Showing posts with label கொரோனா. Show all posts
Showing posts with label கொரோனா. Show all posts

Saturday, May 2, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

இன்றைக்குப் பார்த்த செய்திகளில் முக்கியமானதாக எனக்குப் படுவது #MakeChibaPay என்ற ஒற்றை முழக்கத்துடன் சில நாடுகள் முன்னெடுத்திருக்கிற சில விஷயங்கள்தான்! சீனா தன்னுடைய ஆதிக்கவிஸ்தரிப்புக் கனவுகளில்  நிறையவே தப்புக்கணக்குப் போட்டதுதான் மூலகாரணம், nCov 19 வைரஸ் சீனாவின் கனவுகளை மொத்தமாகவே முடமாக்கிவிடும் போலத்தான் நிலவரம் இருக்கிறது.

   

இந்தியா இந்தவிஷயத்தில் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது உசிதம்தானா? கேள்வி கேட்கலாம் தான்! ஆனால் பதில் சொல்வாரைத்தான் காணோம்! சீனாவிலிருந்து வளர்ந்த  நாடுகள் பலவும் தங்களுடைய தொழிற்சாலைகளை மூடிவிட்டுவெளியேறத் தயாராகி வருவதில் இந்தியாவுக்கு ஆதாயம் என்று பேசப்பட்டவை கூட வெறும் ஊகங்களாக மட்டுமே நின்று போயின. சீனாவை விட்டு வெளியேறும் உற்பத்திக்கூடங்களில் பெரும்பாலானவை வியட்நாமைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. இன்றைக்கு உலகின் மிக மலிவான 
உற்பத்திக்  கூடமாக இருக்கும் சீனாவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியாவை கொண்டுபோய் வைக்கிற அளவுக்கு இந்தியத் தொழிலதிபர்கள் எவரும் தயார் நிலையில் இல்லை. அரசின் வரிச் சலுகைகளில் மட்டுமே ஒட்டுண்ணிகளாக உயிர்வாழப் பழகியவர்களிடம் புது முயற்சிகள், தயாரிப்புக்கள் என்று சந்தைக்குத் தகுந்தபடி மாறுங்கள் என்று சொன்னால் எப்படி? குறைந்தபட்சம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் கூடத் தங்களை புதுப்பித்துக்கொள்ள, உளநாட்டிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்  தயாராக இல்லாத ஒரு தொழில்துறையை என்னவென்று மதிப்பிடுவீர்கள்?  சீனாவும் இன்னும் பல நாடுகளும் முன்னெடுத்த RCEP பிராந்திய அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கி கொண்டது இந்தியத் தொழில்துறை இன்னமும் மாற்றத்துக்குத் தயாராக இல்லை என்பதனால் தான் என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக்கொள்ள வேண்டி வருகிறது. இப்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியிருக்கிற நெருக்கடி பலபுதிய வாய்ப்புக்களையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. 


இந்தக்கூத்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில்தான்! 

இன்றைக்கு படித்ததில் மிகவும் பிடித்தது: 

குட்டி தமிழ்வாணன்

ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார். எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார். கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

Worst Arrogance. Thinking too much of oneself. Superiority complex.

அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.

தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.

The advise you tell others is the advice you need to follow.

இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.

’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர்  ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.

அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .

அடுத்த கண்ண தாசன் இதழில் மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

வலையெழுத்து எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றும் R P ராஜநாயஹம் எழுத்தே சாட்சி.

மீண்டும் சந்திப்போம்.  
  
   

Sunday, April 26, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

நேற்றைக்குப் பார்த்த வீடியோக்களில் சாணக்யா தளத்தில் பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று குறித்த பல புதிய தகவல்களைச் சொல்லும் 38 நிமிட வீடியோவும் ஒன்று. எப்படி வூஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்தப் புதிய 
கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. எப்படிப் பரவியிருக்கக் கூடும் என்ற பல புதிய தகவல்கள் இந்த உரையில் இருக்கிறது.
 
 

ரவீந்திரன் துரைசாமி போன்ற அரசியல் விமரிசகர்களுடன் பேசிப் பேசி ஆதன் தமிழ் மாதேஷுக்கும் கூட அகில இந்திய அரசியல் பற்றி பேசுகிற ஆசை வந்துவிட்டது போல! தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்கு பேசக்கூடியதாக எந்தவொரு அசைவும் இல்லை என்பதால் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் பற்றி மாதேஷ் கேள்வி கேட்க ரவீந்திரன் துரைசாமி தன்னுடைய எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனைச் சொல்கிற காமெடிக் கொடுமையையும் பார்த்தேன்.


வீடியோ 25 நிமிடம். கொரோனா காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடப்பதில் பொழுதுபோக்கச் சிறந்த காமெடியாக இந்த விவாதத்தை சிபாரிசு செய்கிறேன்.

இன்றைக்குப் படித்ததில் பிடித்ததாக 

மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை டி.வி. பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், விளம்பர வருமானம் இல்லை. அதேபோலதான், டிஜிட்டல் மீடியாவிலும் பார்வையாளர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விளம்பர வருவாய் இல்லை.

இந்த நிலைமையில், இந்தியாவில் புகழ்பெற்ற பல ஊடகங்கள் ஊதியவெட்டு, ஆட்குறைப்பு என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு சிக்கலில்லை. 5 முதல் 7.5 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்குவோருக்கு 10% சம்பள வெட்டு. 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15% சம்பள வெட்டு. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20% சம்பள வெட்டு… என்று போகிறது.

’’தற்போதைய நிலைமையில் நாள் ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக’’ குறிப்பிடும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, ஆண்டு ஊதியம் 6 லட்சம் வரை வாங்குவோருக்கு சம்பள வெட்டு செய்யவில்லை. அதைவிட அதிக ஊதியம் வாங்குவோருக்கு 5% முதல் 15% சதவிகிதம் வரை ஊதியவெட்டை அறிவித்துள்ளது.

News Nation Network நிறுவனம், தனது இங்கிலிஷ் டிஜிட்டல் டீம் 15 பேரை மொத்தமாக வேலையை விட்டு அனுப்பி, அந்த பிரிவையே கலைத்துவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போலவோ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போலவோ இவர்கள் அதிக ஊதியம் பெற்றவர்கள் அல்ல. பெரும்பாலும் 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர்கள். அந்த வேலையும் போய்விட்டது.

புகழ்பெற்ற டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் ஒன்றான The Quint, தனது 45 ஊழியர்களை காலவரையற்ற; ஊதியமற்ற கட்டாய விடுப்பில் அனுப்பியிருக்கிறது. இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு மீண்டும் வேலை வழங்கப்படலாம். அது அப்போதைய சூழலை பொருந்தது. இப்போதைக்கு வேலை இல்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின், ஞாயிறு இணைப்புகளில் ஒன்றான The Life பிரிவில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

தி இந்து குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி…. ஆண்டு ஒன்றுக்கு… 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 8%, 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு 12%, 25 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 16%, 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20%, 35 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கு 25% என்ற ஊதிய வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களின் நிலைமை தெரியவில்லை. நிச்சயம் அங்கும் இத்தகைய கெட்டசெய்திகளை எதிர்பார்க்கலாம்.

இதை எழுதுவதற்குத்தரவாக இந்தச் சுட்டியில் உள்ள செய்தி 

மீண்டும் சந்திப்போம்.   

Wednesday, April 15, 2020

சீனக்கம்யூனிஸ்ட் கட்சி வைரஸ் (Covid-19) சீனாவில் பரவும் இரண்டாவது அலை!

சீனாவில் இருந்து பரவிய வூஹான் வைரஸ் தொற்று அடங்கிவிட்டது போலச் சொல்லப் பட்டாலும், சீனாவில் அதன் இரண்டாவது அலைப் பரவல் அதிகரித்துக் கொண்டு வருவதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னால் சீனாவிலிருந்து கிளம்பிய சார்ஸ் வைரஸ் போல அல்லாமல், கொரோனா வைரஸ் தொற்றின் வீச்சு உலகை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த 18 நிமிட வீடியோவில் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்! பிளாக்கரில் யூட்யூப் வீடியோக்களை இணைக்க முடியாமல் சுற்றலில் விடுவது மறுபடியும் ஆரம்பித்திருப்பதில், இங்கே எழுதுவதைத் தடைசெய்கிற மாதிரியே இருக்கிறது.

 
NTD refers to the novel #coronavirus, which causes the disease COVID-19, as the CCP virus because the Chinese Communist Party's coverup and mismanagement allowed the virus to spread throughout China and create a global pandemic இப்படி எதனால் கொரோனா வைரசை சீனக்கம்யூனிஸ்ட் கட்சி வைரஸ் என்றே சொல்கிறோம் என்பதற்கு ஒரு பொருத்தமான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்கள். பல தேசங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய வரலாற்றைக் கொஞ்சம் துருவிப் பார்த்தோமானால் எந்தக் காலத்திலும் அவை  உண்மையைச் சொன்னதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆச்சரியப் பட எதுவுமில்லை. உலகநாடுகளின் நம்பிக்கையைச் சீனா சுத்தமாக இந்த வைரஸ் தொற்று விவகாரத்தில் இழந்துவிட்டதை அலிபாபா குழுமம் நடத்தும் South Cbina Morning Post தளத்திலேயே ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டதாக வேண்டிய அளவுக்கு நிலைமை முற்றிவருகிறது. சீனத் தயாரிப்புக்களிலிருந்து முற்றொட்டாக விலகி விடும் அளவுக்கு இங்கே எந்தநாடுமே தயார் நிலையில் இல்லை என்றாலுமே கூட, அதற்கான வலுவான அடித்தளத்தை, கொரோனா வைரஸ் தொற்று பரவலில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி உண்மையை மூடி மறைத்த செயல், உருவாக்கிக் கொடுத்துள்ளது.
குறைந்த கூலி, cost cutting,outsourcing என்பன தேய்வழக்காகிப்போகிற காலம் உருவாகி வருகிறது.

மீண்டும் சந்திப்போம்.

    

Wednesday, April 1, 2020

தெரிந்து கொள்ள சில விஷயங்கள்! சொல்வது பானு கோம்ஸ்!

முகநூலில் பானு கோம்ஸ் நமக்குத் தெரியாத, தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு தகவலை எழுதியிருக்கிறார். #பழைமைவாதம் என்பது எவ்வ்ளவு கோரமாக இருக்கும், செயல்படும் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கவே மாட்டோம் என்று இருக்கிற சமயத்தில், இதுமாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் தவறே இல்லை என்று நினைப்பதால் இதை இங்கேயும் பகிர்கிறேன்.

    

ஜமாத் அல் தப்லிக் ..இந்த பெயரே ..இந்திய பொதுமக்களுக்கு மிகவும் புதிதான ஒன்று.

ஜமாத் அல் தப்லிக் என்பது பழமைவாத இஸ்லாத்தையும், தூய்மைவாத இஸ்லாத்தையும் பேசுகிற , பயிற்றுவிக்கிற / கற்றுக் கொடுக்கிற ஒரு கல்ட் இயக்கம். சுருக்கமாக சொல்வதானால்.. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட 7 ஆ ம் நூற்றாண்டு பழமைவாத ஆதி இஸ்லாம் !

இதன்படி.. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தோற்றுவித்தவர்கள் மத ரீதியாக கற்றுக் கொடுத்தவற்றை மட்டுமே பின்பற்றவேண்டும். அணியும் உடை கூட .. கணுக்கால் வரையிலான கால்சட்டை, முட்டி வரையிலான மேல் சட்டை, நீண்ட தாடிதோலினால் ஆன செருப்பு, என்று 7ஆம் நூற்றாண்டில் அவர்கள் அணிந்திருந்த உடை பாணியை மட்டுமே பின்பற்ற வேண்டும். இந்த பழமை + தூய்மைவாதத்தின் சட்டதிட்டபடி ..இதில்..பெண்களுக்கு இடம் கிடையாது.

அரசியல், சமூக பிரச்சினைகள், பொது பிரச்சினைகள் என்று எதிலும் ஈடுபடுத்திக் கொள்வதோ, கருத்து தெரிவிப்பதோ கூடாது. என்பது இந்த இஸ்லாமிய அமைப்பின் நடைமுறை. அமைப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை கூட தவிர்க்க வேண்டும் என்று சில நேரங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மதக் கடமையை மட்டுமே செய்ய வேண்டும். மக்களை ...குறிப்பாக இளைஞர்களை இஸ்லாத்தின் பக்கம் வரவழைப்பதும், பழமைவாத இஸ்லாத்தை பரப்பவுதும் தான் தலையாய கடமை & நோக்கம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான ஒன்றுபட்ட இஸ்லாமிய மக்கள் என்கிற கருத்துருவாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பழமைவாத இஸ்லாமிய அமைப்பு உருவான இடம்... இந்தியா ! இந்தியாவின் Mewat-ல் முகமது இலியாஸ் என்பவரால் 1927-ல் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு நிகழ்வுக்கு பிறகு...மேற்குலக நாடுகள் & ஆசிய நாடுகளில் இருந்த இஸ்லாமிய பயங்கரவாத அச்சத்தினை பயன்படுத்திக் கொண்டு .....தங்கள் ஜமாத் அல் தப்லிக் அமைப்பு அரசியலில் இருந்து விலகி இருந்து அமைதியை மட்டுமே போதிப்பதாக சொல்லிக் கொண்டு ..எளிதாக காலூன்றியது...

இன்று ..இந்த ஜமாத் அல் தப்லிக்-கு ..உலக முழுவதும் கிளைகள் உண்டு. கோடிக்கணக்கில் உறுப்பினர்கள் உண்டு. கிர்கிஸ்தான் நாட்டின் அரசமைப்பு சட்டம் இந்த பழமைவாத இஸ்லாத்தை மட்டும் அங்கீகரித்திருக்கிறது !

இந்த ஜமாத் அல் தப்லிக்-கை சேர்ந்தவர்கள்..உலகம் முழுவதும் ..மத பிரச்சாரகர்களாக... தங்கு தடையின்றி வருடம் முழுவதும் சென்று வருகிறார்கள். 3 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையில் தங்கி இருந்து ..பழமைவாத இஸ்லாத்தை போதிக்கிறார்கள். இவ்வாறு வருபவர்கள்...அந்தந்த இடத்தில் உள்ள தப்லீகிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு நாடுமுழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுப்படுத்துகிறார்கள்.

ஜமாத் அல் தப்லிக்-கை சேர்ந்தவர்கள். அமைப்பையோ.. தங்களையோ வெளிகாட்டிக் கொள்வதில்லை . பொதுவெளியில் அது குறித்து பேசுவதும் இல்லை. பொது சமூக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருக்கிறார்கள். இதனால் பொதுவெளி கவனம் தவிர்க்கப்படுகிறது. இவர்களுக்கென்று ஒவ்வொரு ஊரிலும் மதரஸாக்களை ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஆங்காங்கே இருக்கும் மதரஸாக்களை தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

''நேரடியாக''.. ஜமாத் அல் தப்லிக் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு இல்லை. ஆனால்...இவர்களின் இந்த சமூக விலகலோடு கூடிய மறைவான கட்டமைப்பு .. பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் பிடிக்கும் இடமாக மாற்றி இருக்கிறது என்று உலகநாடுகள் அஞ்சுகின்றன.காரணம்...

1990-...2000 களில்..அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் பலவற்றிலும் நடந்த நடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பல பயங்கரவாதிகள் ...பாகிஸ்தானில் உள்ள ஜமாத் அல் தப்லிக் கூட்டத்திற்கு சென்று வந்ததாக அதன் விசாரணைகள் வெளிப்படுத்தியது.

இதனை தவிர...ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் பேசுகிற அதே சமரசமற்ற பழமைவாத தூய்மைவாத இஸ்லாத்தை தான்..அரசியலற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஜமாத் அல் தப்லிக்-ம் பேசுகிறது. அதனாலேயே...பல பயங்கரவாத அமைப்புகளுக்கும் .. ஆள் பிடிக்கும் இடமாக .. ஜமாத் அல் தப்லிக் -ன் கூட்டங்கள் இருக்கின்றன...என்று அஞ்சுகின்றன உலக நாடுகள்.

இன்று  வைரஸ் தொற்று ...டெல்லியில் இயங்கி வந்த ஜமாத் அல் தப்லிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

#Jamaat_Al_Tabligh #DelhiNizamuddin  என்று பானு கோம்ஸ் எழுதியிருப்பதோடு தரவுகளாக சில இணைப்புக்களையும் கொடுத்திருக்கிறார்   


இரண்டாவது தரவு    2003 ஜூலையில் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி  இவை இரண்டும் பயங்கரவாதத்தொடர்பை வெளிக்கொணர்ந்தவை.
 

நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் விடிகாலை 2 மணிக்கு வந்து சொல்லவேண்டிய விதத்தில் சொன்னபிறகுதான் அவர்களுக்குப் புரிந்ததாம்! பெருமைப்பட்டுக் கொள்கிற விஷயமா? 

மீண்டும் சந்திப்போம்

Tuesday, March 31, 2020

#சீனாவைரஸ் கொஞ்சம் புதிய தகவல்கள்! Blogger சங்கடங்கள்!


சேகர் குப்தா இந்த 24 நிமிட வீடியோவில் என்னதான் சொல்ல வருகிறார்? நிஜாமுதீன் தர்காவில் கூடிய கூட்டமே இந்தியாவில் கொரோனா பரவுவதற்குக் காரணமாக இருந்தது என்பது இங்கே அரசல்புரசலாக எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்!நம்மூர் ரங்கராஜ் பாண்டே கூட ஒரு ஒன்றரை மணிநேர வீடியோவில் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார் என்பதை அப்புறம்தான் பார்த்தேன்.

  

உலகின் பெரும்பாலான நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் சீனாவின் அன்பளிப்புத்தான் என்று கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் வெளியே கசிய ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்கர்கள்  சீனா வைரஸ், வூஹான் வைரஸ் என்று சொல்வதை சீனா கடுமையாக எதிர்த்தாலும், சீனாவின் கைவரிசை இந்த வைரஸ் தொற்றின் பின்னாலிருப்பதை மறைக்க முடியவில்லை.  கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த 28 நிமிட வீடியோவில் கொரோனா விபரீதம் எப்படி சீனாவிலிருந்து பரவியது என்பதைத் தொகுத்துச் சொல்கிறார். கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள்.




//Blogger இல் பதிவெழுதுவதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிற மாதிரித் தெரிகிறது. கொஞ்சம் தடுமாற வேண்டியிருக்கிறது. நேற்றுவரை படங்கள், யூட்யூப் வீடியோக்களை சேர்க்க முடிந்த மாதிரி, இன்று சேர்க்க முடியவில்லை. // இப்படி முதலில் சொல்லியிருந்ததில் ஒரு சின்னத்திருத்தம், எப்படி என்பதைக் கற்றுக்  கொண்டாயிற்று 
 
மாற்றங்கள் நிரந்தரமானவை. தவிர்க்கமுடியாததையும் கூட! கற்றுக்கொள்ளத் தவறுகிறவர்கள், தனிமனிதர்களோ, ஒரு சமுதாயமோ, மதப்பிரிவோ எதுவானாலும் காலாவதியாகிப் போய்விட வேண்டியதுதான் என்பதை நினைவுபடுத்துகிற  மாதிரி இன்றைய வீடியோ பகிர்வுகள் இருக்கின்றன.     

மீண்டும் சந்திப்போம்.  

    

 
 

Friday, March 27, 2020

கொரோனா காமெடிகள்! இன்றைக்கு வாசிக்க எடுத்த புத்தகம்!

கொரோனா வைரஸ் தொற்று பயம் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற இந்த சமயம் கண்ணில் படுகிற சில வீடியோக்கள் சிரிப்பையும் வரவழைக்கிற மாதிரி! அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பது ஒருவகையில் நிஜம் தான் போல!



ஊரடங்கின் போது ஏன் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறாய் ? என்று கேட்கும் காவலர்களிடம் ..
'ஏன் எதற்கு எப்படி எங்கே எப்போ எப்பொழுது' [ pheww] ..என்று துள்ளிக் குதித்து அடுக்குமொழியில் நரம்பு புடைக்க..'முதலமைச்சரை இங்கு வரச்சொல்லு' என்று பேசும் பொடியன்..
'நீ ஓவரா ஆடிக்கிட்டிருக்க' - பெண் காவலர் 
கடைசியில் காவல்நிலையத்தில் வைத்து கையில் பிரம்பால் அடி வாங்கும் போதும்...
பொடியன் : இனி வெளியில் வந்தால் மாஸ்க் போட்டு வருகிறேன். 
ஊரடங்கு வெளிப்படுத்தும் வேடிக்கைகளில் சிறப்பான ஒன்று...
பொடியனிடம் இருக்கும் எனர்ஜி, துறுதுறுப்பு அனைத்தும்.... அண்ணன்களின் அரசியல் மேடைகளில் இருந்தும், தமிழ் சினிமாக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு .. நேர் மறையாக திருப்பிவிடப்பட்டால் ...சிறப்பானதொரு மனிதனாக உருவாகி வருவார்.
பானு கோம்ஸ் இந்த நாம்தமிழர் சவடால் பையன் வீடியோவை மிகவும் ரசித்து எழுதியிருக்கிறார்போல! ஆனால் இதெல்லாம் தனியாகச் சிக்கிக் கொள்கிற ஏப்பை சாப்பைகள் மீதுமட்டும் தானோ? 

இது கர்நாடகாவில்!
தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்க முடியாது  


கொஞ்சம் பயனுள்ளதாகப் பொழுதுபோக்க உதவும் புத்தகங்கள்  இன்றைக்கு வாசிக்க எடுத்துக் கொண்ட புதினம்: 

 நீலரதி - சாண்டில்யன் 


தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக களப்பிரர்கள் ஆண்ட காலம் குறிப்பிடப் படுகிறது. களப்பிரர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்ற செய்திகளே கிடைக்க விடாமல் பிற்கால சைவசமய எழுச்சி இருட்டடிப்பு செய்ததனாலேயே இருண்டகாலமாக சொல்லப்படுகிறது என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. வடுகக் கரு நாடர் என்றே பெரிய புராணம் இவர்களைச் சொல்கிறது. கிபி முதல் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரை இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததாக, வைதீக மதத்தை எதிர்த்தவர்களாகவும், சமண, பவுத்த மதங்களை ஆதரித்தவர்களாகவும் இருந்தார்கள். தமிழ்மொழியை ஆதரிக்காவிட்டாலும் களப்பிரர் காலத்தில்தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பிறந்தன என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

கிபி முதலாவது நூற்றாண்டில் தமிழகம் முழுதையும் ஆண்ட அச்சுத விக்கண்டன் என்கிற அச்சுத விக்கிராந்தன் என்கிற அச்சுத விக்கந்தக் களப்பாளன் ஒருவன் மட்டுமே சாண்டில்யனின் நீலரதி கதையில் வரலாற்றுப் பாத்திரம். கதையில் மற்ற எல்லோருமே கற்பனைப் பாத்திரங்கள் என்பதால், இதை சரித்திரக் கதை என்று வகைப்படுத்த முடியுமா என்பது எனக்குப் புரியவில்லை. கதை கடல்கொண்டதுபோக மீதம் இருந்த புகாரில் ஆரம்பிக்கிறது. நாற்பதை ஒட்டிய  இளமாரன், இருபதுவயதே ஆன உதயகுமாரன் என்ற இருவரிடம் வந்து சேர்கிற நீலரதி என்கிற இளம்பெண் அவளைத் துரத்திவருகிற புத்தமடத் துறவிகள், புத்த மடக் காவலர்கள் என்று விறுவிறுப்பாகக் கதை தொடங்குகிறது. மடத்துக்காவலர் தலைவனைக் கொன்றுவிட்டாள் என்ற குற்றச்சாட்டு நீலரதிமீது. புத்தமடத்தில் நடக்கும் விசாரணையில் அடுத்தடுத்து சில சுவாரசியமான ட்விஸ்ட், அச்சுத விக்கண்டனே விசாரணையை நடத்த வந்துசேருகிறான். அவனிடம் பணிபுரிபவனான இளமாரனிடம் நீலரதியை தனது உறையூர் அரண்மனைக்கு அழைத்துவருமாறு சொல்லி விட்டுப் போகிறான்.

சாண்டில்யன் கதை என்றால் வரலாறு கொஞ்சம், வர்ணனைகள் கொஞ்சம், பாத்திரங்களை அறிமுகம் செய்வதிலிருந்தே திருப்பம், அந்தத் திருப்பத்துக்கு இன்னொரு திருப்பம் என்று தொடர்ந்து கொண்டே போவதில் மயங்குகிற வாசகர் கடைசி வரை அந்த மயக்கத்தில் இருந்து விடுபடுவதே இல்லை என்பதை தனியாகச் சொல்லவேண்டியதே இல்லை. இந்தக் கதையும் அப்படித்தான்! என்ன, நீலரதியின் எகிப்திய பின்னணி, ஐசிஸ் (Isis) என்கிற பெண் தெய்வம் காவல் தெய்வமாக கூடவே இருப்பது என்கிற fantasy  சரித்திரக் க்தைக்குப் பொருத்தமாக இல்லையே என்பது படித்து முடித்த பிறகுதான் உறைக்கிறது! அது போலவே வேறு சில விஷயங்களும்! களப்பிரன் நியாயம் என்று கதை சுபமாக முடிவதில், களப்பிரர்களைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ள முடியவில்லை என்பது பெருங்குறை! போதாக்குறைக்கு கொஞ்சம் நெருடலான பாத்திரப் படைப்பும் சேர்ந்து கொள்கிறது.

ஆனால் படித்து முடிக்கிறவரை இந்தமாதிரிக் குறை எதுவுமே தெரியவில்லை என்பது சாண்டில்யனின் கதை சொல்கிற திறம்!       
           
குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்த நீலரதி 1985 இல் பாரதி பதிப்பக வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. 57அத்தியாயங்கள். 420+ பக்கங்கள்   

மீண்டும் சந்திப்போம். 

Tuesday, March 24, 2020

ஜெயமுண்டு! #கொரோனா பயம் வேண்டாம் மனமே!

கரோனா தொற்று! ஓடவும் வேண்டாம், ஒளியவும் வேண்டாம்! இப்படிப் பதினைந்து நாட்களுக்கு முன்பு இந்தப் பக்கங்களில் எழுதியதைத்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் சொந்த ஊர்ப்பக்கம் இன்று கிளம்பிய பெருங்கூட்டமும், தள்ளுமுள்ளுகளும் ஒரு மருத்துவ நெருக்கடியை மனவுறுதியுடன் எதிர்த்து வெல்கிற இயல்பைத் தமிழகத்தில் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க உதவுகிற KIT இந்தியாவிலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது விலை வெறும் 80000 ரூபாய்கள் தான்! ஒருவரைச் சோதனை செய்ய ஆகிற செலவு ரூ.1500/- க்குள் தான் ஆகும் என்கிற செய்திகள் வந்து கொண்டு இருக்கும் அதே நேரம், தேவையில்லாத பயம் ஜனங்களைத் தவறுக்கு மேல் தவறாகத் தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறதோ? 

 

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு மறுபடியும் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், சுகாதார அமைச்சகமும் என்ன தான் நிலைமையை சமாளிக்க சுறுசுறுப்பாக இயங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஜனங்களுடைய பங்களிப்பில்லாமல் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்காக   இன்று நள்ளிரவிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஜனங்களும் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்திலிருந்து விடுபட முடியும்.   


அதே வேளையில் குறுகிய உள்நோக்கம் கொண்ட கட்சி அரசியல் செய்கிற நேரமில்லை இது என்பதை இங்கே இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ், கழகங்களுக்கும் யார் எடுத்துச் சொல்வது?  

கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பொது இடங்களில் சுற்றியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் 11-ம் தேதி கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். அப்போதே அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், கால்பந்து போட்டி நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார். இரண்டு எம்எல்ஏ.க்களை சந்தித்து அவர்களோடு கைகுலுக்கி ஆரத்தழுவி பேசி இருக்கிறார். அதன் பிறகு மார்ச் 14-ம் தேதி அவருக்கு காய்ச்சல் அதிகமாகி இருக்கிறது. காசர்கோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதன் பிறகே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். இதற்கிடையில், கோவிட்-19 காய்ச்சலோடு குறைந்த பட்சம் 3000 பேரை அவர் சந்தித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மல்லுதேச துபாய் ரிடர்ன் ஆசாமி ஒருவருடைய பொதுநல சேவையை இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி இன்றைக்குச் சொல்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருப்பவர்கள் இவர்மாதிரி வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தான் என்பது என்னமாதிரியான சமூகப் பொறுப்புணர்வு? 


ஈரோட்டுக்கு கொரோனா வந்தவிதம் இதே போலத்தான் என்பது நினைவிருக்கிறதா? இப்போது சேலத்துக்கும்,


ஜெயமுண்டு பயமில்லை மனமே என்கிற பாரதியார் கவிதை வரியிலிருந்துதான் பதிவுக்குத் தலைப்பு உருவானதே! பதிவை முடிப்பதும் கூட பாரதியார் கவிதை வரிகளோடுதான்என்றால் பொருத்தமாக இருக்கும்!


தேடி உன்னை சரணடைந்தேன் தேச முத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
 பாடி உனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்

கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் களைவாய்       

மீண்டும் சந்திப்போம்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)