சென்ற வாரம் கொஞ்சம் களையிழந்து கிடந்த அரசியல் களம் மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது! மார்ச் மாதம் முதலிரண்டு வாரங்கள் முடிவதற்கு முன்னாலேயே நம்மூர் பங்குச்சந்தை ஒரேயடியாகப் படுக்க ஆரம்பித்துவிட்டது! கரோனா வைரஸ் பீதி உலகப் பங்குச் சந்தைகளை ஆட்டி வைத்ததோடு இந்தியபங்குச் சந்தையையும் ஆட்டிப் படைத்துவிட்டது. போதாக்குறைக்கு ரஷ்யாவும் சவூதி அரேபியாவும் போட்டிபோட்டுக் கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்ததில் எண்ணெய் விலை 30% வரை குறைந்ததும், இங்கே யெஸ் பேங்க் விவகாரமும் சேர்ந்து இந்தியப் பங்குச் சந்தையை ரொம்பவுமே அசைத்துப் பார்த்ததைக் கூட மோடி எதிர்ப்பாளர்கள் கொண்டாட முடியாதபடி மத்தியப்பிரதேச அரசியல் காங்கிரசை அடியோடு புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
ராகுலையும் கழுதையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரியா? ஒரு வேளை ராஜீவின் படத்தை விட ராகுலின் படம் அதிகமாக விலை போயிருந்தால் ராஜீவின் மதிப்பு கழுதையை விடக் குறைவானதா? எப்படி எல்லாம் கேள்விகள் எழும்?
இது இன்றைய ஹிந்து ஆங்கிலநாளிதழில் சுரேந்திரா வரைந்திருக்கிற கார்டூன்
வீடியோ 21 நிமிடம்
#Yesபேங்க்பரிதாபங்கள். ராணா கபூர் ராஜீவ் படத்தை 2கோடிக்குப் பிரியங்காவிடம் வாங்கியதோடு மட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் படத்தையும் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
புரொபசர் ஆநந்த் ரங்கநாதன்: 'நிச்சயமாக ராகுலின் படத்தை எம்.எப். ஹுசைன் வரைந்திருக்க முடியாது. அவர் குதிரைகளை வரைபவர், கழுதையை வரைந்திருக்க முடியாது.'
மெஜாரிட்டியை இழந்து நிற்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தாலும், கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுகிற வரை காங்கிரஸ்காரன் எவனும் நாற்காலியை விடவே மாட்டான் என்பது மத்தியப்பிரதேசத்தில் மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.
மேலே கமல்நாத் மாதிரியே கப்பல் கவிழ்ந்த மாதிரிக் கையை வைத்துக் கொண்டிருப்பவர் யார் தெரிகிறதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி! The polit buro of the CPM - currently dominated by the Kerala faction of the party - shot down the proposal of sending Sitaram Yechury to the Rajya Sabha with the help of the Congress. The West Bengal faction was earlier said to have been keen on nominating Sitaram Yechury to the Rajya Sabha. இரண்டாவது முறையாகவும் கேரள சகாவுக்கள் சீதாராம் யெச்சூரியின் ராஜ்யசபா உறுப்பினராகும் கனவுக்குத் தடை போட்டு விட்டார்களாம்! ஒருவரே இருமுறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது என்பது கொள்கைப்படியானதுதான் என்று சென்ற முறை போலவே சொல்லப்பட்டாலும், காங்கிரசோடு ஒட்டுறவு இல்லை என்ற கேரள காம்ரேடுகளின் கட்டளை மேற்குவங்கத் தோழர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தத்துவார்த்த, கொள்கை சாயம் பூசிக் சொல்வது காம்ரேடுகளின் வழக்கம்.
காங்கிரசோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானா? மற்ற எல்லா விஷயங்களிலும் காங்கிரசோடு தோளோடு தோள் சேர நிற்கிற மார்க்சிஸ்டுகளின் சாயம் வெளுத்து நீண்ட காலமாகிவிட்டதே! காங்கிரசுக்கு முன்னாலேயே புதைகுழிக்குப் போய்விட்டவர்கள் கம்யூனிஸ்டுகள்! ஏன் என்று தனியாக விவரித்துச் சொல்லவேண்டுமா என்ன! இடதுசாரிகள் என்று தேடிப்பாருங்கள்! இரு வலைப்பதிவுகளிலும் நிறையத் தகவல்கள் கிடைக்கும்!
துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க! சொல்லிவச்சார் வள்ளுவரும் சரிங்க என்று ராஜபார்ட் ரங்கதுரை மாதிரிப் பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா?காங்கிரஸ், கழகங்கள், இடதுசாரிகள் என்ற களைகளை எப்போது இந்திய அரசியலில் இருந்து முற்றொட்டாக, களையெடுக்கப்போகிறோம்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment