டொனால்ட் ட்ரம்ப் எதைப்பேசினாலும் அது பெரும் சர்ச்சையைக் கிளப்புவதாகாவே ஆகிவிடுவது ட்ரம்ப் ராசி என்று சொல்வதா? ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதா? என்னைக் கேட்டால் இரண்டும் தான் என்று கொஞ்சமும் தயங்காமல் சொல்வேன்! சமீபத்தைய ஆஸ்கார் விருதுகளில் முதல்முறையாக ஒரு கொரியத் திரைப்படம் Parasite சிறந்தபடமாகவும் 4 ஆஸ்கார்களைப் பெற்றது குறித்தும் டொனால்ட் ட்ரம்ப் கொஞ்சம் குத்தலாகச் சொன்னது, அவர் ஆசைப்படியே சர்ச்சையாகியிருக்கிறது.
பாரசைட் படத்தைப் பற்றி பேசியதென்னவோநடிகர் வெறும் 45 வினாடிகள் தான்! போகிற போக்கில் பிராட் பிட் காலையும் வாரிவிட்டுப் போனார்! பேசியதன் நோக்கம் என்னவோ தென்கொரியாவுடன் வர்த்தக உறவுகளைப் பற்றியதாக, Make America Great Again என்ற 2016 தேர்தல் கோஷம் நினைவிருக்கிறதா? இப்போது அது Keep America Great என்று மாற்றப்பட்டு ஒரு தொடர்ச்சியை வேண்டுகிற மாதிரி! ஹாலிவுட் ஆசாமிகளுக்கும் ட்ரம்புக்கும் ஆகவே ஆகாது! இப்போது இதுவேறு சேர்ந்து கொண்டிருக்கிறதா? தாளித்துத் தள்ளுகிறார்கள்! Parasite’s US studio Neon gave the perfect riposte to Trump’s rant: “Understandable, he can’t read."
மன்மோகன் சிங் மவுனசிங்காக பிரதமர் நாற்காலியில் ஒண்டிக்கொண்டு இருந்த அந்த நாட்களில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த கார்டூனாம்! சதீஷ் ஆசார்யாவுக்கு முகநூல் நினைவூட்டல் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குள் சதீஷ் ஆசார்யா என்னமோ ஆகிவிட்டார்!
டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகிறார் என்ற செய்திக்குப் பின்னால் என்னென்னவெல்லாம் பேச்சு இருக்கிறது? The Print தளத்தின் சேகர் குப்தா அவர் பார்வையில் கொஞ்சம் தொகுத்துச் சொல்கிறார். என்பதைக் கொஞ்சம் கேட்டுத்தான் பார்க்கலாமே!
வீடியோ 23 நிமிடம்.
மீண்டும் சந்திப்போம்.
ReplyDeleteஅமெரிக்க அதிபர்கள் இந்தியாவிற்கு வரும் போது சிலவற்றை கவனிக்க முடியும்.
நம் மொத்த பாதுகாப்பு ஏஜென்சிகளும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும்.
இந்திய மொத்த நிர்வாகமும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும்.
அனைவரும் அவர்களுக்கும் கூலியாக மாறிவிடுவார்கள்.
வருவதற்கு முன்பு இங்கே அறிக்கை வரும். தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தம் திடீரென்று வெளியாகும்.
ஒவ்வொரு முறையும் இப்படித்தான் வருகின்றது.
அதாவது கோவிலுக்கு விஜபி சென்றால் கர்ப்பகிரகம் அருகே அழைத்துச் சென்று உட்கார வைப்பார்கள் அல்லவா? அதுபோலத்தான்.
வாருங்கள் ஜோதி ஜி!
Deleteகம்யூனிஸ்ட் கட்சியினர் கூடச் சொல்லாத அளவுக்கு நிறையவே மிகைப்படுத்தியிருக்கிறீர்கள். அமெரிக்க அதிபர் அமெரிக்காவின் அதிகார அடையாளம். அவர் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் அமெரிக்க அரசு நிர்வாகமும் அங்கே இருக்கும். இங்கே இந்தியா என்றில்லை சமீபத்தில் இங்கிலாந்துக்குப்போய் ராணியை சந்தித்தார். அங்கேயும் இதேமாதிரித்தான். ராணியைத் தொட்டுப்பேசக்கூடாது என்பது அவர்கள் மரபு. ட்ரம்ப் எலிசபெத் ராணியின் முதுகைத் தட்டினார். மகன் சார்லஸ் உட்பட எவரும் அதைப்பெரிதுபடுத்தவில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
டில்லியில் இந்திய அரசு கொடுக்கும் பாதுகாப்போடு அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் கொடுக்கும் பாதுகாப்பு அடுக்கும் அதிகமாக இருக்கும். பொதுவாகவே அமெரிக்கர்கள் மேலோட்டமாக சிநேகிதமானவர்கள் என்றாலும் உள்ளூறத் தங்களைவிட மற்றவர்கள் பலபடி தாழ்த்தி என்று நினைப்பவர்கள்தான். ஆனால் ராஜீய உறவுகளில் அந்த கர்வம் எடுபடுவதில்லை. இந்தச் செய்தியிலேயே தென்கொரிய சினிமாவை வைத்து அமெரிக்க தென்கொரிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் கை தாழ்ந்திருப்பதைக்குறித்தே ட்ரம்ப் பொருமியது, அவருடைய தேர்தல் உத்தி. .
அமெரிக்கர்கள் மேலோட்டமாக சிநேகிதமானவர்கள் என்றாலும் உள்ளூறத் தங்களைவிட மற்றவர்கள் பலபடி தாழ்த்தி என்று நினைப்பவர்கள்தான்........... நூறு சதவிகிதம் உண்மை. ஆனால் தங்கள் நாட்டு மக்களை அலுங்காமல் குலுங்காமல் பூ போல வைத்து காப்பாற்றி விடுகின்றார்கள். ரௌடித்தனம் எல்லாமே வெளியே தான்.
ReplyDeleteஅமெரிக்கர்களை அப்படிக் குற்றம் சொல்லிவிடமுடியாது ஜோதி ஜி! உள்ளூரிலும் அவர்கள் அப்படியே!
Deleteஅமெரிக்கர்கள் மிக மிக சுயநலவாதிகள்... இந்த சுயநலம் அமெரிக்கர்களின் குடும்பத்தில் இருந்தே தொடங்குகிறது. உடனே யார்தான் சுயநலவாதிகளாக இல்லை என்று கேட்க கூடாது எல்லோரும் ஒரு வகையில் சுயநலவாதிகள்தான் ஆனால் இவர்கள் அதாவது அமெரிக்கர்கள் மிகவும் சுயநலவாதிகள்
ReplyDeleteஇங்கே அமெரிக்கர்களுடைய சுயநலத்துக்கு ரேட்டிங் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா என்ன? :-))
Delete