Monday, October 7, 2019

கலைவாணிக்கு வணக்கம்! அது கலைஞர்களுக்கும் சேர்த்துத் தான்!

சரஸ்வதி பூஜை என்று கலைவாணியை வணங்குகிற நாள் இன்று! அப்படியானால் கலைவாணர்களை? இரண்டில் எது ஒன்றைச் செய்தாலும் இன்னொன்றையும் செய்த மாதிரித் தான் என்பது என்னுடைய அபிப்பிராயம்! அதற்காகக் கூத்தாடிகளை நடுவீட்டிற்குள் அழைத்துவந்து  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது என்று அர்த்தமில்லை. 


ரேவதி சங்கரன்! நினைவிருக்கிறதா? பன்முகத்திறமை கொண்ட ஒரு கலைஞர்! சரியாகத்  தெரியவில்லையே என்று புருவத்தை நெரிக்கிறீர்களா?  இந்த 26 நிமிட வீடியோவைப் பாருங்கள், ஞாபகம் வந்துவிடும்! 


இந்த 42 நிமிட சோலோ நிகழ்ச்சியில் முதல் 30 நிமிடங்கள்  எப்படிக் கலக்குகிறார் என்று கொஞ்சம் பாருங்கள்! (அப்புறம் சில பழைய படங்களில் இருந்து கிளிப்பிங்ஸ்)  தொடங்கும் போது அப்பளக் கச்சேரி என்று பழைய நாட்களில் கிராமங்களில் இருந்த அப்பளமிடும் முறையைச் சொன்ன விதத்தில்  எழுத்தாளர் தேவனின் அப்பளக் கச்சேரி தொடரில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக நினைவுக்கு வந்து போனார்கள். நாட்டியம் தெரியாத  அஞ்சலி தேவி, பானுமதி இவர்களை எப்படி நாட்டியமாடுகிற மாதிரி காமெராவில் காண்பித்தார்கள் என்பதைச் சொன்னவர் போகிற போக்கில் பத்மினி நலந்தானா நலந்தானா பாட்டுக்கு லெக்கின்ஸ் மேலே விசிறிமடிப்பு வைத்தமாதிரி உடையணிந்து  ஆடியதையும் சொல்லத் தவறவில்லை. இவர் இப்படிப் பேசியது நாட்டிய கலா கானபெரென்ஸ் என்ற நிகழ்ச்சியில்!  


கலைவாணிக்கு வந்தனம் செய்ய ஆரம்பித்த பதிவில் இந்த இரண்டுபேரும் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்கிறீர்களா? ராஜீய உறவுகளைத்  திறம்படக் கையாளுவதே ஒரு தனிக்கலை! பிரதமர் நரேந்திரமோடி அதில் வித்தகர் என்றால் இத்தனைநாட்கள் திறமைகளைக் காட்டாமல் ஒதுங்கியே இருந்த நம்முடைய வெளியுறவுத்துறை, முந்தைய காலங்களில் இல்லாத சுறுசுறுப்பை வெளிக்காட்டிவருவதில் நம்முடைய வெளியுறவுக் கொள்கை முதிர்ச்சியடைந்து வருகிற விதமும் சமீபகாலத்து நிகழ்வுகளில் தெரிகிறது!  வருகிற வெள்ளிக் கிழமை மதியம் சென்னை வந்திறங்குகிற சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த 24 மணி நேரங்களில் நான்கு முறை பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடுகிற விதத்திலும், மாமல்லபுர சிற்பங்களை இருவருமே சேர்ந்து பார்க்கிற மாதிரியும் நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டிருப்பதில் கூடுதல் சுவாரசியமும் ஒன்று இருக்கிறது. 


வழக்கமாக சீன அதிபர் இந்தியப் பிரதமருடன் பேசிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே, சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து அடாவடி செய்வதையும் ஒரு மறைமுகமான மிரட்டலாகச் செய்துதானே பார்த்திருக்கிறோம். இந்த முறை இந்தியா வித்தியாசமாக சீன அதிபர் வருகைக்கு முன் ஒரு கட்டமாக, வந்துபோன பிறகு இன்னொரு கட்டமாக என்று லடாக்கின் கிழக்குப் பகுதியிலும் அருணாச்சல பிரதேசத்திலுமாக ஹிம் விஜய் என்ற பெயரில் மலைப்பிரதேசப்போர் ஒத்திகை ஒன்றை நடத்துவதில் முதல் கட்டம் இன்று 7ஆம் தேதி தொடங்கி 10 தேதி வரையிலும் அடுத்த கட்டம் 20-24 தேதி வரை நடக்கிறது. வழக்கம் போல சீனா இதற்குத் தனது கண்டணத்தைத் தெரிவித்திருப்பதில் சீன அதிபர் விஜயம் திட்டமிட்டபடி நடக்குமா என்பது நாளை அல்லது நாளை மறுநாள்தான் உறுதியாகும். ஆனாலும் போர் ஒத்திகையை ரத்துசெய்வதில்லை என்பதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று TOI செய்தி சொல்கிறது.

முந்தைய நாட்களில் நாம் என்ன செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை நமது நட்பு நாடோ எதிரிகளோ தான் தீர்மானித்து வந்தது இனிமேல் நடக்கவே  நடக்காது என்பதில்  மிகத் தெளிவாக இந்திய அரசு இருக்கிறது.

இந்தமாதிரிச் செய்திகளுக்கென்றே அக்கம் பக்கம்! என்ன சேதி! தளம் தனியாக இருக்கிறது. இங்கே வருகிற நண்பர்கள் அந்தப்பக்கங்களுக்கும் வந்துபார்த்தால் அடிக்கடி இதுமாதிரித் தம்பட்டம், சுயவிளம்பரம் எல்லாம் தேவையில்லை தான்! மனது வைக்கவேண்டியது நீங்கள் தான்!

மீண்டும் சந்திப்போம்.   
     .

            

4 comments:

 1. விஜயதசமி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

   அகப்பகை புறப்பகை இரண்டையும் வெற்றிகொள்கிற திருநாளாக பாரத தேசத்துக்கு அமையவேண்டும் என்று அந்த மஹா திரிபுரசுந்தரியிடம் பிரார்த்தனை செய்துகொள்வோம்!
   ஜெய ஜெய பவானி! ஜெய ஜெய துர்கா!

   Delete
 2. ஸ்வாரஸ்யமான பதிவு. //முந்தைய நாட்களில் நாம் என்ன செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை நமது நட்பு நாடோ எதிரிகளோ தான் தீர்மானித்து வந்தது இனிமேல் நடக்கவே  நடக்காது என்பதில்  மிகத் தெளிவாக இந்திய அரசு இருக்கிறது.// அது ஏனோ சிலருக்கு பிடிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா!

   வெளியுறவு விவகாரங்களில் ஒரு paradigm shift மிகவெளிப்படையாகவே தெரிகிறது. முன்னைப்போல சர்வதேச அழுத்தங்களுக்கோ பின்னாலிருந்து கையை முறுக்குவதோ நடவாத காரியம் என்பதை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள்.
   அந்தப்பத்தியின் கடைசியில் சொல்லியிருந்த மாதிரி, சீன அதிபர் வருகை கூட நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்தது, திட்டமிட்டபடி நடக்கும் என்பது இன்றைக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

   இதெல்லாம் எல்லோருக்குமே பிடித்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா? நம்மூர் அரசியல் இன்னமும் அந்த அளவுக்குப் பக்குவப்படவில்லை அம்மா! .

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

கண்டுகொள்வோம் கழகங்களை!

நண்பர்கள் அனைவருக்கும் சங்கராந்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! வாழி நலம் சூழ!    திமுகவின் 3ஆம் கலீஞர் எ...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (315) அனுபவம் (246) நையாண்டி (101) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (73) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (44) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (14) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஸ்ரீ அரவிந்த அன்னை (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) எங்கே போகிறோம் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) ஏன் திமுக வேண்டாம் (6) கூட்டணிப் பாவங்கள் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) அஞ்சலி (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) ராகுல் காண்டி (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)