Sunday, October 6, 2019

அசுரன் பட விமரிசனம்! வெக்கை எழுதிய பூமணி நேர்காணல்!

ச்சும்மா ஜாலிக்கு என்றே எழுதாமல் இந்தமுறை ஒரு சமீபத்தைய திரைப்பட விமரிசனம்! அதுவும் என்னுடையது இல்லை! வலைப்பதிவுகளில் பதிவர் வால்பையனோடு கூட்டாளியாக அறிமுகமான நண்பர் ராஜன் ராதாமணாளன் முகநூலில் எழுதியிருந்த விமரிசனம்! அதுவே நன்றாக இருந்ததால் அவருக்கு நன்றியுடன் இங்கே பகிர்வாகப் பார்க்கலாமா?  ஒரு கதையாக பேனாபிடித்து எழுதுவதைத் திரைக்கதையில் அப்படியே கொண்டுவர முடியாது என்பதைத் தொடர்ந்து தமிழில் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா?  இதுதான் எனக்கிருக்கும் கேள்வி. 


வெக்கையை ஒரு mainstream சினிமாக்குவதில் உண்டான முக்கியப் பிரச்சனையே நாவலில் தந்தையும் மகனும் தலைமறைவாவதற்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணம் தான். அடுத்து வேறெந்த புற அழுத்தமும் இல்லாமல் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு இருவரும் கோர்ட்டில் சரணடையப் புகுவதெல்லாம் நிஜவாழ்வில் இயல்பாக நடக்கக் கூடியது தான் என்பதை ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கக் கூடிய மனம் இட்டு நிரப்பிக் கொள்ளும். ஆனால் கமர்சியல் சினிமாவில் அந்த யதார்த்தம் எடுபடாமல் போகலாம்.
ஆக, இவ்விரு தர்க்கங்களையும் அடைக்க வடக்கூரானும் அவனைச் சார்ந்த ஒரு கும்பலும் typical சினிமா வில்லன்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர். நாவலில் வரும் “சின்னப்பய வெட்டிப்புட்டான் நமக்கு வக்கில்லாமப் போச்சே” என்ற அப்பனின் கழிவிரக்கமும், தன் அய்யாவின் மீது சிதம்பரத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அசுரனில் இல்லை. சுவாரசியமான இருமைக்காகவும் ப்ளாஷ்பேக் பில்டப்புக்காகவும் “அண்ணனுக்கு பதில் நீ செத்திருந்தாலாச்சும் குடும்பம் உருப்பட்டிருக்கும்” என்று அப்பனின் முகத்துக்கு நேரே சொல்லக் கூடியவனாக சிதம்பரத்தை மாற்றியிருக்கின்றனர்.
நாவலில் டீட்டெய்லாகச் சொல்லப்படும் கரிசல் நிலத்தின் வெக்கை, காட்டுக்குள் இறங்குவதன் கஷ்டம், சோற்றுக்குப் படும் பாடு, படிக்கும் போதே கால் வலிக்கக் கூடிய பெரு நடையெல்லாம் சினிமாவில் சாத்தியமும் இல்லை எடுத்தால் பார்க்கவும் ஆளிருக்காது என்பதால் அவற்றை விலக்கியதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் ஏனோ அய்யா புகைக்கும் பீடிப்புகையிலிருந்து அத்தை - மகள் என்ற மாமன் குடும்பம் வரை காணாது போயிருக்கிறது. அதே சமயம் மகன்களைப் பாதுகாப்பதில் சிவசாமியின் குணவார்ப்பு சினிமாவில் சற்று விரிந்திருக்கிறது.
ஆக, வெக்கை முதல் பாதியோடே முடிவடைகிறது. இரண்டாம் பாதியில் பெரும்பாலும் வேறு களம், வேறு மனிதர்கள், வேறு ஒரு பிரச்சனையை நோக்கிக் கதை சென்றுவிடுகிறது. சிவசாமி இந்த ஊருக்கு வந்து சேர்ந்ததற்கு நாவலில் இருந்த சிறிய lead ஐ வைத்து வேறு கதை பின்னிவிட்டார்கள்.
வெற்றி மாறன் படங்களில் வஞ்சம், துரோகம், ரிவெஞ்ச் போன்ற Human emotions ஒரு craft ஆகவே செதுக்கப்படுவதைக் காணமுடியும். ஜாலக்காரனின் லாவகத்துடன் அவை Disclose செய்யப்படும். இந்தத் துல்லியமே அவர் படங்களில் compassion குறைவாக இருப்பதாய் (எனக்கு) ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

அசுரனில் இந்தத் துல்லியம் இல்லை. Gray shade மனிதர்கள் இல்லை அல்லது அப்படி நினைத்துச் செய்த கதாபாத்திரங்கள் முழுமையாக ஆகி வரவில்லை. மறுபுறம் இரக்கமும் கருணையும் ஆர்கானிக்காக அமைந்திருக்கிறது. இந்தச் சமநிலை எதேச்சையானதாகக் கூட இருக்கலாம்.
வெக்கையில் சாதி சார்ந்த கோணம் அனேகமாகக் கிடையாது அல்லது மிகவும் subtle ஆக இருந்தது; ஆனால் அசுரனில் சாதியின் பெயர் தவிர்த்து மீதியெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டு விடுகின்றது. ( சேஷாத்திரி தவிர - அதெற்கென்ன அவசியம் என்றும் புரிபடவில்லை.) இந்த இரண்டாம் பகுதி இன்றைக்கு நாடிருக்கும் நிலைமைக்கு மிகவும் முக்கியம் தான்; ஆனால் அதில் கலையமைதி கூடிவரவில்லை.
வெற்றிமாறன் இனி அவரே நினைத்தாலும் ஒரு மோசமான படத்தை எடுக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவு கன்ஸிஸ்டன்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.  

மூலக்கதையை எழுதிய எழுத்தாளர் பூமணி இந்தப் படம் குறித்து என்ன நினைக்கிறார் என்று இந்து தமிழ்திசையில் ஒரு நேர்காணல். அவருக்கும், அவருடைய பார்வையில் படம் எடுக்கப்பட்டிருந்தால் உலகத்தரத்துக்குப் போயிருக்கும் என்றுதான் படுகிறது.    


எழுத்தாளர் பூமணியின் ஆதங்கம் நியாயமானதுதானா? எனக்கென்னவோ அது சரிதான் என்று தோன்றவில்லை  அதே மாதிரி ராஜன் ராதாமணாளன் சொல்கிற மாதிரியும் இல்லை!  நாவல் வடிவத்தை அப்படியே திரையில் கொண்டுவரமுடியுமா என்ற சந்தேகம் எனக்குள் நீண்டநாட்களாகவே இருக்கிறது.

படத்தை பார்த்துவிட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும் .

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. நாவல் நான் படித்ததில்லை.  எனவே நோ கமெண்ட்ஸ் !

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! நான் அந்த நாவலை நண்பரிடம் இருந்து இரவல் வாங்கிப்படித்தே பல ஆண்டுகளாகிவிட்டன. எழுத்தாளரோ அந்த எழுத்தோ எனக்குள் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் பூமணி சிறுகதைகள் என்றொரு தொகுப்பை பரிசாக அளித்தார். இன்னமும் அதன் மேல் சீலிடப்பட்ட பாலித்தீன் உரையைக் கூடப் பிரிக்காமல் கிடக்கிறது. அது ஒரு பக்கம்.

      இன்னொருபக்கம் பார்த்தால், இந்தக்கதையையும் கமெர்ஷியல் சினிமாவாக எடுக்கும்போது எழுத்தாளர் என்ன நினைத்து எழுதினார் என்பதைவிட, படம்பார்க்க வரும் ஆடியன்ஸ் என்ன நினைப்பார்கள் என்பதையும் யோசித்து, இரண்டையும் ஒருவிகிதத்தில் கலந்துதான் திரைக்கதை, காட்சிகளைத் தீர்மானிக்க முடியும்.

      அப்படிப் பார்க்க முடிந்தால் மூலக்கதை ஒரு inspiration என்ற அளவோடு முடிந்து விடுகிறது. எது சரியாக இருக்கும் என்பதை யார் தீர்மானிப்பது? நான் இன்னமும் படம் பார்க்கவில்லை. பார்ப்பேனா என்பது கூட சந்தேகம்தான்! அப்படிப் பார்த்தாலும் அது தனுஷ் வெற்றிமாறன் கூட்டணிக்காகத்தான் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)