டில்லி சட்டசபைத்தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னாலேயே காங்கிரசின் பவிசும் மவுசும் பல்லிளித்து நின்றது தெரிந்தது தான்! ஆனால் காங்கிரசின் ராஜ்யசபா எம்பியும் வழக்கறிஞருமான KTS துளசியின் ஒப்புதல் வாக்குமூலம், நிலைமை எந்த அளவுக்குப் பரிதாபம் என்பதைக் காட்டுவதாக இருக்கிறதே!
வீடியோ 3 நிமிடம்
காங்கிரஸ் தன்னுடைய கேவலமான தோல்வியை ஒப்புக் கொள்ளாதுதான்! அதற்காக இப்படியா? என்னவோ வாக்காளர்களும் காங்கிரசின் ராஜதந்திர நடவடிக்கையைப் புரிந்துகொண்டு, பிஜேபி வரவே கூடாதென்று வாக்களித்தார்களா என்ன!? ஆனால் பிஜேபிக்கு கடந்தமுறையை வீடாக கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதாக அல்லவா எக்சிட் கணிப்புகளில் தகவல் சொல்கிறார்கள்! காங்கிரசுக்கு இருக்கும் துக்கிணியூண்டு வாக்குகளை மாற்றிவிட்டுத் தான் AAP ஜெயிக்கிறதாமா? வழக்கறிஞர் அல்லவா! சரமாரியாக பொய்யும் சால்ஜாப்பும் வராமல் இருக்குமா என்ன!
என்னதான் எல்லா எக்சிட் கணிப்புகளுமே AAP ஆட்சிதான் என்று சொன்னாலும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உள்ளூர ஒரு உதறல் இருந்துகொண்டே இருக்கிறமாதிரித்தான் அவருடைய ட்வீட்டர் கீச்சில் இன்றைக்கு தெளிவாகவே வெளிப்படுகிறதோ?
சிவசேனா காலிசெய்த இடத்தை நிரப்ப உத்தவ் தாக்கரேவின் பங்காளி ராஜ் தாக்கரே, பிஜேபியுடன் நெருங்க முயல்வது, NRC, NPR இவைகளுக்கு ஆதரவாக இன்றைக்கு அவரது MNS, மும்பையில் ஒரு பேரணி நடத்திக் காட்டியிருப்பதில் வெளிப்பட்டது
ஆனால் சிவசேனாவின் பொருமல் கட்சியின் நாளிதழ் சாம்னாவில் ஜின்னா பாகிஸ்தானில் சந்தோஷமாக இருக்கிறார் ; இந்தியாவிலோ காந்தி அவமானப் படுகிறார் என்பதாக வெளிப்பட்டிருக்கிறது. ஒரிஜினல் காந்தி மீது சிவசேனாவுக்கு எப்போதிலிருந்து கரிசனம் பிறந்ததென்று தெரியவில்லை! ராகுல் காண்டியை மனதில் வைத்துச் சொல்லியிருந்தால், ரொம்பவும் பரிதாபம் தான்!
வீடியோ 45 நிமிடம்
புதிய தலைமுறை சேனல் விவாதங்களில் நெறியாளர் பல்பு வாங்குவதையும் காட்டியாகவேண்டிய அளவுக்குப் போய்விட்டதோ? விவாதத்தில் பானு கோம்ஸ் ரஜனி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரைத்தானே கூப்பிட வேண்டும்? என்னுடையகருத்திக் கேட்பதற்குத் தான் கூப்பிட்டீர்கள் என்றால் நான் இதைத்தான் சொல்வேன் என்று முகத்தில் அறைகிறமாதிரிச் சொல்கிறார்! அறை கொஞ்சம் பலமாகத்தான் விழுந்திருக்கும் போல!
பானுகோம்ஸ், தமிழருவி மணியன் இப்படி வரிசை கட்டி புதிய தலைமுறையையே கலாய்க்கிறார்களே! என்ன ஆயிற்று!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment