நாமெல்லாம் இது நம்முடைய மண், நாம் எல்லோருமே இந்த மண்ணின் மைந்தர்கள் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் ஒரு சிலர் இது இவர் மண், இல்லை இல்லை அவர் மண் என்றெல்லாம் அவர்களாகவே பட்டா போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்கட்டும், இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்? நம்மில் யாராவது தெரிந்துகொள்ள எப்போதாவது முயற்சித்திருக்கிறோமா ?
இந்த 39 நிமிட வீடியோவில் பல இளைஞர்கள் கூடி இது ஆன்மீக பூமியா,அல்லவா என்று விவாதிக்கிறார்கள். நெறியாளர் இடைமறித்து திருநள்ளாறுக்கு மேலே அமெரிக்க சாட்டிலைட் கொஞ்சம் தள்ளாடுகிற மாதிரி ஒரு தவறான கற்பிதத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார். (10வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்!) இந்த மாதிரிக் கற்பிதங்களுக்கு முந்தைய பதிவில் அரவிந்தன் நீலகண்டன் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பதை நினைவு படுத்தவேண்டியது என் கடமை.
இங்கே விவாதம் மிக மேம்போக்காக நடப்பதைப் பார்த்தபிறகு தான் இந்த மாதிரி இளைஞர்களுக்காகவே நண்பர் எழுத்தாளர் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹிந்துமதம்: ஒரு அறிமுகத் தெளிவு என்று (குழுமங்களிலும் பிறகு சந்தியா பதிப்பக வெளியீடாக ஒரு நூலாகவும்) ஏன் எழுதினார் என்பதே கொஞ்சம் உறைக்கிறது. ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் பலருக்கே தங்களுடைய நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பது என்னென்ன என்பது தெரிவதில்லை என்பது நான் உட்பட, ஒப்புக்கொள்ளவேண்டிய வெட்கக்கேடு! இந்தப் புத்தக அறிமுகமாக எழுதியது இங்கே
சதீஷ் ஆசார்யா சரத் பவாரை விட அதிகமாகக் கவலைப்பட்டு கார்டூன் வரைந்திருப்பது ஏன் என்றுதான் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. இந்தமாதிரி தேர்தல் சமயங்களில் தான் முறைகேடாக சம்பாதித்த பணம் கொஞ்சம் வெளியே வரும் என்பது ஊரறிந்த ரகசியம்! சரத் பவாருடைய பணத்தொப்பையின் பின்னணி என்னெவென்று சொல்வது? தாவூத் இப்ராஹிமுடன் உள்ள தொடர்புகள், சிவசேனாவின் புலி பால் தாக்கரேவைக் கூட பூனையாக மாற்றி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்த்தி வைத்த சாமர்த்தியம் என்று எத்தனை எத்தனை விஷயங்களைத் தான் பட்டியலிடுவது? சொல்லுங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
இது போன்ற விசயங்களை நீங்க சொல்வது போல காட்சி படுத்துவது அவசியம். சரத்பவார் லாலு போல உள்ளே இருப்பார். வைக்க முடியும்? அவர் லாபியை (சரத்பவார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்க்கரை ஆலைகள், சர்க்கரை விலை விற்பனை மற்றும் விலை நிர்ணயித்தல், மகாராஷ்டிரா கிரிக்கெட் தொடர்பான முடிவுகள்) மோடி அரசு 50 சதவிகிதம் தான் அடக்க முடிந்துள்ளது. இன்னமும் உள்ளது. வட்டத்திற்குள் கொண்டு நிறுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteசரத் பவாரை ஒரு கட்டத்துக்குள் அடக்கி வைக்கவேண்டியது நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு மிகவும் நல்லது என்றுதான் நினைக்கிறேன். அரசியலில் எல்லோருடனும் ஒருமாதிரியான் நீக்குப்போக்குடன் நடந்துகொண்டு தன்னுடைய ஊழலை இதுவரை எவரும் கேள்வி கேட்காதபடி சமாளித்து வந்திருக்கிறார் என்பதில் அவரை முழுமையாக expose செய்ய முடியுமா செய்வார்களா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனாலும் ஒரு ஆரம்பம் என்று வந்துவிட்டபிறகு, எப்படிப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!
சதீஷ் ஆசார்யாவின் இந்தக் கார்டூனை எதற்காக இங்கே எடுத்துப் போட்டேன் என்று நினைக்கிறீர்கள்?