நிறைய கார்டூனிஸ்டுகள் தங்களை சூப்பர் ஸ்பெஷல் ஜார்னலிஸ்ட்டாக நினைத்துக் கொள்வதில் பெரும்பாலான நேரங்களில் கொஞ்சம் வில்லங்கம், விவகாரமான படங்களை வரைவது வாடிக்கை தான்! யார் இந்தக் கோளாறைச் சரிசெய்வதாம்?
இது சதீஷ் ஆசார்யாவின் ஒரிஜினல் கார்டூன்
அதே கார்டூனைக் கொஞ்சம் மாற்றி, ஒரு சரியான தகவலைச் சொல்கிற மாதிரி ஒரு 24 வயது இளைஞர் திருத்தம் செய்திருக்கிறார்! OpIndia தளத்தில் இவரைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு, இவருடைய ட்வீட்டர் பக்கத்துக்குப் போய்ப் பார்த்ததில் இதுபோல இன்னும் நிறையத் திருத்தங்கள் செய்திருப்பார் போலத் தெரிகிறது! ஒரிஜினல் vs திருத்தம் இரண்டில் எது மிகவும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறது?
அசுரன் படம் பார்த்துவிட்டு இசுடாலின் கருத்துக் சொன்ன விதத்தில் முரசொலி இடம் பஞ்சமி நிலமா என்று தொடங்கியது மூலப் பத்திரம் எங்கே என அடுத்த கேள்வியாக மாறி நூறு நாட்களைத் தாண்டியும், இன்னும் பல துணைக்கேள்விகளுடன் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவே இல்லையா?
மதன் ரவிச்சந்திரன் வின் நியூசுக்குப் போன பிறகு அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சருமாக அடித்துத் தள்ளுகிறார்! முரசொலி சர்ச்சையைமட்டும் விட்டு விடுவாரா?
இசுடாலினாக இருந்தும்கூட சமாளிப்பது எத்தனை கடினமாக இருக்கிறது! போதாக்குறைக்கு மருத்துவர் ராமதாசு வேறு கேள்விக்கு மேல் கேள்வியாக அடுக்குகிறார்!
அவருக்கென்ன கொளுத்திப் போட்டுவிட்டார்! அகப்பட்டுக்கொண்டு விழிப்பது இசுடாலின் தானே!
பட்ஜெட் பற்றி கமல் காசர் கூடக் கருத்து சொல்லி விட்டார்! இசுடாலின் கூட ஏதோ சொல்லியிருப்பதாக! மயில்சாமி அண்ணாத்தே என்று திடீர் பொருளாதார மேதைகளை நக்கல் செய்வதில் சமூக ஊடகங்கள் குறியாக இருக்கின்றன. கார்டூனிஸ்டுகள் பார்வையில் பட்ஜெட் எப்படியாம்? ட்வீட்டரில் சுசேதா தலால் போட்டிருந்த ஒரு செய்தி மிக்க கடுமையாக இருந்ததை, மஞ்சுள் கொஞ்சம் பக்குவமாக சொல்லி இருக்கிறாரோ?
பார்த்தவற்றுள் சந்தீப் அத்வர்யுவின் கார்டூன் கிளாஸ்!
மீண்டும் சந்திப்போம்.
கார்ட்டூன்களையும் மருத்துவரின் கேள்விகளையும் ரசித்தேன்.
ReplyDeleteஸ்ரீராம்! கேள்வி கேட்ட மருத்துவர் மீது கூட நிறையக் கேள்விகள் இருக்கின்றனவே! உதாரணமாக வன்னியர் அறக்கட்டளை ராமதாஸ் அறக்கட்டளையாக மாற்றப்பட்ட விவகாரம்!
Deleteபொதுவாழ்க்கையில் எல்லோரிடமும் கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன... பதில்தான் வராது! (ஆட்டோ வராமல் இருந்தால் சரி!)
Deleteஜெ.காலத்தைய ஆட்டோவையே இன்னமும் நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி ஸ்ரீராம்? :-)))
Delete