கொரோனா வைரஸ் தொற்று மீது பயமில்லை ஆனால் NRC NPR மீதுதான் பயம் என்ற முழக்கத்தோடு டில்லி ஷாஹீன் பாகில் போராட்டத்தைக் கைவிட மறுக்கிற அசட்டுத்தனம் இஸ்லாமிய சகோதரர்களிடம் ஊட்டி வளர்க்கப் படுகிறதோ? இங்கே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேரணி நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.மதுரை ஷாஹீன்பாக் என்றொரு பேனருடன் சிலர் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்தேன்.
பொதுவாகவே இந்தியர்களிடம் ஒழுங்கீனம் கொஞ்சம் அதிகம் தான்! குறிப்பாக தமிழேண்டா, மல்லு சனம் என்றால் அடுத்தவருக்கு உபதேசம் தங்களுக்கு இல்லை என்கிற மாதிரியான கூடுதல் மிதப்பு வேறு! மதுரை விமான நிலையம் இரண்டுநாட்களாக துபாய் ரிடர்ன் அசாமிகளிடம் படாத பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.
துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 143 பயணிகள் கொரோனா பரிசோதனை கண்காணிப்புக்கு செல்ல மறுப்பு
துபாயில் இருந்து கோரெண்டல் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 143 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா அறிகுறிகள் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களை இரண்டு கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செல்ல 5 அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களாக பயணிகளை பிரித்து ஒரு குழுவினரை மதுரை சின்ன உடப்பு பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு பயிற்சி கல்லூரிக்கும் (120 படுக்கை வசதி) மற்றும் மற்றொரு குழுவினர் ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் (60 படுக்கை வசதிகள்) கொண்ட கண்காணிப்பு மையம் தயார் நிலையில் உள்ள மையத்திற்கு 14 தினங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது துபாயில் இருந்து வந்த பயணிகளை கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செய்வதற்கு இரண்டு பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நீண்ட நேரமாக தண்ணீரும், உணவும் வழங்காமல் பரிசோதனை என்ற பேரில் அதிக காலதாமதம் செய்துவருவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு மையத்திற்கு செல்வதற்கு பயணிகள் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கொரோனா குறித்து பரிசோதனை விமான நிலையத்திலேயே பண்ணவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையிலும் 60 மாதத்திற்கு முன் கணவன் துபாய்க்கு சென்று திரும்பி வந்தவரை அவரது மனைவியும் குழந்தையும் கண்ணீர் மல்க கண்காணிப்பு மையத்திற்கு சென்று தங்குமாறு கூறிய நெகிழ்வான சம்பவத்தால் பரபரப்பாக இருந்த விமான நிலைய வளாகம் சிறிது நேரம் அமைதி நிலவியது.
- மாரி கண்ணன், மதுரை
இது நேற்று நடந்த கூத்து! மதுரை என்றாலே வெட்டி அராத்து என்ற கெட்ட பெயரை தமிழ் சினிமா உருவாக்கி விட்டதை இந்த துபாய் ரிடர்ன் ஆசாமிகள் மேலும் உறுதிப்படுத்துகிற மாதிரி நடந்து கொள்வது, ஒரு மதுரைக்காரனாக என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
இன்று மதுரை விமானநிலையத்துக்கு வந்திறங்கிய இரண்டாவது பேட்ச் 155 துபாய் ரிடர்ன் ஆசாமிகள் ரகளையில் இறங்கவில்லையாம்! இந்தச் செய்திக்காக சந்தோஷப்படுவதா, தலையில் அடித்துக் கொள்வதா என்றே எனக்குப் புரியவில்லை. அதனால் ஆறுதல் தேடக் கொஞ்சம் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து விட்டேன்!
சாண்டில்யனைப் போல சரித்திரக்கதை தமிழில் சொன்னவர் உண்டோ? என்று கேட்டிருந்த பதிவில் வந்த முதல் 3 பின்னூட்டங்கள்:
சாண்டில்யனைப் போல சரித்திரக்கதை தமிழில் சொன்னவர் உண்டோ? என்று கேட்டிருந்த பதிவில் வந்த முதல் 3 பின்னூட்டங்கள்:
உண்மை. சங்க இலக்கியம் அக நானூறு, புறநானூறு இதெல்லாம் படித்தால் புரிவதில்லை. எனவே ஓடத்தான் தோன்றுகிறது.
ReplyDelete
புத்தகமாகவே வாங்கி கொள்கிறேன் ஸார்... கணினியில் இறக்கி வைத்தால் எக்காலத்திலும் படிக்க மாட்டேன்! புத்தகமாக இருந்தாலாவது அவ்வப்போது படிக்கலாம்!
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்!
Deleteபுறநானூற்றுச் சிறுகதைகள் பக்கங்கள் 192 தமிழ்ப்புத்தகாலய வெளியீடாக வந்தது விலை ரூ 55/ ஆனால் புத்தகம் கிடைப்பது அரிது. நூலகங்களில் கிடைப்பதும் சந்தேகமே தமிழ் இணைய நூலகத்தில் தரமான pdf கிடைக்கிறது. கணினியில் படிப்பது சிரமமே இல்லை. அனுப்பி வைக்கிறேன்.
நன்றி ஸார்... பெற்றுக்கொண்டேன்.
Delete