Saturday, October 5, 2019

சோனியாG காங்கிரசைத் தொடரும் கர்மா தியரி!

ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கிற செய்திகளில், எது,ஏன் தலைப்புச் செய்தியாக ஆக்கப்படுகிறது என்பதை வைத்தே செய்திகளின் அரசியலைப் புரிந்து கொள்ளலாம் என்று இங்கே எழுதியது ஞாபகம் இருக்கிறதா? காங்கிரசில் தினசரி நடக்கும் காமெடி, குழப்பங்களை  அன்றன்றைக்கே பார்த்துச் சிரித்துவிடவேண்டும் (காறித்துப்பிவிட வேண்டும் என்றொரு அர்த்தமும் அதில் வரும்!) இல்லையென்றால் மொத்தமாகச் சேர்ந்து நம்மையே பைத்தியக்காரர்களாக்கிவிடுகிற சித்து விளையாட்டில் சிக்கிக் கொள்வோம். காங்கிரசில் இப்போது நடக்கும் கூத்துக்கள் எல்லாமே இந்திரா காலத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட கோஷ்டி அரசியல்தான்! ஒன்று சேர்ந்தால் எங்கே தன்னையே காலி செய்துவிடுவார்களோ என்ற பயம் இந்திராவை காங்கிரசில் கோஷ்டி அரசியலை ஊக்குவித்து வளர்க்க வைத்தது! கோஷ்டிப் பூசல்களே கர்மவினையாக    இன்றும்   காங்கிரசைத் தொடர்ந்து வருவதைப்  புரிந்துகொள்ள முடிகிறதா?  

   பின்தொடரும் கலகக்குரல் 
சஞ்சய் நிருபம்!அசோக் தன்வார்!

ஒரு உறுதியான, தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமை இல்லாமல் காங்கிரஸ் கட்சி நாளொரு கலகம் பொழுதொரு குழப்பம் என்று கன்னாபின்னாவென்று சிதைந்து கொண்டிருக்கிறது. இன்னும் பதினாறே நாட்களில் மஹாராஷ்டிரா, ஹரியானா இரு மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிற  தருணத்தில், கலகக்குரல்கள் வெடித்துக் கிளம்ப ஆரம்பமாகியிருக்கிறது. மகாராஷ்டிராவின் சஞ்சய் நிருபம் வெளிப்படையாகவே சோனியாவின் தலைமையைக் குறை சொல்லி மகாராஷ்டிர காங்கிரஸ் வேட்பாளர்களில் மூன்று அல்லது நான்குபேர் ஜெயிக்க முடிந்தாலே அதிசயம் என்று சொல்லியிருக்கிறார். சொன்னபிறகும் கூட காங்கிரசில் தான் இன்னமும்  நீடிக்கிறார் என்பது அதைவிட அதிசயம்.  
On Thursday, former Mumbai unit chief Sanjay Nirupam hit out at the party — the Congress did not heed my advice on even one assembly segment, he said. Disgruntled, he has decided to sit out the crucial Maharashtra polls.Just a day earlier, the former Haryana Congress chief Ashok Tanwar alleged that the party was “selling tickets”, and protested outside the residence of inதளம் terim party president Sonia Gandhi.The ticket allocation process has only exacerbated fissures in the party, which is now threatening to derail the Congress’ already shaky election campaigns in both states. இப்படிச் சொல்வது சேகர் குப்தாவின் The Print தளம்தான்! ஹரியானாவில் முன்னாள் முதல்வர்  பூபிந்தர் ஹூடா (ராபர்ட் வாத்ராவுக்கு நிலங்களை வாரி வழங்கிய விவகாரம் நினைவிருக்கிறதா?)   தான் காங்கிரசின் முகம் என்றானால் ஜாட் அல்லாத வாக்குகள் (75%) காங்கிரசுக்கு எதிராகத்  திரும்பிவிடுமே என்று ஏற்கெனெவே சூடுபட்ட அனுபவத்தில் ஹரியானா காங்கிரஸ் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டது. 

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் நிலைமை என்னவென்று இப்படிப் பார்க்கலாமா? 1967-1972 வரை முதல்வராக இருந்த வசந்த்ராவ் நாயக்குக்குப் பிற்கு பிஜேபியின் தேவேந்திர ஃபட்னவிஸ் ஒருவர்தான் இடைப்பட்ட 47 ஆண்டுகளில் முழுதாய் 5 ஆண்டுகள் முதல்வராய் இருந்திருக்கிறார். 1960 இல் உருவான மஹாராஷ்டிரா மாநிலம் இதுவரை 26 முதல் அமைச்சர்களைப் பார்த்திருக்கிறது என்பதில் இந்திரா கால நிழல் அழுத்தமாகத் தெரிகிறதா? (இதே மாதிரி நிலையற்ற அரசுகளை, முதல்வர்களை அதிகமாகப் பார்த்த இன்னொரு மாநிலம் கர்நாடகா என்பது ஞாபகத்துக்கு வருகிறதா?) இன்று மாநிலம் முழுக்க அறிமுகமான, செல்வாக்குள்ள தலைவர் என்று எவருமே காங்கிரசில் இல்லை என்பது இன்றும் கூட காங்கிரசைப் பின் தொடரும் இந்திரா காலத்துப் பாவங்களின் நிழல்! 


இன்றைக்குப் படித்ததில் பிடித்தது: 

துக்ளக்!
‘ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா இவர்களில் யாருடைய மூக்கு உசத்தி?’ என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் கேள்வி-பதில் இடம்பெற்ற காலத்தில், அரசியல் குறித்த கேள்விகளைக் கேட்க வைத்த ஒரு பத்திரிகை! அங்கேயும் போய் பழக்கதோஷத்தில் அவரது வழுக்கைத்தலை ரகசியம் பற்றியெல்லாம் கேள்விகேட்ட பிரகஸ்பதிகள் இருக்கத்தான் செய்தனர்.
விடுதலைப்புலிகள், மன்மோகன் சிங், அன்னா ஹஜாரே ஆகியோர் மீது எனக்கிருந்த அபிப்ராயத்தை துக்ளக் வாசித்தே நான் மாற்றிக்கொண்டேன். தமிழ் மாநில காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி அமைக்க அவர் மெனக்கெட்டதும், துக்ளக் வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தினேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஒரு சிலரை அவர் அவரவர் தகுதிக்கு மேல் புகழ்ந்து உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்தார் என்ற எனது கருத்தில் இன்றளவில் பெரிய மாற்றமில்லை. ஆனால், நான் முழுமையாக வாசித்த ஒரே மகாபாரதம் அவர் எழுதியதுதான். நடுப்பக்க நாளேடு, சத்யாவின் கட்டுரைகள்தான் என்னையும் நகைச்சுவையாக எழுதத் தூண்டியது.

ஆனால், என்னை ஆச்சரியப்படுத்துகிற சில விஷயங்கள்!
ஒரு காலத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த பழனியாண்டிக்கும், சிவாஜி கணேசனுக்கும் நிறைய உரசல் இருந்தது. தனது பலத்தை நிரூபிக்க, சென்னையில் சிவாஜி ஒரு பேரணி நடத்தினார். இதைக் கிண்டலடித்து துக்ளக்-ல் அட்டைப்படம் போட்டிருந்தார் சோ. அதாவது…
ஒரு படப்பிடிப்பு நடப்பது போலவும், சிவாஜி கேமிராவுக்கு முன்னால் நின்றுகொண்டு, பழனியாண்டியோடு சண்டையிட்டபடி…
”அம்மா(இந்திரா காந்தி) சொன்னா உயிரை விடுவேன்! பிள்ளைங்க(ரசிகர்கள்) சொன்னா ஊர்வலம் விடுவேன். யார் சொன்னாலும் உன்னை விட மாட்டேன். உன்னை ஒழிச்சுக் கட்சியை வளர்க்கிறேன். கட்சியை ஒழிச்சி ஆட்சியைப் பிடிக்கிறேன்,” என்று வசனம் பேச
டைரக்டரான இந்திரா காந்தி,” கட்! கட்!! கட்!!! காமெடி சீனையெல்லாம் இதுக்கு மேலே வளர்த்தக்கூடாது!” என்று சொல்வதுபோலவும் போட்டிருந்த அட்டைப்படம், அக்மார்க் சிவாஜி ரசிகர்களையும் ‘பக்’கென்று சிரிக்க வைத்த்து.
சோ திரையுலகில் அறிமுகமானதே சிவாஜியின் ‘பார் மகளே பார்’ படத்தின் மூலமாகத்தான். இருந்தாலும், சிவாஜியை விமர்சிக்கிற, நக்கலடிக்கிற துணிச்சல் அவரிடம் இருந்தது.
அதே போல, எம்ஜியார் முதல்வரானதும், அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கியபோது, அதைக் கிண்டலடித்து அடுத்த துக்ளக் ஆண்டுவிழாவில் பார்வையாளர்களுக்கு சோ ‘கம்பவுண்டர்’ பட்டம் வழங்கினார்.
தனது திரையுலக அனுபவங்கள் தொடரில் எம்.ஜி.ஆரை வானளாவப் புகழ்ந்து எழுதியிருந்த சோ, அரசியல் விமர்சனம் என்று வந்துவிட்டால் எம்.ஜி.ஆரையும் விட்டு வைக்கவில்லை என்பது ஆச்சரியம்தான்.
இரட்டைக் கழுதைகள் கார்ட்டூன்கள் பல பிரபலமாக இருந்தாலும், சட்டென்று என் ஞாபகத்துக்கு வருவது, ஜெயில்சிங்கை இந்திரா காந்தி ஜனாதிபதியாக நியமித்தபோது வந்த்துதான்.
‘அன்னை இந்திரா ஆட்சி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நீடிக்க வேண்டும்,’ என்று ஒரு கழுதை சொல்ல, ‘ஆமாம். அப்பத்தான் நாமும் ஜனாதிபதியாக முடியும்,’ என்று இன்னொரு கழுதை சொல்வதுபோலவும் அந்தக் கார்ட்டூன் அமைந்திருந்தது.
நடுநிலை என்றெல்லாம் பாவ்லா காட்டாமல், துணிச்சலாக ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு கட்சியை ஏதோ ஒரு காரணத்துக்காக ஆதரித்ததோடு, அதை ஓரளவு வெற்றிகரமாக அவர் நியாயப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.


 மீண்டும் சந்திப்போம்      

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)