசரம் என்றாலும் கூட, இங்கே உள்ள அரசியல் கட்சிகள் எதுவும் கண்டுகொள்வதில்லை. ஏன் என்பதைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிற செய்தி என்பதால், ஆனந்தம் கலந்த அதிர்ச்சி!

மேலே சுட்டியில் செய்தியை வாசித்துவிட்டு நீங்கள் நினைப்பதென்ன என்பதைச் சொல்லத்தான் கொஞ்சம் மனது வையுங்களேன்!


     
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் தனிப்பட்ட முறையில் காஷ்மீருக்கு விஜயம் செய்திருப்பதோ, ராகுல் காண்டி ப்ரியங்கா வாத்ரா அப்புறம் NDTV, The Prnt உள்ளிட்ட ஊதுகுழல்கள் எல்லாமாகச் சேர்ந்து குய்யோ முய்யோவென கூக்குரல் எழுப்பியதோ இங்கே எத்தனைபேர் காதில் விழுந்ததாம்? சதீஷ் ஆசார்யாவின் கார்டூன் கூட அதே ரகம் தான்! மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறவர்கள் இருக்கிற தேசம் தானே இது!


உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே என்று கன்னியர்கள் பாட்டுப்பாடுகிற மனம் கவர்ந்த  சால்வை அழகராக வலம் வந்த சீனாதானாவா இது? சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்றைக்கு கூடுதலாக ஒருநாள் கஸ்டடி விசாரணை கோரி அமலாக்கத்துறை விண்ணப்பித்ததை நிராகரித்து 14 நாட்கள் அதாவது  நவம்பர் 13 வரை நீதிமன்றக்காவலுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டதாம்!  ஆனாலும் உடல்நிலையைக் கருதி திஹார்சிறை அதிகாரிகள் அவருக்கு மருந்துகள், மேற்கத்தியக் கழிவறை, தனிச்சிறை, பாதுகாவலர்கள் ஆகியவற்றை வழங்கவும், வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவை வழங்கவும் நீதிமன்றக் கருணை கிடைத்திருக்கிறதே! அதுபோதாதா? !!  

  
அக்டோபர் 31 நாளை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உதயம்! கலகம், குழப்பம், தீவிரவாதம் இவைகளிலிருந்து விடுபட்டு இந்தப் பகுதிகளில்     தேசிய ஒற்றுமை தழைக்க   வாழ்த்துவதோடு அதற்காகப் பிரார்த்தனையும்  செய்து கொள்வோம். 

மீண்டும் சந்திப்போம்.   
        
     

15 comments:

 1. எழுத்துரு அளவு வாசிக்க எளிதாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்! மதுரை தமிழன்!

   சரி பார்த்துச் சொன்ன feedback இற்காக மிகவும் நன்றி

   Delete
 2. இப்படி கட்சி ஆரம்பிச்சால் நன் கொடை வசூல் செய்து பெரிய ஆளாக ஏதாவது உளறிக்கிட்டு வளம் வரலாமே இது எல்லாம் தெரியாமல் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டேனே ஹும்ம் அதிர்ஷடம் எனக்கு இல்லை

  ReplyDelete
  Replies
  1. இப்போதும் கூட நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பிக் கட்சி ஆரம்பிக்கத் தடையேதுமில்லை! :-)))))))

   Delete
  2. நான் கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றால் பினாமி பெயரில்தான் ஆரம்பிக்க வேண்டும் ஏனென்றால் என்னிடம் இந்தியக் குடியுரிமை இல்லை.. நான் இந்தியாவிற்கு வருவதென்றால் விசா அப்ளை செய்ய வேண்டும்.. பேசாமல் நம்ம ஜோதிஜியை முன்னிருத்தி ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் என யோசனையாக இருக்கு

   Delete
  3. மீன் கட்சி சின்னம். மதியம் மற்றும் ராத்திரி சாப்பாடு மீன் குழம்பு, பொறித்த விதவிதமான மீன்கள், இது தான் கட்சியின் கொள்கை. சரியா?

   Delete
  4. ஆகாகா! கட்சி தொடங்குவதற்கு முன்னாடியே சின்னம் கொள்கை எல்லாம் அறிவித்தாயிற்று! அப்புறமென்ன கட்சி ஆரம்பித்து கொடி பறக்க விட வேண்டியதுதானே! :-))))

   Delete
 3. சுட்டியில் இணைய்பு கொடுக்கவில்லை. சோதிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஜோதிஜி!
   ஆனந்த விகடனுக்கான சுட்டி வேலை செய்கிறதே! இன்னொரு முறை சோதித்துப் பாருங்கள்!

   Delete
 4. யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே

  அப்படியே இதற்கு விளக்கவுரை எழுதவும்.

  ReplyDelete
  Replies
  1. நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாயமொழியில் இது ஒரு பாசுரம். சுருக்கமாகப் பொருளைத் தெரிந்து கொள்ள இங்கே https://www.facebook.com/sivkumarn/photos/a.171938003358554/376801429538876/?type=3 கொஞ்சம் விரிவாக இங்கே https://thiruvonum.wordpress.com/2013/02/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE-265/

   Delete
  2. This page isn't available
   The link you followed may be broken, or the page may have been removed.

   Delete
  3. ஜோதிஜி! ஒன்று முகநூல்! இன்னொன்று wordpress லிங்கை சரியாக காபி பேஸ்ட் செய்துபார்க்கவும். இரண்டு சுட்டிகளும் சரியாக வேலை செய்கின்றன.

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (310) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)