ஒருவழியாக இன்று டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்ததில், 2015 தேர்தலை விட மிகக் குறைவான வாக்குசதவீதம் என்று தற்போதைய செய்திகள் சொல்கின்றன.பலதொகுதிகளில் 45% - 48% என்ற அளவிலேயே மாலை 6 மணி நிலவரப்படி இருந்ததாம்!
ஆனால் 7 மணி நிலவரப்படி வாக்குசதவீதம் குறையவில்லை கொஞ்சம் கூடியிருக்கிறதாம்!
பலதொகுதிகளில் 45 முதல் 48% வாக்குகளே பதிவாகி இருப்பதாக இப்போதைய செய்திகள் சொல்வதில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் 2015 தேர்தலோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் சறுக்கல்தான்! எக்சிட் கருத்துக் கணிப்புகளில் பிஜேபிக்கு அதிகபட்சமாக 26 சீட்டுகள் கிடைக்கலாம் என்று ஒரு கருத்து கணிப்பு சொன்னாலும், காங்கிரசுக்கு ஆறுதலாக ஒரே ஒரு சீட் கிடைக்கும் என்று இரண்டு எக்சிட் கணிப்பு சொல்கிறது.
தேர்தல் கருத்துக்கணிப்பில் முன்னொருகாலத்தில் நம்பர் ஒன்னாக இருந்து, இப்போது பத்தோடு பதினொன்று என்றாகிப்போன NDTV என்ன சொல்கிறது என்று பார்க்காமல் போனால் பாவம் இல்லையா?
மூன்றே நாட்கள் தான்! 11 ஆம் தேதி முழுரிசல்ட்டும் அதிகாரபூர்வமாக வரும்போது இந்த எண்ணிக்கை கூட கொஞ்சம் மாறலாம்! அப்படி வருகிற வரை பொழுது போக வேண்டாமா?
மீண்டும் சந்திப்போம்.
ஆம் ஆத்மி - 65க்கும் அதிகமான இடங்களைப் பிடித்தால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் வாக்கு சதவிகிதத்தில் காங்கிரஸ் வாக்குகளும் ஆம் ஆத்மிக்குப் போயிருக்கலாம்.
ReplyDeleteஆம் ஆத்மி கட்சி மறுபடியும் ஆட்சியமைக்கும் என்பதுவரை சரி! ஆனால் 2015 மாதிரி complete sweep சாத்தியமா? இல்லையென்றுதான் தோன்றுகிறது! காங்கிரஸ் வாக்குகள் யாருக்குப் போயிருக்கும் என்பது கூட மாமாகச் செய்து கொள்கிற தான்!
Deleteமுழுரிசல்ட், இன்னும் அதிகமான data கிடைத்தால் தான் வாக்காளர் மனோநிலையைப் புரிந்து கொள்ள
முடியும்! CAA எதிர்ப்புக் களேபரங்கள், ஷாஹீன் பாக் சாலைமறிப்புப் போராட்டங்களுக்கு என்ன மவுசு என்பதையும் தெரிந்துகொள்வதற்காக இன்னும் இரண்டுநாள் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!