Thursday, September 5, 2019

செக்கிழுத்த செம்மல்! ஷோக்குப்பேர்வழி சீனாதானா!

இன்று செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படுகிற, தேச விடுதலைக்காகப் போராடிய வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய பிறந்தநாள். சொந்தநலன்களைத் தியாகம் செய்து விடுதலைப்போரில், ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்ட கொடுமையைத் தாங்கிக் கொண்டவர்! வ உ சியைப் பற்றி கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய ஒரு சிறுபகுதியை இந்தப் பக்கங்களில் முன்னர் பார்த்திருக்கிறோம்.   


நாட்டுவிடுதலைக்காகப்போராடி வெள்ளையரால் அடக்கு முறைக்கு ஆளான தியாகிகளுக்கும், இப்போதிருக்கிற சோனியாG  காங்கிரசுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இன்று திஹார் சிறை சென்றிருக்கும் செட்டிநாட்டு ஜாமீன் மோசடிப்பேர்வழி பற்றிப் பார்க்கலாம்.

  
காசுக்காரக் காங்கிரஸ் வக்கீல்களுடைய வாதங்களையும் மீறி 15 நாள் நீதிமன்றக்காவலில் சீனாதானா சகல வசதிகளோடு திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்கிறது NDTV 



சுப்ரமணியன் சுவாமி சந்தோஷமாக உணர்கிறார் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே! ஆனால்  கோர்ட்டில் எடுபடாத காரணங்களை எல்லாம் இங்கே டிவி முன்னால் ஜம்பமாகப் பேசுகிறார் அபிஷேக் மனு சிங்வி! சரி!


இதற்கு முன்னால்  கோர்ட் வளாகத்திலேயே அஞ்சுவிரலைக் காட்டி சீனாதானா நிருபர்களுக்கு என்னமோ சொன்னாராமே! சதீஷ் ஆசார்யா கரீக்ட்டா ஞாபகம் வைத்து, அஞ்சுல ரெண்டு போக மூணு மிச்சமா என்று கணக்குப் போடுகிறார்! அந்த மூணு  யார் யாராயிருக்கலாம்? ஏதாச்சும் புரிஞ்சுதா? 

சிறைக்கு போவது பற்றி எனக்கு வருத்தமில்லை ஆனால் நாட்டின் பொருளாதாரம் இவளவு சீரழிந்த நிலையில் இருக்கும்போது ஒன்றும் செய்ய விடாமல் இப்படி சிறையில் அடைக்கிறார்களே என்பதை நினைக்கும் போது என் கண்ணில் ரத்தம் தான் வருகிறது
திஹார் சிறை செல்கிறார் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து, வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில், திஹார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று (செப்.,5) முடிவடைந்தது. இதனையடுத்து அவர் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும் , ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த வழக்கில், பொருளாதார குற்றங்கள் நடந்துள்ளன. சிதம்பரத்தின் ஜாமின் மனுவை விசாரிக்காத வரை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி என்றார்.
இதன்பின்னர், சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது. சாட்சிகளை கலைக்கவில்லை. எனவே, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது. ஆதாரத்தை கலைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டிற்கு சிபிஐ ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. நீதிமன்ற காவலுக்கு அனுப்பினால், அது அவரை தொல்லைக்கு உட்படுத்துவதாகும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் சரண் அடைய தயாராக உள்ளார். வேண்டும் என்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யட்டும். நீதிமன்ற காவலுக்கான காரணத்தை சிபிஐ முன் வைக்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் 15 நாள் விசாரணை நடத்தினர். என வாதிட்டார்.
இதனை விசாரித்த பின்னர் நீதிபதி, வரும் 19ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், திஹார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, திஹார் சிறையில் படுக்கை, மேற்கத்திய கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனை ஏற்று கொண்ட கோர்ட், சிதம்பரத்திற்கு திஹார் சிறையில் தனி அறை வழங்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.
இதன் பின்னர், அமலாக்கத்துறையிடம் சரண் அடைய தயாராக உள்ளதாக , சிதம்பரம் தரப்பில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு குறித்து செப்., 12க்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இவ்வளவுதான் கேட்டாரா அல்லது வேறு சௌகரியங்களுமா? #TheNationantsToKnow 


இந்த முத்தாய்ப்போடு பதிவை நிறைவு செய்யலாம்!

மீண்டும் சந்திப்போம். 

   

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)