பொதுவாக சினிமா நடிகர்கள், நடிகைகள் அரசியல் பேசுவதை நான் அவ்வளவாக சட்டை செய்வதில்லை. பிரெஞ்சு மக்கள் அடிப்படை உணவான ரொட்டி கூடக் கிடைப்பதில்லை என்று தெருவில் இறங்கிப் போராடிய சமயத்தில் மேரி அந்துவாநெட் என்கிற பிரான்சின் கடைசி அரசி, ரொட்டி கிடைக்கவில்லையானால் என்ன? கேக் சாப்பிடட்டுமே என்று சொன்ன கதையாக இந்த சினிமா பிரபலங்களுக்கு நாட்டைப் பற்றியோ மக்களைப்பற்றியோ, இருக்கிற பிரச்சினைகளைப் பற்றியோ எதுவுமே தெரியாது. சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக வேஷம் கட்டியதிலேயே, நிஜத்திலும் ஹீரோவாகிவிட்டதாக ஒரு நினைப்பு இருக்கும் போல!
ஆதன் தமிழ் சேனலில் கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் மாதேஷைப் பார்க்க ஆரம்பநாட்களில் மிகவும் எரிச்சலாக இருந்தாலும், இப்போதெல்லாம் அவரை ஒரு காமெடிப் பீஸாக மட்டுமே பார்த்துக் கடந்து போய்விடுகிற பொறுமை வந்துவிட்டது! இந்த 32 நிமிட நேர்காணலில் விஜய், விஜய் சேதுபதி, ரஜனிகாந்த் என்கிற மூன்று நடிகர்களைத் தொட்டுப் பேசியதில் மூன்றாவது நபரைப்பற்றியே அதிக நேரம் என்பது ஆச்சரியம் இல்லை. விஜய் சேதுபதி இப்போது கொஞ்சம் அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார். விஜய் பேசுவது அரசியல்தானா என்பதில் அவருக்கே இன்னமும் சரியான தெளிவு இல்லை என்பது மிகவும் வெளிப்படை!
ரவீந்திரன் துரைசாமி நடிகர் விஜய் பற்றிப் பேசியதில் மிகச் சுருக்கமான வீடியோ இதுதான். 11 நிமிடம்தான்!
விஜய்க்கோ S A சந்திரசேகருக்கோ தமிழக அரசியல் பிடிபடவில்லை என்ற எனது சந்தேகத்துக்கு ரவீந்திரன் துரைசாமி கொஞ்சம் தெளிவாகவே விடை சொல்லி இருக்கிறார் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது .
குடியுரிமை சட்டம் பற்றி பூடகமாக நடிகர் விஜய் பேசினார் என்று செய்திகள் உலவின. நேரடி ஒளிபரப்பில் அந்தப் பகுதி வரவில்லை. கேட்டதற்கு சன் டிவியே பயந்து போய் எடிட் செய்து விட்டார்கள் என்று காரணம் சொல்லப் பட்டது. லைவ் கவரேஜ்ஜில் வெட்டப்பட்ட கிளிப் இவர்களுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது என்பதும் தெரியவில்லை.
இடையில் பாஜக அபிமானிகள் விஜய்யை விமர்சிக்கத் துவங்க, பாஜக விமர்சகர்கள் அவரை தூக்கி வைத்துக் கொஞ்சிய காட்சி சற்றே காமெடியாக இருந்தது.
இன்றைய ஹிண்டுவில் அந்த நிகழ்வு பற்றிய முழுமையான செய்தி வந்திருக்கிறது. விஜய் அப்படி பேசியதாக எந்தக் குறிப்பும் இல்லை. சன் டிவியாவது பயந்து போய் வெட்டி விட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் சிஏஏவுக்கு எதிராக ஆக்ரோஷ நிலைப்பாடு எடுத்து இருக்கும் ஹிண்டுவுக்கு அந்த அவசியம் இல்லை.
எனவே விஜய் பேசியதாக வரும் அந்தத் தகவல் பொய். யாரோ கிளப்பி விட்டு வைரல் ஆகி விட்டிருக்கிறது.
Arun Chala Pandian அவர் பேசுனதுக்கு கருத்துக்கு எல்லாரும் பொங்குனது இருக்கட்டும், அப்டி பேசினார்னு நெல்சன் சேவியர்னு ஒரு எடுபட்ட பய போட்ட போஸ்டருக்குதான் நேத்து கெடந்து கத்திக்கிட்டு கெடந்தாங்க அத்தணை பேரும் என்று பின்னூட்டத்திலேயே குட்டு வெளியே வந்து விட்டது.
விஜய் சேதுபதி என்ன அரசியல் பேசினார் என்பதைப் பார்க்க இங்கே வீடியோ 15 நிமிடம்.
சினிமா நடிகர்களுக்கு எம்பி பதவி கொடுத்துத் தனக்கு விளம்பரம் தேடிக் கொண்டது காங்கிரஸ் கட்சி தான்! வைஜயந்திமாலா, ஜமுனா ராஜேஷ் கன்னா என்று லிஸ்ட் கொஞ்சம் பெரியது. என்ன கிழித்தார்கள் என்பது யாருக்காவது இங்கே தெரியுமா?
இந்தப்புள்ளிகள் வந்துமட்டும் என்ன கிழித்துவிடப் போகிறார்களாம்? மீண்டும் சந்திப்போம்.
இந்த so called cinema actors - இவர்களுக்கு என ஒரு அஜெண்டா இருக்கிறது. இது நிச்சயமாக உங்களுக்குப் புரியும். இந்தச் சோழியர்களின் குடுமி சும்மா ஆடுவதில்லை.
ReplyDeleteசினிமா நடிகர்களில் அரசியல் தெரிந்து பேசுகிறவராக நடிகர் ராஜேஷ் என்று ஒருவர் இருந்தார். அரசியல் தெரிந்து பேசுகிறவராக இருந்ததாலோ என்னவோ அவர் இந்தத் தறுதலைகள் மாதிரி எப்போதுமே பேசியதில்லை என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது நெ.த. சார்!
Deleteஇந்த நடிகர்களுடைய அஜெண்டா என்னவென்று எனக்குத் தெரியாது! ஆனால் இவர்களைப் பின்னால் இருந்து இயக்குகிறவர்களுடைய அஜெண்டா என்னவென்பது மட்டும் புரிகிறது.