காங்கிரஸ் சார்பு ஊடகக்காரரான சுவாதி சதுர்வேதி NDTV தளத்தில் இன்றைக்கு எழுதியிருக்கிற செய்திக் கட்டுரை சோனியாG யின் பிடிமானம் காங்கிரஸ் கட்சியில் சுத்தமாகத் தொய்ந்துபோய்விட்டதாகக் குறை சொல்கிறது. ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை உதறிவிட்டு பிஜேபிக்குப் போய்விட்டதில் இவருக்கும் பர்கா தத் போன்றவர்களுக்குமே கூட, காங்கிரஸ் கட்சி இனியும் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாகப்போய் விட்ட மாதிரியான தொனி செய்தியில் வெளிப்படுகிறது. வருகிற ஏப்ரலில் காலியாகும் 50 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில், சோனியா & கோ தடுமாறுவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிடுகிறார். As nominations drew to a close yesterday, the big takeaway was that the Congress party has been snubbed by its ally, Lalu Yadav's RJD, and the old guard continues to call the shots என்ற ஒருவரியே சாரம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா ஒருவர் மட்டும் இன்றைக்கு ஏழு மாத வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். காஷ்மீர் பகுதியில் அமைதி தொடர்கிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். படிப்படியாக மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இங்கே ரங்கராஜ் பாண்டே மாதிரியான தேசியப் பார்வை கொண்ட ஊடகக்காரர்களுக்குமே கூட ரஜனிகாந்த் நேற்றைக்குப் பேசிக் குழப்பியதுதான் பிரதானமான செய்தியாகத் தெரிகிறது என்பது தமிழகத்தின் தனித்துவமான தலையெழுத்தோ? வீடியோ 32 நிமிடம். பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் சாய்ஸ்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment