Showing posts with label செய்தி விமரிசனம். Show all posts
Showing posts with label செய்தி விமரிசனம். Show all posts

Thursday, January 14, 2021

கண்டுகொள்வோம் கழகங்களை!


நண்பர்கள் அனைவருக்கும் சங்கராந்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! வாழி நலம் சூழ!   

திமுகவின் 3ஆம் கலீஞர் என்று சொல்லப்படுகிற உளறல் நிதி, வெகுசீக்கிரமாகவே தமிழகத்தின் பாப்புலர் காமெடிப் பீஸ் ஆகிவிட்டார் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவும் மீம்ஸ், முகநூல் பகிர்வுகளிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது இந்தப் பொங்கல் தின சிறப்பு விசேஷம்.


  
தம்பி உதயநிதி ஜட்டுகல்லி விளையாட்டு பாக்குறத நானும் பாத்துட்டு இருக்கேன், ஒரு மாடு நமக்கு கிடைச்சிராதான்னு ஆளாளுக்கு கஷ்டபடுறாங்க, மாடு ஓடிருது
உழைப்பவனுக்கே நிலம் சொந்தம், பிடிப்பவனுக்கே மாடு சொந்தம்னு தலைவர் சொல்லிருக்காரு
நாம சொல்றோம், நம் ஆட்சியில அங்க காளைக்கு போராடுற‌ அத்தனைபேருக்கும் ஒரு காளைமாடு வழங்கபட்டு சமத்துவ ஜட்டுகல்லி நடைபெறும்.  


கண்டுகொள்வோம் கழகங்களை என்ற முகநூல் பக்கம் இப்படி திமுகவின் யோக்கியதையைப் படம்போட்டுக் கலாய்க்கிறது 



















யோகி ஆதித்யநாத் அரசு சட்டவிரோதமாக அல்லது லஞ்சம் கொடுத்துப் பணி உயர்வு பெற்ற சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது


இங்கே தமிழகத்தில் போலி ஜாதிச்ச சான்றுகளோடு மாநில அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் மீது இதேமாதிரி நடவடிக்கை எடுக்கப்படுமானால் எத்தனை ஆயிரம் பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதில் யாருக்கேனும் ஊகங்கள் இருக்கிறதா?

கண்டுகொள்வோம் கழகங்களை என்று சொன்னால் மட்டும் போதுமா? இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்கிற உறுதியான முடிவையும் எடுக்க வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்   
  

Tuesday, March 24, 2020

ஜெயமுண்டு! #கொரோனா பயம் வேண்டாம் மனமே!

கரோனா தொற்று! ஓடவும் வேண்டாம், ஒளியவும் வேண்டாம்! இப்படிப் பதினைந்து நாட்களுக்கு முன்பு இந்தப் பக்கங்களில் எழுதியதைத்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் சொந்த ஊர்ப்பக்கம் இன்று கிளம்பிய பெருங்கூட்டமும், தள்ளுமுள்ளுகளும் ஒரு மருத்துவ நெருக்கடியை மனவுறுதியுடன் எதிர்த்து வெல்கிற இயல்பைத் தமிழகத்தில் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க உதவுகிற KIT இந்தியாவிலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது விலை வெறும் 80000 ரூபாய்கள் தான்! ஒருவரைச் சோதனை செய்ய ஆகிற செலவு ரூ.1500/- க்குள் தான் ஆகும் என்கிற செய்திகள் வந்து கொண்டு இருக்கும் அதே நேரம், தேவையில்லாத பயம் ஜனங்களைத் தவறுக்கு மேல் தவறாகத் தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறதோ? 

 

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு மறுபடியும் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், சுகாதார அமைச்சகமும் என்ன தான் நிலைமையை சமாளிக்க சுறுசுறுப்பாக இயங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஜனங்களுடைய பங்களிப்பில்லாமல் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்காக   இன்று நள்ளிரவிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஜனங்களும் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்திலிருந்து விடுபட முடியும்.   


அதே வேளையில் குறுகிய உள்நோக்கம் கொண்ட கட்சி அரசியல் செய்கிற நேரமில்லை இது என்பதை இங்கே இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ், கழகங்களுக்கும் யார் எடுத்துச் சொல்வது?  

கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பொது இடங்களில் சுற்றியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் 11-ம் தேதி கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். அப்போதே அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், கால்பந்து போட்டி நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார். இரண்டு எம்எல்ஏ.க்களை சந்தித்து அவர்களோடு கைகுலுக்கி ஆரத்தழுவி பேசி இருக்கிறார். அதன் பிறகு மார்ச் 14-ம் தேதி அவருக்கு காய்ச்சல் அதிகமாகி இருக்கிறது. காசர்கோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதன் பிறகே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். இதற்கிடையில், கோவிட்-19 காய்ச்சலோடு குறைந்த பட்சம் 3000 பேரை அவர் சந்தித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மல்லுதேச துபாய் ரிடர்ன் ஆசாமி ஒருவருடைய பொதுநல சேவையை இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி இன்றைக்குச் சொல்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருப்பவர்கள் இவர்மாதிரி வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தான் என்பது என்னமாதிரியான சமூகப் பொறுப்புணர்வு? 


ஈரோட்டுக்கு கொரோனா வந்தவிதம் இதே போலத்தான் என்பது நினைவிருக்கிறதா? இப்போது சேலத்துக்கும்,


ஜெயமுண்டு பயமில்லை மனமே என்கிற பாரதியார் கவிதை வரியிலிருந்துதான் பதிவுக்குத் தலைப்பு உருவானதே! பதிவை முடிப்பதும் கூட பாரதியார் கவிதை வரிகளோடுதான்என்றால் பொருத்தமாக இருக்கும்!


தேடி உன்னை சரணடைந்தேன் தேச முத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
 பாடி உனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்

கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் களைவாய்       

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, March 18, 2020

அரசியல் பேசும் நடிகர்கள்! #விஜய் #விஜய்சேதுபதி

பொதுவாக சினிமா நடிகர்கள், நடிகைகள் அரசியல் பேசுவதை நான் அவ்வளவாக சட்டை செய்வதில்லை. பிரெஞ்சு மக்கள் அடிப்படை உணவான ரொட்டி கூடக் கிடைப்பதில்லை என்று தெருவில் இறங்கிப் போராடிய சமயத்தில் மேரி அந்துவாநெட் என்கிற பிரான்சின் கடைசி அரசி, ரொட்டி கிடைக்கவில்லையானால் என்ன? கேக் சாப்பிடட்டுமே என்று சொன்ன கதையாக இந்த சினிமா பிரபலங்களுக்கு நாட்டைப் பற்றியோ மக்களைப்பற்றியோ, இருக்கிற பிரச்சினைகளைப் பற்றியோ எதுவுமே தெரியாது. சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக வேஷம் கட்டியதிலேயே, நிஜத்திலும் ஹீரோவாகிவிட்டதாக ஒரு நினைப்பு இருக்கும் போல!
  


ஆதன் தமிழ் சேனலில் கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் மாதேஷைப் பார்க்க ஆரம்பநாட்களில் மிகவும் எரிச்சலாக இருந்தாலும், இப்போதெல்லாம் அவரை ஒரு காமெடிப் பீஸாக மட்டுமே பார்த்துக் கடந்து போய்விடுகிற பொறுமை வந்துவிட்டது! இந்த 32 நிமிட நேர்காணலில்  விஜய், விஜய் சேதுபதி, ரஜனிகாந்த் என்கிற மூன்று நடிகர்களைத் தொட்டுப் பேசியதில் மூன்றாவது நபரைப்பற்றியே  அதிக நேரம் என்பது ஆச்சரியம் இல்லை. விஜய் சேதுபதி இப்போது கொஞ்சம் அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார். விஜய் பேசுவது அரசியல்தானா என்பதில் அவருக்கே இன்னமும் சரியான தெளிவு இல்லை என்பது மிகவும் வெளிப்படை!

     
ரவீந்திரன் துரைசாமி நடிகர் விஜய் பற்றிப் பேசியதில் மிகச் சுருக்கமான வீடியோ இதுதான். 11 நிமிடம்தான்!
விஜய்க்கோ S A  சந்திரசேகருக்கோ தமிழக அரசியல்  பிடிபடவில்லை என்ற எனது சந்தேகத்துக்கு ரவீந்திரன் துரைசாமி கொஞ்சம் தெளிவாகவே விடை சொல்லி இருக்கிறார் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது . 

குடியுரிமை சட்டம் பற்றி பூடகமாக நடிகர் விஜய் பேசினார் என்று செய்திகள் உலவின. நேரடி ஒளிபரப்பில் அந்தப் பகுதி வரவில்லை. கேட்டதற்கு சன் டிவியே பயந்து போய் எடிட் செய்து விட்டார்கள் என்று காரணம் சொல்லப் பட்டது. லைவ் கவரேஜ்ஜில் வெட்டப்பட்ட கிளிப் இவர்களுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது என்பதும் தெரியவில்லை.
இடையில் பாஜக அபிமானிகள் விஜய்யை விமர்சிக்கத் துவங்க, பாஜக விமர்சகர்கள் அவரை தூக்கி வைத்துக் கொஞ்சிய காட்சி சற்றே காமெடியாக இருந்தது.
இன்றைய ஹிண்டுவில் அந்த நிகழ்வு பற்றிய முழுமையான செய்தி வந்திருக்கிறது. விஜய் அப்படி பேசியதாக எந்தக் குறிப்பும் இல்லை. சன் டிவியாவது பயந்து போய் வெட்டி விட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் சிஏஏவுக்கு எதிராக ஆக்ரோஷ நிலைப்பாடு எடுத்து இருக்கும் ஹிண்டுவுக்கு அந்த அவசியம் இல்லை.
எனவே விஜய் பேசியதாக வரும் அந்தத் தகவல் பொய். யாரோ கிளப்பி விட்டு வைரல் ஆகி விட்டிருக்கிறது.
Arun Chala Pandian அவர் பேசுனதுக்கு கருத்துக்கு எல்லாரும் பொங்குனது இருக்கட்டும், அப்டி பேசினார்னு நெல்சன் சேவியர்னு ஒரு எடுபட்ட பய போட்ட போஸ்டருக்குதான் நேத்து கெடந்து கத்திக்கிட்டு கெடந்தாங்க அத்தணை பேரும் என்று பின்னூட்டத்திலேயே குட்டு வெளியே வந்து விட்டது.


சினிமா நடிகர்களுக்கு எம்பி பதவி கொடுத்துத் தனக்கு விளம்பரம் தேடிக் கொண்டது காங்கிரஸ் கட்சி தான்! வைஜயந்திமாலா, ஜமுனா ராஜேஷ் கன்னா என்று லிஸ்ட் கொஞ்சம் பெரியது. என்ன கிழித்தார்கள் என்பது யாருக்காவது இங்கே தெரியுமா?

இந்தப்புள்ளிகள் வந்துமட்டும் என்ன கிழித்துவிடப் போகிறார்களாம்? மீண்டும் சந்திப்போம்.

Sunday, March 15, 2020

கழுதை தேய்ந்து கட்டெறும்பு! காங்கிரஸ் தேய்ந்து ....?

சாகரிகா கோஸ்! ராஜ்தீப் சர்தேசாயுடைய மனைவி, பத்திரிகையாளரும் கூட என்று மட்டும் சொன்னால் போதாது. கணவனும் மனைவியும் லிபரல்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டாலும் காசுக்காகக் கூவுவதைப் பிழைப்பாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் என்று சுருக்கமாகச் சொல்லவும் வேண்டுமே! சரி, சாகரிகாவுக்கு என்ன இப்போது என்கிறீர்களா? ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசை உதறி எறிந்துவிட்டு பிஜேபிக்குப் போனது இங்கே காசுக்காகக் கூவிக் கொண்டிருந்தவர்களில் பலபேரை ரொம்பவுமே பாதித்திருக்கிறது. சோனியா பரிவார் காங்கிரசை விட்டு வெளியேபோனால் நல்லது என்று வெளிப்படையாகச் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! With Jyotiraditya Scindia’s departure, there are predictions of the imminent demise of the Congress. But it’s not the Congress that’s about to die — it’s the Gandhi family’s political authority that has evaporated.  இப்படித் தன் புலம்பலை இன்றைக்கு TOI இல் எழுதி ஆரம்பித்து இருக்கிறார்.


When even such a close family friend ups and leaves after a bitter exchange of words, it’s clearly a resounding vote of no-confidence in the Gandhi parivar. Ironically though, the precipitous decline of Brand Gandhi is an opportunity to revive Brand Congress இப்படி சோனியாG ப்ராண்ட்   மீது நம்பிக்கையில்லாமல் போனது காங்கிரஸ் ப்ராண்ட் உயிர்த்தெழ ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது என்று அம்மணி, காங்கிரசில் இருந்து பிரிந்து போன சரத் பவார், ஜெகன் மோகன் ரெட்டி முதலானவர்களை மறுபடியும் இணைத்து, காங்கிரஸ் ப்ராண்ட் தழைப்பதற்கு இதுவே நல்ல தருணம் என்று கனவுக் கோட்டைகளைக் கட்டுகிறார்!வரவர மாமியார் கழுதை போலாகி, அந்தக் கழுதையும் தேய்ந்து கட்டெறும்பாகி நிற்பதில் கட்டெறும்பு தேய்ந்து என்ன ஆகுமாம்? எதற்காக சாகரிகா போன்றவர்கள் கதறுகிறார்கள்? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?  

வீடியோ 4 நிமிடம் 

காங்கிரசுக்கு ஒரு நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியவில்லை என்பதால் தான் தொடர்ந்து இருமுறை தோற்க வேண்டிவந்தது.பொறுப்பான எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியவில்லை என்றால் காங்கிரசுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்ன?

  
இந்தக் காமெடி விவாதத்தை, வீடியோ 44 நிமிடம், பொறுமையாகப் பார்க்க முடிந்தால் பார்த்துவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு ஏதேனும் இருக்கிறதா, அல்லது வாக்காளர்களே கருணைக்கொலை செய்துவிட வேண்டியதுதானா?  இந்தக்கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

மீண்டும் சந்திப்போம். 

      

Friday, March 13, 2020

அரசியல் இன்று! மாறும் காட்சிகள்!

காங்கிரஸ் சார்பு ஊடகக்காரரான சுவாதி சதுர்வேதி NDTV தளத்தில் இன்றைக்கு எழுதியிருக்கிற செய்திக் கட்டுரை சோனியாG யின் பிடிமானம் காங்கிரஸ் கட்சியில் சுத்தமாகத் தொய்ந்துபோய்விட்டதாகக் குறை சொல்கிறது. ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை உதறிவிட்டு பிஜேபிக்குப் போய்விட்டதில் இவருக்கும்  பர்கா தத் போன்றவர்களுக்குமே கூட, காங்கிரஸ் கட்சி இனியும் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாகப்போய் விட்ட மாதிரியான தொனி செய்தியில் வெளிப்படுகிறது. வருகிற ஏப்ரலில் காலியாகும் 50 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில், சோனியா & கோ தடுமாறுவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிடுகிறார். As nominations drew to a close yesterday, the big takeaway was that the Congress party has been snubbed by its ally, Lalu Yadav's RJD, and the old guard continues to call the shots என்ற ஒருவரியே சாரம்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா ஒருவர் மட்டும் இன்றைக்கு ஏழு மாத வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். காஷ்மீர் பகுதியில் அமைதி தொடர்கிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். படிப்படியாக மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
  

ஆனால் இங்கே ரங்கராஜ் பாண்டே மாதிரியான தேசியப் பார்வை கொண்ட ஊடகக்காரர்களுக்குமே கூட ரஜனிகாந்த் நேற்றைக்குப் பேசிக் குழப்பியதுதான் பிரதானமான செய்தியாகத் தெரிகிறது என்பது தமிழகத்தின் தனித்துவமான தலையெழுத்தோ? வீடியோ 32 நிமிடம். பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் சாய்ஸ்.  

மீண்டும் சந்திப்போம். 

Tuesday, March 3, 2020

#572 வெறும் அக்கப்போர்களால் ஆனது தானா அரசியல்?

இந்திய அரசியலோ தமிழக அரசியலோ எதுவானாலும்  வெறும் அக்கப்போர்களிலேயே நடத்தி முடித்துவிடுவது தானென்பதை நேற்றைய சேனல்விவாதங்களிலிருந்து  மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. நம்மூரில் டிவி சேனல்கள் எதுவும் ஜனங்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிப்பவை அல்ல! அரசியல் எஜமானர்களுக்காக அல்லது காசுக்குக் கூவுகிறவை என்பதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு பாருங்கள்!


ஆதன் தமிழ் சேனலின் மாதேஷ் கேணத்தனமான கேள்விகளிலேயே நேர்காணலை ஓட்டுவதைக் கூட சகித்துக் கொள்ளலாம்!  அதற்காக ரவீந்திரன் துரைசாமியை தமிழகத்தின் பிரசாந்த் கிஷோர் என்று சொன்ன ஒரு நேர்காணலை இன்னமும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். இதிலும் கூட ஏகத்துக்கும் பில்டப். ரஜனிகாந்த் இசுடாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவில்லையே என்று ஆரம்பிக்கிறார்கள். சொல்லாவிட்டால்தான் என்ன? வீடியோ 29 நிமிடம்.

      
ராஜனிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்தது மார்ச் முதல் தேதி நடப்பு நேற்றும் கூட அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது தந்திடிவியின் ஆயுத நிகழ்ச்சியில் அரசியல்கட்சிகளைச் சார்ந்த எவரும் பங்குகொள்ளாமல் இருந்ததிலிருந்தே வெளிப் பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அசோக வர்ஷினி பாவம்! இந்த 42 நிமிட விவாதத்தில் கேள்விகளை சரியாகப் போட்டு பதில் வாங்கத் தெரியாமல் தவிப்பது தமாஷாக இருக்கிறது. சேனல் முதலாளிக்கு, ஏதோ நாங்களும் இதைப்பற்றி பேசிப்  பொழுதைக் கடத்தி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டிருக்கும். அவ்வளவு தான்!

   
WIN News சேனலில் மதன் ரவிச்சந்திரனுக்கு மற்ற சேனல்கள் எதுவும் விவாதிக்கத் துணியாத வேறு ஒரு விஷயம் விவாதத்துக்குக் கிடைத்திருப்பதில் சக்கை போடு போடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்! இந்த 48 நிமிட விவாதத்தில், தகுதியான கேண்டிடேட் இருந்தும் கூட  ஒரு இஸ்லாமியருக்கு திமுக ராஜ்ய சபா சீட் கொடுக்காமல் விட்டுவிட்டதே என்று நீண்ட நாட்களாகப் புகைந்து கொண்டிருக்கும் விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிற துணிச்சல்! அந்தத் துணிச்சலுக்காகவே மதனைப் பாராட்டியாக வேண்டும்!  விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக அறிமுகம் இல்லாதவர்கள்.  துளசிராமன் என்பவர் இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜனிகாந்தை சந்தித்ததற்கு, வட்டிக்குப் பணம் வாங்கப் போயிருப்பார்கள் என்று சர்வசாதாரணமாக காரணம் சொல்லி நக்கலடிக்கிறார். ஆனால் இங்கே சரியான கேள்விகளோடு மதன் ரவிச்சந்திரன் விவாதத்தை நடத்தியிருக்கிறார் என்றே உரக்கச் சொல்லுவேன்!

மீண்டும் சந்திப்போம்.            

Sunday, March 1, 2020

தமிழக அரசியல் களம்! குட்டையைக் குழப்பும் செய்திகள்!

இன்று பார்த்த செய்திகளில் முக்கியமான வேடிக்கை எதுவென்றால் பிரியங்கா வாத்ராவுக்கு ஏப்ரலில் நடக்கவிருக்கிற ராஜ்யசபா தேர்தல்களில் வாய்ப்பளிக்க சோனியாG முட்டுக்கட்டை போட்டு விட்டதாக வருகிற செய்திதான்! பிரியங்காவின் வருகை ராகுல் காண்டியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்று தயங்குவதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?

   
எனக்கென்னவோ ஏற்கெனெவே 15 வருடம் எம்பியாக இருக்கும் ராகுல் காண்டியே, வாயைக் கொடுத்து நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிற நிலையில் பப்பியும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, சரக்கு ஏதுமில்லை என்பது அம்பலமானால், இன்னும் கேவலம் என்று தாய் மனசு கிடந்து அடித்துக்கொள்வதாகவே தோன்றுகிறது. பாட்டி மாதிரி மூக்கு இருந்தால் மட்டும் போதுமா? பாட்டிக்கு இருந்தமாதிரி  மூளை இருக்க வேண்டாமா? 😄😆😈  

   

இஸ்லாமியர்களுக்கு CAA NPR NRC குறித்து எழுந்திருக்கும் அச்சம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதும், அதைப்போக்குவதற்கான முயற்சியும் .. என்ன சொல்கிறார்கள்? ரஜனிகாந்த் மட்டும் என்ன செய்து விடுவார்? எனக்கு எதுவும் புரியவில்லை. உங்களுக்காவது புரிகிறதா? ரஜனிகாந்த் ரசிகர் முகநூலில் ஸ்டேட்டஸ் போடுவதை ரஜனியிடமே காட்டியிருக்கலாம்  #ஆணியேபுடுங்கவேணாம்
இவர்கள் சப்பைக்கட்டு கட்டும் பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் தேசிய அடையாள அட்டை ஏற்கனவே பல்லாண்டு காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கழகம் இல்லாத தமிழகம் என்றானால் நன்றாகத் தான் இருக்கும்! அதற்காக பிறந்தநாள் பேபியை இப்படியா கலாய்ப்பது?



தமிழக அரசியல் குட்டையைக்குழப்ப இவ்வளவு போதாதா? 

மீண்டும் சந்திப்போம்.          

Saturday, February 29, 2020

ரஜனிகாந்த்! ஜனவரியில் அப்படி! பிப்ரவரியில் இப்படி!

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிற போர்வையில் இடதுசாரிகளும் ஒருசில இஸ்லாமிய அமைப்புக்களும் சேர்ந்து ஆரம்பித்திருக்கிற ஒரு அமைப்பு சென்னையில் நடத்திய CAA எதிர்ப்பு அரசியல் மாநாடு நடத்தியதில் விசிகவின் திருமாவளவனும், மதிமுகவின் வைகோவும் கலந்து கொள்ளவில்லை. திமுக சின்னத்தில் நின்று ஜெயித்த எம்பி ரவிக்குமாரும், மதிமுக பேச்சாளர் மல்லை சத்யாவும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. திமுகவின் இசுடாலின் கலந்து கொண்டதால் கூட்டம் திரட்டப்பட்டதாகவும் தெரிகிறது. ஹிந்து என்.ராம் ஸ்பெஷல் பேச்சாளர்! ரஜனிகாந்தைப் பற்றி என்.ராம் பேசியதைத் தொடர்ந்து சிலவிஷயங்கள் பின்னணியில் அரங்கேறி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.


கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்றும்  கூட சொல்வதில்லையா? அதுபோல இந்து தமிழ்திசை தளத்தில் பாஜகவை கழற்றி விடுகிறாரா ரஜனி என்ற தலைப்போடு இன்று ரவீந்திரன் துரைசாமி பேட்டி! இங்கு எதையும் நான் ஊகமாகவோ பூடகமாகவோ சொல்ல முற்படவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்! 


இதற்கெல்லாம் தமிழருவி மணியன் போன்ற ஒருத்தர் தான் விளக்கம், பொழிப்புரை சொல்ல முடியும். ஆனால் முந்தைய பேட்டிகளில் ஏற்பட்ட சந்தேகத்தை பாலன்ஸ் செய்வதற்கு ரஜனிகாந்த் முயற்சிப்பதாகச் சொல்வதும் கூடத் தேவையே இல்லாத ஆணிதான்!


பொருட்படுத்தக் கூடிய அளவுக்கு இங்கே தமிழகத்தில் பிஜேபி களத்திலேயே இல்லை. ஆனால் திமுக அதிமுக அணிகளில் இருக்கும் கட்சிகளுக்கு ரஜனிகாந்த் ஒரு ஆப்ஷன் கொடுத்து, மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிறார் என்பதை ரவீந்திரன் துரைசாமி கொஞ்ச காலமாகவே சொல்லிவருகிறார்.

குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தால் என்னவாகும் என்பது மாதிரியான ஆராய்ச்சி இங்கே டிவி சேனல் விவாதங்களில் பரபரப்பான விவாதமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் செமகாமெடியாக இருக்கிறது. ரஜினிகாந்தை விமரிசித்துக் கோவையில் ஒரு அதிமுக கூட்டத்தில் பேசிய இயக்குனர் ஆர். சுந்தர ராஜனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று ஏகப்பட்ட வதந்தீ!


2020 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்படியாக! மார்ச் மாதம் எப்படியோ?

மீண்டும் சந்திப்போம்.    
    

Thursday, February 27, 2020

எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?

சென்னையில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்று ஒரு கூத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் தலைமையில். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற புதுப் பெயரில் நேற்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள். பழைய கள் தான்! ஆனால் புது மொந்தையாம்!  அதில் இசுடாலின் வாய்ஸ் கொடுத்ததை முந்தைய பதிவில் சுட்டி கொடுத்திருந்தேன். இருந்தாலும் இங்கேயும் ஒரு தொடர்ச்சிக்காக. ஹிந்து என் ராம் பேசுவதை இந்த 25 நிமிட வீடியோவில் பார்க்கலாம்.


இங்கே CAA குறித்து எதிர்க்கட்சிகள்,உதிரி அமைப்புக்கள், இடதுசாரிக் குறுங்குழுக்கள் எல்லாமாகச் சேர்ந்து திரும்பத்  திரும்ப ஒரே பல்லவி,  பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். CAA  என்பது அண்டைநாடுகளில் இருந்து கொடுமைக்குள்ளாகி இங்கே வந்த அகதிகளுக்கு, சுமார் 38000 பேருக்குக் குடியுரிமை வழங்குவதைப் பற்றி மட்டுமே. எந்த ஒரு இந்தியக்குடிமகனுக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிற போதிலும் இங்கே திமுக, காங்கிரஸ் மற்றும் உதிரிகள் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து கொண்டே இருக்கின்றன. அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அடிப்படை உரிமைகளில் கைவைக்கிற மாதிரி இருக்கிறது, சட்ட விரோதம் என்று முதலில் இருந்து என் ராம் ஆரம்பிப்பதன் உள்நோக்கம் என்ன? நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மூன்றில் இருபங்குக்கும் அதிகமான மெஜாரிட்டியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை சட்டவிரோதம் அரசியல் சாசனத்துக்கு  முரணானது என்றால் அதைக் கேள்விக்குள்ளாக்கவேண்டிய இடம், தங்களுடைய அச்சம் நியாயமானது என்பதைஎடுத்து வைக்க வேண்டிய இடம் நீதிமன்றம். தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவதில் அல்ல என்பது என் ராம் மாதிரியான இடடதுசாரித் தறுதலைகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அரசுக்கு எதிராக எதையாவது கிளப்பிக் கலவரத்தைத் தூண்டுவது ஒன்று தான் அவர்களுடைய புரட்சிகரமான நடவடிக்கை! பாமரனுக்கும் புரிகிற மாதிரி ஒரே வார்த்தையில் சொல்வதானால் அராஜகம்! வன்முறைக் கலவரம்!

சரி, அரசியல் கட்சிகள், சார்புநிலை எடுக்கும் உதிரிகள் இவர்கள்தான் இப்படியென்றால், இவர்கள் சொல்கிற திகில் சித்திரத்தை அப்படியே நம்பித்தான் இஸ்லாமியர்கள் ஷாஹீன் பாக், வண்ணாரப்பேட்டை இப்படிப்பல இடங்களிலும் கலவரத்தீ உண்டாகிற அளவுக்குப் போராட்டங்களில் இறங்கி இருக்கிறார்களா? இல்லை என்பது தெளிவு. அவர்கள் ஒரு தெளிவான அஜெண்டாவுடன் இயங்குகிற மதக் குழுக்களின் பின்னால் அணி திரள்கிறார்கள். பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளுடைய முகங்கள் வெளியே அவ்வளவாகத் தெரிவதில்லை.  

கழகங்களுக்கு  இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுடைய ஆதரவை அப்படியே பெறவேண்டும் என்கிற நோக்கம் அப்பட்டமானது. பெரும்பான்மையினரை  ஜாதி ரீதியாகப் பிரித்து வாக்குகளைப்பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை, இப்படி வெளிப்படையாக ஆதரவுக் கரம்  நீட்டப்படுகிறது.

இங்கே தேசநலன், ஜனநாயகம், உண்மை பேசுவது,மக்கள் நலன் சார்ந்து செயல்படுவது  இவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்படுவது தொடர்ச்சியாக இந்த தேசத்தை அரித்துக் கொண்டே வருகிறது. இங்கே ஜனங்களுடைய குரலை எதிரொலிக்கப் பிரதிநிதிகளும் இல்லை! ஜனங்களே நேரடியாகப் பங்குகொள்ளும் விதமும் ஆரம்பத்தில் இருந்தே இல்லை. ஜனங்கள் சும்மா இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்வகிலும் பொருளில்லை.

எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?  மீண்டும் சந்திப்போம்.        
  

Saturday, February 22, 2020

இன்று படித்ததில் முக்கியமான சில செய்திகள்! #Covid-19

Covid-19 என்று நாமகரணம் செய்யப்பட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் 185 பில்லியன் டாலர்/ 1.38 லட்சம் கோடி யுவான் அளவுக்குச் சீனப்பொருளாதாரம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இழப்பைச் சந்திக்கும் என்று ஜூ மின் என்கிற முன்னாள் IMF துணை மேனேஜிங் டைரக்டரும் தற்போது பெய்ஜிங் சின்குவா பல்கலைக் கழகத்தில் National Financial Research Institute இன் தலைவராக இருப்பவர் இன்று சொன்ன விவரம்.


சுற்றுலாத்துறையில் சுமார் 900 பில்லியன் யுவான் அளவுக்கு சரிவும், உணவு, பானங்களில் நுகர்வோர் குறைந்ததால் 420 பில்லியன் யுவான் அளவுக்கு சரிவும் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் கல்வி மற்றும் பொழுதுபோக்குத்துறை  கொஞ்சம் ஈடுகட்டும் என்றாலும், மொத்த இழப்பு 1.38 லட்சம் கோடி யுவான் அளவில் இருக்கும். முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம்  3% முதல் 4% வரை குறையலாம். இதை ஈடுகட்ட பத்துமடங்கு வேகத்துடன் செயல்பட வேண்டியிருக்கும் என்கிறார். முழுச்செய்தியும் இங்கே

முகநூலில் இன்றைக்கு படித்ததில் இது முக்கியமாக

கொரானா வைரஸ் சீனாவைச் சீரழித்திருக்கிறது. அசைக்கமுடியாதது என்று உலக நாடுகளால் நம்பப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கதிகலங்கிப் போயிருக்கிறது என்பது மட்டும் உண்மை. மிக வலிமையானவர் எனக் கருதப்பட்ட ஜின்பிங்கிற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. சாதாரண சீனன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே தனது துன்பத்திற்கெல்லாம் காரணம் என உணரத் தலைப்பட்டிருக்கிறான். சீனாவிற்குள் பெரும் அதிருப்தியும், அச்சமும் இன்றைக்கு நிகழ ஆரம்பித்திருக்கிறது.
இதே நிலைமை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடித்தால் அனேகமாக ஜின்பிங் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்படலாம். அல்லது கொல்லப்படலாம். அல்லது ஜின்பிங் இரும்புக்கரம் கரம் கொண்டு தனது எதிர்ப்பாளர்களை படுகொலை செய்யலாம் எனப் பலவித சாத்தியங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லா கம்யூனிஸ நாடுகளைப் போல சீனாவிலும் தனிமனித சுதந்திரம் என்பது இல்லை.
இந்தியாவில் எவனும் எதைப்பற்றியும் பேசலாம். எழுதலாம். அல்லது தேச விரோதமாக கூட்டம் கூட்டிக் கூக்குரலிடாம். ஆனால் சீனாவில் எவனும் அதைப்போலச் செய்து விட்டு அடுத்த நாள் உயிரோடு இருப்பது சந்தேகம்தான். சீனாவில் ஃபேஸ்புக்கும் இல்லை, வாட்ஸப்பும் இல்லை, சுதந்திரமான பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என எதுவும் இல்லை. எனவே வெளியில் கசியும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளாக, அச்சமூட்டுபவைகளாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா போன்ற திறந்த, சாதாரண மக்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ள நாட்டில் வதந்திகள் உடனடியாக தோலுறிக்கப்பட்டு உண்மைகள் சிலமணி நேரத்திலேயே வெளியே வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சீனாவில் வதந்தி வதந்தியாக அதையும் தாண்டி அச்சமூட்டும் வதந்தியாக மாறி சீனர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
கொரானா வைரஸ் பாதித்தவர்களை சீனா சுட்டுக் கொல்கிறது என்று பரவும் வதந்தியால் சீன நகரங்கள் பெரும் சிறைக்கூடங்களைப் போல மாறிவிட்டன. சீனர்கள் வீடுகளின் கதவுகளை வெல்டிங் செய்து அடைத்து கொண்டு உள்ளேயே வாழ்கிறார்கள். நகரங்களில் ஆள் நடமாட்டமில்லாமால் சாலைகள் வெறிச்சோடிவிட்டன. எங்கும் பெரும் அச்சமும் பதட்டமும் நிலவுகிறது என்பதே உண்மை.
சீன அரசாங்கம் கொரானா வைரஸ் பரவலை பெருமளவு கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறுவது உண்மையாகக் கூட இருக்கலாம் என்றாலும் உலகம் அதனை நம்பத் தயாராக இல்லை. உலக நாடுகள் விமானப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி வைத்திருக்கின்றன. சீன உள்நாட்டுப் பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.
இன்றுவரை சீனா உலகின் மலிவான ஃபேக்டரியாக இருந்து வந்திருக்கிறது. அங்கிருந்து உலகின் மூலை முடுக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அளவில்லாதவை. இன்றைக்கு அத்தனையும் முடங்கிக் கிடக்கிறது. சீனர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்ப அஞ்சி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். தொழிற்சாலைகள் இயஙகவில்லை. துறைமுகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கம்யூனிஸ சீனர்களை கர்மா கடித்து வைத்துவிட்டது.
இன்னொருபுறம் இதனால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகிற பாதிப்புகள் அச்சமூட்டுபவை. சீனாவிலிருந்து வரும் பொருட்களை நம்பி உலகின் பல நாடுகளின் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இன்றைக்கு அது அத்தனையும் நின்று போயிருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மிக, மிகப் பெரியதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் இதன் தாக்கம் தெரியும். இந்தியாவும் சந்தேகமில்லாமல் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உண்டாகும் பாதிப்பை விடவும் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேககமில்லை.
இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அமெரிக்க பங்குச் சந்தை கீழிறங்கும் என்பது என்னுடைய கணிப்பு. அது தவறாக இருப்பதாக. இந்தியப் பங்குச் சந்தைக்கும் பாதிப்பு உண்டாகலாம்.
இன்னொருபுறம் இது இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வாய்ப்பு. அதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதினை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

இதில் சிவப்பெழுத்தில் காட்டப்பட்டிருக்கும் பகுதிகள் சரியானதல்ல என்றே எனக்குப் படுகிறது. கொஞ்சம் அதீதமானவை என்றே நினைக்கிறேன். ஆனால் பிப்ரவரி மாதத்துக்கு மேலும் கரோனா வைரஸ் பாதிப்பை சீனா கட்டுப்படுத்தத் தவறினால் அதன் பொருளாதாரம் ஏப்ரல் - ஜூன் இரண்டாவது காலாண்டிலும் சரிவைத் தொடர்ந்து சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடைசிப்பாராவில், இது இந்தியாவுக்கு மாபெரும் வாய்ப்பு என்று எதைவைத்து சொல்கிறார்? இந்தியத் தொழில் அதிபர்கள் எவரும் இதை ஒரு சவாலாக ஏற்று செயலில் இறங்கி விடுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியாவது இந்த இரண்டு மாதங்களில் தெரிந்ததா? 


சீனர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரை சரி! சரிகிறார்கள், வீழ்ந்துவிட்டார்கள் என்பது அதீத கற்பனை.

    
இப்போதைக்கு கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே நாடு சிங்கப்பூர் தான் போல!  ஜனங்களை கலவரப்படுத்தாமல், அதேநேரம் உறுதியான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரி ஒரு பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதுவதிலும் கூட இருக்கவேண்டும் என்பதுமட்டும் எனக்கு நன்றாகப் புரிகிறது!
     
 மீண்டும் சந்திப்போம்.  

Friday, February 21, 2020

கொஞ்சம் #செய்தி கொஞ்சம் #விமரிசனம் - 4

டொனால்ட் ட்ரம்ப் எதைப்பேசினாலும் அது பெரும் சர்ச்சையைக் கிளப்புவதாகாவே ஆகிவிடுவது ட்ரம்ப் ராசி என்று சொல்வதா? ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதா? என்னைக் கேட்டால் இரண்டும் தான் என்று கொஞ்சமும் தயங்காமல் சொல்வேன்! சமீபத்தைய ஆஸ்கார் விருதுகளில் முதல்முறையாக ஒரு கொரியத் திரைப்படம் Parasite சிறந்தபடமாகவும் 4 ஆஸ்கார்களைப் பெற்றது குறித்தும்  டொனால்ட் ட்ரம்ப் கொஞ்சம் குத்தலாகச் சொன்னது, அவர் ஆசைப்படியே  சர்ச்சையாகியிருக்கிறது.


பாரசைட் படத்தைப் பற்றி பேசியதென்னவோநடிகர்  வெறும் 45 வினாடிகள் தான்! போகிற போக்கில் பிராட் பிட் காலையும் வாரிவிட்டுப் போனார்! பேசியதன்  நோக்கம் என்னவோ தென்கொரியாவுடன் வர்த்தக உறவுகளைப் பற்றியதாக, Make America Great Again என்ற 2016 தேர்தல் கோஷம் நினைவிருக்கிறதா?   இப்போது அது  Keep America Great என்று மாற்றப்பட்டு  ஒரு தொடர்ச்சியை வேண்டுகிற மாதிரி! ஹாலிவுட் ஆசாமிகளுக்கும் ட்ரம்புக்கும் ஆகவே ஆகாது! இப்போது இதுவேறு சேர்ந்து கொண்டிருக்கிறதா? தாளித்துத் தள்ளுகிறார்கள்! Parasite’s US studio Neon gave the perfect riposte to Trump’s rant: “Understandable, he can’t read."


மன்மோகன் சிங்  மவுனசிங்காக பிரதமர் நாற்காலியில் ஒண்டிக்கொண்டு இருந்த அந்த நாட்களில்   ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த கார்டூனாம்! சதீஷ் ஆசார்யாவுக்கு முகநூல் நினைவூட்டல் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குள் சதீஷ் ஆசார்யா என்னமோ ஆகிவிட்டார்!


டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகிறார் என்ற செய்திக்குப் பின்னால் என்னென்னவெல்லாம் பேச்சு இருக்கிறது? The Print தளத்தின் சேகர் குப்தா அவர் பார்வையில் கொஞ்சம் தொகுத்துச் சொல்கிறார்.  என்பதைக் கொஞ்சம் கேட்டுத்தான் பார்க்கலாமே!
வீடியோ 23 நிமிடம்.
    

மீண்டும் சந்திப்போம். 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)