இன்றைக்கு கவனிக்கவேண்டிய முக்கியச் செய்தியாக நரேந்திர மோடி அரசு 2.0 முதல் நூறு நாட்களில் சாதித்ததென்ன, வெளியுறவு விவகாரங்களில் என்ன முன்னேற்றம், வெளியுறவுக்கொள்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்கள் இப்படி முக்கியமான விஷயங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஊடகங்களுக்கு விளக்கிய நிகழ்வின் காணொளி. அமைச்சர் உரையும் நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலுமாக 71 நிமிடம்.
தனது வெளியுறவுத்துறை ரீதியான 100 நாள் சாதனை குறித்து புதுடில்லியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது.அண்டை நாடான பாக். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அது வரை நமக்கு அந்நாட்டிற்கெதிரான சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஒரு நாள் நிச்சயமாக மீட்டெடுப்போம். மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன
பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் பதவிக்கு வந்த நாட்களில் இருந்தே இந்திய வெளியுறவுத்துறை கொஞ்சம் சுறுசுறுப்பாக, முதிர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்த விதத்தை Consenttobe....nothing! தளத்திலும் அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்திலும் தொடர்ந்து பகிர்ந்து வருவதை நண்பர்கள் வாசித்திருக்கலாம்! Neighbourhood First, Act East என்று மிகவும் முக்கியமான விஷயங்களை முந்தைய காலங்களில் நினைத்துப் பார்த்தது கூட இல்லையென்றே சொல்லிவிடலாம்! முந்தைய காலங்களில் நமது வெளியுறவுக்கொள்கை என்பது பெரும்பாலும் பாகிஸ்தானை மையப்படுத்தியே இருந்தது. ஒரு வலிமையான பொருளாதாரமாக இந்தியா வளர்ந்துவரும் சூழலில் வெளியுறவு விவகாரங்களில் முதிர்ச்சியோடு விரைந்து செயல்படுகிற தன்மையோடு வெளியுறவுத்துறை மாறியாக வேண்டியிருந்தது. ஒரு உறுதியான அரசியல் தலைமை இருக்கும்போது, அதற்குத் தகுந்தமாதிரி வெளியுறவுத் துறையும் தன்னைத் தகவமைத்துக் கொண்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
தனது வெளியுறவுத்துறை ரீதியான 100 நாள் சாதனை குறித்து புதுடில்லியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது.அண்டை நாடான பாக். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அது வரை நமக்கு அந்நாட்டிற்கெதிரான சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஒரு நாள் நிச்சயமாக மீட்டெடுப்போம். மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன
தமிழர்களுக்கு இந்த அளவு செய்தி சொன்னாலே போதும் என்று தினமலர் நினைக்கிறது போல. தினத்தந்தி மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன என்று ஒரு வரி சேர்த்துச் சொல்லி இருப்பதைத் தவிர வேறு தமிழக ஊடகங்களில் இதுவரை செய்தியைக் காணோம்.
இந்தக் காணொளியில் அமைச்சர் ஜெய்சங்கர் சுருக்கமாக நூறு நாள் சாதனையாகச் சொல்லிவிட்டு, நிருபர்கள் கேள்விக்கு விரிவாக அண்டைநாடுகளுடனான உறவு, சீனா, பாகிஸ்தான், அப்புறம் அமெரிக்காவுடனான உறவுகள் கடந்த 20 ஆண்டுகளை விட எவ்வளவு முன்னேறியிருக்கின்றன என்று விரிவாகவே பதில் சொல்லியிருக்கிறார்.
வெளியுறவு விவகாரங்களில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளியாகப் பரிந்துரை செய்கிறேன்.
மீண்டும் சந்திப்போம். .

No comments:
Post a Comment