சேகர் குப்தா இந்த 24 நிமிட வீடியோவில் என்னதான் சொல்ல வருகிறார்? நிஜாமுதீன் தர்காவில் கூடிய கூட்டமே இந்தியாவில் கொரோனா பரவுவதற்குக் காரணமாக இருந்தது என்பது இங்கே அரசல்புரசலாக எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்!நம்மூர் ரங்கராஜ் பாண்டே கூட ஒரு ஒன்றரை மணிநேர வீடியோவில் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார் என்பதை அப்புறம்தான் பார்த்தேன்.
உலகின் பெரும்பாலான நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் சீனாவின் அன்பளிப்புத்தான் என்று கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் வெளியே கசிய ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்கர்கள் சீனா வைரஸ், வூஹான் வைரஸ் என்று சொல்வதை சீனா கடுமையாக எதிர்த்தாலும், சீனாவின் கைவரிசை இந்த வைரஸ் தொற்றின் பின்னாலிருப்பதை மறைக்க முடியவில்லை. கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த 28 நிமிட வீடியோவில் கொரோனா விபரீதம் எப்படி சீனாவிலிருந்து பரவியது என்பதைத் தொகுத்துச் சொல்கிறார். கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள்.
//Blogger இல் பதிவெழுதுவதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிற மாதிரித் தெரிகிறது. கொஞ்சம் தடுமாற வேண்டியிருக்கிறது. நேற்றுவரை படங்கள், யூட்யூப் வீடியோக்களை சேர்க்க முடிந்த மாதிரி, இன்று சேர்க்க முடியவில்லை. // இப்படி முதலில் சொல்லியிருந்ததில் ஒரு சின்னத்திருத்தம், எப்படி என்பதைக் கற்றுக் கொண்டாயிற்று
மாற்றங்கள் நிரந்தரமானவை. தவிர்க்கமுடியாததையும் கூட! கற்றுக்கொள்ளத் தவறுகிறவர்கள், தனிமனிதர்களோ, ஒரு சமுதாயமோ, மதப்பிரிவோ எதுவானாலும் காலாவதியாகிப் போய்விட வேண்டியதுதான் என்பதை நினைவுபடுத்துகிற மாதிரி இன்றைய வீடியோ பகிர்வுகள் இருக்கின்றன.
மீண்டும் சந்திப்போம்.
//நிஜாமுதீன் தர்காவில் கூடிய கூட்டமே இந்தியாவில் கொரோனா பரவுவதற்குக் காரணமாக இருந்தது என்பது இங்கே அரசல்புரசலாக எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்//
ReplyDeleteஎன்ன சொல்ல... அறியாமல் செய்தார்களா? அறிந்தே செய்தார்களா?
அரசு சொன்னால் நாங்கள் கேட்கவேண்டுமா என்ன என்கிற வீம்புடன் செய்தார்கள் என்று வைத்துக் கொள்ளலாம் ஸ்ரீராம்!
Delete