Tuesday, February 25, 2020

இன்று பார்த்தவை! #சுவாரசியமானவிவாதங்கள் #கார்டூன்கள்

டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்ததனால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி என்னமோ சிம்பிளாகத்தான் தோன்றும்! ஆனால் இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருப்பதும், கொஞ்சம் கவனமாகக் கேட்பதுடன் சுயமாக சரிதானா என டோதித்துப் பார்க்கவும் தெரியாவிட்டால் வண்டிவண்டியாக காதில் பூவை ஏற்றிவிடுவார்கள் என்பதையும் எச்சரிக்கையாக முதலிலேயே சொல்லி விடுகிறேன்!


முதலில் சேகர் குப்தா! சூட்டோடு சூடாக ஒரு 33 நிமிட வீடியோவை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நேரலையில் ஒளிபரப்பி முடித்திருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் வருகையினால் இந்திய அமெரிக்க உறவுகளில்  மாற்றம் வந்துவிட்டதா என்று ஒரு அசட்டுத்தனமான கேள்வி வேறு! ராஜீய உறவுகள் இந்தமாதிரியான அரசு முறைப்பயணங்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லை என்பது அனுபவமுள்ள பத்திரிகையாளருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! இங்கே பூடகமாகச் சொல்ல வருகிற விஷயத்தை ஆகர் படேல் என்கிற Amnesty Indiaவின் தலைவர், இதுமாதிரி NGOக்கள் வெளிநாட்டு நன்கொடைகளில் கொழுத்துக் கொண்டிருந்ததற்கு நரேந்திர மோடி ஆப்பு வைத்ததில் செம காண்டுடன்  தொடர்ந்து கடித்துக் குதறிக் கொண்டிருப்பவர்தான்! நேற்றைக்கே காங்கிரசின் National Herald  இதழில் வாந்தியெடுத்துவிட்டார்!

The last thing is that Trump may or may not be president at this time next year. The US elections are in November, and it is possible that we may have a Democrat in the White House. If that is the case, then we will have to write off all the personalised investment in the Trump-Modi chemistry. A Democrat in the White House will mean greater scrutiny of our actions in Kashmir and over the CAA and National Register controversy. The best thing that Modi can hope for in this visit is that he is able to mobilise Indians in America to vote Republican and try and help Trump return to power. இப்படி ஆரூடம் வேறு!

காந்தி பிறந்த மண்ணில் வன்முறையா? சோனியா கண்டனம் என்கிறது செய்தி. ஒரிஜினல் காந்தியைப் பற்றிக் கொஞ்சமும் தெரியாத டூப்ளிகேட்டுகள் இப்படிப் பொங்குவதைப் பார்க்கையில் சிரிப்பதன்றி வேறென்னதான் செய்ய முடியுமாம்?

      
சதீஷ் ஆசார்யாவுக்கும் கவலை வந்துவிட்டது! தூரிகை ட்ரம்பை நக்கல் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒரிஜினல் காந்தியை நக்கலடிக்கிற மாதிரி! சரிதானா?

  
தேசப்பிதா என்று ஒரிஜினல் காந்திக்கு அபிமானிகள் தான் பெயர்வைத்தார்கள்! மாமா நேரு என்பதையும்! இந்திரா,சோனியா இருவருக்கும் அன்னை பட்டம் சூட்டியவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை ட்ரம்ப் கேட்பதாக சதீஷ் ஆசார்யா வரைந்திருப்பது சும்மா வெறும் கொழுப்பல்ல! அசல் சோனியா காங்கிரசு கொழுப்பு! சரிதானே!

   
ஆதன் தமிழ் மாதேஷுக்கு தமிழக அரசியலே புரியாது! ரவீந்திரன் துரைசாமியிடம் தொடர்ந்து குட்டு வாங்கிக் கொண்டும் இருக்கிறவருக்கு மோடி-ட்ரம்ப் உறவால் இந்தியாவிற்கு பலன் இருக்கா?  இந்தக்கேள்விக்கு பானு கோம்ஸ் பொறுமையாகப் பதில் சொன்னால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? வீடியோ 21 நிமிடம் 

ஆக டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்தார். மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். இந்தியக் கடற்படை வலிமையைப் பெருக்கும் 24 ரோமியோ MH 60, மற்றும் 6 அப்பாச்சே ஹெலிகாப்டர்களை 21600 கோடிரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதுடன் 3 புரிந்துணர்வ் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன. H1B விசாபிரச்சினை உட்பட விரிவான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கும் என்ற அளவோடு ட்ரம்ப் விஜயம் நிறைவுபெற்று இன்றிரவே ஊர் திரும்புகிறார்.

மீண்டும் சந்திப்போம். 

4 comments:

  1. வளம் நிறையட்டும்..
    பலம் பெருகட்டும்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      உங்கள் வாக்கு பலிக்கட்டும்! அன்னை மஹாசக்தி திருவருள் புரிவாளாக!

      Delete
  2. //If that is the case, then we will have to write off all the personalised investment in the Trump-Modi chemistry. A Democrat in the White House will mean greater scrutiny of our actions in Kashmir and over the CAA and National Register controversy.//
    அத்தைக்கு மீசை முளைத்தவுடன் அவர் சித்தப்பா ஆகி விடுவார். அதற்க்கு பிறகு அவருக்கு பிறக்கும் மகன் எனக்கு தம்பியாகிவிடுவான். அவன் பெரிய ஆளானவுடன் உங்களை என்ன பாடு படுத்தப் போகிறேன் பார்.. என்பது போல இருக்கிறது. கனவு காணவும் ஒரு அளவு இருக்கிறது!NGO க்களுக்கு வைத்த ஆப்பு நிறையவே வயிறெரிய வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      3 பில்லியன் டாலர் ஒப்பந்தம் அவர்கள் காலத்தில் நடந்திருந்தால் எவ்வளவு கமிஷன் அடித்திருக்கலாம், அத்தனையையும் போச்சே என்று சோனியா காங்கிரசுக்கு வயிறெரிகிறது. விஷமத்தனமான வேலைகள் செய்வதற்கு கூலியாக அயல்நாடுகளில் இருந்து வருகிற பணம் போச்சே என்று ஆகார் படேலுக்கு எரிகிறது.

      இடதுசாரிகளுக்கும் உதிரிகளுக்கும் மோடியைத் திட்டினால் ஆதாயம் கிடைக்குமே என்று வயிறு பதைக்கிறது. இஸ்லாமியர்களுக்கோ நாங்கள் ஆண்ட ஜாதி எங்களை அடக்கமுடியுமா என்கிற பழம்பெருமை திமிராக வன்முறையாக வெடிக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக!
      .

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)