தமிழருவி மணியனின் சமீபகால பேச்சுக்களை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. காரணம் அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிற விதம்! தனக்கு இருக்கும் 50 ஆண்டு கால அரசியல் பரிச்சயத்தில், ஒரு அரசியல் புரட்சியை உண்டாக்கிவிடமுடியும் என்பதுமாதிரி, ஒரு அமர்த்தலான பேச்சு! ஆனாலும் இந்த 8 நிமிட பேட்டியில் அவர் சொல்வது, ஏற்றுக்கொள்ளும் படியாக இருப்பதை மறுக்க முடியாது. கண்ணதாசன் பாட்டு ஒன்றைச் சொல்லி, அதுவும் misinormation, disinformation இரண்டையும் புதியதலைமுறை சேனலுக்கு மட்டும் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வது? ஆப்ஷன்கள்
1) நக்கல் 2) வஞ்சப்புகழ்ச்சி 3) செம காமெடி உளறல்
புதிய தலைமுறை சேனல் அது ஏனய்யா எங்க சேனலுக்கு மட்டும் இப்படிப் பேட்டி கொடுத்துச் சொன்னீங்க என்று எதிர்க்கேள்வி கேட்கவில்லைதான்! ஆனால் அப்படி உள்ளுக்குள்ளே அப்படிக் கேட்டுக் கொண்டிருப்பதாக ஒரு சுகமான கற்பனை!
இது கரோனா வைரஸ் பயமுறுத்தும் சீசன்!
சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் என்ன சொல்கிறார் என்று கேட்டுக் கொள்ளுங்கள்! வீடியோ 5 நிமிடம்.
மதன் ரவிச்சந்திரன் வளர்ந்துவரும் ஊடகக்காரர் சரி! வளர்ந்து வருகிறவர் என்பதாலேயே கொஞ்சம் நிதானிப்பது நல்லது என்று இந்தப்பக்கங்களிலேயே எழுதியதுண்டு.நிதானிக்கிற மாதிரி இல்லை என்பது பழ. கருப்பையாவோடு அவர்நடத்திய சதுரங்கம் நிகழ்ச்சியிலிருந்து வெளிப்பட்டது.
1) நக்கல் 2) வஞ்சப்புகழ்ச்சி 3) செம காமெடி உளறல்
இது கரோனா வைரஸ் பயமுறுத்தும் சீசன்!
மதன் ரவிச்சந்திரன் வளர்ந்துவரும் ஊடகக்காரர் சரி! வளர்ந்து வருகிறவர் என்பதாலேயே கொஞ்சம் நிதானிப்பது நல்லது என்று இந்தப்பக்கங்களிலேயே எழுதியதுண்டு.நிதானிக்கிற மாதிரி இல்லை என்பது பழ. கருப்பையாவோடு அவர்நடத்திய சதுரங்கம் நிகழ்ச்சியிலிருந்து வெளிப்பட்டது.
பழ. கருப்பையா நாத்திகர்தான்! ஈவெராவைப் போற்றுகிறவர்தான்! அதனாலேயே கி வீரமணி, சுபவீ போன்றவர்களிடம் கேள்வி கேட்கிறமாதிரி இவரிடமும் கேட்பது எந்தவகையில் இந்த நேர்காணலுக்குப் பொருத்தமாக இருந்தது? அனுபவமுள்ள ஒருவரை கேள்விகேட்டு மடக்குகிறேன் பார் என்று குறுக்கிட்டுக் கொண்டே இருந்ததில், அவருடைய கருத்தை முழுசாய் கேட்டுப்பெற முடிந்ததா? வளர்ந்து வருகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் இப்படிச் சறுக்குகிறாரே என்பதற்குமேல் இந்த 24 நிமிட வீடியோ பார்த்ததில் சாரம் வேறெதுவுமில்லை
மீண்டும் சந்திப்போம்.
முதல்முறையாக மூன்றும் ஏற்கனவே முழுமையாக பார்த்து விட்டேன்.
ReplyDelete