டில்லி வன்முறைக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்று சோனியாG மாதிரியே ரஜினிகாந்தும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். உளவுத்துறை அரசுக்கு என்ன அறிக்கை கொடுத்தது என்பது இவர்களால் மட்டும் ஊகிக்கக் கூடியதாக இருப்பது இந்த தேசத்தின் கருத்து சுதந்திரம் அல்லது வாய்ஸ் கொடுப்பதான பெரும் சோகம்.
யூட்யூப் சேனல்களில் கொடுக்கப்படும் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இருக்காது என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு செய்தியை உள்வாங்கிக் கொள்ளுங்கள்! மத்திய அரசு ஒரு கடுமையான அணுகுமுறையைக் கையாளவேண்டாமே என்று பொறுத்திருந்த மாதிரித்தான் எனக்குத் தோன்றுகிறது. அது ஒரு அரசியல் முடிவு! இவ்வளவு வன்முறை வெடித்த பிறகும் கூட அமைதியாக இருப்பது அரசின் கையாலாகாத்தனமாக மட்டுமே பார்க்கப்படும் என்பது அரசுக்கோ பிஜேபி கட்சித்தலைமைக்கோ தெரியாதா?
துக்ளக் ரமேஷ் கொஞ்சம் நியாயமாக ரஜனி பேசியதை எடைபோட்டிருக்கிறார். திமுக ஆதரவு ஊடகக்காரர் ராதாகிருஷ்ணன் வேறுவிதமாக விசனப்பட்டிருக்கிற மாதிரி தெரிகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த முதல்வராகத் தவித்துக் கொண்டிருக்கும் திமுக தலீவர் இசுடாலின் கூட இதைப் பற்றி இன்று கொஞ்சம் பேசியிருக்கிறார். பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிற கலையில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்தான். தேசத்தின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் இவைகளின் மீது புதுப் புது வியாக்கியானங்கள் பேசுவார்கள். அதேநேரம் பிரிவினைக்குத் தூண்டுதலாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். பொய்யே இவர்களது வேதம். வீடியோ 23 நிமிடம்
எந்த வாய்சுக்கு செவிசாய்க்கப் போகிறீர்கள்? எதுவும் வேண்டாம் நாங்களே சுயமாக யோசித்து இவர்கள் யோக்கியதை என்ன என்பதை முடிவு செய்து கொள்கிறோம் என்று இருக்கப் போகிறீர்களா?
மீண்டும் சந்திப்போம்.
>>>> நாங்களே சுயமாக யோசித்து இவர்கள் யோக்கியதை என்ன என்பதை முடிவு செய்து கொள்கிறோம் என்று இருக்கப் போகிறீர்களா?...<<<<
ReplyDeleteரொம்பப் பேர் இப்போது இப்படித்தானே இருக்கின்றார்கள்...
துரை செல்வராஜூ சார்!
Deleteஅப்படியா சொல்கிறீர்கள்? கள நிலவரம் வேறுமாதிரியாக அல்லவா சொல்கிறது!