NTD refers to the novel #coronavirus, which causes the disease COVID-19, as the CCP virus because the Chinese Communist Party's coverup and mismanagement allowed the virus to spread throughout China and create a global pandemic இப்படி எதனால் கொரோனா வைரசை சீனக்கம்யூனிஸ்ட் கட்சி வைரஸ் என்றே சொல்கிறோம் என்பதற்கு ஒரு பொருத்தமான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்கள். பல தேசங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய வரலாற்றைக் கொஞ்சம் துருவிப் பார்த்தோமானால் எந்தக் காலத்திலும் அவை உண்மையைச் சொன்னதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆச்சரியப் பட எதுவுமில்லை. உலகநாடுகளின் நம்பிக்கையைச் சீனா சுத்தமாக இந்த வைரஸ் தொற்று விவகாரத்தில் இழந்துவிட்டதை அலிபாபா குழுமம் நடத்தும் South Cbina Morning Post தளத்திலேயே ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டதாக வேண்டிய அளவுக்கு நிலைமை முற்றிவருகிறது. சீனத் தயாரிப்புக்களிலிருந்து முற்றொட்டாக விலகி விடும் அளவுக்கு இங்கே எந்தநாடுமே தயார் நிலையில் இல்லை என்றாலுமே கூட, அதற்கான வலுவான அடித்தளத்தை, கொரோனா வைரஸ் தொற்று பரவலில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி உண்மையை மூடி மறைத்த செயல், உருவாக்கிக் கொடுத்துள்ளது.
குறைந்த கூலி, cost cutting,outsourcing என்பன தேய்வழக்காகிப்போகிற காலம் உருவாகி வருகிறது.
மீண்டும் சந்திப்போம்.
இதில் இந்த ஆட்கொல்லி வைரஸ் இரண்டாவது சுற்று கிளம்புகிறது என்பது பயமுறுத்தும் செய்தி. சில நாட்களுக்கு முன்னரேயே இந்தச் செய்தி படித்தேன். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டாலொழிய விடிவில்லை போல...
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்!
Deleteதடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகள் முயற்சித்துக் கொண்டுதானிருக்கின்றன. ஆனால் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடைய குறிக்கோள் கொள்ளை லாபம் சம்பாதிப்பது மட்டுமே, மனித உயிர்களைக் காப்பாற்றுவதெல்லாம் அப்புறம் தான் என்பதை மறந்துவிடலாகாது. The Hades Factor நாவல் கதைச் சுருக்கம் இந்தப்பக்கங்களிலேயே நினைவுபடுத்திக் கொள்ளக் கிடைக்கிறது.
Covid 19 விஷயத்திலும் அதேமாதிரித் தியரி ஒன்று உலவுகிறது. அதாவது சீனர்களிடம் ஏற்கெனெவே இதற்கான மாற்று மருந்து இருப்பதாக.நம்பகமானதுதானா என்று தெரியவில்லை.