Showing posts with label தேர்தல் சீர்திருத்தங்கள். Show all posts
Showing posts with label தேர்தல் சீர்திருத்தங்கள். Show all posts

Thursday, February 4, 2021

கோபுரத்தைப் பொம்மைகளா தாங்குகின்றன? உதிரிக்கட்சிகளா அரசியலைத் தீர்மானிக்கின்றன?

இனிமேலும் கிராக்கி பண்ணிக்கொண்டே போக முடியாது என்பதால் ஒருவழியாக பாமக, அதிமுக கூட்டணியில் நீடிப்பது என்பது உறுதியாகிவிட்ட மாதிரி செய்திகள் வருகின்றன. சீட்டு பேரம் பெட்டி பேரம் இரண்டும் அநேகமாக  வருகிற ஒருசில நாட்களில் முடிவாகி விடும்.அடுத்த அழைப்பு தங்களுக்கு வருமென்று தேமுதிக போன்ற சில கட்சிகள் காத்திருக்கின்றன. வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு முன்னாலேயே இப்படி உதிரிக்கட்சிகள் தங்களுக்கான முக்கியத்துவம், ஆதாயம், சமயங்களில் அதிகாரத்தையும் பெற்று விடுகிற நமது ஜனநாயக அதிசயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


சசிகலா வகையறா அதிமுகவுக்கே உண்டான தனிப் பிரச்சினை என்றாலும், உதிரிகளால் என்ன மாதிரி சேதம் விளைவிக்க முடியும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

இந்தப்பக்கம் பாமக அதிமுக கூட்டணியில்  குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிற மாதிரி அந்தப்பக்கம் சோனியா காங்கிரஸ், திமுக கூட்டணியில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காண்டி இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து போய்விட்டார். தமிழக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்தே இந்த வருகை இருந்தது. இப்போது மூன்றாவது முறையாகவும் ராகுல் வருகிற 14,15,16 தேதிகளில் தமிழகத்துக்கு வருகிறாராம். திமுகவுடன் தான் கூட்டணி, இசுடாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று ராகுல் காண்டி  சொல்லி விட்டாலும் இந்த முறையும் இசுடாலினை சந்திக்கிற ஐடியா இல்லை என்றே தெரிகிறது. காங்கிரசுக்கு 15 சீட் என்று திமுக தரப்பில் கோடி காட்டப்பட்டதில் அதிருப்தி, பின்னால் இருந்து கையை முறுக்குகிற வேலையை காங்கிரஸ் சைலண்டாக செய்து வருவது வெளிப்படை.

இப்படி இரண்டு கூட்டணிகளிலுமே, வலுவான உதிரிக் கட்சிகளான பாமக, சோனியா காங்கிரஸ் இரண்டும் வறட்டு இழுப்பாக அரசியல் செய்து கொண்டிருப்பதில், தமிழ்நாட்டில் இருக்கிற மற்ற உதிரிக்கட்சிகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. 

கழகங்களிடம் உறுதியாகப் பேரம் முடியாமல் கிடைத்ததை வாங்கிக் கொண்டு உள்ளுக்குள் பொருமுவதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியாத கையறுநிலையில் இருப்பது 2021 தேர்தல் களத்தில், தமிழக அரசியல் நிலவரம். இன்னும்  வேடிக்கையான விஷயம், இரண்டு கழகங்களுமே கூட இந்த உதிரிகளை உதறித்தள்ளி விட்டுத் தனித்தே களம் காணத் தயங்கிக்  கொண்டிருப்பதுதான்!

கோபுரத்தில் இருக்கும் பொம்மை எதுவும் கோபுரத்தைத் தூங்குவதில்லை. ஆனால் தேர்தல் அரசியலில் அப்படியே தலைகீழ் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா? 

தேர்தல்நேரங்களில் நான் எப்போதுமே வலியுறுத்தி வருவதைத் தான் இப்போதும் சொல்கிறேன். ஒருநல்ல  ஜனநாயகமாக நாம் வலுப்பட அவ்வப்போது தேர்தல் முறைகளில் தேவையான சீர்திருத்தங்கள் செயதே ஆக வேண்டும். தேர்தல் சீர்.திருத்தங்களை செய்யாததால் தான் இங்கே உதிரிக்கட்சிகள் ஆட்டம்போட முடிகிறது. தகுதியில்லாத கழகங்கள் அரசியலில் ஆட்டிப்படைக்க முடிகிறது. வாக்குச்சீட்டுகளை முந்திக்கொண்டு பணப் பெட்டிகளே முடிவைத் தீர்மானிப்பவை என்றாகிப் போகும் அவலமும் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக இப்படிக் குறைபாடுடைய தேர்தல் முறைகளே இருக்கின்றன என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? 

மாற்றத்துக்காக என்ன செய்யப்போகிறோம்?  எப்போது செய்யப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.  

Wednesday, October 30, 2019

இப்போது என்ன அவசரம்? தேர்தல்களும் சீர்திருத்தங்களும்!

நம்மூர் ஆனந்த விகடன் தளத்தில் கூட அபூர்வமாக ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் உருப்படியான செய்தி, அதுவும் இந்தக்காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக வந்து விடுகிறது என்பது கொஞ்சம் ஆனந்தமான அதிர்ச்சி தான்! முதலில் செய்தி என்ன என்று பார்த்து விட்டு, அப்புறம் அதில் ஆனந்தம், அதிர்ச்சி எல்லாம் எங்கே இருந்தது என்பதைப் பார்த்து விடலாம்! நாம் தமிழர் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையத்தால் ரத்துசெய்ய முடியாது... ஏன்? இதுதான் அந்த செய்தியின் தலைப்பு!


இங்கே ஆவி  செய்தியைப் போட்டுச் சொல்ல நினைப்பது, சீமான் கட்சிப்பதிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ்காரன் குதித்துக் கொண்டிருக்கிற மாதிரியான அற்ப ராஜ விசுவாசக் குரல் அல்ல! இது இங்கே உள்ள தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்,  தேர்தல் ஆணையத்தின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருப்பது, கட்சித் தாவல்  தடைச் சட்டம் என ஒன்று   இருந்தும் இல்லாமல் ஆக்கி விடுகிற  சித்து வேலைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள உதவுகிற மாதிரி ஒரு தொடக்கம்! அதற்கான  செய்தி இது  என்பதால்  கொஞ்சம் ஆனந்தம்! 

கோளாறுகள் ஒரு அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிற தொடக்க நிலையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. கோளாறு இருப்பது தெரிய வந்தாலும் கூட கட்சியைப்  பதிவு செய்கிற தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் அப்படி ஒரு பல்லில்லாத அமைப்பால் என்ன பிரயோசனம்? மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் 62, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 2,301 என மூன்று வகைகளிலும் சேர்த்து,மொத்தம் 2,370 கட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. அரசியல் கட்சிகளுக்கு பெறப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிவிதிவிலக்கு முதலான சலுகைகளை அனுபவிப்பதற்காகவே இதுமாதிரியான கட்சிகள் புற்றீசல் மாதிரி ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டதைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு சிறிதளவுகூட இல்லை. தேர்தல் சீர்திருத்தங்கள் மிகமிக அவசியம் அவசரம் என்றாலும் கூட, இங்கே உள்ள அரசியல் கட்சிகள் எதுவும் கண்டுகொள்வதில்லை. ஏன் என்பதைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிற செய்தி என்பதால், ஆனந்தம் கலந்த அதிர்ச்சி!

மேலே சுட்டியில் செய்தியை வாசித்துவிட்டு நீங்கள் நினைப்பதென்ன என்பதைச் சொல்லத்தான் கொஞ்சம் மனது வையுங்களேன்!


     
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் தனிப்பட்ட முறையில் காஷ்மீருக்கு விஜயம் செய்திருப்பதோ, ராகுல் காண்டி ப்ரியங்கா வாத்ரா அப்புறம் NDTV, The Prnt உள்ளிட்ட ஊதுகுழல்கள் எல்லாமாகச் சேர்ந்து குய்யோ முய்யோவென கூக்குரல் எழுப்பியதோ இங்கே எத்தனைபேர் காதில் விழுந்ததாம்? சதீஷ் ஆசார்யாவின் கார்டூன் கூட அதே ரகம் தான்! மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறவர்கள் இருக்கிற தேசம் தானே இது!


உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே என்று கன்னியர்கள் பாட்டுப்பாடுகிற மனம் கவர்ந்த  சால்வை அழகராக வலம் வந்த சீனாதானாவா இது? சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்றைக்கு கூடுதலாக ஒருநாள் கஸ்டடி விசாரணை கோரி அமலாக்கத்துறை விண்ணப்பித்ததை நிராகரித்து 14 நாட்கள் அதாவது  நவம்பர் 13 வரை நீதிமன்றக்காவலுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டதாம்!  ஆனாலும் உடல்நிலையைக் கருதி திஹார்சிறை அதிகாரிகள் அவருக்கு மருந்துகள், மேற்கத்தியக் கழிவறை, தனிச்சிறை, பாதுகாவலர்கள் ஆகியவற்றை வழங்கவும், வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவை வழங்கவும் நீதிமன்றக் கருணை கிடைத்திருக்கிறதே! அதுபோதாதா? !!  

  
அக்டோபர் 31 நாளை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உதயம்! கலகம், குழப்பம், தீவிரவாதம் இவைகளிலிருந்து விடுபட்டு இந்தப் பகுதிகளில்     தேசிய ஒற்றுமை தழைக்க   வாழ்த்துவதோடு அதற்காகப் பிரார்த்தனையும்  செய்து கொள்வோம். 

மீண்டும் சந்திப்போம்.   
        
     

Wednesday, October 2, 2019

இஸ்ரேல் தேர்தல்களும்! இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியதும்!

ரு 40/45வருடங்களுக்கு முன்னால் தினமணி ஆசிரியர் AN சிவராமன் கணக்கன் கட்டுரைகள் என்று தினமணி நாளிதழில் தொடர்கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருந்த விஷயங்களில் முக்கியமான ஒன்று தேர்தல் சீர்திருத்தங்கள்! தேர்தல் சீர்திருத்தங்களாகச் செய்ய வேண்டியது எவை என்று தன்னுடைய கருத்தாக எதையும் திணிக்கவில்லை. மாறாக தேர்தல் ஜனநாயகத்தைப் பின்பற்றும் பல நாடுகளில்  உள்ள வித்தியாசமான தேர்ந்தெடுக்கும் விதத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவியாக எளியமுறையில் எழுதிய கட்டுரைகள் அவை! வலைக் குழுமங்களிலும் இங்கே பதிவுகளிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதற்கு முக்கியமான உந்துகோலாகக் கணக்கன் கட்டுரைகள் இருந்தன 


ங்கே காங்கிரசுக்கு ஆதரவாகவே பேசி வரும் The Print தளத்தின் சேகர் குப்தா , காங்கிரஸ் கட்சியின் கோமாளித் தனங்களைப் பேசவேண்டி வந்துவிடுமோ என்ற பயத்திலோ அல்லது என்னதான் இருந்தாலும் ஒரு சீனியர் பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தவர் என்ற முறையிலோ சென்ற மாதம் நடந்து முடிந்த இஸ்ரேல் பொதுத்தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே இந்த 24 நிமிட வீடியோவில் பேசுகிறார். கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள், சேகர் குப்தாவின் காங்கிரஸ் ஆதரவெல்லாம்  ஒருபக்கம் கிடக்கட்டும், இஸ்ரேலியத் தேர்தல்களை, அதன் fractured முடிவுகளில்   உள்ள சிக்கல்களை, ஒரு அனுபவம் உள்ள பத்திரிகையாளராக  மிக நேர்த்தியாக விளக்குவதைப் புறந்தள்ளி விடமுடியுமா?   

னநாயக முறைகளே மிகச் சமீபத்தைய  காலவரவுதான் என்பதால் கொஞ்சம் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. கவனித்துச் செம்மை செய்துகொண்டே வருவதில் தான் அதன் முழுமையான வளர்ச்சியும்,பலனும் ஜனங்களுக்குக் கிடைக்கும் என்பது குன்சாவாக எல்லோருமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்! உதாரணமாக இங்கே இந்தியாவில் பிரிட்டனிடமிருந்து இரவல் வாங்கிய Westminster தேர்தல் முறையைப் பயன் படுத்துகிறோம்! Winner takes all என்பது இந்த முறையின் முக்கியமான அம்சம்! இந்த அம்சத்தின் அடிப்படையில் பிரிட்டனில் நடந்துமுடிந்த brexit பொதுஜன வாக்கெடுப்பில் 51% வாக்குகள் பெற்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்ற முடிவைச் செயல் படுத்த முடியாமல் இன்னமும் பிரித்தானிய அரசியல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. (கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுதான் உண்மையான பிரச்சினை!) 

இப்படி   Winner takes all  தேர்தல் முறையின் மிகப்பெரிய குறை என்ன? மேலே சொன்ன உதாரணத்தில், ஒரு சின்ன வித்தியாசம்,  எதிர்த்து வாக்களித்த 49% சுத்தமாகப் புறக்கணிக்கப் படுகிறது, சின்ன வித்தியாசமாக இருந்தாலும் ஜெயித்தவனுக்கே மொத்த வாக்குகளும் போய்விடுவதாகக் கொள்கிற விதம்தான்! இங்கே நம்மூர்த் தேர்தல்களையே எடுத்துக் கொள்ளுங்கள்! மொத்தமுள்ள வ்வாக்குகளில் பதிவாகும் வாக்குகள் என்னவோ 50-60% தான்! அதிலும் கூட ஒரே ஒரு ஒட்டு மட்டும் கூடுதலாக, தனக்கு அடுத்து வருகிறவனை விட வாங்கிவிட்டால் போதும், அந்த ஒரு ஓட்டு 100% ஆக்கிவிடுகிற அதிசயம் அல்லது அநியாயம் தான் இந்த மாதிரித் தேர்தல் முறை! வெஸ்ட்மின்ஸ்டர் நியாயம்!

விகிதாசார பிரதிநிதித்துவம்! Proportionate Representation என்று ஒரு கட்சி வாங்கும் வாக்குகளின் அடிப்படையில் சட்டசபை அல்லது நாடாளுமன்றத்தில் சீட்டுகள் என்றிருப்பது இன்னொரு விதமான தேர்தல்முறை. இந்த முறையில் நடந்த இஸ்ரேல் தேர்தல்களில் (ஐந்து மாதங்களில் இது இரண்டாவது பொதுத்தேர்தல்) எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிடி இல்லை, கூட்டணி அமைப்பதிலும் சிக்கல்கள், ஆக இன்னொரு பொதுத்தேர்தலை இஸ்ரேல் விரைவில் சந்திக்கலாம் என்பதிலேயே இந்தமுறையிலும் உள்ள கோளாறுகள்  வெளிப்பட்டிருக்கிறது என்றாலுமே கூட  தேர்தல் சீர்திருத்தங்களில் அதுவும் கூட களையக் கூடியதே!  

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி இங்கே கொஞ்சம் பேசியிருக்கிறோம். புத்தகங்களை சேகரிப்பதையே  வாழ்க்கையின் தவமாகச் செய்து வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கணக்கன் கட்டுரைகளில் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசிய தொடர் புத்தகமாகவும் வந்தது அவருடைய சேகரத்தில் இருக்கிறதா என்று ஆறேழு வருடங்களுக்கு முன் கேட்டதில் பிகார் இயக்கம் என்று ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டவிவரங்களை 47 நாட்கள் தினமணியில் தொடர்ந்து எழுதி தினமணிகதிர் வெளியீடாக  வந்ததின் நகலை உடனே அனுப்பி வைத்தார். கணக்கன் கட்டுரைகள் புத்தகம் இருப்பதாகச் சொன்னவரிடம், அதில் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றாதது என்னுடைய குறை.

தை வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்களிடம் வேண்டுவது  ஒன்றேதான்! இந்தமாதிரிப் பழைய புத்தகங்கள் உங்களிடம் பயனில்லாமல் பரணில் கிடக்குமானால், அவைகளை எடைக்குப்போட?வோ கரையான் அரித்து தூர எறியவோ முனையாமல் புத்தகங்களை தன்னுடைய கண்ணைப் போலப்  பராமரித்து, வேண்டுகிறவர்களுக்குப் பயன்படுகிறவிதமாக வழங்கிவரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு அனுப்பிவைத்தால் என்னைப்போல புத்தகம் இருந்தும் பராமரிக்கமுடியாமல் தொலைத்துவிட்டு பின்னொருகாலத்தில் தேடுகிறவர்களுக்கு மீண்ட சொர்க்கமாக, மீளவும் கிடைக்கும்!  

தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியத்தைக் கொஞ்சம் இஸ்ரேல் தேர்தலைவைத்து இங்கே  பார்த்திருக்கிறோம் இல்லையா எப்படி என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முடிகிறதா என்று கொஞ்சம்  முயற்சித்துப் பாருங்களேன்! அப்படியே   இந்தியாவில் இந்த  விகிதாசார பிரதிநிதித்துவம் எல்லாம் ஒத்துவருமா என்றும் கூட! 

மீண்டும் சந்திப்போம். 
         
    

Wednesday, September 18, 2019

அரசியல் இன்று! தேர்தல் வழக்குகள்! தேர்தல் சீர்திருத்தங்கள்!

லைப்பதிவுகளிலும், அப்புறம்  கூகிள் குழுமங்களிலும், ப்ளஸ்ஸிலும் எழுதிக் கொண்டிருந்ததில் நான் அதிகமாகப் பேசிய விஷயங்களில்  ஒன்று முழுமையான தேர்தல் சீர்திருத்தங்களுக்காக, மற்றொன்று புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்  உங்கள் உதவிக்கரங்களை எதிர்பார்க்கிறது  இவை  மட்டும்தான்! என்னை தொடர்ந்து கவனித்து வருகிற நண்பர்களுக்கு இந்த இரண்டுமே நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்! இங்கே ஒரு சேனல் நேர்காணலில்  ஒரு உருப்படியான விஷயம் பேசப்பட்டு இருந்ததை இன்றுதான் கவனித்தேன். ஒரு பரபரப்புக்காக நான்கு எம்பிக்களை இழக்கிறதா என்று தலைப்பு வைக்கப் பட்டிருந்தாலும், நல்லவிஷயங்கள் அவ்வளவு சீக்கிரமாக இந்த தேசத்தில் நடந்துவிடுவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்த 15 நிமிட  நேர்காணலைப் பாருங்கள்!
    

ங்கே வழக்கறிஞர் தமிழ்மணி கொஞ்சம் சுவாரசியமாக விஷயத்தை விளக்குகிறார். கள்ளன் பெருசா காப்பான் பெருசா என்ற வழக்குச்சொல்லை வைத்துக் கொன்டு கள்ளன் தான் பெருசு என்றிருக்கிற நடைமுறையை சொல்கிறார். இன்னொரு இடத்தில் ஷேக்ஸ்பியருடைய The Merchant of Venice நாடகத்தின் கதாநாயகி போர்ஷியா, ஒரு ஆண் வழக்கறிஞராக வேடமிட்டு, வில்லன் ஷைலக்கிடம்  எழுத்துமுறிப்படி உண்டான ஒரு பவுண்ட் நெஞ்சுக் கறியை அறுத்து எடுத்துக்கொள் ஆனால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக்கூடாது அது எழுதிக் கொடுத்ததில் இல்லை என்று திறமையாக மடக்குகிற இடத்தை நினைவுபடுத்தி a pound of flesh, not a drop o blood என்று சொன்னதில் நிஜமாகவே சொக்கிப்போனேன்! ஒரு முழுமையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அவசியத்தை என்னதான் பத்திபத்தியாக எழுதினாலும், இந்த மாதிரி ஒரு வழக்கு, இந்தமாதிரியான தெளிவான விளக்கம் கிடைக்கிற போது அதுவாக கவனத்துக்கு வருவதுபோல ஆகாது, இல்லையா! 


ந்திடிவி கூட இன்றைக்கு இதைப்பற்றிய ஒரு கருத்தை கேட்டு வெளியிட்டிருக்கிறது. நம்மூர்  நீதிமன்றங்களில் தேர்தல் வழக்குகள் எவ்வளவு சவ்வாக இழுத்து நடக்கும் என்பது தெரிந்ததுதான்! அப்பீல் வேறு இருக்கிறதே! ஆனாலும் இந்த வழக்கைக் கொஞ்சம் மேலோட்டமாகக் கவனித்தாலே, தற்போதைய தேர்தல் நடைமுறைகளில் என்னென்ன கோளாறுகள் இருக்கின்றன, கள்ளன் பெருசு என்றிருப்பதில் பாடம் கற்றுக்கொண்டு என்னென்ன மாற்றங்கள் செய்தால் காப்பான் பெருசு என்ற நிலை வரும் என்பதை ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடியுமே!  

புதிய தலைமுறையில் பிஜேபி சார்பில் வானதி ஸ்ரீனிவாசனும் விசிக சார்பில் எம்பி ரவிக்குமாரும் அமித் ஷா பேச்சை அதிபர் முறைக்கு மாற்றப்போவதன் முன்னோட்டமா என்ற கேள்வியை வைத்து ஒரு விவாதம் இப்போதுதான் முடிந்தது. அதே அரைத்தமாவுதான்! இன்று இங்கே எழுதியதை எடுத்துப் போடுவதில் தவறொன்றும் இல்லை!    
ங்கே பிஜேபி அதிபர் ஆட்சிமுறையை மறைமுகமாக வலியுறுத்துவதாகத் தான் பலகட்சி ஆட்சிமுறை தோற்று விட்டதாக அமித் ஷா பேசுவதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விசிகவின்  வன்னியரசு மேம்போக்காகப் பேசிவிட்டுப் போவதை விடுங்கள்! Bihar Movement என்று  இந்தச் சுட்டியிலும் இதே வார்த்தையைக் கொண்டு இணையத்திலும் தேடிப் பாருங்கள்! 1971 நாடாளுமன்றத்தத் தேர்தல்களில் இந்திரா காண்டி அமோக(?) வெற்றியடைந்த பிறகு, அவ்ரதுபோக்கில் நிறைய மாறுதல்கள், எல்லா அதிகாரங்களும் ஒரே நபரின் கீழ் என்கிற அமெரிக்க அதிபர் முறை மாதிரி ஒரு தேர்தல் முறைக்குத் தயாராகிறாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்த காலத்தில் பிஹார் இயக்கம் என்று ஊழலுக்கெதிரான மாணவர் போராட்டம் வலுவான தருணத்தில், ஜெயப்ரகாஷ் நாராயணனைத் தமைமைதாங்க அழைத்த தருணம்! தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன், பிஹார் இயக்கம் என்ற தலைப்பில் தொடர்ந்து 47 நாட்கள் தினமணி நாளிதழில், ஜெயப்ரகாஷ் நாராயணன்  இந்திரா காண்டியின் போக்குக்கு எதிராக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியதும் இதர விவரங்களுமாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது, பின்பு தினமணி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. கூகிள் தேடலில் பிஹார் இயக்கம் என்று தேடினால் பிபிசி தளத்தில் வெளியான இந்த ஒரு செய்தி தான் கிடைக்கிறது!  பிஹார் இயக்கம் தினமணி வெளியீடாக வந்த புத்தகம் தற்சமயம் நானறிந்தவரை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில் மட்டும் கிடைக்கிறது. 

விசிக மாதிரியான உதிரிக் கட்சிகளுக்கு வரலாறும் தெரியாது, போகும் திசை பற்றிய தெளிவும் கிடையாது. ஆனால் இன்னும் எத்தனைநாட்களுக்கு இவர்களைப் போன்ற உதிரிகள் நாட்டாமை செய்வதை சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம், சொல்லுங்கள்! இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எத்தனை. அவை எத்தனை தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றன, எவ்வளவு வாக்கு (சதவீதத்தில்) வாங்கியிருக்கின்றன என்பதெல்லாமே பொதுவெளியில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இருப்பதுதான்!

மீண்டும் சந்திப்போம். 
   

Wednesday, July 24, 2019

ஆன்டி க்ளைமேக்சாக கரு "நாடகம்" முடிந்தது எப்படி?

கர்நாடக அரசியல் குழப்பங்களில் சில படிப்பினைகள் இருக்கத் தான் செய்கின்றன. என்னவென்று பார்க்கவோ, கற்றுக் கொள்ளவோ ஜனங்களாகிய நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்விதான் எல்லாக் குழப்பங்களிலும் முன்னுக்கு வந்துநிற்பதைப் பார்க்கவும் தவறுகிறோம். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில்  இப்போதைய குழப்பம் ஆரம்பித்தது எப்படி என்பதை 3 infographics / படங்களில் வெளியிட்டிருப்பது, புரிந்துகொள்ள உதவியாக இன்றைக்கு வெளியாகியிருக்கிறது.  TOI க்கு நன்றியுடன்!


    
அரசைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் பணப்பைகள் முயற்சி செய்யாமல் ஒன்றுமில்லை! இருக்கிற மந்திரிகள் ராஜினாமா செய்து, அதிருப்தி MLAக்களுக்கு இடம் கொடுப்பதாக DK சிவகுமார் பிளான் கூட அவர்களை அசைத்துப் பார்க்கவில்லை. பிந்தினநாட்களில் சிவகுமாரே BJP என்ன தருவதாகச் சொன்னார்களோ அதை நாங்களே தருகிறோம் என்று சொன்னதும் பொதுவெளியில் காணக் கிடைக்கிறது.


அதிருப்தி  MLAக்கள்  உச்சநீதிமன்றத்தை நாடியதில் இடைக் கால உத்தரவாக  ராஜினாமாக்கள் மீது சபாநாயகர் முடிவு எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என்றும், அவர்கள் மீண்டும் தங்கள் ராஜினாமாவை சபாநாயகரிடம் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஜூலை 12 அன்று தான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருப்பதாக அறிவித்த பிறகும்  கூட சபாநாயகர் ராஜினாமாக்கள் மீது  முடிவெடுக்கத் தனக்கு கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்ததோடு சரி! அதற்கப்புறமும் கூட முடிவெடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டேபோனதன் காரணம் என்ன? ஏற்றுக்கொண்டாலும் தகுதிநீக்கம் செய்தாலும் கூட்டணி அரசுக்கு ஒரு லாபமுமில்லை என்பதாலா? 

இடைத்தேர்தல் நடத்தினாலும் சாதகமாக இருக்குமா என்பது தெரியாமல் எவ்வளவுகாலம் சவ்வாக இழுக்க முடியுமோ அவ்வளவும் செய்துவிட்டு  ரெண்டுங்கெட்டானாக அந்தரத்தில் தொங்கிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தது யார்? இப்படி ரெண்டுங்கெட்டானாக காங்கிரஸ்-JDS  கூட்டணி முடிவெடுத்து விட்டு, BJP மீது மட்டும் பழிசுமத்தி சட்டசபை நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டால் போதுமா? 


பேசினார்கள் பேசினார்கள் அப்படிப் பேசினார்கள், கோஷம் எழுப்பினார்கள்! வேறுவழியே இல்லாமல் வாக்கெடுப்பு நடந்ததில், அவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தெரிந்த மாதிரியே கவிழ்ந்தும் போனார்கள்.  

இங்கே சித்தராமையாக்களும் இன்னும் காசுக்காக மட்டுமே கூவுகிற காங்கிரஸ் வக்கீல்களும் கட்சித்தாவல் தடைச்சட்டம் இப்படிச் சொல்கிறதே அப்படிச் சொல்கிறதே என்றெல்லாம் கூவினாலும், நம்மூர் அரசியல்வாதிகள் சட்டத்தை ஏய்ப்பது எப்படி என்பதில் கில்லாடிகளாக இருப்பதில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் போதாமை  ஈயென்று இளித்து நிற்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல் என்றாகி இருக்கிறதா இல்லையா?

கர்நாடக சபாநாயகர் ஒரு புதுமையான முயற்சியைச்  செய்து பார்த்தார். கடந்த  நாடாளுமன்றத்தேர்தலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், வேட்பாளராக நின்று ஜெயித்ததில், அவருடைய  ராஜினாமாவை  ஏற்பதற்கு முன்னால் அவரது சட்டசபைத் தொகுதி மக்களில் ஒரு சிலரை மட்டும் அழைத்துக்  கருத்துக் கேட்டார் என்று சொல்கிறார்கள். இப்போதும் கூட அதிருப்தி MLA க்கள் ராஜினாமா விஷயத்தில் கூட அதேபோலச் செய்வாரா என்றொரு எதிர்பார்ப்பும் இருந்திருக்கலாம்! அதைவிட தேர்தல் விதிகளில், ஏற்கெனெவே ஏதோ ஒரு அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவர், மற்றொரு பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிடக் கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தால் என்ன? தேர்தல் சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.

சுயேட்சைகள், 1% - 4% வாக்குகளைக்கூடத் தனித்து நின்று வாங்கமுடியாத உதிரிக்கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்? 

கொஞ்சம் யோசித்து  இன்னும் என்னென்ன  செய்யவேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசிக்கவாவது செய்யுங்களேன்!

மாற்றம், முதலில் நம்மிடமிருந்தே  ஆரம்பிக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.
          

Sunday, April 21, 2019

இங்கே அரசியலும், அரசுநிர்வாகமும், யாருக்காக?

பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு அமைதி திரும்பட்டும்! இன்றைய குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனைகள்! 



இதைக் கவிதை என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது ஆற்றாமையின் புலம்பல் என்று வைத்துக் கொண்டாலும் சரி, முகநூலில் இதை வாசித்தபோது என்னுள் நிறையக் கேள்விகள் எழுந்தன. நம்மால் எதையும் மாற்றமுடியாதா? எதையும் சரி செய்ய முடியாதா? முடியாது முடியாதென்றே துவண்டு கிடக்கப் போகிறோமா?

இங்கே அரசியலும், அரசுநிர்வாகமும், யாருக்காக என்ற ஒரே கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறதே, யாராவது அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறோமா? விடைகாண முயற்சி செய்திருக்கிறோமா?      

       

ஒரு அனுபவக்கதை, நிஜமாகவே நடந்ததுதான்!
  
திரைப்படத்தில் அல்ல, நிஜமாகவே சீரழிந்த நிலையில் இருந்த ஒரு பொதுத்துறை வங்கி, அதனுடைய தலைமை நிர்வாகி எடுத்த அதிரடி நடவடிக்கைகளில், இரண்டே ஆண்டுகளில் குணமாகி வளரவும் தொடங்கிய ஒரு அதிசயத்தை நான் அறிவேன். அவரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உள்ளிருந்தே குழி பறிக்கும் வேலைகள் என்னென்ன நடந்தன என்பதும் ஒரு 'த்ரில்லர்' படம் மாதிரித்தான்!

அவர் செய்த ஒரு அடிப்படையான மாற்றத்தைப்பார்க்கலாம். ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறதா என்பதையும் எனக்குச் சொல்லுங்கள்.

இலக்குகளை நிர்ணயிப்பதோடு நின்று விடுகிற தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்தது முதல் அதிரடி. பொது மேலாளர்கள், சாவகாசமாகப் பதினோரு மணிக்கு மேல் தங்களுடைய சீட்டுக்கு வருவார்கள், அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணிநேரம் கூட சீட்டில் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்கிற நேரம் கூடத் தங்களுடைய வசூல், தனக்கு எதிரியாக இருக்கும் இன்னொரு பொது மேலாளருக்கு எதிராக எவரையாவது கொம்புசீவி விடுகிற வேலை, இதற்காகத் தான்! தங்களுடைய நிறுவனத்திற்காக எந்த வேலையும் செய்யாமல், உண்மையைச் சொல்லப் போனால், உள்ளிருந்தே குழி பறித்துக் கொண்டிருந்த பொது மேலாளர்களை அக்கௌண்டபிலிட்டி என்று சொல்வோமில்லையா, அப்படி பொறுப்பாக்கினார். முதல் ஒரு வருஷம் அப்படித்  தலைகளைத் தட்டிக் கொண்டிருந்தது வெளியே தெரியவேயில்லை! அதுவரை, எது எப்படிப் போனாலென்ன என்றிருந்தவர்கள், சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தபோது தான் தலையில் குட்டியதன் விளைவு தெரியவே ஆரம்பித்தது.

கீழ்மட்டத்தைத் தொடவே இல்லை, மேலே தட்ட ஆரம்பித்த தட்டு, கச்சிதமாகக் கீழ்வரைக்கும் தானாகவே வந்தது, வேலை நடந்தது.

அடுத்து, வெறும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பது மட்டுமே வங்கியின் வேலை என்று நினைத்துக் கொண்டிருந்த வங்கியில், புள்ளி விவரம் என்ன சொல்கிறது, என்ன திசையில் போக வேண்டும் என்று காட்டுகிறது என்பதையும் கற்றுக் கொள்வது ஆரம்பமானது. 

இங்கே நடப்பதைப் பாருங்கள்! கீழ்மட்டத்தில் அவன் ஆயிரம் ரூபாய் வாங்கும் போது பிடிபட்டான், இவன் லட்சம் வாங்கும் போது பிடிபட்டான் என்று ஷோ காட்டும் வேலை நடக்கிறதே தவிர, தட்ட வேண்டிய இடம் எது என்பது தெரிந்தும் தட்டாமல் இருக்கும் அவலம்!

மாற்றம் வரும்! ஒரேயடியாக நம்பிக்கை இழந்து விட வேண்டியதுமில்லை! இப்படி இங்கே பின்னூட்டமாக எழுதிப் பத்தாண்டுகள் நெருங்குகிற நேரம். 


ஊழல்கள் செயல்திறனற்ற அரசுகள் இப்படி எதுவானாலும். இப்போதிருக்கும் தேர்தல் முறைகளில் உள்ள கோளாறுகளே அடிப்படைக்காரணமாக இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?  

TN சேஷன் என்றொரு IAS அதிகாரி! இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட தருணத்தில் இருக்கிற சட்டத்தை வைத்துக் கொண்டே என்னசெய்ய முடியும் என்பதை வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாக உலாவிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு மரண பீதியைக் கொடுத்தார் என்பது மிகச் சமீப கால வரலாறுதான்! ஒவ்வொரு தனி ஒருவனும் முக்கியம்தான்! ஆனால் தனிமனிதர்களே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது என்பதற்கு சேஷனும், மேலே கதையாகச் சொன்ன பொதுத்துறை வங்கியின் தலைமை நிர்வாகியும் ஆகச்சிறந்த உதாரணங்களாக  கண்முன்னே  வந்து நிற்கிறார்கள். 



ஏன் தோற்கிறோம்..? ஒரு பத்துக் காரணங்கள்.....!


இந்தப்பதிவைக் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்! தொடர்ந்து பேசலாம்!
  

Thursday, April 4, 2019

ஏழை சோனியா G, பரம ஏழை தயாநிதி மாறன்! உதவ ஒரு நல்லுள்ளம்!

தன்னுடைய சொத்துமதிப்பு ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி! கோபாலபுரத்தில் ஆறுவீடு போயஸ் தோட்டத்தில் பெரிய பங்களா கொடநாடு பகுதியில்  600 ஏக்கர் எஸ்டேட்  இருந்தும் கடன்  4 லட்சம் கோடி! என்றெல்லாம் சொல்லி விட்டு இதெல்லாம் அப்பட்டமான பொய் என்றும் சொல்லி தேர்தல் மனுவும் ஏற்கப்பட்டு போட்டியிடுகிறார் ஒரு வேட்பாளர்! 


முகம் ரொம்பவும் பரிச்சயமானதாகத் தெரிகிறதா? கண்டு கொள்வோம் கழகங்களை என்றதலைப்பில் துக்ளக் இதழில் தொடராக எழுதியவரும், காமராஜருக்கு  நெருங்கிய தொண்டர், ஸ்தாபன காங்கிரசிலும் எமெர்ஜென்சிக்குப்பிறகு ஜனதாதளத்திலும் இருந்த நெல்லை ஜெபமணியின் மகன் திரு மோகன்ராஜ்! காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்து ராஜீவ் காந்தி கொலைவழக்கு விசாரணையிலும் பங்கு பெற்றவர்! அந்த வழக்குக்குப் பின் விருப்ப ஓய்வில் வந்து தனியாக ஜெபமணி ஜனதா கட்சி என்று நடத்தி வருகிறார். அவர்தான் இந்தமாதிரி நகைப்புக்குரியதாகத் தோன்றும் Rorm 26 ஐ பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுவோடு தாக்கல் செய்திருக்கிறார்.  


ச்சும்மா பழைய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கிறது என்று காட்டிக் கொள்ள ஒரு பழைய படம்!  இப்போது ஜெபமணி மோகன்ராஜ் எதற்காக தொடர்ந்து இப்படிச் செய்கிறார் என்று பார்க்கலாம்! இந்திய அளவில் பிரபலமான கட்சி ஜனதா தளம். அதன் தமிழக தலைவராக இருந்தவர் நெல்லை ஜெபமணி. நேர்மையாளர், காந்தியவாதி. அவரது மகன் நெல்லை மோகன்ராஜ். இவர் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சமீபத்தில் பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மோகன்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் இணைக்கப்படும் வேட்பாளர் சொத்து, கடன் குறித்த விவரங்களுக்கான படிவத்தில் தனது சொத்து ரூ. 1 லட்சத்து 76,000 கோடி என்றும், கடன் ரூ. 4 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் வேட்பமனு பரிசீலனை முடிந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. அவரது வேட்பமனுவின் அஃபிடவிட் தற்போது வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் தனது முகநூலில் பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஏன் அப்படிச் செய்தாராம்?  அவரே சொல்கிறார்: 2014-ல் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நிற்கிறார். ஸ்ரீவத்சவா என்கிற இன்கம்டாக்ஸ் கமிஷனர் கார்த்தி சிதம்பரம் நிறைய பொய் சொல்லியிருக்கிறார் என அஃபிடவிட் தாக்கல் செய்தார்.அப்போது அந்த வழக்கை நான் கவனித்தேன். பொய்யான அஃபிடவிட் தாக்கல் செய்தால் 6 மாதம் சிறை தண்டனை என்பதை அறிந்து, ஏன் இந்த விவகாரத்தில் வழக்கு தொடரப்படவில்லை என்று கேட்டு கடிதம் எழுதினேன். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தேன். அது விசாரணைக்கு வரவே இல்லை.அதன் பின்னர் தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் பொய்யான அஃபிடவிட் தாக்கல் செய்தால் 6 மாதம் சிறை தண்டனை என்ற தண்டனையை ரத்து செய்துவிட்டோம் என்று பதில் அனுப்பி வேண்டுமானால் நீங்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். 

அதனால்தான் கிண்டலுக்கு கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் இப்போது சொன்னதுபோல் 1 லட்சத்து 76,000 கோடி சொத்து உள்ளதாக முன்பு அஃபிடவிட் தாக்கல் செய்தேன். அதற்கு முன் 2009-ல் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இதேபோன்றுத்தான் அஃபிடவிட் தாக்கல் செய்தேன்.அப்போது வடநாட்டிலிருந்து பிரபல ஆங்கில நாளிதழ் என்னை பேட்டி கண்டது. நீங்கள் தான் இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர் என்ன செய்யப்போகிறீர்கள் எனக்கேட்டார்கள். சோனியா தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்று அபிடவிட்டில் பதிவு செய்துள்ளார், தயாநிதி மாறன் சொந்தமாக வீடு இல்லை என அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இருவருக்கும் உதவலாம் என நினைக்கிறேன் என்று தெரிவித்தேன் என்கிறார்!

பாருங்கோய்யா! பரம ஏழைகள்  சோனியா G, தயாநிதி மாறனுக்கு உதவ இப்படி ஒரு    நல்ல மனிதரா?

நம்மூர் தேர்தல் சட்டங்களில் ஏகப்பட்ட ஓட்டைகள்  இருக்கின்றன என்பது இப்படி அம்பலப்படுத்தப்பட்டும் கூட எங்கோ மழைபெய்கிறது என்றிருக்கும் வாக்காளப் பெரு மக்களே! என்ன செய்யப்போகிறீர்களாம்?     

Wednesday, March 20, 2019

இன்றைய தேர்தல் காமெடிகள்!

வேட்பாளர் அறிவிப்பைக் கூட சினிமா பாணியில் ஒரு 4 நாள் இன்டெர்வல் விட்டு வெளியிடுவது கமல் காசர் இஷ்டைல் போல! இன்று முதல்பகுதியாக 21 பெயர்களை சென்னை தி.நகரில்  அறிவித்துவிட்டு அடுத்த அறிவிப்பு, கோவையில் என்று இட(ம்)வெளி விட்டும் அறிவித்திருக்கிறார்.


   

''அழகான வேட்பாளரை பிரதிநிதியாக்கத் தவறி விடாதீர்கள்''- தமிழச்சிக்காக உதயநிதி பிரச்சாரம் உதயநிதியை  மூன்றாம் கலீஞர் என்று அழைப்பது சரிதானோ? திராவிட பாரம்பரியம் தப்பாமல் பிறந்த வாரிசு என்று கேலிசெய்யப்படுவதாக தினசரி தளத்தில் செய்தி சொல்கிறது 





Saravanan Savadamuthu என்கிற உண்மைத்தமிழன் சொல்வது இது 
இந்திய தேர்தல் ஆணையத்தில் இதுவரை 2 ஆயிரத்து 293 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் புதிதாக 15 கட்சிகள் உதயமாகி உள்ளன.
சென்னை போரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி.
முகப்பேரை தலைமையிடமாகக் கொண்டு மக்கள் விடுதலை கட்சி.
நெல்லை சி.என்.கிராமத்தை தலைமை அலுவலகமாக கொண்டு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம்.
கும்பகோணம் பட்டீஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்டு அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்.
விழுப்புரம், திருக்கோயிலூரை தலைமை அலுவலக முகவரியாக அளித்து தமிழ் தெலுங்கு தேசிய கட்சி.
சென்னை கோடம்பாக்கத்தை தலைமை அலுவலகமாக கொண்டு மக்கள் முன்னேற்ற செயல் கட்சி.
நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு மக்கள் மசோதா கட்சி.
திருவள்ளூரை தலைமையிடமாக அறிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்க கட்சி.
வேலூர் காட்பாடியை தலைமை முகவரியாக காட்டி தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம்.
சென்னை, எர்ணாவூரை தலைமையிடமாகக் கொண்டு அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்.
சென்னை ஆழ்வார்பேட்டையை தலைமையகமாகக் கொண்டு ஸ்வதந்திரா கட்சி (மக்கள்)
சேலம், ஆத்தூரை தலைமை அலுவலகமாக கொண்டு விவசாயிகள் மக்கள் முன்னேற்ற கட்சி
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு அனைத்திந்திய மக்கள் கட்சி.
வேலூரை தலைமை அலுவலகமாக காட்டி தேசிய உழவர் உழைப்பாளர் கழகம்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு நியூ ஜெனரேசன் மக்கள் கட்சி.
ஆகிய கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார். 
இவ்வளவு அரசியல் கட்சிகள் அவசியம் தானா? இவற்றில் பெரும்பாலானவை லெட்டர்பேட் கட்சிகள் மட்டுமே. வரி ஏய்ப்பு செய்வதற்காகவே பயன்படுத்தப் படுபவை என்பது தெரிந்தும் தேர்தல் ஆணையம் பதிவு செய்வது கேவலமாக இல்லையா? 

பலகட்சி தேர்தல்முறை என்பதில் ஒரு கட்சிக்குக் குறைந்தபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை நிரூபணம். பதிவாகிற வாக்குகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாங்குகிற கட்சி நீக்கம் செய்யப்படுவதும் சுயேட்சைகள் என்கிற ரகமே இல்லாமல் செய்வதும் இன்றைக்கு அவசரமாகத் தேவைப்படும் சீர்திருத்தங்கள்!
   

Sunday, March 10, 2019

தேர்தல் அவசரம்! அரசியல்! செய்தியும் சிந்தனையும்!

நம்மூர் தேர்தல்களில் எல்லோர் கண்ணிலும் படுகிற ஆனால் கவனிக்க மறந்து விடுகிற ஒரு விஷயம், அரசு வாகனங்களில் தேர்தல் அவசரம் Election Urgent என்ற வாசகங்களோடு ஒரு வேலையும் இல்லாமல் ஆனால் வெட்டி முறிக்கிற மாதிரி அங்குமிங்கும் போய்வருவது!

அதுமாதிரித்தான், ஒரு விஷயமுமில்லாமல், தினசரி ஒரு பதிவு, சமயங்களில் இரண்டு என எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறாயோ? இது நண்பர் ஒருவருடைய கேள்வி! இங்கே வந்து வாசிக்க நினைப்பவர்களுமே கூட அப்படித்தான் நினைக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள உண்மையிலேயே விரும்புகிறன்! 

இட்லி வடை பொங்கல்! #16 சனிக்கிழமை ஸ்பெஷல் என்று அந்தப் பக்கங்களில் எழுதிய பதிவு உட்பட பலபதிவுகளுக்கு வாசகர் வருகை இன்னமும் pickup ஆகவில்லை. இத்தனைக்கும் சில முக்கியமான விஷயங்களைக் குறித்தான பதிவுகள் அவை என்பதற்கு மேலே கொடுத்த சுட்டி ஒரு சாம்பிள். ஆனால் கூகிள் அனலிடிக்ஸ் சொல்கிற விவரங்களில் மெனெக்கெட்டு 2010 இல் எழுதிய பதிவுகளை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பயனாளர் இருப்பதையும் பார்க்க முடிகிறது. தேடிவந்து வாசிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியாத, புரிந்து கொள்ளமுடியாத சிக்கலாக தமிழ் வலைப்பதிவுலகம் இன்றைக்கு இருக்கிறதோ?

*******


இந்த இடைத் தேர்தல்னு ஒரு காமெடி நடக்கும் நம் ஊரில்.. ஏதாவது MLA இறந்து போனாலோ, ராஜினாமா செய்தாலோ, பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டாலோ அந்தத் தொகுதியில் இந்தக் காமெடியை நடத்தும் நம் தேர்தல் ஆணையம்.. பலரும் இந்த இடைத் தேர்தலைப் பற்றிச் சொல்லும் போது ஏற்கனவே ஜெயித்த கட்சியில் இருந்தே இன்னொருவரை மீதிக் காலத்திற்கு MLAவாக இருக்க வைத்து விடலாம் என்கிற கருத்தைக் கொண்டவர்கள் தான்..
ஏனென்றால் இந்த இடைத் தேர்தல்களை ஆளுங்கட்சிகள் என்ன லட்சணத்தில் நடத்தும் என்பதும் உலகத்திற்கே தெரியும்.. தேவையற்றச் செலவுகளும், பேரங்களும் கேலிக்கூத்துக்களும் இருக்கும் என்பதால் தான் பலரும் இடைத்தேர்தலே வேண்டாம், ஏற்கனவே ஜெயித்த கட்சியிலேயே ஒருவரை மீண்டும் தேர்ந்தெடுத்து விடலாம் என்கிறார்கள்.. பெரும்பாலும் எதிர்க்கட்சிகளும், பல சிறிய கட்சிகளும் இடைத்தேர்தல்களை ஏதாவது ஒரு சாக்குச் சொல்லிப் புறக்கணித்து விடுவதும் இதனால் தான்.. ஏதோ தேர்தல் நடத்தியாக வேண்டுமே என்கிற கடமைக்காக பெயருக்கு நடத்தப்படுபவை இடைத் தேர்தல்கள்..
சரி இப்ப மேட்டருக்கு வாரேன்.. ஒரு அரசியல்வாதி.. அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார், நான் சட்டசபைத் தேர்தலில் தான் நிற்பேன் என ஒரு குறிப்பிட்டத் தேர்தலை.. அவரிடம் போய் வார்டு கவுன்சிலர் தேர்தலில் இருந்து பாராளுமன்றத் தேர்தல், பாகிஸ்தான் அதிபர் தேர்தல்னு எது நடந்தாலும் “நீங்க இந்தத் தேர்தல்ல நிப்பீங்களா?”ன்னு மைக்கை நீட்டிக்கொண்டு நம் மீடியாக்கார முட்டாள்கள் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் கேட்கிறார்கள்..
அந்த ஆளும் கேப்டன், பிரேமலதா, இளையராஜா மாதிரியெல்லாம் இவர்களை டீல் செய்யாமல் மரியாதையாக, “எப்பா நான் சட்டசபைக்குத் தேர்தல் வரும் போது தான் நிப்பேன்”னு தன்மையாகச் சொல்கிறார்.. இவர்கள் உடனே ஃப்ளாஷ்நியூஸ் போடுகிறார்கள், ”ரஜினி பாராளுமன்றத் தேர்தலில் நிற்கவில்லை”, “இடைத்தேர்தலிலும் ரஜினி நிற்கவில்லை” என..
ஏன்டா டேய் அவர் தான் ஒரு வருசம் முன்னாடி இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கார் சட்டசபைத் தேர்தல் தான் இலக்குன்னு.. அப்பப்ப செய்தி பாக்குற எனக்கே இது நல்லா ஞாபகம் இருக்கு.. டெய்லி நியூசுக்காக நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் உங்களுக்கு மட்டும் மறந்து போயிருதா? இல்ல, ’24 மணி நேரம் சேனல் ஆரம்பிச்சிட்டோமே, எதையாவது போட்டு ஆகணுமே’ங்கிறதுக்காக ஒரே செய்தியை மாசத்துக்கு ஒருக்க வேற வேற மாதிரி ட்விஸ்ட் பண்ணி போடுறீங்களா?

எப்பா செய்திச் சேனல் ஓனர்களா, கொஞ்சமாவது சொந்த புத்தி இருக்குற ஆளுங்கள உங்க சேனல்கள்ல ரிப்போர்ட்டரா போடுங்க.. இவைங்க அரைவேக்காட்டுத்தனமா இருந்துக்கிட்டு எங்க உயிரை வாங்குறது மட்டும் இல்லாம, அப்பப்ப மிஸஸ் கேப்டன் மாதிரி ஆளுங்கக்கிட்ட செருப்படி வேற வாங்கி அசிங்கப்பட்டு உங்க சேனல் பேரையும் கெடுக்குறாய்ங்க.. எப்பா ரிப்போர்ட்டர்ஸ்களா கொஞ்சமாவது நாகரீகம் & பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.. பொதுமக்களை இரிடேட் செய்யாதீர்கள்.. உங்கள் அமெச்சூர்த்தனத்தை நம்பி மீம்ஸ் போட்டு சுய இன்பம் அடைய இங்க இன்னொரு அறிவுகெட்டக் கூட்டமும் இருக்கு.. அதுகளுக்கு டிவில எந்த நியூஸ் வந்தாலும் முன்னப்பின்ன இருக்குற விஷயங்கள யோசிக்கவும் தெரியாது, புத்தியும் வேலை செய்யாது.. ஸ்ட்ரெயிட்டா வடிவேலு படம் போட்ட மீம் தான்.. நல்ல ஜோடிப்பொருத்தம்டா ஏர்ல பூட்டுன எருமை மாதிரி.. நல்ல மீடியா, நல்ல சோஷியல் மீடியா, கருமம் என்று முகநூலில் பொங்கியிருக்கிறார் ராம்குமார். சிவகாசிக்காரன் என்று அந்தநாட்களில் blog எழுதிக் கொண்டிருந்த இளைஞர் இவர். 

அவசர அவசியமாகி வரும் தேர்தல் சீருத்தங்கள் குறித்து இன்றைய இளைஞர்கள் மேம்போக்காகப் பேசி அப்புறம் மறந்து விடுகிறார்களோ என்ற ஆதங்கத்தைத்  தூண்டிவிட்ட ஆரம்பவாசகங்களுடன் இருந்த பகிர்வு! எடுத்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு எங்கெங்கோ பயணித்து ஊடக முதலாளிகளுக்கு புத்தி சொல்கிற மாதிரிப்போய் விட்டதோ? 

*******

தனிமனிதத்துதி பாடுவதிலேயே வீணாய்ப்போன காங்கிரசும் கழகங்களும், தாங்களும் கெட்டு, இன்று அரசியல் சூழலையும் எவ்வளவு கெடுத்து வைத்திருக்கிறார்கள்?அவர்கள் அப்படியென்றால் எதிர்வினை இல்லாமல் போய்விடுமா என்ன?  பொன்மாலைபொழுது   பதிவர் மாணிக்கம் எங்கே இருந்து இந்த சீனி சக்கரை சித்தப்பா படத்தைப் பகிர்ந்தாரோ தெரியாது! அதே ரகத்தில் வருவதுதான்  சாட்டை என்ற சேனலில் நாம் தமிழர் துரை முருகன் செய்கிற அரசியல் நையாண்டியும்!

அந்த நேரத்துக்குச் சிரிப்பு வந்தாலும், நம்மூர் அரசியல் இன்னமும் இப்படிச் சீரழிந்துகொண்டிருக்கிறதே என்ற கவலையும் வருகிறதே!


என்ன செய்யப் போகிறோம்?

வேறொரு தளத்திலிருந்து தொடர்புடைய பதிவாக  

முஷரப் யார் எங்களுக்கு அறிவுரை சொல்ல?  

          

       

Saturday, February 23, 2019

சட்டென்று மாறுமே வானிலை! அரசியல் இன்று!

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரம் வானூரில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்து அரசியல் தீர்மானத்தை வாசித்துப் பேசியதில் அதிமுகவுடனான கூட்டணி இயற்கையானது என்று சொல்லியிருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது .அதிமுகவுடன் தான் கூட்டு! அந்தக் கூட்டணியில் தான் பாஜகவும் சேர்ந்திருப்பதாக!  ஹிந்து  நாளிதழில் வாசகர் கருத்து இப்படி! 
மருத்துவர் ராமதாசு தனது மகன் அன்புமணிக்காக ஒரு பசையுள்ள கூட்டணியை முடிவு செய்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை! நேற்றோ அதற்கு முன்போ என்ன பேசினோம் என்பதை வைத்து இங்கே அரசியல் செய்யப்படுவதில்லை என்பதைப் புரிந்துகொண்டால் ராமதாசு என்று மட்டுமில்லை, சிலகாலத்துக்கு முன்பு திமுக காங்கிரஸ் இரண்டையும் கழுவிக்கழுவி ஊற்றிய மதிமுக வைகோவும் விடுதலைச் சிறுத்தைகள் தொல் திருமாவளவனும் கூட, இங்கே உத்தமர்களாகப் பேசிக் கொண்டிருப்பதும் புரியும்!
பாமகவின் வழக்கறிஞர் பாலு இந்த நேர்காணலில் ஒரு விசித்திரமான தகவலைச் சொல்கிறார். UPA ஐமு கூட்டணிக்குழப்பம் வெர்ஷன் ஒன்றில் பாமக இருந்த   காலத்தில் ஒரு ஊழல் புகாரும் இல்லையாம்! அதே ஐக்கிய ஊழல் கூட்டணி வெர்ஷன் 2 இல் என்ன என்ன கிளம்பின என்று போகிற போக்கில் அடித்து விட்டுப் போகிறார் பாருங்கள், நம்முடைய அரசியல் போகிற போக்கைப் பார்த்து வேதனைப்படாமல் எப்படி இருக்க முடியும்?  வருத்தம் தீர்க்க ஒரு ஒன்றரை நிமிட வீடியோ!  
விசிக பாமக  போன்ற நிறைய  உதிரிகளைக் களைய வேண்டிய அவசியத்தை இப்போதல்ல, சிலகாலமாகவே நான் சொல்லி வருவதை எனக்கே மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் போல!

என்ன, வானிலை மாறுதே என்கிறீர்களா? என்னுடைய அரசியல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை! 


Friday, February 15, 2019

எல்லோரும் இந்நாட்டு மன்னர்! விரலில் மை வைக்கும் வரை!

இங்கே மாற்று அரசியல் , அரசியல் மாற்று என்ன என்ற தெளிவான புரிதல் இல்லாமலேயே, அரசியல் களம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக மாறிக் கொண்டே வருவதில், புதிய மாற்றங்கள் என்ன வந்து விடுமென்று நினைக்கிறீர்கள்?
மாற்றத்தை நோக்கி என்று தலைப்பு வைத்ததனாலே மட்டும் மாற்றத்துக்கான வழிமுறைகள் பேசப்படும் என்று எதிர்பார்ப்பதே கூட இங்கே தவறாகத்தான் இருக்கிறது.இங்கே ஒரு பத்திரிகையாளர், ஓட்டு வாங்கி ஜெயித்ததனாலேயே அவருக்குத்தான் மொத்தகுத்தகை என்று சொல்வது ஏற்புடையதுதானா?

ஒருவிரல் புரட்சி என்று சொல்லப்படுகிற winner takes all  வாக்குச் சீட்டு ஜனநாயகத்தில் தான் எத்தனை எத்தனை கோளாறுகள்? ஒருமுறை ஒருத்தனுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்காக, ஐந்துவருடங்கள் அந்தநபர் என்ன செய்தாலும் சகித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? சில காலத்துக்கு முன்னால் right to recall தேர்ந்தெடுத்த நபரைத் திரும்ப அழைக்கும் உரிமை வேண்டுமென்கிற குரல் இங்கேயும் எழுந்தது நினைவு இருக்கிறதா?
எப்போது இந்தக்கூத்தெல்லாம் நடந்தது என்கிறீர்களா? இங்கே அதைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். ஆனால். இங்கே  முதலில் வாக்களிக்கிற மகாஜனம், என்ன தெரிந்து, நல்லவனைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்று புரிந்துதான் ஓட்டுப் போடுகிறார்களா? பெரும்பாலான தருணங்களில், இங்கே ஓட்டுப்போடுவதே, அவனைப் பிடிக்காது அதனால் இவனுக்குப் போடுகிறேன் என்கிற நெகடிவ் ஓட்டாகத் தான் இருக்கிறது, கவனித்திருக்கிறீர்களா? 

இன்னார் வரவேண்டும் என்று தெளிவாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறைவு. கணிசமான பகுதி,யார் ஜெயிப்பார்கள் என்று படுகிறதோ, அங்கேயே கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுப் போடுகிற ரகம்! ஆக எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைத்தும் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமலேயே 1952 முதல் இதோ எதிர்வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் என்றிருக்குமானால் யாரை நொந்து கொள்வது? 
தேர்தல் என்றால் இதுமாதிரி காமெடிகள் இல்லாமல் இருக்குமா?   
மாற்றுக்கருத்துகளைத் தேடிப் படிப்பவன் நான்! எழுத்தாளர் ஜீவி சொன்னாரே என்பதற்காக கமென்ட் மாடரேஷனை விலக்கிவைத்திருந்தது தவறு என்று காண்பித்துக் கொடுத்த மணிவண்ணன் மாதிரி ஆசாமிகளுக்கு நன்றி.  

பதிவின் உள்ளடக்கத்துக்கு சம்பந்தமில்லாதவை, வெட்டி ஓட்டுகிற போஸ்டர்கள், பின்னூட்டங்களில் கறாராக நிராகரிக்கப்படும்..

               

Thursday, February 7, 2019

அரசியல் களம்! சட்டென்று மாறுமே வானிலை!

நேற்றுவரை எதிர்முழக்கம் செய்து அதிமுகவின் காவல் தெய்வமாக விமரிசனம் காவிரிமைந்தனால் மட்டும் வர்ணிக்கப்பட்ட தம்பிதுரை (பாவம்,அவரே அப்படிச் சொல்லிக் கொள்ள மாட்டார்) இங்கே  எப்படி உல்டா அடிக்கிறார் பாருங்கள்! பாஜகவோடு கூட்டணி இல்லை என்று சொல்ல முடிகிறதா?   



இங்கே அரசியல் களமும் சரி, அரசியல் கூட்டணிகளும் சரி, வானிலை அறிக்கைபோல மாறிக்கொண்டே இருப்பவை என்பது எத்தனை உண்மை!கவனித்துப் பார்த்தால், கூட்டணி சேருகிற ஒவ்வொரு கட்சியும், தலைவர்களும் survival தாங்கள் பிழைத்திருப்பதன் பொருட்டே அணி மாறுகிறார்கள் என்பது புரியும். சிறு காணொளிதான்!

தத்துவங்களோ, சரியான அரசியல் பார்வையோ, ஒரு கட்சியின் அரசியல்பாதையை தீர்மானிப்பதில்லை. உனக்கு இவ்வளவு வருகிறதே! எனக்கு எவ்வளவு தருவாய் என்கிற பங்கீட்டுக் கணக்கே கூட்டணிக் கணக்காகவும் இருப்பது , புரியாதவர்களா நாம்?


கூட்டணிகள் சேருவது மட்டுமே வெற்றியைத் தந்து விடுமா? நல்ல கேள்விதான்! கடந்தகால அனுபவங்கள் வேறு மாதிரியாகச் சொல்கிறதே! என்ன செய்ய? பா.ம.க-வைக் கூட்டணிக்குள் சேர்ப்பது தொடர்பாக தி.மு.க-வுக்குள் மோதல் வெடித்துள்ளது. `துரைமுருகனும் ஜெகத்ரட்சகனும் ராமதாஸ் மீது பாசத்தில் உள்ளனர். ஆனால், ஆ.ராசா உட்பட வடக்கு மண்டல மா.செ-க்கள் பலரும் ராமதாஸ் வருவதை விரும்பவில்லை. இதை ஸ்டாலினிடமும் தெளிவுபடுத்திவிட்டனர்' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

நம்மால் என்னசெய்ய முடியும் என்கிறீர்களா? அதான் மேலே வீடியோவுல ஜெய் சங்கர் வசனம் தெளிவாகக் கேட்கிறதே! 

அதற்கும் மேலே என்றால்? winner takes all என்கிற தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் அவசியம்!

எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

              

Friday, January 25, 2019

தேர்தல் நேரத்து பிளாக்மெயிலா? ஜாக்டோ ஜியோ போராட்டம் !

ஜாடை ஒன்றே போதுமா?

காங்கிரஸ் கட்சி அப்படித்தான் நினைக்கிற மாதிரித் தெரிகிறது! தினசரி தளத்தில் இதைச் சொல்கிற விதமே மிகவும் அருமையாக!

நேரு உல்லாசப்பிரியர் என்று தெரிந்த அளவுக்கு, மகள் இந்திரா எப்படிப்பட்ட தறுதலை, ராவடி என்பதை எம் ஓ மத்தாய் தவிர இன்னும் பலபேர் புத்தகமாக எழுதியும் கூட, வெளியே பரவலாகத் தெரியவில்லையே என்கிற மனக்குறை எனக்குண்டு!
ஒரு தொலைகாட்சி விவாதத்தில் காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் பேசியத்தைக் கேட்ட பிறகு காங்கிரஸ்காரர்களே பழைய குப்பைகளைக் கிளறி எடுக்க வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிரகாசமாகத் தெரிகிறது.

போஸ்டரில் நாயகனாக வருவார் என்று எதிர் பார்க்கப் பட்டவரை போஸ்டர் ஒட்டுகிற விடலையாக கார்ட்டூன் வரைந்து சந்தோஷப் பட்டிருக்கிறது, வேறு யார்? ஹிந்து நாளிதழ் தான்!
அமேதி தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டு ராகுல் காந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற விவசாயிகள் பலர் ‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ எனக் கூறி ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்டனர். இது கூட ஹிந்து செய்திதான்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு பொ அகத்திய லிங்கம் ஜாக்டோஜியோவுக்காக இப்படி உருகுகிறார் கள யதார்த்தமோ வேறு மாதிரி இருக்கிறது. நேரெதிரான பாசிட்டிவ் செய்தி ஒன்று இங்கே

சிரியர்கள் அரசு ஊழியர்கள் தேர்தல் காலத்தை ஒட்டி, பிளாக்மெயில் செய்கிற மாதிரிப் போராட்டம் நடத்துவது ஒரு தொடர்கதையாகிக் கொண்டே இருப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது. Accountability கொஞ்சமும் இல்லாமல் சலுகைகள், சம்பளம் கேட்பது, இங்கே கழகங்கள் ஊட்டி வளர்த்த கோளாறு. ஜெயலலிதா ஒருமுறை சாட்டையைச் சுழற்றினார். அடங்கி கிடந்தார்கள். இவர்களிடம் தேர்தல் வேலை கொடுக்கப்படுவதை வைத்து இப்போது மீண்டும் துள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
பின்னணியில் ஒரு கழகம் இருப்பதும் கூட இங்கே எல்லோருக்குமே தெரிந்தது தான்!

திகம் முடிவளர்ந்தால் மொட்டை என்கிற கதை நிகழ்வது எப்போதோ?

ருத்துவர் ராமதாஸ் ட்வீட்டரில் ஏதாவது ஒரு செய்தியைப் பகிர்ந்தால், உள்ளூர் நிலவரத்தோடு முடிச்சுப்போட்டு எதிர்க்கேள்வி கேட்பவர்கள் இங்கே தமிழ்நாட்டில் அதிகம்!

8:33 PM - 24 Jan 2019

திருச்சியில் தேசம் காப்போம் என்று கூட்டம் நடத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியைத் தனக்காக கெலித்து விட்டார்! ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்காக என்னென்னவெல்லாம் கூவவேண்டி இருக்கிறது!!

பாட்டாளி மக்கள் கட்சி என்ன செய்யப்போகிறது? மருத்துவர் அதைப் பற்றி இன்னமும் ஒன்றும் சொல்லக் காணோம்!



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)