சமூக வலைதளங்கள் வளர்வதில் கட்டுக்கு மீறிப் போய்க் கொண்டே இருப்பதில், கட்டுப்படுத்த வேண்டும், சகட்டு மேனிக்கு கருத்து கந்தசாமிகள் உருவாகாமல் முறைப் படுத்தவேண்டும் என்றெல்லாம் கூக்குரல்கள் வெவ்வேறு பக்கங்களில் இருந்து எழுவது நமக்குத் தெரியும்! வலைதள தூதர்கள் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலைத் தூண்டியது என்றே சொல்ல வேண்டும்!
முதலில் பானு கோம்ஸ்! சமூக வலைதளங்களின் பாசிடிவான விஷயங்கள், எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்பதை இந்த 18 நிமிட வீடியோவில் சொல்கிறார். சுருக்கமாகச் சொன்னாலும் ஒரு நல்ல அறிமுக உரை
நமது பார்வைக்கு வரும் செய்திகளில் எத்தனை போலிகள். விஷமத்தனமானவை என்பதை அறிந்திருக்கிறோமா? Fake News உருவாகும் விதம், உள்நோக்கங்கள் இவைகளைக் குறித்து ஹரன் பிரசன்னா இந்த 36 நிமிட வீடியோவில் சொல்கிறார். Fake News பின்னணியில் உள்ள அரசியலைக் குறித்து கொஞ்சம் உபயோகமான தகவல்கள் சொல்கிறார்.
நிகழ்ச்சி நடப்பதோ சென்னையில். நானிருப்பதோ மதுரை. நிகழ்ச்சியைப் பற்றி, பங்கேற்பாளர்கள் என்ன பேசினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? இங்கே தான் இணையமும் யூட்யூப் தளமும் சேர்ந்து கை கொடுக்கிறது. இணையத்திலும் யூட்யூபிலும் நல்லதும் கெட்டதுமாகக் கலந்தே கிடைப்பதை புரிந்து கொண்டு எது வேண்டுமென்று தேர்ந்தெடுப்பது நம் கைகளில் தான் இருக்கிறது. இங்கே யூட்யூப் தளத்தில் பானு கோம்ஸ், ஹரன் பிரசன்னா, அரவிந்தன் நீலகண்டன் மூவர் பேசியதும் கிடைத்தது. வானதி சீனிவாசனுடன் பார்வையாளர்கள் நடத்திய கலந்துரையாடல் வலையேற்றப்படவில்லை. ஆக இந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவருமே ஒருமித்த கருத்துடையவர்கள், பிஜேபி ஆதரவாளர்கள் என்று இங்கே தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன?
முன்னால் இருவர் பேசியதற்கு மேல் அரவிந்தன் நீலகண்டன் பேச இந்த விஷயத்தில் என்ன மிச்சம் இருக்கிறது? Fake News என்று ஆரம்பமானதே நம்மூர் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தான் என்று ஒரு புதிய கோணத்தில் இருந்து பேசுகிற இந்த 36 நிமிட வீடியோ, கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருந்தது உண்மை.
தமிழகம் ரிசர்ச் ஃபவுண்டேஷனுடைய முகநூல் பக்கம் இது. புதிய கல்விக்கொள்கை, ராஜராஜ சோழன் விவகாரம் பற்றியும் சில பகிர்வுகள் காணொளிகள் இருப்பதையும் பார்த்தேன்.
இன்றைக்கு என்ன பிஜேபி RSS ஆதரவுப் பதிவா என்று கொஞ்சம் நக்கலாகக் கேட்கிற நண்பர்களுக்கு நான் சொல்லக் கூடிய ஒரே பதில்! செய்திகள், செய்திகளின் அரசியலைப் புரிந்து கொள்ள 360 டிகிரியிலிருந்தும் பார்க்கும் ஒருவனை அவ்வளவு எளிதாக எடைபோடவோ, முத்திரை குத்தவோ காட்டுகிற ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது சொல்லப் பட்ட விஷயத்தில் காட்டினால் நன்றாக இருக்குமே என்பது மட்டும் தான்!
செய்திகள் உருவாக்கப் படுவதிலும் கூட ஒருவித அரசியல் கலந்து தான் இருக்கிறது என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்!
மீண்டும் சந்திப்போம்.
அருமையான பதிவு. நண்பர் கலந்து கொண்டு இந்த விழா குறித்து தெரிவித்தார். நன்றி.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteஎனக்கு இந்த மாதிரி தகவல் சொல்கிற நண்பர்கள் யாருமே இல்லாமல், நானாகவே செய்திகளைத் தேடி அலைந்து அவைகளில் ஒருசிலவற்றை இங்கே பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிற ஆசாமி! சிறுவயதில் ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் பத்திரிகை நடத்தவேண்டும் என்கிற ஆசையை இங்கே பதிவுகளாக எழுதித் தீர்த்துக் கொண்டுவருகிறேன்! அவ்வளவுதான்!