ஞாயிறு: டாக்டர் யக்கோவ் தெலங்கானா ஆளுநராக நியமனம் ஆனதில் பதிவர் உண்மைத்தமிழன் மாதிரி எத்தனை பேர் சந்தோஷமாகக் கலாய்க்கிறார்களோ?
ஐயகோ..
மீடியா உலகத்துக்கு தினமும் பைட்டுகளையும், செய்திகளையும் வழங்கி காப்பாற்றிக் கொண்டிருந்த தமிழசை அக்காவை இப்படி திடீர்ன்னு டிரான்ஸ்பர் பண்ணிட்டானுங்களே...
இனிமேல் நமக்கு யார் தினமும் தீனி போடுவா..? மீம்ஸ்காரங்களுக்கு வேலையே இருக்காதே..?
ஏண்டா பா.ஜ.க. தலைகளா.. உங்களுக்கு கவர்னர் போஸ்ட்டுக்கு வேற ஆளே கிடைக்கலியா..
அதான் எச் ராஜா, வானதின்னு நாலைஞ்சு பேரு இருக்காங்களே.. அவங்களை அனுப்பி வைக்கிறதுதானே..? எங்கக்காதான் கிடைச்சாங்களா..?
அதான் எச் ராஜா, வானதின்னு நாலைஞ்சு பேரு இருக்காங்களே.. அவங்களை அனுப்பி வைக்கிறதுதானே..? எங்கக்காதான் கிடைச்சாங்களா..?
மீடியா மக்களுக்கு இன்றைய நாள் மிகுந்த துயரமான நாள்..!
திமுக சார்பில் சேனல்களில் பேசும் வக்கீல் சரவணன் ஒரு ட்வீட் போட்டார்! பதில் எப்படி வருகிறது? #எகொசஇ
எனக்கு உண்மையிலேயே என்ன வருத்தம் என்றால் டாக்டர் யக்கோவ் குரலில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற பிரபலமான வசனத்தை இனிமேல் கேட்க முடியாது!
ஆனால் இந்த ஒரு கார்டூன் என்ன அழகாக காங்கிரஸ் ஓனர் ராகுல் காண்டியையும் இம்ரான் கானையும் ஒரே நேரத்தில் பகடி செய்கிறதோடு, அரசியல் யதார்த்தத்தையும் சொல்லி விடுகிறது!!
பப்புவின் பெயரால் இம்ரான் கான் ஐநாவிடம் யாசிக்கிறார்! இம்ரான் கான் கைகளில் விளையாட்டுப் பொம்மையாக்கிக் கொண்டது ராவுல் பாபாவின் குற்றமா இல்லையா?
சதீஷ் ஆசார்யா கொஞ்சம் பொருமலோடுதான் இதை வரைந்த மாதிரி இருக்கிறது! 2024 தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சியாக பிஜேபி தன்னைத் தகவமைத்துக் கொண்டுவந்தால் பாவம், அவருக்கு பொருமத்தான் முடிகிறது! ஓட்டப்பந்தயம் நடக்கும் இடத்தில் ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருக்கிற பப்பு பற்றி என்ன சொல்ல வருகிறாராம்?
மறைந்த திமுக முன்னாள் எம்.பி. திருச்சி செல்வராஜின் ரயில்வே சலுகை அட்டையைப் பயன்படுத்தி, பயணம் செய்த அவரது மகன் கலைராஜ் ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்.
திமுக முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி., முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்.செல்வராஜ் (75). அதிமுகவில் இணைந்த இவர் கடந்த மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். 1980-ம் ஆண்டு திருச்சி தொகுதி திமுக எம்.பி.யாக இருந்தார். இவர் 1987-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார் என்று கதைக்கிறது இந்து தமிழ்திசை. ஒரே ஒருமுறை தேர்ந்தெடுத்து விட்டால் போதும் எங்கப்பன் சொத்து எங்கபாட்டன் சொத்து என்று ஏழு தலை முறைக்கும் அனுபவிக்கிற கழகப்பாரம்பரியம் என்று சொன்னால் போதாதோ?
மீண்டும் சந்திப்போம்.
ஒரு எம்.பி பதவிக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கறாங்க, ஆனா இரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்காம பிச்சை எடுக்கறாங்க என்று அறியவே ஆச்சர்யமா இருக்கு (பையன் அப்பாவோட பாஸை உபயோகப்படுத்தினாலும் இரயில் கட்டணம் செலுத்தாம ஏய்க்கிறார்கள் என்பது அவர்களின் குவாலிட்டியைக் காண்பிக்கிறது. திருடர்கள்)
ReplyDeleteகழகம்னா சும்மாவா? :- )))
Delete