ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் இனிதாய்ப் பொழுதைக் கழிக்க திரை இசைப்பாடல்களைத் தவிர வேறென்ன சிறந்த விஷயம் இருக்க முடியும் சொல்லுங்கள்! அதுவும் தெலுகுப் படப்பாடல்கள் ரசிகனையும் கூடச் சேர்ந்தாடச் செய்கிற ரகம்! ரசிகனைத் திருப்திப் படுத்துவது ஒன்று மட்டுமே ஆந்திரத் திரைப்படத் தயாரிப்பாளர்களுடைய தாரக மந்திரமாக இருக்கிறது. காசுபார்க்கிற வழியாகவும்!
படம் ரிலீசாவதற்கு இருவாரங்களுக்கு முன்னால் வெளியான ஆலா வைகுந்தபுரமுலோ படத்தின் ஒரு பாடல் ஷ்ரேயா கோஷல் பாடி வெளியானதில் இன்று வரை பார்வைகள் லட்சங்களில் மட்டுமே!
ஆனால் ஆலா வைகுந்தபுரமுலோ படத்தின் இந்த ஒரு பாடல் மட்டுமே இரண்டுகோடியே 95 லட்சம் பார்வைகளை யூட்யூப் தளத்தில் பெற்றிருக்கிறது. எஸ். தமன் இசையமைத்த இந்தப்படத்தின் பாடல்கள், படம் ரிலீசாகி இரண்டு மாதங்கள் ஆனபோதிலும் இன்றும் டாப் 10 இல் இருக்கின்றன என்பதில் அல்லு அர்ஜுன் நடனம் எப்படி ஜனங்களை ரொம்பவுமே வசீகரம் செய்திருக்கிறது என்பதும் புலப்படுகிறது. அதுதவிர இந்த இளைஞனுக்கு காமெடி மிக நன்றாக வருகிறது! சண்டைக் காட்சிகள் என்றால் இன்னும் பிரமாதமாக!
ஆனாலும் பொதுவாகவே இந்தியத் திரைப்படங்களில் கதாநாயகி எப்போதுமே ஊறுகாய் மாதிரித்தான்! இந்த இலக்கணம் தெலுகுப்படங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக! கதாநாயகி பூஜா ஹெக்டேவை அழகாகக் காட்டியிருக்கிறார்கள், அவ்வளவு போதாதா!! Box Office இல் படம் செம ஹிட்!
சரிலேறு நீக்கெவ்வரு படமும் மகரசங்கராந்தியை ஒட்டி வெளியான மகேஷ் பாபு படம் தான்! நாயகி ராஷ்மி மந்தனா, திரை இலக்கணப்படி, சரியான லூசு கேரக்டர்தான் என்றாலும் இந்தப்படத்தில் ரொம்பவுமே ஓவர் லூசு! கதாநாயகனை எதற்கெடுத்தாலும் I am impressed என்று ஓடிப்போய்க் கட்டிக்க கொள்வது தவிர இந்த மாதிரி அயிட்டம் சாங்குக்கும் உபயோகப் படுகிறார். கதாநாயகியின் உபயோகம் அதுமட்டுமே!
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் படம் ஆந்திரஜனங்களுக்கு ரொம்பவுமே பிடித்துப்போனதில் வெற்றிப்படமாக ஆக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தைக் குறித்து இன்னுமொரு சுவாரசியமான சங்கதியையும் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் படித்தேன். கதாநாயகன் மகேஷ் பாபு சம்பளம் என்று எதுவும் பேசாமல், லாபத்தில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் நடித்திருக்கிறார். தவிர மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவராக முதலீடும் செய்திருக்கிறார். இரண்டு வகையிலுமாக சுமார் 82 கோடி ரூபாய் அவருக்குக் கிடைத்திருப்பதாக! சம்பளம் மட்டும் என்றால் 30 கோடி மட்டுமே கிடைத்திருக்கும். இப்படி ஒரு புதுமையும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது.
தொடர்புடைய பழைய பதிவு
நான்கு படங்களுக்கு நாலைந்து வரிகளுக்கு மிகாமல் விமரிசனம்! இங்கே இந்தப்படங்கள் குறித்து சொன்னதில் இப்போதும் மாற்றிக்கொள்ள எதுவுமில்லை!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment