Saturday, February 29, 2020

ரஜனிகாந்த்! ஜனவரியில் அப்படி! பிப்ரவரியில் இப்படி!

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிற போர்வையில் இடதுசாரிகளும் ஒருசில இஸ்லாமிய அமைப்புக்களும் சேர்ந்து ஆரம்பித்திருக்கிற ஒரு அமைப்பு சென்னையில் நடத்திய CAA எதிர்ப்பு அரசியல் மாநாடு நடத்தியதில் விசிகவின் திருமாவளவனும், மதிமுகவின் வைகோவும் கலந்து கொள்ளவில்லை. திமுக சின்னத்தில் நின்று ஜெயித்த எம்பி ரவிக்குமாரும், மதிமுக பேச்சாளர் மல்லை சத்யாவும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. திமுகவின் இசுடாலின் கலந்து கொண்டதால் கூட்டம் திரட்டப்பட்டதாகவும் தெரிகிறது. ஹிந்து என்.ராம் ஸ்பெஷல் பேச்சாளர்! ரஜனிகாந்தைப் பற்றி என்.ராம் பேசியதைத் தொடர்ந்து சிலவிஷயங்கள் பின்னணியில் அரங்கேறி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.


கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்றும்  கூட சொல்வதில்லையா? அதுபோல இந்து தமிழ்திசை தளத்தில் பாஜகவை கழற்றி விடுகிறாரா ரஜனி என்ற தலைப்போடு இன்று ரவீந்திரன் துரைசாமி பேட்டி! இங்கு எதையும் நான் ஊகமாகவோ பூடகமாகவோ சொல்ல முற்படவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்! 


இதற்கெல்லாம் தமிழருவி மணியன் போன்ற ஒருத்தர் தான் விளக்கம், பொழிப்புரை சொல்ல முடியும். ஆனால் முந்தைய பேட்டிகளில் ஏற்பட்ட சந்தேகத்தை பாலன்ஸ் செய்வதற்கு ரஜனிகாந்த் முயற்சிப்பதாகச் சொல்வதும் கூடத் தேவையே இல்லாத ஆணிதான்!


பொருட்படுத்தக் கூடிய அளவுக்கு இங்கே தமிழகத்தில் பிஜேபி களத்திலேயே இல்லை. ஆனால் திமுக அதிமுக அணிகளில் இருக்கும் கட்சிகளுக்கு ரஜனிகாந்த் ஒரு ஆப்ஷன் கொடுத்து, மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிறார் என்பதை ரவீந்திரன் துரைசாமி கொஞ்ச காலமாகவே சொல்லிவருகிறார்.

குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தால் என்னவாகும் என்பது மாதிரியான ஆராய்ச்சி இங்கே டிவி சேனல் விவாதங்களில் பரபரப்பான விவாதமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் செமகாமெடியாக இருக்கிறது. ரஜினிகாந்தை விமரிசித்துக் கோவையில் ஒரு அதிமுக கூட்டத்தில் பேசிய இயக்குனர் ஆர். சுந்தர ராஜனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று ஏகப்பட்ட வதந்தீ!


2020 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்படியாக! மார்ச் மாதம் எப்படியோ?

மீண்டும் சந்திப்போம்.    
    

Friday, February 28, 2020

எப்போது விஷமக்கார ஊடகங்களைக் கேள்வி கேட்கப் போகிறோம்?

டில்லி கலவரங்களை வைத்து ஒரு மிகப்பெரிய ஊடகப் பிரசாரம் இந்தியாவைக் குறிவைத்து, இந்தியாவைப் பற்றி  கொஞ்சமும் அறிந்திராதவர்களால், திட்டமிட்டே நடத்தப்பட்டு வருவதை அறிந்திருக்கிறீர்களா? நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற இந்திய வெறுப்பில் ஊறிய ஊடகங்களாகட்டும், டெமாக்ரட் லட்சிப் பிரமுகர்களாகட்டும். டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையை ஒட்டி வன்மம் கக்கிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கிறீர்களா?


டில்லிப் போலீஸ், உளவுத்துறை மீதே பழியைச் சுமத்திவிட்டு, அதற்காக அமித்ஷா பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று குதித்துக் கொண்டிருக்கிற சோனியா காங்கிரசு என்ன உள்நோக்கத்தோடு செய்கிறது? ஹிந்து என் ராம் உள்ளிட்ட இடதுசாரிகள் எதற்காக காங்கிரசோடு கைகோர்த்து பொய்களைத் தொடர்ந்து அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமாவது தெரிந்து கொண்டிருக்கிறீர்களா? இந்த 40 நிமிட விவாதம் உங்களுக்குப் பலவிஷயங்களைத் தெளிவுபடுத்தக்கூடும்!


IB அதிகாரி அங்கித் ஷர்மாவைக் கொலை செய்தது உட்பட  எறிவதற்கு கற்கள், எரிப்பதற்கு பெட்ரோல் குண்டுகள் என கலவரங்களுக்கு weapon supplier ஆம் ஆத்மி கட்சியின் அமைதி மார்க்க உறுப்பினர் தலை மறைவாகிவிட்டாராம்!


டெல்லிப் போலீஸ்காரர்கள் பொய்சொல்கிறார்களா என்றறிய அவர்கள் மீது நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட் நடத்தவேண்டும் என்று ஒரு AAP சமஉ டில்லி சட்டசபையில் பேசியிருக்கிறார்!

விஷமக்கார ஊடகங்களையும்,  அடிப்படை ஆதாரம் இல்லாத பொய்களையே  தொடர்ந்து பரப்பிவரும் திமுக உள்ளிட்ட அரசியல்கட்சிகளையும் எப்போது கேள்வி கேட்கப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.  

  

Thursday, February 27, 2020

எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?

சென்னையில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்று ஒரு கூத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் தலைமையில். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற புதுப் பெயரில் நேற்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள். பழைய கள் தான்! ஆனால் புது மொந்தையாம்!  அதில் இசுடாலின் வாய்ஸ் கொடுத்ததை முந்தைய பதிவில் சுட்டி கொடுத்திருந்தேன். இருந்தாலும் இங்கேயும் ஒரு தொடர்ச்சிக்காக. ஹிந்து என் ராம் பேசுவதை இந்த 25 நிமிட வீடியோவில் பார்க்கலாம்.


இங்கே CAA குறித்து எதிர்க்கட்சிகள்,உதிரி அமைப்புக்கள், இடதுசாரிக் குறுங்குழுக்கள் எல்லாமாகச் சேர்ந்து திரும்பத்  திரும்ப ஒரே பல்லவி,  பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். CAA  என்பது அண்டைநாடுகளில் இருந்து கொடுமைக்குள்ளாகி இங்கே வந்த அகதிகளுக்கு, சுமார் 38000 பேருக்குக் குடியுரிமை வழங்குவதைப் பற்றி மட்டுமே. எந்த ஒரு இந்தியக்குடிமகனுக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிற போதிலும் இங்கே திமுக, காங்கிரஸ் மற்றும் உதிரிகள் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து கொண்டே இருக்கின்றன. அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அடிப்படை உரிமைகளில் கைவைக்கிற மாதிரி இருக்கிறது, சட்ட விரோதம் என்று முதலில் இருந்து என் ராம் ஆரம்பிப்பதன் உள்நோக்கம் என்ன? நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மூன்றில் இருபங்குக்கும் அதிகமான மெஜாரிட்டியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை சட்டவிரோதம் அரசியல் சாசனத்துக்கு  முரணானது என்றால் அதைக் கேள்விக்குள்ளாக்கவேண்டிய இடம், தங்களுடைய அச்சம் நியாயமானது என்பதைஎடுத்து வைக்க வேண்டிய இடம் நீதிமன்றம். தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவதில் அல்ல என்பது என் ராம் மாதிரியான இடடதுசாரித் தறுதலைகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அரசுக்கு எதிராக எதையாவது கிளப்பிக் கலவரத்தைத் தூண்டுவது ஒன்று தான் அவர்களுடைய புரட்சிகரமான நடவடிக்கை! பாமரனுக்கும் புரிகிற மாதிரி ஒரே வார்த்தையில் சொல்வதானால் அராஜகம்! வன்முறைக் கலவரம்!

சரி, அரசியல் கட்சிகள், சார்புநிலை எடுக்கும் உதிரிகள் இவர்கள்தான் இப்படியென்றால், இவர்கள் சொல்கிற திகில் சித்திரத்தை அப்படியே நம்பித்தான் இஸ்லாமியர்கள் ஷாஹீன் பாக், வண்ணாரப்பேட்டை இப்படிப்பல இடங்களிலும் கலவரத்தீ உண்டாகிற அளவுக்குப் போராட்டங்களில் இறங்கி இருக்கிறார்களா? இல்லை என்பது தெளிவு. அவர்கள் ஒரு தெளிவான அஜெண்டாவுடன் இயங்குகிற மதக் குழுக்களின் பின்னால் அணி திரள்கிறார்கள். பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளுடைய முகங்கள் வெளியே அவ்வளவாகத் தெரிவதில்லை.  

கழகங்களுக்கு  இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுடைய ஆதரவை அப்படியே பெறவேண்டும் என்கிற நோக்கம் அப்பட்டமானது. பெரும்பான்மையினரை  ஜாதி ரீதியாகப் பிரித்து வாக்குகளைப்பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை, இப்படி வெளிப்படையாக ஆதரவுக் கரம்  நீட்டப்படுகிறது.

இங்கே தேசநலன், ஜனநாயகம், உண்மை பேசுவது,மக்கள் நலன் சார்ந்து செயல்படுவது  இவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்படுவது தொடர்ச்சியாக இந்த தேசத்தை அரித்துக் கொண்டே வருகிறது. இங்கே ஜனங்களுடைய குரலை எதிரொலிக்கப் பிரதிநிதிகளும் இல்லை! ஜனங்களே நேரடியாகப் பங்குகொள்ளும் விதமும் ஆரம்பத்தில் இருந்தே இல்லை. ஜனங்கள் சும்மா இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்வகிலும் பொருளில்லை.

எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?  மீண்டும் சந்திப்போம்.        
  

Wednesday, February 26, 2020

ரஜனி வாய்ஸ்! இசுடாலின் வாய்ஸ்! இன்னும் என்ன வேண்டும்?

டில்லி வன்முறைக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்று சோனியாG மாதிரியே ரஜினிகாந்தும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். உளவுத்துறை அரசுக்கு என்ன அறிக்கை கொடுத்தது என்பது இவர்களால் மட்டும் ஊகிக்கக் கூடியதாக இருப்பது இந்த தேசத்தின் கருத்து சுதந்திரம் அல்லது வாய்ஸ் கொடுப்பதான பெரும் சோகம்.

   
யூட்யூப் சேனல்களில் கொடுக்கப்படும் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இருக்காது என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு செய்தியை உள்வாங்கிக் கொள்ளுங்கள்! மத்திய அரசு ஒரு கடுமையான அணுகுமுறையைக் கையாளவேண்டாமே என்று பொறுத்திருந்த மாதிரித்தான் எனக்குத் தோன்றுகிறது. அது ஒரு அரசியல் முடிவு! இவ்வளவு வன்முறை வெடித்த பிறகும் கூட அமைதியாக இருப்பது அரசின் கையாலாகாத்தனமாக மட்டுமே பார்க்கப்படும் என்பது அரசுக்கோ பிஜேபி கட்சித்தலைமைக்கோ தெரியாதா?


துக்ளக் ரமேஷ் கொஞ்சம் நியாயமாக ரஜனி பேசியதை எடைபோட்டிருக்கிறார். திமுக ஆதரவு ஊடகக்காரர் ராதாகிருஷ்ணன் வேறுவிதமாக விசனப்பட்டிருக்கிற மாதிரி தெரிகிறது.


தமிழ்நாட்டில் அடுத்த முதல்வராகத் தவித்துக் கொண்டிருக்கும் திமுக தலீவர் இசுடாலின் கூட இதைப் பற்றி இன்று கொஞ்சம் பேசியிருக்கிறார். பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிற கலையில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்தான். தேசத்தின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் இவைகளின் மீது புதுப் புது வியாக்கியானங்கள் பேசுவார்கள். அதேநேரம் பிரிவினைக்குத்  தூண்டுதலாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். பொய்யே இவர்களது வேதம். வீடியோ 23 நிமிடம்    

எந்த வாய்சுக்கு செவிசாய்க்கப் போகிறீர்கள்? எதுவும் வேண்டாம் நாங்களே சுயமாக யோசித்து இவர்கள் யோக்கியதை என்ன என்பதை முடிவு செய்து கொள்கிறோம் என்று  இருக்கப் போகிறீர்களா?

மீண்டும் சந்திப்போம். 

     

இட்லி தோசை மாவுதான்! அதுவே வெற்றிகரமான தொழிலாக!

ஒரு தொழிலை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக வளர்ச்சியுடன் நடத்துவது மிகவும் கஷ்டமா? தடங்கல்கள் வந்துகொண்டே தான் இருக்கும், அதையும் தாண்டி என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்கிறார் மணி கிருஷ்ணன். இட்லி தோசை மாவுதான் ப்ராடக்ட்! அதுவும் அமெரிக்காவில் எப்படி ஒரு வெற்றிகரமான வணிகமாக ஆனது என்பதை இந்த 27 நிமிட நேர்காணலில் சொல்கிறார் சாஸ்தா ஃபுட்ஸ் மணி கிருஷ்ணன்.


நம்மூர் யூட்யூப் சேனல்கள் வைக்கும் கொடூரமான தலைப்புக்களை மறந்துவிடுங்கள்! எங்களுக்கு போதிக்கப்பட்ட மார்கெட்டிங் கான்செப்ட் 4Ps product, price, promotion and place, அப்புறம் இன்னொரு 3Ps  people, processes and physical environment  என்று அடுக்கிக் கொண்டே போகிற விஷயங்களை மணி கிருஷ்ணன் மிக எளிமையாக I was in the right place, at the right time with the right population என்று சொல்வது மிக சுவாரசியம். அவர் சொன்னது #3Ps தான் என்பது வெறும் புத்தகப் புழுவாக மட்டுமே சந்தைப்படுத்துவதை படித்துக் கரைத்துக் குடித்த எனக்கு, கொஞ்சம் லேட்டாகத்தான் உறைத்தது. அனுபவமே சிறந்த ஆசான் என்று தெரியாமலா சொன்னார்கள்!! இன்று காலை கண்ணில் பட்ட நல்ல நேர்காணலாக இருந்தது. அதை நடத்திய நவநீத்துக்கு எப்படி என்ன கேட்பது என்று சரியாகப் புரியாவிட்டாலும் மணி கிருஷ்ணன் தெளிவாகப் புரிகிற மாதிரியும்  சொல்லவந்ததை முழுமையாகவும் சொன்னார் என்பது நேர்காணலின் நிறைவான விஷயம்.

இன்று கண்ணில் பட்ட புத்தக விமரிசனம் 

அரசியலையும் திரைப்படங்களையும் தவிர்த்துவிட்டு தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. கருப்பு வெள்ளை திரைப்படக் காலம் முதல் இணையத் தொடர் காலம் வரை, அறிவியல் தொழில்நுட்பங்கள் அறியாதவர்கள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் முதல், மெத்தப்படித்தவர்கள், பெருந்தனக்காரர்கள் வரை எல்லா காலத்திலும் எல்லா மக்களிடையேயும் இந்த இரண்டு துறைகளும் நீக்கமற ஊடுருவி இருக்கின்றன.
இதில் திரைத்துறை என்பது கேளிக்கைக்கு உரியது என்பதால் அதிகம் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என்றாலும் அரசியல் மீதான அதீத ஆர்வம் என்பது சற்றுத் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இதைக் கருப்பொருளாக வைத்துத் தான் பா.ராகவனின் "கொசு" நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த அரசியல் மற்றும் அதன் மீது உள்ள மோகம் எத்தனை தூரம் சராசரி மனிதர்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்து விடுகின்றது என்பதை நினைக்கையில் வேதனையாகத்தான் இருக்கிறது
இரண்டு தலைமுறைகளாக அரசியலில் தொண்டர்களாகவே இருந்து விட்ட ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாம் தலைமுறை இளைஞன் ஒருவன் எப்படியாவது தொண்டன் என்னும் நிலையிலிருந்து மேலே எழுந்துவிடுவது என்று ஒரு வைராக்கியத்தோடு முயல்கிறான். இந்த இலட்சியப்பாதையில் கானல் நீராக வந்து போய்விடுகின்ற மாயங்களும் மாயைகளும், அவற்றுக்குச் சமாந்தரமாக இலை மறை காயாகப் பயணிக்கும் அரசியலுக்குள் அரசியல் என்கின்ற தாய விளையாட்டும் தான் இந்தக் கதை.
வாழ்க்கை விழுமியங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த அழுக்கடைந்த சாகரத்திற்குள் போராடி நீந்தி, வாழத் தக்கனவாய் பிழைத்துக் கொள்வதே குதிரைக் கொம்பாய் இருக்கின்றது. இதில் கரை சேர்வதென்பது ஒரு சராசரி மனிதனுக்கு தன்னளவில் ஒரு மிகப் பெரிய யுத்தம் தான்.
அரசியலில் முகஸ்துதியும் புறம் பேசுதலும் இரண்டாம் நுழைவாயில். எல்லாத் தொண்டனும் இதைத் தான் செய்வான் என்பது எல்லா அரசியல் தலைவனுக்கும் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அப்படி அவன் தெரிந்து தான் இருப்பான் என்னும் பால பாடம் கூடத் தெரியாமல் தொண்டர்கள் இருப்பது தான் வருத்தத்திற்குரியது.
ஓர் அளவுக்கு வழக்கொழிந்து போய்விட்ட மிகவும் பழையதான இதே உத்தியை தான் இந்த கதையின் நாயகனும் பயன்படுத்துகிறான். ஆனால் எதார்த்தம் வேறு என்பதை உணர்ந்த வாசகனையும் நாயகனின் நம்பிக்கையோடும் நப்பாசையோடும் காத்திருக்கத் தூண்டுவது தான் இந்தக் கதையும் பெரும் பலம்.
கோப்புகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட கடிதத்தை கண்டு பிடிக்க முடியாத போதே, நாயகனின் இயலாமை வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடுகிறது. கதையும் முடிவையும் ஊகிக்க முடிகிறது. ஆனாலும் நம்பிக்கை தான் வாழ்க்கை, தோல்வி வெற்றிக்கான முதல்படி போன்ற கல்லறை வாசகங்களால் ஆனது தானே மனித வாழ்வு? நாயகனும் தன் அடுத்த அடியை இன்னும் சற்று நிதானமாகவும் கவனமாகவும் எடுத்து வைக்க எத்தனிக்கிறான்.
முதல் அத்தியாயம் மட்டும் ஏன் சம்பந்தமே இல்லாமல் கதையில் செருகப்பட்டது என்று புரியவில்லை. அதில் வரும் கதாபாத்திரங்களோ சம்பவங்களோ எந்த வகையிலும் கதைக்குப் பயன்படவில்லை.
ஒரு அரசியல் தலைவர் வீட்டு மருமகளின் பெயரை துர்கா என்பதிலிருந்து சாந்தா என்று மாற்றி வைத்ததாக ஒரு வார இதழில் படித்த ஞாபகம். ( அதாவது எதை மூட நம்பிக்கை என்று சொல்லி அரசியல் செய்கிறார்களோ அதை அடிப்படையாகக் கொண்டு).
அதே போல இந்தக் கதையிலும், மணமகளின் பெயரை சாந்தி என்பதிலிருந்து தூய தமிழ்ப் பெயராக வள்ளி மயில் என்று மாற்றுவதாக முடிவு செய்கிறார்கள். ஆனால் இறுதிவரை அவள் சாந்தி என்றே அழைக்கப்படுகிறாள்.🤣
எத்தனை அபத்தம். இப்படித்தான் அரசியல் கட்சிகளும், அவர் தம் கொள்கைகளும் கூட பெரும்பாலும் அபத்தமாக இருக்கின்றன. அரசியல் கோட்பாட்டு நூலின் முதல் விதி "தன்னலம்" தான். மீதமெல்லாம், இசைவாக்கம் அடைதலும், தக்கன பிழைத்தலும் துளியளவு அதிர்ஷ்டமும் தான்.


 கிழக்கு வெளியீடு விலை ரூ.110/- என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமோ?

மீண்டும் சந்திப்போம்.  

Tuesday, February 25, 2020

இன்று பார்த்தவை! #சுவாரசியமானவிவாதங்கள் #கார்டூன்கள்

டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்ததனால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி என்னமோ சிம்பிளாகத்தான் தோன்றும்! ஆனால் இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருப்பதும், கொஞ்சம் கவனமாகக் கேட்பதுடன் சுயமாக சரிதானா என டோதித்துப் பார்க்கவும் தெரியாவிட்டால் வண்டிவண்டியாக காதில் பூவை ஏற்றிவிடுவார்கள் என்பதையும் எச்சரிக்கையாக முதலிலேயே சொல்லி விடுகிறேன்!


முதலில் சேகர் குப்தா! சூட்டோடு சூடாக ஒரு 33 நிமிட வீடியோவை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நேரலையில் ஒளிபரப்பி முடித்திருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் வருகையினால் இந்திய அமெரிக்க உறவுகளில்  மாற்றம் வந்துவிட்டதா என்று ஒரு அசட்டுத்தனமான கேள்வி வேறு! ராஜீய உறவுகள் இந்தமாதிரியான அரசு முறைப்பயணங்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லை என்பது அனுபவமுள்ள பத்திரிகையாளருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! இங்கே பூடகமாகச் சொல்ல வருகிற விஷயத்தை ஆகர் படேல் என்கிற Amnesty Indiaவின் தலைவர், இதுமாதிரி NGOக்கள் வெளிநாட்டு நன்கொடைகளில் கொழுத்துக் கொண்டிருந்ததற்கு நரேந்திர மோடி ஆப்பு வைத்ததில் செம காண்டுடன்  தொடர்ந்து கடித்துக் குதறிக் கொண்டிருப்பவர்தான்! நேற்றைக்கே காங்கிரசின் National Herald  இதழில் வாந்தியெடுத்துவிட்டார்!

The last thing is that Trump may or may not be president at this time next year. The US elections are in November, and it is possible that we may have a Democrat in the White House. If that is the case, then we will have to write off all the personalised investment in the Trump-Modi chemistry. A Democrat in the White House will mean greater scrutiny of our actions in Kashmir and over the CAA and National Register controversy. The best thing that Modi can hope for in this visit is that he is able to mobilise Indians in America to vote Republican and try and help Trump return to power. இப்படி ஆரூடம் வேறு!

காந்தி பிறந்த மண்ணில் வன்முறையா? சோனியா கண்டனம் என்கிறது செய்தி. ஒரிஜினல் காந்தியைப் பற்றிக் கொஞ்சமும் தெரியாத டூப்ளிகேட்டுகள் இப்படிப் பொங்குவதைப் பார்க்கையில் சிரிப்பதன்றி வேறென்னதான் செய்ய முடியுமாம்?

      
சதீஷ் ஆசார்யாவுக்கும் கவலை வந்துவிட்டது! தூரிகை ட்ரம்பை நக்கல் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒரிஜினல் காந்தியை நக்கலடிக்கிற மாதிரி! சரிதானா?

  
தேசப்பிதா என்று ஒரிஜினல் காந்திக்கு அபிமானிகள் தான் பெயர்வைத்தார்கள்! மாமா நேரு என்பதையும்! இந்திரா,சோனியா இருவருக்கும் அன்னை பட்டம் சூட்டியவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை ட்ரம்ப் கேட்பதாக சதீஷ் ஆசார்யா வரைந்திருப்பது சும்மா வெறும் கொழுப்பல்ல! அசல் சோனியா காங்கிரசு கொழுப்பு! சரிதானே!

   
ஆதன் தமிழ் மாதேஷுக்கு தமிழக அரசியலே புரியாது! ரவீந்திரன் துரைசாமியிடம் தொடர்ந்து குட்டு வாங்கிக் கொண்டும் இருக்கிறவருக்கு மோடி-ட்ரம்ப் உறவால் இந்தியாவிற்கு பலன் இருக்கா?  இந்தக்கேள்விக்கு பானு கோம்ஸ் பொறுமையாகப் பதில் சொன்னால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? வீடியோ 21 நிமிடம் 

ஆக டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்தார். மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். இந்தியக் கடற்படை வலிமையைப் பெருக்கும் 24 ரோமியோ MH 60, மற்றும் 6 அப்பாச்சே ஹெலிகாப்டர்களை 21600 கோடிரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதுடன் 3 புரிந்துணர்வ் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன. H1B விசாபிரச்சினை உட்பட விரிவான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கும் என்ற அளவோடு ட்ரம்ப் விஜயம் நிறைவுபெற்று இன்றிரவே ஊர் திரும்புகிறார்.

மீண்டும் சந்திப்போம். 

Sunday, February 23, 2020

இன்றைய வாசிப்பு! "எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன்!

கல்கியில் 1965 வாக்கில் தொடர்கதையாக ஜீவகீதம் வெளிவந்து கொண்டிருந்தது. இளம் வாசகனாக,  என்னை அந்தநாட்களிலேயே மிகவும் ஈர்த்தவர் எழுத்தாளர் ஜெகசிற்பியன்! பிறகு அவருடைய பல கதைகளை தேடி வாசிக்க ஆரம்பித்தேன். இன்னமும் அவருடைய சிறுகதைகள் எதையுமே  வாசிக்கவில்லை என்று பார்த்தால் நாவல்களிலுமே  வாசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிற மாதிரி அவருடைய திருச்சிற்றம்பலம் நாவல் சமீபத்தில் கிடைத்தது. அதை இன்றைக்கு வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன்.


2012 செப்டெம்பரில் அமுதசுரபி ஆசிரியராக இருந்த எழுத்தாளர் விக்கிரமன் தினமணி நாளிதழில் ஜெகசிற்பியனைப் பற்றி எழுதிய சொற்சித்திரம் இணையத்தில் காணக்  கிடைத்ததில் நண்பர்களுக்கும் பயன்படட்டுமே என்று இங்கே தினமணிக்கும் எழுத்தாளர் விக்கிரமனுக்கும்  ந்ன்றி தெரிவித்துப் பகிர்கிறேன்.

"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன்


துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதித்தவர்களுள் அமரர் ஜெகசிற்பியனுக்கு சிறந்த இடமுண்டு. அவர் எழுதுகோலை ஏந்தியபோது தக்க வரவேற்பு அவருக்கு இல்லை. துப்பறியும் நாவல்கள், ஒழுக்கம் குலையாத பாக்கெட் நாவல்கள் என்று வியாபார நோக்கமுடைய இதழாசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப "ஆர்டர் இலக்கியங்கள்' எனத் தொடக்க காலத்தில் அவர் எழுதினாலும், ஒரு கால கட்டத்தில் சரித்திரப் புதினங்கள் தாம் அவரைத் தமிழ் வாசகர் உலகுக்கு அடையாளம் காட்டியது.
பெரும் வருவாய் அவருக்குக் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்பாராத பரிசும் பாராட்டும், வாசகர் வரவேற்பும் கிடைத்தன. இறுதிநாள் வரை ஆடம்பரமின்றி, தக்க வசதிகளின்றி, எழுத்து ஒன்றையே ஆராதித்து வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெகசிற்பியன்.
மயிலாடுதுறையில், 1925-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பொன்னப்பா - எலிசபெத் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர்கள் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவராயினும் ஜெகசிற்பியன் எழுத்துகளில் சமயச் சார்பு, காழ்ப்புணர்ச்சி, தூஷணை ஏதுமில்லை. சைவ-வைணவ சமய வரலாறு தொடர்பான புதினங்களை எழுதியபோதுகூட அவருடைய எழுத்துகளில் சமயச் சார்பு, வெறுப்பு எள்ளளவுக்குக்கூடப் புலப்படவில்லை.
அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலையன். "நல்லாயன்' இதழில் 1939-ஆம் ஆண்டு முதல் கதை வெளிவந்தபோதும், தொடர்ந்து சில இதழ்களில் அவர் எழுதியபோதும் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் என்ற பெயரில் எழுதினார்.
தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். தொழிற் கல்வியைப் பயன்படுத்தி பணம் பண்ணாமல் எழுத்தை "தமக்குத் தொழில்' ஆக்கிக் கொண்டார்.
முதல் புதினமான "ஏழையின் பரிசு' எழுதிய 1948-ஆம் ஆண்டிலிருந்து நான் அவரை அறிவேன். "காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் அவர் எழுதிய "கொம்புத் தேன்' முதல் பரிசைப் பெற்றது. அந்தப் புதினத்தைத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று ஜெகசிற்பியன் புகழப்பட்டார். அந்த முதல் போட்டியில் அவர் பெற்ற முதற்பரிசு ஒரு சவரன், ஜெகசிற்பியனின் வளர்ச்சிக்குக் கொடியேற்றம் அந்தப் பரிசு.
பிற்காலத்தில், "ஆனந்த விகடன்' நடத்திய வரலாற்று நாவல் போட்டியில் அவருடைய சரித்திரப் புதினம் "திருச்சிற்றம்பலம்' முதல் பரிசு பெற்றது. சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றார்.
ஜெகசிற்பியன் பரிசுகள் பல பெற்றாலும் தன் இயற்கையான, அடக்கமான குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதிவரை எழுத்து ஒன்றையே தெய்வமாக நினைத்து வாழ்ந்தவர்.
"திருச்சிற்றம்பலம்' நாவலுக்கு முன்பே கனமான வரலாற்று நாவல்களும் சமூக நாவல்களும் அவர் படைத்திருக்கிறார். அவர் எழுதி பரிசு எதுவும் பெறாத ஆனால், வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட "நந்திவர்மன் காதலி' படிப்பதற்கு விறுவிறுப்பான வரலாற்று நாவல்.  
சங்க இலக்கியச் சம்பவங்களுக்குப் பாடல் ஆதாரம் சிறிது இருக்கும். மற்றவை ஆசிரியரின் கற்பனை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் கொடி பதித்த மாவீரன் - அவரைக் கதையுடைத் தலைவராகக் கொண்ட "நாயகி நற்சோணை' என்ற புதினத்தை ஜெகசிற்பியன் படைத்தார். இந்த வரலாற்று ஆதாரம் குறித்து விவாதம் ஏற்பட்டது.
 கால வழுக்களைக் கூறுபவர்களுக்கு அவர் அமைதியாக, ""அது என் தவறன்று. ஆராய்ச்சியாளர்கள் பலர் தந்த குறிப்பேயாகும்'' என்று அடக்கமாகக் கூறியுள்ளார். "ஆலவாய் அழகன்' என்ற ஜெகசிற்பியன் படைப்பு உன்னதமானது என்று பாராட்டப்பட்டது.
நாவல் எழுதப் புகுவதற்கு முன்பு ஜெகசிற்பியன் சிறுகதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தார். பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன.
1958-இல் அவருடைய "அக்கினி வீணை' என்ற கதைத் தொகுதி 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. இலக்கியத் தரத்துடன் கூடிய சிறுகதைகள் படைத்தவரும், கவிஞருமான மீ.ப.சோமு அந்தத் தொகுதிக்கு முன்னுரை வழங்கியுள்ளார். தொடர்ந்து ஊமைக்குயில், பொய்க்கால் குதிரை, நொண்டிப்பிள்ளையார், நரிக்குறத்தி, ஞானக்கன்று, ஒருநாளும் முப்பது வருடங்களும், இன்ப அரும்பு, காகித நட்சத்திரம், கடிகாரச் சித்தர், மதுரபாவம், நிழலின் கற்பு, அஜநயனம், பாரத புத்திரன் என்ற தொகுதிகள் வெளிவந்தன. இப்படி ஏழத்தாழ 14 சிறுகதைத் தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. "பாரத புத்திரன்' சிறுகதைத் தொகுதிக்கு, தமிழ் வளர்ச்சித் துறை பரிசளித்துச் சிறப்பித்தது (1979-1981).
"நரிக்குறத்தி' சிறுகதைத் தொகுதியைப் பாராட்டிய கி.வா.ஜகந்நாதன், ஜெகசிற்பியன் கதைகளின் உள்ளுணர்வைப் பாராட்டி அந்தக் கதையின் பெயரில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கு அளித்த முன்னுரையில் சரியான மதிப்பீடு வழங்கியுள்ளார்.
வரலாற்றுப் புதினங்களால் பெரும் புகழ் பெற்ற ஜெகசிற்பியனின் சமூக நாவல்களைப் பற்றித் தனியே ஆராயலாம். 16 சமூகப் புதினங்கள் எழுதியிருக்கிறார். கொம்புத்தேன், தேவ தரிசனம், மண்ணின் குரல், ஜீவகீதம், மோக மந்திரம், ஞானக்குயில் ஆகிய புதினங்கள் பாராட்டப்பட வேண்டியவை. அவரது கதைகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றவை.
சிறுகதை, புதினங்கள், சமூகம் - வரலாறு மற்றும் மூன்று நாடகங்களையும், வானொலிக்காகப் பல நாடகங்களையும் படைத்திருக்கிறார். ஜெகசிற்பியன், "நாடகத்துறைக்கு முழு மூச்சுடன் தன் கவனத்தைச் செலுத்தவில்லை' என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.  எழுதியே வாழ்ந்த எழுத்தாளர்களைக் கணக்கிட்டால், ஜெகசிற்பியன் வளமாக வாழ்ந்தவர் இல்லை. "எழுத்தே ஜீவன்; நாட்டுக்கு உழைத்தல்' என்கிற லட்சியத்தோடு வாழ்க்கைத் தோணியை வெற்றிகரமாகக் கரைசேர்க்க சோம்பலின்றி உழைத்தவர்.
கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய புகழ் பெற்ற மொழியாக்கப் புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரை "செகப்ரியர்' என்று பெயரிட்டு எழுதியிருந்தார். பாலையனுக்கு அந்தப் பெயர் பிடித்தது. அதையே தன் புனைபெயராக வைத்துக்கொள்வது என்று முடிவு செய்தார். இதனால்,  மற்றொரு ஷேக்ஸ்பியர் தமிழ் உரைநடைக்குக் கிடைத்தார்.
""இந்த உலகத்தில் நான் என் உயிரைவிட மேலாக நேசிப்பவை இரண்டு. ஒன்று என் அருமைப் பிள்ளைகள். மற்றொன்று என் அழகான புனைபெயர்'' என்று ஜெகசிற்பியன் ஓரிடத்தில் குறிப்பிட்டதாகப் பேராசிரியர் வேலுச்சாமி எழுதியுள்ளார்.
பொருளாதாரத்தில் அவர் சிறக்கவில்லையே தவிர, வாழ்க்கையில் அவர் சிறப்பைக் கண்டார். வாழ்க்கைத் துணைவி தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்ற பெயருடைய மூன்று மகள்கள். திருமணத்தின்போது பயிற்சி பெற்ற ஆசிரியராக தவசீலி இருந்தாலும், அவரைப் பள்ளி ஆசிரியர் பணிக்கு அனுப்பாமல் உள்ளதைக் கொண்டு நிறைவடைந்தார் ஜெகசிற்பியன்.
எழுத்தாளர்களுக்கே உரித்தான "சொந்தமாக பத்திரிகை' நடத்திய முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், தொடர்ந்து நடத்தமுடியவில்லை.
அவருடைய "ஊமத்தைப் பூக்கள்' என்ற சமூகப் புதினம் "குமுதம்' வார இதழில் தொடராக வெளிவரத் தொடங்கிய சில வாரங்களிலேயே அதாவது, 1978-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி ஜெகசிற்பியன் காலமானார்.
அவர் மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர் சங்கம் நினைத்தது. சங்கத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்த அன்றைய அமைச்சராய் இருந்த இராம.வீரப்பனால் "திரு.வி.க. பரிசு' மற்றும் ரூ. 5000 தமிழக அரசால் ஜெகசிற்பியன் குடும்பத்துக்கு  வழங்கப்பட்டது.
"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன், 53 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் ஆழமும், அகலமுமுள்ள அவர் படைப்புகள் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

இன்றைக்கு யார்யாரோ கதை எழுதுகிறேன் பேர்வழி என்று எழுத்தாளர்களாக உலா வருவதில் எது நல்ல எழுத்து என்பதை அடையாளம் கண்டுகொள்வது மிகக் கடினமானதுதான். ஒரு நல்ல எழுத்தை தமிழுக்குத் தந்தவராக, ஜெகசிற்பியனை வாசித்தவனாக, நண்பர்களுக்கு மறுபடியும் நினைவுபடுத்துவதில் மகிழ்கிறேன்.     

மீண்டும் சந்திப்போம்.   

Saturday, February 22, 2020

இன்று படித்ததில் முக்கியமான சில செய்திகள்! #Covid-19

Covid-19 என்று நாமகரணம் செய்யப்பட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் 185 பில்லியன் டாலர்/ 1.38 லட்சம் கோடி யுவான் அளவுக்குச் சீனப்பொருளாதாரம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இழப்பைச் சந்திக்கும் என்று ஜூ மின் என்கிற முன்னாள் IMF துணை மேனேஜிங் டைரக்டரும் தற்போது பெய்ஜிங் சின்குவா பல்கலைக் கழகத்தில் National Financial Research Institute இன் தலைவராக இருப்பவர் இன்று சொன்ன விவரம்.


சுற்றுலாத்துறையில் சுமார் 900 பில்லியன் யுவான் அளவுக்கு சரிவும், உணவு, பானங்களில் நுகர்வோர் குறைந்ததால் 420 பில்லியன் யுவான் அளவுக்கு சரிவும் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் கல்வி மற்றும் பொழுதுபோக்குத்துறை  கொஞ்சம் ஈடுகட்டும் என்றாலும், மொத்த இழப்பு 1.38 லட்சம் கோடி யுவான் அளவில் இருக்கும். முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம்  3% முதல் 4% வரை குறையலாம். இதை ஈடுகட்ட பத்துமடங்கு வேகத்துடன் செயல்பட வேண்டியிருக்கும் என்கிறார். முழுச்செய்தியும் இங்கே

முகநூலில் இன்றைக்கு படித்ததில் இது முக்கியமாக

கொரானா வைரஸ் சீனாவைச் சீரழித்திருக்கிறது. அசைக்கமுடியாதது என்று உலக நாடுகளால் நம்பப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கதிகலங்கிப் போயிருக்கிறது என்பது மட்டும் உண்மை. மிக வலிமையானவர் எனக் கருதப்பட்ட ஜின்பிங்கிற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. சாதாரண சீனன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே தனது துன்பத்திற்கெல்லாம் காரணம் என உணரத் தலைப்பட்டிருக்கிறான். சீனாவிற்குள் பெரும் அதிருப்தியும், அச்சமும் இன்றைக்கு நிகழ ஆரம்பித்திருக்கிறது.
இதே நிலைமை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடித்தால் அனேகமாக ஜின்பிங் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்படலாம். அல்லது கொல்லப்படலாம். அல்லது ஜின்பிங் இரும்புக்கரம் கரம் கொண்டு தனது எதிர்ப்பாளர்களை படுகொலை செய்யலாம் எனப் பலவித சாத்தியங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லா கம்யூனிஸ நாடுகளைப் போல சீனாவிலும் தனிமனித சுதந்திரம் என்பது இல்லை.
இந்தியாவில் எவனும் எதைப்பற்றியும் பேசலாம். எழுதலாம். அல்லது தேச விரோதமாக கூட்டம் கூட்டிக் கூக்குரலிடாம். ஆனால் சீனாவில் எவனும் அதைப்போலச் செய்து விட்டு அடுத்த நாள் உயிரோடு இருப்பது சந்தேகம்தான். சீனாவில் ஃபேஸ்புக்கும் இல்லை, வாட்ஸப்பும் இல்லை, சுதந்திரமான பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என எதுவும் இல்லை. எனவே வெளியில் கசியும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளாக, அச்சமூட்டுபவைகளாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா போன்ற திறந்த, சாதாரண மக்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ள நாட்டில் வதந்திகள் உடனடியாக தோலுறிக்கப்பட்டு உண்மைகள் சிலமணி நேரத்திலேயே வெளியே வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சீனாவில் வதந்தி வதந்தியாக அதையும் தாண்டி அச்சமூட்டும் வதந்தியாக மாறி சீனர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
கொரானா வைரஸ் பாதித்தவர்களை சீனா சுட்டுக் கொல்கிறது என்று பரவும் வதந்தியால் சீன நகரங்கள் பெரும் சிறைக்கூடங்களைப் போல மாறிவிட்டன. சீனர்கள் வீடுகளின் கதவுகளை வெல்டிங் செய்து அடைத்து கொண்டு உள்ளேயே வாழ்கிறார்கள். நகரங்களில் ஆள் நடமாட்டமில்லாமால் சாலைகள் வெறிச்சோடிவிட்டன. எங்கும் பெரும் அச்சமும் பதட்டமும் நிலவுகிறது என்பதே உண்மை.
சீன அரசாங்கம் கொரானா வைரஸ் பரவலை பெருமளவு கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறுவது உண்மையாகக் கூட இருக்கலாம் என்றாலும் உலகம் அதனை நம்பத் தயாராக இல்லை. உலக நாடுகள் விமானப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி வைத்திருக்கின்றன. சீன உள்நாட்டுப் பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.
இன்றுவரை சீனா உலகின் மலிவான ஃபேக்டரியாக இருந்து வந்திருக்கிறது. அங்கிருந்து உலகின் மூலை முடுக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அளவில்லாதவை. இன்றைக்கு அத்தனையும் முடங்கிக் கிடக்கிறது. சீனர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்ப அஞ்சி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். தொழிற்சாலைகள் இயஙகவில்லை. துறைமுகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கம்யூனிஸ சீனர்களை கர்மா கடித்து வைத்துவிட்டது.
இன்னொருபுறம் இதனால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகிற பாதிப்புகள் அச்சமூட்டுபவை. சீனாவிலிருந்து வரும் பொருட்களை நம்பி உலகின் பல நாடுகளின் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இன்றைக்கு அது அத்தனையும் நின்று போயிருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மிக, மிகப் பெரியதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் இதன் தாக்கம் தெரியும். இந்தியாவும் சந்தேகமில்லாமல் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உண்டாகும் பாதிப்பை விடவும் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேககமில்லை.
இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அமெரிக்க பங்குச் சந்தை கீழிறங்கும் என்பது என்னுடைய கணிப்பு. அது தவறாக இருப்பதாக. இந்தியப் பங்குச் சந்தைக்கும் பாதிப்பு உண்டாகலாம்.
இன்னொருபுறம் இது இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வாய்ப்பு. அதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதினை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

இதில் சிவப்பெழுத்தில் காட்டப்பட்டிருக்கும் பகுதிகள் சரியானதல்ல என்றே எனக்குப் படுகிறது. கொஞ்சம் அதீதமானவை என்றே நினைக்கிறேன். ஆனால் பிப்ரவரி மாதத்துக்கு மேலும் கரோனா வைரஸ் பாதிப்பை சீனா கட்டுப்படுத்தத் தவறினால் அதன் பொருளாதாரம் ஏப்ரல் - ஜூன் இரண்டாவது காலாண்டிலும் சரிவைத் தொடர்ந்து சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடைசிப்பாராவில், இது இந்தியாவுக்கு மாபெரும் வாய்ப்பு என்று எதைவைத்து சொல்கிறார்? இந்தியத் தொழில் அதிபர்கள் எவரும் இதை ஒரு சவாலாக ஏற்று செயலில் இறங்கி விடுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியாவது இந்த இரண்டு மாதங்களில் தெரிந்ததா? 


சீனர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரை சரி! சரிகிறார்கள், வீழ்ந்துவிட்டார்கள் என்பது அதீத கற்பனை.

    
இப்போதைக்கு கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே நாடு சிங்கப்பூர் தான் போல!  ஜனங்களை கலவரப்படுத்தாமல், அதேநேரம் உறுதியான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரி ஒரு பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதுவதிலும் கூட இருக்கவேண்டும் என்பதுமட்டும் எனக்கு நன்றாகப் புரிகிறது!
     
 மீண்டும் சந்திப்போம்.  

Friday, February 21, 2020

கொஞ்சம் #செய்தி கொஞ்சம் #விமரிசனம் - 4

டொனால்ட் ட்ரம்ப் எதைப்பேசினாலும் அது பெரும் சர்ச்சையைக் கிளப்புவதாகாவே ஆகிவிடுவது ட்ரம்ப் ராசி என்று சொல்வதா? ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதா? என்னைக் கேட்டால் இரண்டும் தான் என்று கொஞ்சமும் தயங்காமல் சொல்வேன்! சமீபத்தைய ஆஸ்கார் விருதுகளில் முதல்முறையாக ஒரு கொரியத் திரைப்படம் Parasite சிறந்தபடமாகவும் 4 ஆஸ்கார்களைப் பெற்றது குறித்தும்  டொனால்ட் ட்ரம்ப் கொஞ்சம் குத்தலாகச் சொன்னது, அவர் ஆசைப்படியே  சர்ச்சையாகியிருக்கிறது.


பாரசைட் படத்தைப் பற்றி பேசியதென்னவோநடிகர்  வெறும் 45 வினாடிகள் தான்! போகிற போக்கில் பிராட் பிட் காலையும் வாரிவிட்டுப் போனார்! பேசியதன்  நோக்கம் என்னவோ தென்கொரியாவுடன் வர்த்தக உறவுகளைப் பற்றியதாக, Make America Great Again என்ற 2016 தேர்தல் கோஷம் நினைவிருக்கிறதா?   இப்போது அது  Keep America Great என்று மாற்றப்பட்டு  ஒரு தொடர்ச்சியை வேண்டுகிற மாதிரி! ஹாலிவுட் ஆசாமிகளுக்கும் ட்ரம்புக்கும் ஆகவே ஆகாது! இப்போது இதுவேறு சேர்ந்து கொண்டிருக்கிறதா? தாளித்துத் தள்ளுகிறார்கள்! Parasite’s US studio Neon gave the perfect riposte to Trump’s rant: “Understandable, he can’t read."


மன்மோகன் சிங்  மவுனசிங்காக பிரதமர் நாற்காலியில் ஒண்டிக்கொண்டு இருந்த அந்த நாட்களில்   ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த கார்டூனாம்! சதீஷ் ஆசார்யாவுக்கு முகநூல் நினைவூட்டல் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குள் சதீஷ் ஆசார்யா என்னமோ ஆகிவிட்டார்!


டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகிறார் என்ற செய்திக்குப் பின்னால் என்னென்னவெல்லாம் பேச்சு இருக்கிறது? The Print தளத்தின் சேகர் குப்தா அவர் பார்வையில் கொஞ்சம் தொகுத்துச் சொல்கிறார்.  என்பதைக் கொஞ்சம் கேட்டுத்தான் பார்க்கலாமே!
வீடியோ 23 நிமிடம்.
    

மீண்டும் சந்திப்போம். 

Thursday, February 20, 2020

கோழைச் சோழன்....! சாண்டில்யன் #குறுங்கதை

"கோழைச் சோழன் சங்க கால சரித்திரம். அதில் கண்ட சம்பவங்கள் அனைத்தும் அப்படியே நடந்தவை. கோழைச் சோழன் மூலமாக ஒரு வீர சரித்திரத்தை இந்தக் கதைகளில் படிக்கிறீர்கள். இதில் வரும் பாத்திரங்கள் அனைவரும் சங்க நூல்களில் இருக்கிறார்கள். சில உரையாடல்கள், சம்பவங்களைப் பற்றிய "ஜிகினா" வேலைகள், இவைதான் என் கற்பனை" என்று சாண்டில்யன் இந்தக் கதையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இனி, கோழைச்  சோழனைப் பார்ப்போமா?


கோழைச் சோழன்


ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப்  பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை ஆண்ட தித்தன் அன்று 'நாம் என் இந்தப் பிறவி எடுத்தோம்?' என்று ஏங்கினான் உள்ளூர. ஏங்கியவன் கனத்த மனத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து காவலர் செலுத்திய வணக்கத்தையும் கவனிக்காது படிகளில் ஏறி முதல் உப்பரிகையை அடைந்தான். அங்கொரு திடீர் சிரிப்பொலி! பகடைகள் உருளும் சத்தம்! இவற்றைக் காதில் வாங்கிய தித்தன் தனது மடியில் இருந்த குறுவாளை எடுத்துக் கொண்டு அந்த ஒலிகள் எழுந்த இடத்தை நாடிச் சென்றான்.

அங்கு தலையில் பட்டுச் சீலையால் முக்காடிட்டுக் கொண்டு தோழியர் பலருடன் பகடைகளை உருட்டிக் கொண்டிருந்தான் அவன் ஒரே மகனான நற் கிள்ளி. அரசன் வந்ததை அவன் கவனிக்கவில்லை ஆயினும் தோழிகளுள் ஒருத்தி கவனித்ததால் பகடையிடத்திலிருந்து சரேலென்று எழுந்திருக்க அவள் முயல, அவள்  சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்ட நற் கிள்ளி, "எங்கே ஓடுகிறாய் பாதி ஆட்டத்தில்? உட்கார்" என்று அவளை வலிய இழுத்தான்.

முந்தானையை நற் கிள்ளி பிடித்ததால் மீதி ஆடையை மார்பில் பிடித்துக் கொண்டதோழி, "விடுங்கள் இளவரசே!" என்று கெஞ்சினாள்.

"வெற்றி கிடைக்கும் சமயத்தில் யார் விடுவான்? உட்கார்." என்று அதட்டினான் நற் கிள்ளி.

"இளவரசே! விடுங்கள்! பகடை வெற்றி ஒரு வெற்றி அல்ல. உங்கள் வெற்றி, வீரத்தில் இருக்க வேண்டும்" என்றாள் தோழி.

நற் கிள்ளி வேகமாக நகைத்தான். "அடி தோழி! பகடை வெற்றியிடம் வீரத்தின் வெற்றி பலிக்காது. சகுனி பகடையால் வெற்றி கொல்லவி;ல்லை பாண்டவரை? நாடு கடத்தவில்லை அவர்களை?" என்று கூறி மீண்டும் பகடையை உருட்டினான். தலையில் இருந்து நழுவ இருந்த பட்டாடையையும் மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

இந்தச் சமயத்தில் தித்தன் குரல் கூரிய வாளென நுழைந்தது, அந்த உரையாடலுக்குக் குறுக்கே." "டேய் நற் கிள்ளி! விடு அவள் முந்தானையை" என்றான் தித்தன் சினம் பீரிட்ட குரலில்.

தித்தன் குரலைக் கேட்டதும் நடுங்கிய நற்கிள்ளி பகடையை அவசர அவசரமாக எடுத்து மடியிற் செருகிக் கொண்டு போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு எழுந்து நின்றான். "தந்தையே! தாங்களா!" என்று வினவினான் நற் கிள்ளி நடுக்கம் ஒலித்த குரலில்.

"நான் தான்! ஆனால் உன் தந்தையல்ல" என்றான் தித்தன்.

நற்கிள்ளியின் கண்களில் அச்சம் தெரிந்தது. "நீங்கள் என் தந்தை இல்லையா?" என்று வினவினான் மெல்ல.

"இல்லை! சகுனிக்கு ஒரு தந்தை இருந்ததாகப் புராணங்களில் குறிப்பிடவில்லை"

"நான்...."

"சகுனி பகடையில் வல்லவன். பெண்களிடை பழகுபவன்,  குதிரை ஏற்றம் பயில வேண்டிய காலத்தில் குலாவுகிறாய் அரண்மனைச்   சேடிகளிடம் ! வில்லையும், வாளையும் பிடிக்க வேண்டிய கைகள் பகடையையும் கழங்குகளையும் பிடிக்கின்றன." என்ற மன்னன் "டேய் நற்கிள்ளி! உன்னை அரண்மனைத் தோழிகள் என்னவென்று அழைக்கிறார்கள் தெரியுமா?" என்று வினவினான்.

"என்னவென்று..?" நற்கிள்ளி அக்கம் பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான். அவர்கள் தலைகள் தாழ்ந்து கிடந்தன. கமலக் கண்கள் தரையை நோக்கின!

"மடையா! எப்பொழுதும் பெண்களைப் போல உடலைப் பட்டாடை கொண்டு போர்த்தியிருக்கிறாய் அல்லவா?"

"ஆம்."

"அதனால் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கிறார்கள்.  உன் கோழைத்தனத்துக்கு அரண்மனைத் தோழிகள் சூட்டியுள்ள பட்டம் அது."
என்று வெறுப்புடன் சொன்னான் மன்னவன்.

நற்கிள்ளி பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான், "பட்டத்து இளவரசனான என்னையா அப்படிப் பழிக்கிறீர்கள்?" என்று வினவினான் அவர்களை நோக்கி. இந்த சமயத்தில் சுரீலென வாளைப் பாய்ச்சுவது போலக் கேட்டான் தித்தன். "நீ பட்டத்து இளவரசனென்று யார் சொன்னது?"

நற்கிள்ளியின் கண்கள் சலனத்தைக் காட்டின."யார் சொல்ல வேண்டும்? நான் உங்களுக்கு ஒரே மகன்...." என்ற  நற்கிள்ளியின் சொற்களை, "நீ என் மகனல்ல என்று முன்னமேயே சொன்னேன்." என்று பாதியிலேயே வெட்டினான் தித்தன்.

"அப்படியானால்.....?" நற்கிள்ளியின் குரல் நடுங்கியது.

"நீ நாடு கடத்தப் பட்டாய். நாளைக்குப் பிறகு உறையூரில் நீ தலை காட்டினால் தலை கொய்யப் படும். ஒரு கோழையை மகனாகத் தினம் காண்பதை விடக் காணாதிருத்தல் நன்று" என்ற மன்னன் அவ்விடத்தை விட்டு வேகமாக அகன்றான். தோழியரும் பறந்தனர், பட்டத்தரசியிடம் அச் செய்தியைச் சொல்ல.

அரண்மனை உப்பரிகைக் கூடத்தில் தனியே நின்ற போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. அவன் அழகிய கண்களும் சிரித்தன. போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு அரண்மனையை அடுத்திருந்த புறக்காட்டை நோக்கிச் சென்றான்.

கோழைச் சோழன், போர்வைக்கோ என்ற அடைமொழி எதைக் குறிக்கிறது என்பதை  சுவாரசியமாகச் சொல்லி ஆரம்பித்தும் ஆயிற்று !  அப்புறம்....!

காட்டுக்குள் புகுந்து சிறிது தூரம் நடந்ததும் தூரத்தே தெரிந்த ஒரு விளக்கை நோக்கிச் சென்று அங்கிருந்த சிருவீட்டின் கதவைத் தட்டினான் மும்முறை! கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டினான் பிரம்மாண்டமான ஒரு மனிதன். அவன் உடற்கூறு இரும்பாய் இருந்தது. சதைகள் கெட்டிப்பட்டுக் கிடந்தன.கன்னக் கதுப்புகள் பெரியதாயிருந்தமையால் கண்கள் சிறிதாகத் தெரிந்தன.இளவரசனைக் கண்டது, "வாருங்கள் உள்ளே" என்று அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் கூடத்தை அடைந்ததும் கேட்டான். "எங்கே வந்தீர்கள் இங்கே?"என்று.

"நல்ல சேதி சொல்ல வந்தேன்" என்றான் நற்கிள்ளி.

"என்ன சேதி இளவரசே?"

"என் தந்தை என்னை நாடு கடத்தி விட்டார்."

இதைக் கேட்ட அந்த மனிதன் சிறிதும் பதறவில்லை. பெருமூச்சு மட்டும் விட்டான். "நீங்கள் நினைத்தது நடந்து விட்டது?" எண்டு வினவினான் அந்த மனிதன்.

"ஆம்!" என்றான் நற்கிள்ளி மகிழ்ச்சியுடன்.

"இது சரியல்ல இளவரசே!" என்றான் அந்த மனிதன்.

"பெருஞ்சாத்தனாரே! என் ஆசானான நீருமா இதை ஏற்க மறுக்கிறீர்? என் ஆசையை ஏன் தடை செய்கிறீர்?" என்று கேட்டான் நற்கிள்ளி.

"நீங்கள் உறையூரை விட்டுப் போவதால்......?" என்று பெருஞ்சாத்தான் வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

"ஒரு கோழையை உறையூர் இழக்கிறது!"

"ஆனால் உலகம் ஒரு........"

"நிறுத்துங்கள் சாத்தனாரே! காலம் புதிரை அவிழ்க்கட்டும் நான் வருகிறேன்" என்ற நற்கிள்ளி ஆசானை வணங்கி விடைபெற்று வெளியே சென்றான்.

பாட்டுடைத் தலைவன் போர்வைக்கோ பெரு நற்கிள்ளி அறிமுகம் ஆயிற்று! அவன் சோழ இளவல் என்பதும் காலம் புதிரை அவிழ்க்கட்டும் என்ற வார்த்தைகளுக்கு உள்ளேயே கதையின் சஸ்பென்ஸ் முடிச்சும் வைத்தாயிற்று! சரி, கதையை நகர்த்திச் செல்ல அடுத்த கதாபாத்திரங்கள் வரிசையாக வர வேண்டுமே! வருகிறார்கள்! அடுத்தது யாராக இருக்கும்? இதில் சந்தேகம் வேறு உண்டா?

முக்காவல் நாட்டின் சிறப்புற்ற சிற்றூரான ஆமூருக்கு ஆண்டுதோறும் ஒரு அதிர்ஷ்டமுண்டு! அந்த ஊர் முருகவேல் கோட்டத்தின் பெருந்திருநாளன்று அந்த நாட்டின் பல பகுதிகளினின்று வணிகரும் வீரரும் கூடி முருக வேளைத் தொழுது மறு ஆண்டைப் பயனுற்றதாகச் செய்து கொள்ளும் வழக்கம் இருந்ததால், பெருங்கோழியூர் நாய்கன் என்ற வீரர் பெருமானும் தனது நெடுநாளையக் குறை ஒன்றைப் போக்கிக் கொள்ள, தனது மகள் நக்கண்ணையுடன் ஆமூருக்கு வெளியே உள்ள தோப்பு வீட்டில் தங்கியிருந்தான்.

பெருந்திருநாளின் மாலைப் பூசை நடந்து தம் குறி சொல்லும் பூசாரி கர்ப்பக் கிரகத்தை அடுத்த மண்டபத்தில் குழுமியிருந்த கூட்டத்தைக் கற்பூரத் தட்டுடன் அணுகிக் கூட்டத்தின் மீது கண்களை ஓட விட்டான் ஒரு வினாடி. பிறகு தூரத்தே தோழியருடன் ஒரு தூணுக்கருகில் நின்றுகொண்டிருந்த நக்கண்ணையைக் கை காட்டி அழைத்து, "பெண்ணே! முருகவேள் அருள் உனக்குக் கிட்டி விட்டது. இன்னும் பத்து நாள் இங்கே இருந்து, கொட்டக் குளத்தில் நீராடி அவனை வணங்கு. பத்தாவது நாள் உன்னை மணப்பவன் உன் இல்லம் தேடி வருவான்." என்று கூறித் தட்டை நீட்டினான்.

நக்கண்ணையும் தட்டில் இருந்த விபூதியையும், குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் தீட்டிக் கொண்டாள். பிறகு தோழியருடன் தோப்பு வீட்டுக்குத் திரும்பினாள்.

கோட்டத்தில் நடந்ததைத் தோழியர் எடுத்துக் கூற, பெருங்கோழியூர் நாய்கன் இரும்பூதெய்தி முருகவேளை மனத்துள் துதித்தான். "என் குறை தீர்ந்தது அப்பனே!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பெண்ணின் தலையைக் கோதி விட்டு "நக்கண்ணை! உன் புலமைக்கேற்ற புருஷன் நிச்சயம் கிடைப்பான்" என்றும் ஆறுதல் கூறினான் அவளுக்கு.

நக்கண்ணை தனது நளினமான அழகிய விழிகளை நிலத்தில் ஓட்டினாள். போன கோட்டங்கள் கணக்கில்லை. செய்த வழிபாடுகள் குறைவில்லை. "இரண்டு ஆண்டுகளாக நடக்காதது இப்பொழுது எங்கே நடக்கப் போகிறது?" என்று நினைத்தாள் நக்கண்ணை. இருப்பினும் தந்தையிடம் பதில் பேசாது இடை துவள அழகு நடை நடந்து உள்ளே சென்றாள்

ஆனால் பூசாரி சொன்னது போல அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் முருகவேளின் கோட்டத்திற்குச் சென்றாள். வாவியில் நீராடினாள். அங்கிருந்த செங்கழுநீர்ப் பூவை பறித்துத் தலையில் சூட்டிக் கொண்டு சந்நிதானம் சென்று வழிபாடு  செய்தாள். எட்டுநாட்கள் இப்படி ஓடியும் பயனேதுமில்லை என்றாலும் தந்தையைத் திருப்தி செய்ய விரதத்தை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டு வந்தாள். ஒன்பதாம் நாள் ஒரு விதமாக வழி பிறந்தது. ஆனால் அது நல்வழியல்ல.

சரித்திரக்கதைகள் என்றாலே சாண்டில்யன் தான்!

பதிவைக் கவனித்திருந்தால் போர்வைக்கோ பெருநற் கிள்ளியைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடியவர் இருவர்! சாத்தந்தையார் முதல் மூன்று பாடல்கள், பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் அடுத்த மூன்று பாடல்களைப் பாடிய விவரம் நினைவுக்கு வரும்! முதல்வர், இங்கே கதையில் ஆசானாகி விட்டார்! அடுத்தவரோ, கைக்கிளை, பழித்தல் என்று காதல் திணையில் பாட்டைப் பாடியதால், கதையின் நாயகியாகவே ஆகிவிட்டார்! 

வரவேண்டிய நபர் இன்னும் ஒருவர் தான்! ஆமூர் மல்லன்! ஆக வில்லனும், இதோ வந்தாயிற்று!

அன்று காலை வழக்கம் போல வாவியில் நீராடி, கரையில் தோழியர் தன்னைச் சுற்றித் திரைபோல் பிடித்த பட்டாடைக்குள் ஈர ஆடையைக் களைந்து புத்தாடை சுற்றிக் கச்சையணிந்து தலையில் செங்கழுநீர் மலர் சூடி வாவிப் படிகளில் ஏறினாள். அங்கு நின்று அவள் வழியை மறித்தான் திடகாத்திரமான ஒரு மனிதன். அவனை ஏற இறங்கத் தீ விழி கொண்டு நோக்கினாள் நக்கண்ணை. "யார் நீங்கள்?" என்றும் வினவினாள்.

"ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்" என்ற அவன் பதிலில் தற் பெருமையும் இருந்தது.

"அத்தனை போக்கிரியா நீ?" இம்முறை மரியாதையைக் கைவிட்டுக் கேட்டாள் நக்கண்ணை.

"போக்கிரியா?" வியப்பிருந்தது அவன் கேள்வியில்.

"பெண்ணை வழிமறிக்கும் ஆடவருக்கு வேறு  பெயர் ஏதாவது இருக்கிறதா?"

"எதற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு."

"இது அப்படி ஒரு விலக்கு?"

"ஆம். உன் அழகு, ஆமூர் மல்லனையும் இவ்வழிக்கு இழுத்தது."

"இவ்வூர்ப் பெரு மல்லரா நீங்கள்?"

"ஆம்!" இதைப் பெருமையாகச் சொன்னான் மல்லன். அத்துடன் விடவில்லை அவன். "உனக்கு மணாளனைத் தேட, இரண்டு ஆண்டுகளாக உன்தந்தை முயலுவதாகக் கேள்வி. அந்தக் கஷ்டம் இனி இல்லை என்று அவரிடம் சொல். உன்னைப் பெண் கேட்க இன்று மாலை வருகிறேன்." என்று கூறி வழியினின்று விலகினான்.

அன்று பெருஞ் சீற்றத்துடன் முருகவேளை நோக்கினாள் நக்கண்ணை. "இவன் தான் நீ தரும் மணாளனா?" என்றும் வினவினாள் மனத்துள்.

முருகவேளின் வதனத்தில் புன்சிரிப்பு இருந்தது. கண்களில் அருள் இருந்தது. அந்தச் சிலை அவளுக்குப் பதில் சொல்லவில்லை தான். ஆனால், அவனுக்குப் பேச்செதற்கு? விழிகள் போதுமே!

இதை உணராத நக்கண்ணை ஆத்திரத்துடன் வீட்டை எய்தினாள்.  தந்தையிடம் நடந்ததைச் சொன்னாள். பெருங்கோழியூர் நாய்கன் மனம் எரிமலையாய் இருந்தது. அன்று மாலை ஆமூர் மல்லன் வந்தபோது வாயிலிலேயே நின்று விடை பகர்ந்தான்: "வல்லூறு புறாவை மணக்க முடியாது" என்று.

"நாய்கரே! ஆமூர் மல்லனை அவமதிப்பவர் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருக்கிறது!" என்றான் மல்லன்.

"தெரியும்! உன்னுடன் மற்போர் புரிய வேண்டும்." என்றான் நாய்கன்.

"ஆம்! நீயோ உன்னிடமுள்ள மல்லரோ இன்றிலிருந்து மூன்றாவது நாள் ஆமூர் மற்போர்க் கூடத்துக்கு வாருங்கள்!" என்று கூறி விட்டு அகன்றான் மல்லன். இதைக் கேட்ட நாய்கன் தன உயிர் இன்னும் இரண்டு நாட்கள் தான் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆமூர் மல்லன் கிழித்தெறிந்த உடல்கள் பல என்பதை அறிந்த நக்கண்ணை அன்று முழுதும் உறங்கவில்லை.

பத்தாவது நாளும் பிறந்தது.தோப்பு வீடு துன்பத்தில் ஆழ்ந்து கிடந்தது. அன்றும் முருகவேல் கோட்டத்திற்குக் கிளம்பிய நக்கண்ணை வெறுப்புடனேயே கிளம்பினாள். தமிழ்ப் புலமையை அன்று முருகவேளிடமே காட்டி இகழ்ப்பா பாடினாள் உள்ளூர. முருகன் முகத்தில் அதைக் கேட்டும் முறுவல் இருந்தது. அன்று கடைசித் தினமானதால் மாலையிலும் கோட்டம் வந்து விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள்.

வரிசையாக, கதையின் நாயகன் கோழையாக அறிமுகமாகி, தந்தை அவனை நாடு கடத்த, சந்தோஷத்துடன் வெளியேறுகிறான் கதாநாயகி அறிமுகம் ஆகிறாள்..   அவளைத் தொடர்ந்து வில்லன் தொந்தரவு செய்கிறான்.. கதாநாயகன் என்டர் ஆகவேண்டிய இடம் வந்து விட்டது இல்லையா?

ஒரு ஃபைட்  சீன, அப்புறம் க்ளைமாக்ஸ், மறுபடி ஓபனிங் சீனுடன் கதையைக் கோர்த்தாக வேண்டுமே! எல்லாக் கதைகளும் மொத்தம் 43  கதைக்களம் (Plots)  பார்முலாக்களுக்கு உட்பட்டது தானாமே! சரித்திரக் கதை மட்டும் என்ன விதி விலக்கா?

......விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள்.

வீட்டின் திண்ணையில் தூணுக்கருகில் முக்காடிட்டு ஓர் உருவம் பதுங்கி இருந்தது. உடல் முழுவதும் பட்டுப் புடவை மூடிக் கிடந்தது. "யார்?" என்று வினவினாள் நக்கண்ணை. பதில் கிடைக்காததால், பக்கத்திலிருந்த ஒரு மரக்கிளையில் சிறிது உடைத்து அதன் உதவி கொண்டு முக்காட்டைத் தூக்கிப் பார்த்தாள். கரிய இரு விழிகள் அவளை நோக்கின.முகம் சந்திர பிம்பமாக இருந்தது. அது ஆடவன் என்பதற்கு ஒரே அறிகுறி உதட்டின் மீது மிக அழகாக வளர்ந்திருந்த அரும்பு மீசை.

"எழுந்திரு" என்று அதட்டினாள் நக்கண்ணை.

எழுந்திருந்தான் முக்காட்டுக் காளை! அவன் இடையில் ஒரு வாளும் இருந்ததை அவள் கண்டாள். அவன் எழுந்ததில் ஒரு கம்பீரமும் இருந்தது அவளுக்குப் புலனாயிற்று. "யார் நீ?" என்று மீண்டும் வினவினாள் நக்கண்ணை.

அவளுடைய அழகிய விழிகளுடன் அந்த வாலிபன் தனது கண்களைக் கலந்தான் ஒரு வினாடி. அந்த வினாடியில் அந்தப் பார்வை மூலம் அவன் தன்னுள் புகுந்து விட்டானென்பதை  உணர்ந்து நக்கண்ணை நாணமெய்தினாள். "தோழி! அவர் யாரென்று கேள்!" என்று இம்முறை தோழியை ஏவினாள். தோழி திகைத்தாள். என்றும் யாரிடமும் நேராகப் பேசும் நக்கண்ணை அன்று தன்னைப் பேசச் சொன்னது திகைப்பாகவும் இருந்தது, வியப்பாகவும் இருந்தது அவளுக்கு. இருப்பினும் திகைப்பையும் வியப்பையும் உதறிக் கேட்டாள் "யார் நீ?" என்று.

"கோழைச் சோழன்!" என்று பதில் கூறினான் அவன்.

"கோழைச் சோழனா?!" வியப்புடன் வினவினாள் தோழி.

"ஆம். நான் பட்டாடைப் போர்வையுடன் முக்காடிட்டிருக்கவில்லை?" என்று வினவினான் அவன்.

"இருந்தாய்"

"அப்படிப்பட்டவன் தென்புலத்தில் ஒருவன் தானுண்டு. அவன்...."

"போர்வைக்கோ பெரு நற்கிள்ளி" என்று இடைப்புகுந்து வாசகத்தை முடித்த நக்கண்ணை அதிர்ச்சி வசப்பட்டாள். "சோழ இளவல் இங்கு ஏன் வந்தார்?"  என்று வினவினாள்.

"நாடு கடத்தப் பட்டேன்." என்றான் இளவல்.

"கேள்விப் பட்டோம்" என்றாள் நக்கண்ணை.

"கோழைத் தனத்திற்காக" என்று சொன்னான் இளவல்.

நக்கண்ணையின் மனம் குழம்பியது. அவன் முகம் கோழையின் முகமாகத் தெரியவில்லை அவளுக்கு. கண்களும் கோழையின் கண்களல்ல என்பது அவள் புலமை உள்ளத்திற்குப் புலனாயிற்று. ஆகவே "உள்ளே வாருங்கள்" என்று அழைத்துச் சென்றாள். உள்ளே பெருங்கோழியூர் நாய்கன் சோழ இளவலைத் தக்க மரியாதையுடன் எதிர் கொண்டான். மஞ்சத்தில் உட்கார வைத்து எதிரில் நின்று கொண்டான். "என்ன ஆணை?" என்றும் கேட்டான்.

"நாய்கரே! ஒரு உதவி வேண்டும்" என்றான் சோழ இளவல்.

"உத்தரவிடுங்கள்."

"நாளைக் காலையில் நீர் ஆமூர் மல்லனிடம் செல்லுங்கள்."

"உம்"

"சென்று நான் அவனுடன் மற்போர் புரிய விரும்புவதாகச் சொல்லுங்கள்."

இதைக் கேட்ட நாய்கன் திகிலடைந்தான்."இளவரசே இது வேண்டாம். இது வேண்டாம்" என்றான்.

"ஏன்?"

"அவன் உங்களைக் கிழித்துப் போட்டு விடுவான்."

"நாய்கரே!"

"இளவரசே"

"வீரர்கள் போரில் மரிப்பது நல்லதா? கோழையாக வாழ்வது நல்லதா?"

இதற்கு நாய்கன் பதில் சொல்லவில்லை. "ஏன் மரிக்க இஷ்டப் படுகிறீர்கள்?" என்று முடிவில் கேட்டான்.

"நக்கண்ணையின் நளின விழிகளுக்காக. அவளை நேற்று வாவிக் கையில் அவமதித்தான் மல்லன்."

"ஆம். நேற்று என்னையும் போருக்கு அழைத்தான்."

"உங்களுக்குப் பதில் நான் செல்கிறேன்." நற்கிள்ளியின் பதில் உறுதியாயிருந்தது.


இந்த விநோதத்தைக் கேட்டு, மறுநாள் ஆமூரே  நகைத்தது. "போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி மாள ஆமூருக்கா வரவேண்டும்?" என்று ஊர்ப் பெரியவர்கள் நகைத்தார்கள். பெண்கள் கூட நகைத்தார்கள்.'இந்த மற்போர் நடைபெறாது.சமயத்தில் நற்கிள்ளி ஓடிவிடுவான்' என்று பலரும் சொன்னார்கள். ஆனால். குறிப்பிட்ட நேரத்தில் போர்வையைப் போர்த்திக் கொண்டு ஊர் மத்தியிலிருந்த மற்போர்க் கூடத்துக்கு வந்து சேர்ந்தான் நற்கிள்ளி. மக்கள் அவனை வியப்புடன் பார்த்தார்கள். ஆமூர் மல்லன் எல்லோரும் கேட்கக் கூவினான்" "ஐயோ! சோழன் மகனே! விதி உன்னைப் பிடர் பிடித்து உந்த இங்கு வந்தனை. வேண்டுமானால் ஓடிவிடு," என்று.

பெருநற்கிள்ளி மெல்லப் போர்வையை எடுத்தெறிந்தான். தனது உடலின் மீதிருந்து. உள்ளே சல்லடம் மட்டுமே தரித்திருந்த அவன் தேக காந்தி, இளமை, விழிகளில் இருந்த அசட்டை இவற்றைக் கண்ட மக்கள் "இந்த வயதில் இவனுக்கு ஏன் இந்த விதி?" என்று கேட்டார்கள்.

சிலர் பெருங்கோழியூர் நாயகனைத் தூற்றினார்கள். "இந்தச் சிறு பிள்ளையை இவன் ஏன் காவு கொடுக்கிறான்?" என்று. இவையனைத்தும் சற்று எட்ட இருந்த பனைமரத்தில் சாய்ந்திருந்த நக்கண்ணையின் காதில் விழ, அவள் தனது நளின நயனங்கள் பனிப்ப நின்றாள். ஆனால், மற்போர் துவங்கியதும் விழிகளைத் துடைத்துக் கொண்டாள். வேதனை இருந்த இடத்தில் வியப்பு ஆட் கொண்டது. ஆமூர் மல்லன் மும்முறை இளவலைப் பிடித்தான் தனது முரட்டுப் பிடியில் மும்முறையும் மிக லாவகமாக நழுவினான் நற்கிள்ளி. நான்காம் முறை இருவரும் அணுகிய போது பிடித்தவன் ஆமூர் மல்லனல்ல. நற்கிள்ளியின் மெல்லிய கரங்கள் மல்லன் கரங்களைப் புதுப் பாணியில் சுழற்றி மடக்கிப் பிடித்தன. திடீரென அக்கைகள் திரும்பிய வேகத்தில் மல்லன்  இரு முறை சுழன்றான்.

இந்தப் புதுப் பிடியைக் கண்டிராத மல்லன் இதயத்தில் சந்தேகம் எழுந்தது. "இவன் உண்மையில்கோழை தானா? சோழன் மகன் தானா?"என்ற கேள்விகள் சித்தத்தில் பிறந்தன. ஆகவே தனது வலிமையை  எல்லாம் உபயோகிக்க நெருங்கினான் இளவலை. இளவலும் தயாராக நின்றான். இம்முறை காலுதைப்பில் ஈடுபட்டான் மல்லன். அதை எதிர்பார்த்த நற்கிள்ளி சற்று விலகித் தனது காலால் அவன் கணுக் காலுக்கு மேல் உதைக்க, மல்லன் மண்ணில் புரண்டான். அடுத்த வினாடி யானை மீது பாயும் சிங்கம் போலப் பாய்ந்த இளவரசன், மல்லன் மார்பில் தன காலை ஊன்றி அவன் தலையை எடுத்துப் பிடித்து, "இது உன் மமதைக்கு, இது ஏன் வீரத்துக்கு, இது நக்கண்ணையை வழி மறித்ததற்கு," என்று மும்முறை தரையில் மோதிவிட்டு எழுந்தான்.. மல்லன் வாயில் ரத்தம் வந்தது. அத்துடன் ஒரு பெருமூச்சு, அவன் உயிரும் பிரிந்தது.

ஆமூர் மக்கள் பிரமை பிடித்து நின்றனர். ஏதும் நடவாதது போல சல்லடத்துடனும் உடம்பில் புழுதியுடனும் நக்கண்ணை நின்றிருந்த பனை மரத்தை நோக்கி நடந்தான் நற்கிள்ளி. அத்தனை புழுதியுடன் அவளைத் தழுவியும் கொண்டான். நக்கண்ணை மறுக்கவில்லை. ஊர் மக்கள் காண அவன் உடற்புழுதிகளைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்தாள்.

இப்போது கதை ஆரம்பித்த இடத்துடன் போய்ச் சேர வேண்டும் இல்லையா? வாருங்கள், நாமும் கூடப் போய்ப் பார்ப்போம்!

மகன் நாடு கடத்தப்பட்ட ஓராண்டுக்குப் பின்னர் பெருஞ்சாத்தன் இல்லத்தை அடைந்த சோழ மன்னன் தித்தன், "பெருஞ்சாத்தனாரே! என் மகன் ஆமூர் மல்லனைக் கொன்று விட்டானாம்." என்றான்.

"ஆம்" என்றார் பெருஞ்சாத்தனார்..

"அப்படியானால் அவனுக்கு மற்போர் கற்றுக் கொடுத்தது யார்?" என்று வினவினான் மன்னன்.

"நான் தான்!"

"விற்போரும் தெரியுமா?"

"சகலமும் தெரியும்!"

"அப்படியானால் அவன் கோழையல்லவே?"

"சிங்கத்தின் வயிற்றில் நரி எப்படிப் பிறக்கும்?"

பெருஞ்சாத்தனாரின் இந்தக் கேள்வி மன்னனைத் திகைக்க வைத்தது. "பிறகு, கோழையாக வேடந்தான் போட்டானா நற்கிள்ளி?" என்று வினவினான்.

"ஆம்! உலகத்தைத் தனிப்படப் பார்க்க விரும்பினார் இளவரசர். ஒரே மகனானதால் நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களென்று  எண்ணினார். ஆகையால்....!"

"நாடகமாடினான்?"

"ஆம்!"

"அதற்கு நீரும் உடந்தை?"

பெருஞ்சாத்தனார் பதில் கூறவில்லை. வாயிலில் எதையோ கண்டு விழித்தார். "என்ன விழிக்கிறீர்?" எனச் சீறினான் மன்னன்.

வாயிலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நற்கிள்ளி. " தந்தையே! சாத்தனாரிடம் குற்றம் காணாதீர்கள்! குற்றம் என்னுடையது." என்றான்.

தித்தன் ஒரு வினாடி தாமதித்தான். பிறகு மைந்தனை அணைத்துக் கொண்டு "நற்கிள்ளி! இன்று நான் புத்திரப் பேறு பெற்றேன்." என்று கூறிவிட்டு, "இனி அந்தப்புரம் சென்று விளையாடுவதில்லை என்று உறுதி சொல்" என்று கையை நீட்டினான்.

"அந்த உறுதி சொல்ல முடியாது."

"அப்படியானால்...?"

"இப்பொழுதே அந்தப்புரம் போக வேண்டும்!"

"காரணம்?"

"இவள்" என்ற இளவல் "இதோ உங்கள் மருமகள்!" என்று வாயிலை நோக்க, நக்கண்ணை அன்ன நடை நடந்து வந்து மன்னனை வணங்கினாள்.

மன்னன் நகைத்தான்! " சரி, சரி! போ அந்தப் புரத்துக்கு!" என்றான்.

அன்றிரவு மணவறையிலும் நற்கிள்ளி போர்வை போர்த்தி வந்தான். "புடவையை எடுத்து எறிகிறீர்களா, நான் எறியட்டுமா?" என்றாள் நக்கண்ணை.

"அது உன் தொழில் அல்ல! என் தொழில்!" என்று சீலையை நீக்கிப் பஞ்சணையை அணுகினான் நற்கிள்ளி.

சரி நண்பர்களே! முழுக் கதையையும் சொல்லி முடித்தாகி விட்டது. இப்போதாவது அந்தப் பாடலைப் படித்து விட்டு, எந்த அளவுக்கு சரித்திரம்,. எந்த அளவுக்குப் புனைவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?!


இந்தச் சிறுகதை 1960  களில் அமுதசுரபி மாத இதழில் வெளியானது. இன்னும் மூன்று சிறுகதைகளுடன், 1969 வாக்கில் புத்தக வடிவாகவும் வெளி வந்தது. வானதி வெளியீடு. என்னிடமிருப்பது 1988  இல் வந்த ஐந்தாவது பதிப்பு,  -விலை வெறும் ஐந்தே ரூபாய் தான்!

காசு கொடுத்து வாங்கிப் படிக்க நிறைய வாசகர்கள் தயாராக இருக்கும்  இந்தத் தருணத்தில்,  பதிப்பகங்கள் கொள்ளை விலை வைத்துப் புத்தகங்களை விற்கும் நிலை அநேகமாகத் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. இதை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம், இல்லையா?

மீண்டும் சந்திப்போம். 

அரசியல் இன்று! கொஞ்சம் #செய்தி கொஞ்சம் #விமரிசனம் -3

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடைய பேச்சோ அரசியலோ எனக்குப் பிடித்தமானது அல்ல தான்! ஆனால் நரேந்திர மோடி அமெரிக்காவுடன் ஒரு இணக்கமான உறவையே விருப்புவதில், டொனால்ட் ட்ரம்புக்கும் பிடித்தமானவராக மோடி ஆகிப்போனது இங்கே நிறையப்பேருக்குக் கண்ணை உறுத்துகிறது. கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கு ரொம்பவமே அது உறுத்துகிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை! அதற்குமுன்னால் வேறொரு முக்கியமான செய்தியைப் பார்த்துவிடலாம்!


According to people familiar with the matter, the ship, intercepted on February 3, is undergoing a detailed inspection at Kandla Port in Gujarat. They added that the Defence Research and Development Organisation (DRDO), which has been examining the ship, is sending a second team of nuclear  scientists this week to check the large autoclave on board என்று நான்குநாட்களுக்கு முன்னால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல் சொல்கிறது வேறுசில ஊடகங்களிலும் வந்திருக்கக் கூடும். ஆனால் ஷாஹீன் பாக், வண்ணாரப்பேட்டை போன்ற ஆகாவரிக் குப்பைகளுக்குக் கொடுக்கும் கவனம் இதுமாதிரி நாட்டுப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு கிடைப்பதில்லையே! இப்போது மேலே வீடியோவில் ரிஷப் குலாடி நடத்துகிற விவாதத்தில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. என்னதான் உலகநாடுகளுடன் நல்லுறவைப்பேண இந்தியா விருப்பம் கொண்டிருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நம் கையே நமக்குதவி என்பதுதான் யதார்த்தம். FATF விவகாரத்தில்கூட பாகிஸ்தான் பயங்கர வாதத்தை இந்தியாவுக்கு மட்டுமல்ல வேறுபலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது தெரிந்திருந்தாலும், பாகிஸ்தானைக் கறுப்புப் பட்டியலில் வைக்காமல் இருப்பது, காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்க முடியுமா எனக்காத்திருப்பது, இப்போது சீனாவிலிருந்து கள்ளத்தனமாக கண்டம்விட்டுக்கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பதற்கான பாகங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருப்பது பற்றியும் கூட வெளியே ஒரு அசைவையும் காணோம்.
    

டொனால்ட் ட்ரம்ப் வருகிற 24 ஆம் தேதி திங்களன்று இந்தியா வரவிருப்பதும், ஒரிஜினல் காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு வருகைதரவிருப்பதும் சதீஷ் ஆசார்யாவுக்குப் பொறுக்கவில்லை! அதற்குக் காரணம் சொல்லக் கூட முடியவில்லை! எந்தச்சுவர் தடுக்கிறதாம்?
   
 
கார்டூனிஸ்ட ஏதோ சுவரை வைத்து இப்படி Make in India திட்டத்தைப் பழிப்பானேன்? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெரும் தொழிலதிபர்கள் சம்பாதித்ததெல்லாம் சலுகைகளில், வரி ஏய்ப்பில் தானே! இந்தத் தொழிலதிபர் ஆராய்ச்சிக்காகப் பெரும்பணத்தை முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்களாம்? எதற்கெடுத்தாலும் சீன இறக்குமதியையே குறைசொல்பவர்கள் யோக்கியதை என்னவாம்? சீன இறக்குமதியையே நம்பியிருக்கிற இந்தியத் தொழில்துறை கரோனா வைரஸ் விவகாரத்தால் 17.3% சரிவைச் சந்திக்கும் என்று தகவல்கள் வருகிறதே! 

டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வரும்போதே நிறையப் பொருமலோடு தான் வருகிறார். இந்தியா அமெரிக்காவுக்கு உரிய கவனத்தைத் தரவில்லை. எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று வாஷிங்டனில் டீசர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். அவர் எதிர்பார்க்கிற அளவுக்குப் பெரிய அளவில் அமெரிக்க ஆயுதங்களை வாங்க இந்திய அரசு தயங்குகிறதோ என்னவோ? ஆனால் இந்திய அரசு வெளியுறவு விவகாரங்களை மிகக்கவனமாக கையாண்டு வருகிறது, நாட்டின் நலன்கள் பாதுகாக்கப் படுகிறது என்பது ஆறுதல்.  

 
       ஷாஹீன் பாக் காமெடி!
             வீடியோ 52 நிமிடம்  
 
AIMIM கட்சியின் வாரிஸ் பத்தான் இந்தியாவின் 15 கோடி இஸ்லாமியர்கள் 100 கோடி ஹிந்துக்களை சமாளிப்பார்கள் என்று பீற்றிக் கொளகிறார். டில்லி ஷாஹீன் பாக், சென்னை வண்ணாரப்பேட்டை கலகங்களில் அரசு பொறுமையாக இருப்பது இவரைப்போன்றவர்களுக்குக் கேலியாகத்தான் இருக்கும்! ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் இரு வழக்கறிஞர்களை நியமித்து அனுப்பியதற்கு என்ன பலன் கிடைத்ததாம்?

மீண்டும் சந்திப்போம்.             

Wednesday, February 19, 2020

#அரசியல்களம் கொஞ்சம் #செய்தி கொஞ்சம் #விமரிசனம்

முந்தைய பதிவில் பிரசாந்த் கிஷோர் என்கிற குழம்பிய அரசியல் குட்டையில் ஆதாயம் தேடுகிற நபரைப் பற்றி கொஞ்சம் பேசியிருந்தேன். அர்னாப் கோஸ்வாமி நேற்றைய விவாதமொன்றில் பிரசாந்த் கிஷோர் பீகாரில் புரட்சிசெய்யக் கிளம்பியிருப்பதைக் குறித்துப் பேசியிருக்கிறார். வீடியோ 17 நிமிடம்

   
பீகாரில் நிதீஷ் குமார் கொஞ்சம் தெளிவான அரசியல் செய்யத் தெரிந்தவர்! பிஜேபியுடன் கூட்டு சேருவதும் விலகியிருப்பதும் இப்படி இரண்டுவிதமாகவும் இருந்து பார்த்தவர். பிரசாந்த் கிஷோர் என்ன செய்துவிட முடியும் என்பதையும் தெளிவாக அனுமானிக்க முடியாதா? பிஜேபி JDU கூட்டணிக்கு எதிராக மறுபடி மஹாகட் பந்தன் என்ற மாயையை மறுபடியும் கையில் எடுத்தால் இருகட்சிகளாலும் சமாளிக்க முடியாதா? இப்படி எத்தனை எத்தனை கேள்விகளை இப்படியும் அப்படியுமாக எழுப்பினாலும் விடை என்னவோ பிடிபடாமல் நழுவுகிற மாதிரித்தான் இப்போதைய நிலவரம் இருக்கிறது.  பிரசாந்த் கிஷோர் செயல்படும் விதம் வெளிப்படையாக எவருக்கும் புரிவதில்லை என்பதால் வெற்று ஊகங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.


அதென்னவோ மான்டெக் சிங் அலுவாலியா மாதிரி காங்கிரஸ் அரசில் 10 ஆண்டுகளாகத் திட்டக்கமிஷன் துணைத்தலைவராக இருந்தவர் புத்தகம் எழுதினாலும். ராகேஷ் மரியா மாதிரி முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் புத்தகம் எழுதினாலும், காங்கிரஸ்கட்சி மீது செந்தட்டி தடவுகிறமாதிரி ஆகிப்போவதே தொடர்ந்து வரும் பரிதாபம்! காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது என்றாகிப்போன நிலையில் ராகேஷ் மரியா மாதிரி போலீஸ் அதிகாரிகள் Let me say it now என்று புத்தகம் எழுதி முன்னாள்#?# பானாசீனாவின் காவி பயங்கரவாதம்  என்பதான அபத்தக் குற்றச்சாட்டு எவ்வளவு கற்பனையானது, ஜோடிக்கப்பட்டது என்று உடைத்துச் சொல்கிற அளவுக்குப் போயிருக்கிறது.

ராகேஷ் மரியா 2008 நவம்பர் 26 அன்று மும்பை மீது   இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதல்களுக்கு ஹிந்துக்களே காரணம் என்ற மாதிரி ஜோடனைகளுடன் வந்தனர் என்பதை மட்டும் தான் சொல்கிறார். டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொல்கிறபடி ஒரு தீவீர விசாரணைக்கு உத்தரவிடப்படுமானால், உள்நாட்டில் எவரெவர் பாகிஸ்தானிய தீவீரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதும் வெளியே வரலாம்.    

ஷாஹீன் பாக் போராட்டத்தை ‘மக்களின் உரிமை’ என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது பற்றிய வழக்கில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளது: ‘ஜனநாயகம் பல்வேறு வகைகளில் வேலை செய்கிறது. நீங்கள் போராட வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள். CAA பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்க உங்களுக்கு ஏற்புதல் இல்லையா? நீங்களே பொதுமக்களிடம் CAAவுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்க விரும்புகிறீர்களா, செய்யுங்கள். இன்னும் ஆயிரம் போராட்ட களங்களை உருவாக்குங்கள்.’என்று சொல்லி இருக்கிறது.
என்ன, நீதிமன்றத்துக்கு இருந்த ஒரே பிரச்சினை, போக்குவரத்து பாதிக்கப்படுவது. ‘எங்களுக்கு இருக்கும் சிறிய பிரச்சினை அது மட்டும்தான். போக்குவரத்துக்கு பாதிப்பு இன்றி போராட்டத்தை தொடருங்கள். ஒவ்வொரு உரிமையுடனும் கடமையும் சேர்ந்தே வருகிறது.’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.
போராடும் மக்களுடன் பேசி இதற்கு ஆவண செய்ய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவை நியமித்து இருக்கிறது. ஹெக்டே பொறுப்பான ஒரு வழக்கறிஞர் அவர் நீதிமன்றத்துக்கு இருக்கும் இந்தக்குறையை திறமையாக சரி செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். 

ஸ்ரீதர் சுப்ரமணியத்துடைய நம்பிக்கையை டில்லியின் #வண்ணாரப்பேட்டை  (ஷாஹீன் பாக்) போராளிகள் எப்படிக் காப்பாற்றினார்களாம்?

   
உச்சநீதிமன்றம் அனுப்பிவைத்த வழக்கறிஞர்களிடம் என்ன கேட்கவேண்டுமென்று பாடம் எடுத்து அனுப்பி வைத்ததில், வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் இருவரும் இன்று போய் நாளையும் வாரோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியதாக செய்திகள் சொல்கின்றன.

சாந்தியும் சமாதானமும் விரும்புகிறவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்! 

மீண்டும் சந்திப்போம். 

    

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)