டில்லி கலவரங்களை வைத்து ஒரு மிகப்பெரிய ஊடகப் பிரசாரம் இந்தியாவைக் குறிவைத்து, இந்தியாவைப் பற்றி கொஞ்சமும் அறிந்திராதவர்களால், திட்டமிட்டே நடத்தப்பட்டு வருவதை அறிந்திருக்கிறீர்களா? நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற இந்திய வெறுப்பில் ஊறிய ஊடகங்களாகட்டும், டெமாக்ரட் லட்சிப் பிரமுகர்களாகட்டும். டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையை ஒட்டி வன்மம் கக்கிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கிறீர்களா?
டில்லிப் போலீஸ், உளவுத்துறை மீதே பழியைச் சுமத்திவிட்டு, அதற்காக அமித்ஷா பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று குதித்துக் கொண்டிருக்கிற சோனியா காங்கிரசு என்ன உள்நோக்கத்தோடு செய்கிறது? ஹிந்து என் ராம் உள்ளிட்ட இடதுசாரிகள் எதற்காக காங்கிரசோடு கைகோர்த்து பொய்களைத் தொடர்ந்து அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமாவது தெரிந்து கொண்டிருக்கிறீர்களா? இந்த 40 நிமிட விவாதம் உங்களுக்குப் பலவிஷயங்களைத் தெளிவுபடுத்தக்கூடும்!
IB அதிகாரி அங்கித் ஷர்மாவைக் கொலை செய்தது உட்பட எறிவதற்கு கற்கள், எரிப்பதற்கு பெட்ரோல் குண்டுகள் என கலவரங்களுக்கு weapon supplier ஆம் ஆத்மி கட்சியின் அமைதி மார்க்க உறுப்பினர் தலை மறைவாகிவிட்டாராம்!
டெல்லிப் போலீஸ்காரர்கள் பொய்சொல்கிறார்களா என்றறிய அவர்கள் மீது நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட் நடத்தவேண்டும் என்று ஒரு AAP சமஉ டில்லி சட்டசபையில் பேசியிருக்கிறார்!
விஷமக்கார ஊடகங்களையும், அடிப்படை ஆதாரம் இல்லாத பொய்களையே தொடர்ந்து பரப்பிவரும் திமுக உள்ளிட்ட அரசியல்கட்சிகளையும் எப்போது கேள்வி கேட்கப் போகிறோம்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment