கர்நாடக அரசியல் நிறையவே வித்தியாசமானது. ஊழல் சம்பாத்தியத்தை அங்கே ஜனங்கள் ஒரு பெரிய குற்றம் என்று நினைப்பதில்லை என்பது அங்கே ஆரம்பகாலம் தொட்டே நிலவி வரும் ஒருவித கலப்படமான அரசியல் கலாசாரம். எல்லாவிதமான நிழல் சமாச்சாரங்களிலும், சமீபத்தைய Coffee Day சித்தார்த்தா தற்கொலை வரை, சம்பந்தப் பட்டிருப்பதாகச் சொல்லப்படும் DK சிவகுமார் கைது செய்யப்பட்டிருப்பதில் கர்நாடக பிஜேபி வெளிப்படையாகத் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் எங்கே இந்தக் கைது நடவடிக்கையால் DK சிவகுமார் தியாகி, ஹீரோ ரேஞ்சுக்குப் போய்விடுவாரோ என்று ஒரு பக்கம் அச்சத்தில் வாயை மூடிக் கொண்டிருக்கிற பரிதாபம் தான் இந்திய அரசியலின் காமெடி கலந்த ட்ராஜெடி!
DK சிவகுமார் விநாயக சதுர்த்தி அன்று தன் தந்தையை நினைத்து அஞ்சலிசெய்யக்கூட விடவில்லையென்று உருகிக் கண்ணீர் விட்டதும், ஒக்கலிகர் சமுதாய ஆதரவை கணிசமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பதும் (தேவே கவுடாவும் ஒக்கலிகர் தானென்றாலும் அவர் கட்சிக்கு ஆதரவென்பது ஒரு குறிப்பிட்ட குறுகிய பகுதிக்குள் சுருங்கி விடுகிறது) நயமாகவும் பயமுறுத்தியும் காரியம் சாதிக்கிற அவருடைய சாதுர்யம், எல்லாமாகச் சேர்ந்து கர்நாடக முதல்வர் நாற்காலியைக் குறிவைத்தே செய்யப்படுவது சிதம்பர ரகசியம். #DirtyTricks இல் கைதேர்ந்தவராக DK சிவகுமார் இருப்பது தான் அவருடைய பலமும் பலவீனமும்!
கைது செய்யப்படுகிற தருணங்களில் எல்லாம் அரசியல் வாதிகளுக்கு நெஞ்சுவலி முதல் எல்லாக் கோளாறுகளும் முன்னுக்கு வந்துவிடும் என்பதில் சிவகுமார் மட்டும் விலக்கா என்ன?
கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராகுல் காண்டி முதல் கே சி வேணுகோபால் வரையில் எல்லோரும் வழக்கமாகச் சொல்வதுதான்! நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்ததற்கா கைது? ஹவாலா முதல் மணி லாண்டரிங் என்று சட்டவிரோதச் செயல்பாடுகளில் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில்தானே கைது செய்திருக்கிறார்கள்? நீதிமன்றம் கூட இன்றைக்கு செப்டெம்பர் 13 வரை அமலாக்கத்துறை கஸ்டடியில் சிவகுமார் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டதே!
All Roads Lead to Rome என்கிறமாதிரி சிதம்பரமோ சிவகுமாரோ விவகாரங்கள் இட்டுச் செல்வது இத்தாலி மம்மி வகையறாவிடம் தான் என்பதால் கூவல் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதுதான்! கர்நாடக ஊடகங்கள் கூவுவது நம்மூரை விட மிகமோசமாக இருக்கிறது என்பதில் சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment