சீன அரசியலைப்பற்றியோ சீன அதிபராக இரண்டாவது முறையாகவும் தொடருகிற ஜி ஜின்பிங் பற்றியும் நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? என்ன கிண்டலா? பேசினால் காங்கிரசைப்பற்றியே பேசுவது இல்லாவிட்டால் ஏதாவது சீனா கொரியா அமெரிக்கப் பூச்சாண்டி காட்டுவது! இதெல்லாம் சரியில்லை என்று முனகுகிறீர்களா? ஆகஸ்ட் கடைசிநாளன்று எழுதிய பதிவு நினைவிருக்கிறதா?
இன்றைக்கு நாளிதழ்களில் முக்கிய செய்தியாகிவரும் ஹாங்காங் ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், 22 வருடங்களுக்கு முன்னால் பிரிட்டிஷ்காரர்கள் வசமிருந்த ஹாங்காங், கம்யூனிஸ்ட் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதைக் கொஞ்சம் மேலே உள்ள வீடியோவில் (10 நிமிடம்) பார்க்கலாம். ஹாங்காங் மக்களுடைய உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப் படும் என்ற வாக்குறுதி One Country Two Systems முழக்கத்தோடு ஆரம்பமான ஹாங்காங் இன்றைக்கு ஏன் கலவர பூமியாக ஆகிக்கொண்டிருக்கிறது?
Umbrella Movement என்று 2014 இல் ஆரம்பித்த போராட்டங்கள் இன்று வரை தொடர்வது ஏன்? இந்த 25நிமிட வீடியோ செய்திக் கதை கொஞ்சம் விவரிக்கிறது. 2 வருடப்பழசுதான்! ஆனால். வளவளக்காமல் சொல்கிறது என்பதால் இங்கே.
இதுபோல, நம்மைச்சுற்றி நடக்கிற செய்திகளை, அவை நம்மை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் பேசுவதற்காகவே தனியாக ஒரு வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது ஞாபகம் வருகிறதா?
அந்தப்பக்கங்களுக்கும் வாருங்களேன்! Tianxia உலகத்தின் நட்டநடு நாயகம் என்ற பொருளில், அமெரிக்காவும் சீனாவும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற செய்திகளைக் கொஞ்சம் வாசிக்கலாம். அக்கம் பக்கம்! என்ன சேதி! என்று தெரிந்து கொள்ளலாம்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment