Showing posts with label எங்கே போகிறோம். Show all posts
Showing posts with label எங்கே போகிறோம். Show all posts

Friday, October 23, 2020

ஆட்டமென்ன சொல்லுவேன் தோழி நான்? #குஷ்பு

எழுச்சித்தமிழன் என்று எந்த நேரத்தில் #விசிக தலைவர் திருமாவளவனுக்கு அடைமொழி கொடுத்துக் கூப்பிட ஆரம்பித்தார்களோ? மனிதர் நாளை அக்டோபர் 24 ஆம் தேதி விசிக   நடத்தவிருக்கும் மனுஸ்ம்ருதிக்கு எதிரான போராட்டத்துக்காக திருமாவளவன் பேசியது ஒரு பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது திருமா பெண்களுக்கு எதிராக அநாகரீகமாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டுமென்று குஷ்பு அளித்திருக்கிற பேட்டி கீழே! வீடியோ 21 நிமிடம்.   


சனாதன தர்மத்தில் பெண்கள் பரத்தையர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமாவளவனின் பேச்சை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமை சங்கத்தின் ஆந்திர மாநில அமைப்பு சார்பில திருமாவளவன் பேச்சை கண்டித்து அவருடைய உருவ பொம்மை எரிப்பு போராட்டம் திருப்பதியில் நடைபெற்றது.

திருப்பதியில் நாலுகால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவனுக்கு எதிராகவும், அவருடைய பேச்சு கண்டிக்கும் வகையிலும் கோஷம் எழுப்பிய சங்கத்தின் ஆந்திர மாநில தலைவர் கிரண் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திருமாவளவன் உருவபொம்மை எரித்து போராட்டம் நடத்தினர்.

மேலே செய்தியும் படங்களும் நன்றியுடன் இங்கிருந்து 


தமிழக அரசியலில் ஒரு குறைந்தபட்ச இடத்தையாவது பெறவேண்டும் என்கிற ஆர்வக்கோளாறில் மிகவும் புரட்சிகரமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு விசிக தலைவர் சமீபநாட்களில் பேசிவருவதற்குத் தமிழகத்தில் அத்தனை பெரிதாக ஆதரவு எதையும் காணோம். இருக்கும் கொஞ்சநஞ்ச தலித் ஓட்டுகளும் காணாமல் போய் விடுகிற சாத்தியக் கூறுகள்  நிறையவே இருக்கத் தான் செய்கிறது.
போதாக்குறைக்கு வருகிற சட்டசபைத் தேர்தல்களில் விசிக, திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது கழற்றி விடப்படுமா என்ற கேள்விக்கே இன்னமும் ஒரு தெளிவான பதில் இல்லாத நேரத்தில், இப்படி ஒரு சர்ச்சை வேறு.
வீரமணிகளே தொண்டை வரளக் கத்திக்  கூப்பாடு போட்டு ஓய்ந்துபோன ஒரு பிரச்சினையை திருமா இப்போது கையிலெடுத்திருப்பதில் அரசியல் செய்ய வேறு விஷயங்களே இல்லாமல் மிகவும் வறண்டு போய்க் கிடப்பது நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது!
திருமாவளவனுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்குமே உண்மையான பிரச்சினைகள் மீது மக்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்கிற எண்ணமே இல்லாமல் போயிருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.
என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்?  
 
    

Saturday, May 2, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

இன்றைக்குப் பார்த்த செய்திகளில் முக்கியமானதாக எனக்குப் படுவது #MakeChibaPay என்ற ஒற்றை முழக்கத்துடன் சில நாடுகள் முன்னெடுத்திருக்கிற சில விஷயங்கள்தான்! சீனா தன்னுடைய ஆதிக்கவிஸ்தரிப்புக் கனவுகளில்  நிறையவே தப்புக்கணக்குப் போட்டதுதான் மூலகாரணம், nCov 19 வைரஸ் சீனாவின் கனவுகளை மொத்தமாகவே முடமாக்கிவிடும் போலத்தான் நிலவரம் இருக்கிறது.

   

இந்தியா இந்தவிஷயத்தில் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது உசிதம்தானா? கேள்வி கேட்கலாம் தான்! ஆனால் பதில் சொல்வாரைத்தான் காணோம்! சீனாவிலிருந்து வளர்ந்த  நாடுகள் பலவும் தங்களுடைய தொழிற்சாலைகளை மூடிவிட்டுவெளியேறத் தயாராகி வருவதில் இந்தியாவுக்கு ஆதாயம் என்று பேசப்பட்டவை கூட வெறும் ஊகங்களாக மட்டுமே நின்று போயின. சீனாவை விட்டு வெளியேறும் உற்பத்திக்கூடங்களில் பெரும்பாலானவை வியட்நாமைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. இன்றைக்கு உலகின் மிக மலிவான 
உற்பத்திக்  கூடமாக இருக்கும் சீனாவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியாவை கொண்டுபோய் வைக்கிற அளவுக்கு இந்தியத் தொழிலதிபர்கள் எவரும் தயார் நிலையில் இல்லை. அரசின் வரிச் சலுகைகளில் மட்டுமே ஒட்டுண்ணிகளாக உயிர்வாழப் பழகியவர்களிடம் புது முயற்சிகள், தயாரிப்புக்கள் என்று சந்தைக்குத் தகுந்தபடி மாறுங்கள் என்று சொன்னால் எப்படி? குறைந்தபட்சம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் கூடத் தங்களை புதுப்பித்துக்கொள்ள, உளநாட்டிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்  தயாராக இல்லாத ஒரு தொழில்துறையை என்னவென்று மதிப்பிடுவீர்கள்?  சீனாவும் இன்னும் பல நாடுகளும் முன்னெடுத்த RCEP பிராந்திய அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கி கொண்டது இந்தியத் தொழில்துறை இன்னமும் மாற்றத்துக்குத் தயாராக இல்லை என்பதனால் தான் என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக்கொள்ள வேண்டி வருகிறது. இப்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியிருக்கிற நெருக்கடி பலபுதிய வாய்ப்புக்களையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. 


இந்தக்கூத்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில்தான்! 

இன்றைக்கு படித்ததில் மிகவும் பிடித்தது: 

குட்டி தமிழ்வாணன்

ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார். எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார். கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

Worst Arrogance. Thinking too much of oneself. Superiority complex.

அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.

தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.

The advise you tell others is the advice you need to follow.

இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.

’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர்  ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.

அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .

அடுத்த கண்ண தாசன் இதழில் மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

வலையெழுத்து எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றும் R P ராஜநாயஹம் எழுத்தே சாட்சி.

மீண்டும் சந்திப்போம்.  
  
   

Monday, December 9, 2019

JNU வை இழுத்து மூடுங்கள்!

ஜவஹர்லால் நேரு பெயரை வைத்ததனாலேயே என்னவோ டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குழப்பங்களின் உச்சமாக ஆகிக் கொண்டிருக்கிறது. தறுதலைகளாகிப்போன இடது சாரி அரசியலும் ஓசிச்சோறும் பல்கலைக்கழகத்துக்கு வருவது படிப்பதற்காக அல்ல வெட்டி அரசியலும் ரகளைகளும் செய்வதற்காகவே என்றபோக்கு சமீப காலமாக வளர்ந்து விட்டது.


விடுதிக்கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து 40 நாட்களுக்கும் மேலாக JNU மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று ஜனாதிபதி மாளிகை நோக்கிப் பேரணி நடத்துவதற்காகத் திரண்ட மாணவர்கள் மீது டில்லிப் போலீஸ் லேசாகத் தடியடி நடத்தியதை வீடியோவில் தெளிவாகவே பார்க்க முடிகிற போதிலும் செய்தியாளர் திரும்பத் திரும்ப போலீஸ் மிருகத்தனமாக தடியடி நடத்தி மாணவர்களைத் தாக்கியதாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்பது தான் இங்கே சோனியா காங்கிரசுக்கு விலைபோன ஊடகங்களுடைய யோக்கியதை. படிக்கப் போகிறவனுக்கு படிப்பு முக்கியமில்லை, முழுநேர அரசியலில் இறங்குவதுதான் பிழைப்பு என்றாகிப் போன சீர்கேடடைந்த JNUவை ஒருசில வருடங்களுக்கு மூடி வைத்தால் என்ன? ஓசிச்சோற்றில் உடல்வளர்க்க இடதுசாரிகளுக்கு தங்கப்   புற்றையும் கொடுத்து தினமும் பாலும் முட்டையும் கொடுப்பானேன்? விரட்டி அடித்து துரத்திவிட்டு, சிலகாலம் மூடி வைத்தால் என்ன தவறு? கொஞ்சம் சொல்லுங்களேன்!

மாணவர்கள் அரசியல் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. ஆனால் படிப்பைக் கோட்டை விட்டு, முழுநேர அரசியல் செயல்பாடு அவசியமா? Catch them young என்று மாணவர்களிடையில் புகுந்து ஆள்பிடிப்பது இடது சாரிகளுக்குக் கைவந்த கலை, அப்புறம் காங்கிரஸ், பிஜேபி என்று பிற அரசியல்கட்சிகளும் களத்தில் குதித்தன. இடதுசாரிகள் செய்திருக்கிற பிழைகளில் மாணவர்களை அரசியலுக்கு இழுத்தது மிகப்பெரும் பிழை என்றுதான்  இத்தனை ஆண்டுகால அனுபவத்தில்  என்னால் சொல்ல முடிகிறது.

மாறுபட்ட கருத்து இருப்பவர்க.ளும்,  ஆரோக்கியமான உரையாடலைத்   தொடர விரும்புகிறவர்களும் கமென்ட் பாக்சில் வரலாம். வரவேற்கிறேன்  

மீண்டும் சந்திப்போம்.  

Wednesday, September 11, 2019

Quo Vadis! எங்கே போகிறோம்?

எங்கே போகிறோம்? மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான் இது! சோ எழுதிய நாடகம் ஒன்றின் தலைப்பு இதே பொருளைத் தரும் Quo Vadis! அகிலன் எழுதிய நாவல் ஒன்றின் தலைப்புக் கூட எங்கே போகிறோம் தான்! அகிலன் எழுதிய அந்தக்கதை இப்போது சுத்தமாக நினைவில் இல்லை.



யூட்யூப் தளத்தில் தேடிக் கொண்டிருந்தபோது கவண் படத்தில் இருந்து இந்த க்ளிப்பிங், நீண்ட நாள் கழித்து T ராஜேந்தரை செம form இல் பார்த்தபோது, எனக்குள் கிளைத்த கேள்வி எங்கே போகிறோம்? சமூகத்தின் முகம் காட்டும் கண்ணாடியாகத்  தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் நம்மை எங்கே  திசைமாறிச் செல்லத் தூண்டுகின்றன என்பதைப் புரிந்துகொண்டாலே எங்கே போகிறோம் என்பதும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதும் தெளிவாகிவிடும் என்பதைத்தான் செய்திகளின் அரசியல் என்ற ஹேஷ்டாகில் இங்கேயும் Consent to be ...nothing! தளத்திலும் எழுதிவருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். 


OPIndia தளத்தில் இங்கே ஊடகங்கள் எப்படி ஒரு செய்தியைத் திரித்துச் சொல்கிறார்கள்  என்பதை  . நீங்களே பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம்! கோயபல்ஸ் எல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும்! ஓலா, உபெர் பற்றிச் சொன்னது கூட சரி! ஆனால் லாரி, ட்ரக் வகையறா வாகனமும் விற்பனையில் படுத்துவிட்டதே என்று கேள்விகேட்கிறவர்கள் கவனத்துக்கு இப்படி ஒரு பதிலும் உலாவுகிறதே! தெரியுமா?

     
ஜெயமோகன் பற்றியோ சாரு நிவேதிதா பற்றியோ எழுதியே ஆகவேண்டிய எந்தவிதமான அரிப்போ கட்டாயமோ எனக்கு இல்லை என்றாலும், இது பதிவர் உண்மைத்தமிழனுக்காக! ஜெயமோகன் போல அல்லது அவரைவிடவும் இணையத்தில் எழுதிக்குவித்தவர் உண்மைத்தமிழன் என்பதால்! 


முடிவு பண்ணிட்டேன். ஆசானே இப்படி சொன்ன பிறகும் நாம இதுல இறங்கலைன்னா நாளைய சமூகம் நம்மளை எழுத்தாளரா நினைக்க வாய்ப்பே இல்லை.
ஸோ.. அடுத்த ஜனவரில இருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புத்தகம்ன்னு உண்மைத்தமிழன் வலைத்தளத்தில் இருக்கும் அனைத்து இலக்கியங்களையும் அமேசானில் கொட்டப் போகிறேன்.
ஆசான் அவைகளைப் படித்துவிட்டு "குப்பை" என்று வார்த்தை சொன்னால் போதும்..
பேரானந்தமடைவேன்..!
இந்த ஒரு வார்த்தைக்காகவே என் புத்தகங்கள் அமேசானில் பிய்த்துக் கொண்டு போகும் என்று உறுதியாய் நம்புகிறேன்..!
ஜெய் ஜெயமோகன்ஜி..!

சீனாதானா அவர் நினைத்ததை விட இன்னும் அதிககாலம் திஹார் சிறைவாசம் செய்யவேண்டியதிருக்கும் போல! 

எங்கே போகிறோம் என்பது தெரியாமலேயே எவ்வளவு செய்தி, அரசியலைக் கடந்துவந்திருக்கிறோம் என்பது இப்போது புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.   
   

Saturday, June 1, 2019

#SaturdayPost எங்கேபோகிறோம்? #அரசியல்களம்

தேர்தலுக்குப் பின் மத்திய அமைச்சரவை அறிவிக்கப் பட்டு, அமைச்சர்களும் தத்தம் துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படவும் ஆரம்பித்தாயிற்று. ஆனால் புதியதலைமுறை சேனல்  இன்னமும் அமைச்சரவையில் தமிழகத்துக்கு ஏன் இடம்தரவில்லை என்ற அக்கப்போர் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. என்ன கூவினாலும் இதனால் அவர்களுக்கும் சரி, பார்க்கிற தமிழர்களுக்கும் பைசா பிரயோசனமில்லை என்று தெரிந்தே கூவுகிறார்கள் என்றால் என்ன சொல்ல?


Maridhas M
SRM கல்லூரி மாணவர்கள் தற்கொலை சார்ந்து எந்த விவாதமும் எழுப்பாமல் தந்திரமாக நகர்த்தும் புதிய தலைமுறை டீவி கார்த்திகை செல்வன், கார்த்திகேயன் தொட்டு அனைவருக்கும் போன் செய்து எப்போது விவாதம் செய்வார்கள் என்று கேளுங்கள்.

முடிந்தால் நேரில் அவர்களை பிடித்து கேள்வி கேளுங்கள். இதை விடகூடாது. இவர்கள் விட மோசமான அயோக்கிய கும்பல் இந்த நாட்டில் வேறு இல்லை.
திமுக கம்யூனிஸ்ட் ஊடகம் நினைத்தால் எதையும் மறைப்போம் எதையும் பெரிதாக்குவோம் என்று திரிகிறார்கள்.
பத்திரிக்கைத் துறை என்ற பெயரில் முழுநேரம் அரசியல் கட்சிகளுக்கு, தங்கள் முதலாளிகளுக்கு அடிமை வேலை செய்யும் இந்த கூட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பவேண்டிய நேரம் இது. இந்த கூட்டம் தான் எவரையும் அவமானம் செய்யலாம் எதையும் தவறாக மக்களைத் தூண்டிவிடலாம் என்ற திமிர் பிடித்து அலைகிறார்கள்..
கார்த்திகேயன் , செந்தில் போன்றவர்கள் முழுநேர தேசவிரோத கருத்துக்களை பரப்பும் நெறியாளர்கள். போதுமான வகையில் இவர்கள் அதற்காக மறைமுகமாக பலனை அனுபவிக்கிறார்கள். இந்த விதமான பத்திரிக்கையாளர்கள் ஒழித்து கட்டவேண்டும்.
எனவே தொடர்ந்து தொலைப்பேசிக்கு அழைத்து போதுமான அழுத்தம் கொடுக்கவேண்டும், ஜனநாயக ரீதியாக ஏன் இதை பேசவில்லை விவாதம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புங்கள்..
திமுக ஸ்டாலின் ஏன் இன்னும் இதற்கு கருத்து தெரிவிக்கவில்லை???? கூட்டணி என்பதால் தப்பிக்க உதவுகிறதா???
எங்கே அந்த நக்கீரன் கோபால்????
-மாரிதாஸ்
மாரிதாஸ் இன்னும் சில கேள்விகளை எழுப்புகிறார்: 

அய்யா ஸ்டாலின் அய்யா எங்கய்யா இருக்க?????
இதை சொல்லும் போது என்ன புது பழமொழி சொல்லலாம் என சிந்தனையில் இருந்தீர்களா ஐயா????

உருது மொழியைக் கட்டாய பாடமாக்கினால் இரு மொழிக்கொள்கை என்ற தேன்கூட்டில் கல் வீசப்படாது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது இரட்டைநாக்கு என்றே பச்சையாகச் சொல்லிவிடவா?  உண்மைநிலவரம் தான் என்ன?


செய்திகளைப் படித்துவிட்டுத்தான் அறிக்கைகள் விடுகிறார்களா அல்லது டிவி, பேஸ்புக், வாடஸ்ப் பார்த்துவிட்டு அறிக்கை விடுகிறார்களா என்று நான் பல நேரம் வியப்பதுண்டு. இன்றும் தேசிய கல்விக் கொள்கை வரைவு (ஆம் வரைவறிக்கைதான்.இறுதி ஆணை அல்ல) பற்றிய கருத்துக்களும் அந்தக் கேள்வியை மீண்டும் எழுப்பின
அறிக்கை விடுகிறவர்கள் இந்தச் செய்தியை வாசித்திருப்பார்களா?
இந்தி பேசப்படும் மாநிலங்களிலும் ஆங்கிலம், இந்தி தவிர வேறு இந்திய மொழி ஒன்று மூன்றாவது மொழியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு  பரிந்துரை செய்துள்ளது (இது பிபிசி தமிழ்)
Promotion of Indian and Classical Languages and setting up three new National Institutes for Pali, Persian and Prakrit and an Indian Institute of Translation and Interpretation (IITI) has been recommended. (இது PIB செய்தி)  
சரி. சேனல்களில் இந்தச் செய்தியை எப்போது விவாதிப்பார்களாம்?  
'இன்னும் வளரணும் தம்பி...’ ’உதயநிதிக்கு பதவி கொடுக்க தயங்கும் திமுக தலைமை..!
#DMK #Udhayanidhi #MKStalin

ஹிந்தி திணிப்பு என்ற தமிழக ஊடகங்களின் பொய் பரப்புரை : ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட மாணவர்கள் தமிழ் கற்கலாம் – உண்மை என்ன?

   
மீண்டும் சந்திப்போம். 

Sunday, January 20, 2019

தமிழ்ப் பதிப்புத்துறையினர் மாறுவார்களா?


சமீப காலங்களில் தமிழ்ப் பதிப்புலகில் முன்னணி எழுத்தாளர்களெல்லாம் பதிப்பாளர்களாக மாறிவருகிற ஒரு விசித்திரச் சூழல் உருவாகியுள்ளது. எழுத்தாளர்கள் சொல்லும் முக்கியக் காரணம், தாங்கள் எழுதிய புத்தகங்களுக்குச் சரியான அளவில் ராயல்டி கிடைப்பதில்லை. பதிப்பாளர்கள், எத்தனை புத்தகங்கள் அச்சடிக்கிறார்கள், எவ்வளவு விற்பனையாகிறது, மீதம் எவ்வளவு உள்ளது போன்ற தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. எழுத்தாளர்களைப் பதிப்பாளர்கள் விலைபொருளாகப் பார்ப்பதாகவும், உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்றும் எழுத்தாளர்கள் தரப்பில் மனம் குமுறுகின்றனர் என்று ஆரம்பிக்கிறது இந்தச் சிறு செய்திக்கட்டுரை 

சென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை; ஜனவரி 4-ம் தேதி தொட!ங்கிய கண்காட்சியில் 17 நாட்களில் 75 லட்சம் புத்தகங்கள் விற்பனை

Saturday, January 19, 2019

கீச்சுகளில் உலா! சமுதாய வீதி எப்படி இருக்கிறது?

எங்கள்Blog ஸ்ரீராம் சிவாஜியைப் பற்றி நேற்று முன்தினம் போட்டிருந்த பதிவு  சமுதாய வீதி புதினத்தை திரும்பவும் வாசிக்க வைத்தது. ஆசிரியர்  புதினத்துக்கு சமுதாய வீதி என்று எதனால் பெயர் வைத்தார் என்பது அந்தநாட்களில் அவ்வளவாகப் பிடிபட்டதில்லை. கூத்தாடிகளை, வைக்கவேண்டிய இடத்தில் வைக்காமல் நடுவீட்டுக்குள் வைத்துக் கொண்டாடுகிற ஒரு சமுதாயமாக மாறிச் சீரழிவதை அன்றே ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கண்டு சொன்னாரோ? Twitter கீச்சுகளில் எங்கேபோய்க் கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்க்கும்போது உண்மையிலேயே விசனப்பட வேண்டியிருக்கிறது

Last one for now I promise - When random men want me to prove to them that I am a ‘patthini’ and haven’t slept with anyone else except my husband. As I said - we tolerate a LOT. We also Block, mute a LOT more. End.

பொதுவெளியில் பெண்களிடம் பேசுகிற முறையா இது? தமிழர் பண்பாடு, நாகரீகம் இதுதானா? முந்தின கீச்சுகளில் ஆபாசமான வார்த்தைகளில் அர்ச்சித்ததை பொதுவெளியில் சொல்வதற்கு ஆண்மகனான எனக்கே வெட்கமாக இருக்கிறது. 

எங்கே போகிறோம்? எப்போது மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளப் போகிறோம்?

சினிமா நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படங்களில் முகம் பிரபலமான உடனேயே முதலமைச்சர் கனவும் இங்கே வந்து விடுவது வரவேற்கத் தகுந்ததுதானா?

தெலுகுவாரி ஆத்மகௌரவம் கோசம் என்று தெலுகு தேசம் கட்சியை என் டி ராமராவ் ஆந்திராவில் ஆரம்பிப்பதுடன் முடிகிற NT ராமாராவின்  biopic வாழ்க்கை சரிதத்தின் முதல்பகுதி பத்துநாட்களுக்கு முன்னால் ரிலீஸாகியிருக்கிறது 

   
மூன்று முறை முதல்வராக NTR இருந்தது ஏழே  ஆண்டுகள்தான்! ராமனாகவும் கிருஷ்ணனாகவும் நடித்தவரை ஜனங்கள் தெய்வமாகவே ஏற்றுக் கொண்டது இங்கே வேறெந்த நடிகனுக்கும் கிடைக்காத கௌரவம்! அந்த ஒரு விஷயத்தை சுமார் மூன்று மணி நேரம் ஓடுகிற இந்தப் படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.  

நூறுகிலோமீட்டர் வேகத்தில் ஓடிவருகிற ட்ரெயினை ஒருகை நீட்டியே நிறுத்துகிற சூப்பர் காட்சிகளில், பன்ச் டயலாக் டெலிவரிகளில் புகழ்பெற்ற நடிகர், NTR மகன் பாலகிருஷ்ணா இந்தப்படத்தில் NTR ஆக நடித்து இருப்பதில் தந்தையைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆனாலும், பாக்ஸ் ஆபீசில் படம் தேறவில்லை என்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவுக்கு இது எந்தவிதத்திலும் உதவப்போவதில்லையோ? 

யூட்யூபில் பிரசாந்த் facts  என்று  NTR biopic என்று இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். நேரமிருந்தால் பார்க்க  முதல் பகுதி         இரண்டாம் பகுதி 

கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதை அங்கே ஆந்திராவில் மட்டுமல்ல, இங்கே தமிழகத்திலும் நடந்திருக்கிறதே! புரிகிறதா? நினைவுக்கு வருகிறதா?

  
       

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)