இந்திய அரசியலோ தமிழக அரசியலோ எதுவானாலும் வெறும் அக்கப்போர்களிலேயே நடத்தி முடித்துவிடுவது தானென்பதை நேற்றைய சேனல்விவாதங்களிலிருந்து மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. நம்மூரில் டிவி சேனல்கள் எதுவும் ஜனங்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிப்பவை அல்ல! அரசியல் எஜமானர்களுக்காக அல்லது காசுக்குக் கூவுகிறவை என்பதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு பாருங்கள்!
ஆதன் தமிழ் சேனலின் மாதேஷ் கேணத்தனமான கேள்விகளிலேயே நேர்காணலை ஓட்டுவதைக் கூட சகித்துக் கொள்ளலாம்! அதற்காக ரவீந்திரன் துரைசாமியை தமிழகத்தின் பிரசாந்த் கிஷோர் என்று சொன்ன ஒரு நேர்காணலை இன்னமும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். இதிலும் கூட ஏகத்துக்கும் பில்டப். ரஜனிகாந்த் இசுடாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவில்லையே என்று ஆரம்பிக்கிறார்கள். சொல்லாவிட்டால்தான் என்ன? வீடியோ 29 நிமிடம்.
ராஜனிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்தது மார்ச் முதல் தேதி நடப்பு நேற்றும் கூட அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது தந்திடிவியின் ஆயுத நிகழ்ச்சியில் அரசியல்கட்சிகளைச் சார்ந்த எவரும் பங்குகொள்ளாமல் இருந்ததிலிருந்தே வெளிப் பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அசோக வர்ஷினி பாவம்! இந்த 42 நிமிட விவாதத்தில் கேள்விகளை சரியாகப் போட்டு பதில் வாங்கத் தெரியாமல் தவிப்பது தமாஷாக இருக்கிறது. சேனல் முதலாளிக்கு, ஏதோ நாங்களும் இதைப்பற்றி பேசிப் பொழுதைக் கடத்தி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டிருக்கும். அவ்வளவு தான்!
WIN News சேனலில் மதன் ரவிச்சந்திரனுக்கு மற்ற சேனல்கள் எதுவும் விவாதிக்கத் துணியாத வேறு ஒரு விஷயம் விவாதத்துக்குக் கிடைத்திருப்பதில் சக்கை போடு போடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்! இந்த 48 நிமிட விவாதத்தில், தகுதியான கேண்டிடேட் இருந்தும் கூட ஒரு இஸ்லாமியருக்கு திமுக ராஜ்ய சபா சீட் கொடுக்காமல் விட்டுவிட்டதே என்று நீண்ட நாட்களாகப் புகைந்து கொண்டிருக்கும் விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிற துணிச்சல்! அந்தத் துணிச்சலுக்காகவே மதனைப் பாராட்டியாக வேண்டும்! விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக அறிமுகம் இல்லாதவர்கள். துளசிராமன் என்பவர் இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜனிகாந்தை சந்தித்ததற்கு, வட்டிக்குப் பணம் வாங்கப் போயிருப்பார்கள் என்று சர்வசாதாரணமாக காரணம் சொல்லி நக்கலடிக்கிறார். ஆனால் இங்கே சரியான கேள்விகளோடு மதன் ரவிச்சந்திரன் விவாதத்தை நடத்தியிருக்கிறார் என்றே உரக்கச் சொல்லுவேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment