எங்கள்Blog ஸ்ரீராம் சிவாஜியைப் பற்றி நேற்று முன்தினம் போட்டிருந்த பதிவு சமுதாய வீதி புதினத்தை திரும்பவும் வாசிக்க வைத்தது. ஆசிரியர் புதினத்துக்கு சமுதாய வீதி என்று எதனால் பெயர் வைத்தார் என்பது அந்தநாட்களில் அவ்வளவாகப் பிடிபட்டதில்லை. கூத்தாடிகளை, வைக்கவேண்டிய இடத்தில் வைக்காமல் நடுவீட்டுக்குள் வைத்துக் கொண்டாடுகிற ஒரு சமுதாயமாக மாறிச் சீரழிவதை அன்றே ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கண்டு சொன்னாரோ? Twitter கீச்சுகளில் எங்கேபோய்க் கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்க்கும்போது உண்மையிலேயே விசனப்பட வேண்டியிருக்கிறது
பொதுவெளியில் பெண்களிடம் பேசுகிற முறையா இது? தமிழர் பண்பாடு, நாகரீகம் இதுதானா? முந்தின கீச்சுகளில் ஆபாசமான வார்த்தைகளில் அர்ச்சித்ததை பொதுவெளியில் சொல்வதற்கு ஆண்மகனான எனக்கே வெட்கமாக இருக்கிறது.
எங்கே போகிறோம்? எப்போது மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளப் போகிறோம்?
சினிமா நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படங்களில் முகம் பிரபலமான உடனேயே முதலமைச்சர் கனவும் இங்கே வந்து விடுவது வரவேற்கத் தகுந்ததுதானா?
தெலுகுவாரி ஆத்மகௌரவம் கோசம் என்று தெலுகு தேசம் கட்சியை என் டி ராமராவ் ஆந்திராவில் ஆரம்பிப்பதுடன் முடிகிற NT ராமாராவின் biopic வாழ்க்கை சரிதத்தின் முதல்பகுதி பத்துநாட்களுக்கு முன்னால் ரிலீஸாகியிருக்கிறது
மூன்று முறை முதல்வராக NTR இருந்தது ஏழே ஆண்டுகள்தான்! ராமனாகவும் கிருஷ்ணனாகவும் நடித்தவரை ஜனங்கள் தெய்வமாகவே ஏற்றுக் கொண்டது இங்கே வேறெந்த நடிகனுக்கும் கிடைக்காத கௌரவம்! அந்த ஒரு விஷயத்தை சுமார் மூன்று மணி நேரம் ஓடுகிற இந்தப் படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நூறுகிலோமீட்டர் வேகத்தில் ஓடிவருகிற ட்ரெயினை ஒருகை நீட்டியே நிறுத்துகிற சூப்பர் காட்சிகளில், பன்ச் டயலாக் டெலிவரிகளில் புகழ்பெற்ற நடிகர், NTR மகன் பாலகிருஷ்ணா இந்தப்படத்தில் NTR ஆக நடித்து இருப்பதில் தந்தையைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆனாலும், பாக்ஸ் ஆபீசில் படம் தேறவில்லை என்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவுக்கு இது எந்தவிதத்திலும் உதவப்போவதில்லையோ?
யூட்யூபில் பிரசாந்த் facts என்று NTR biopic என்று இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். நேரமிருந்தால் பார்க்க முதல் பகுதி இரண்டாம் பகுதி
கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதை அங்கே ஆந்திராவில் மட்டுமல்ல, இங்கே தமிழகத்திலும் நடந்திருக்கிறதே! புரிகிறதா? நினைவுக்கு வருகிறதா?
Last one for now I promise -
When random men want me to prove to them that I am a ‘patthini’ and haven’t slept with anyone else except my husband.
As I said - we tolerate a LOT. We also Block, mute a LOT more.
End.
பொதுவெளியில் பெண்களிடம் பேசுகிற முறையா இது? தமிழர் பண்பாடு, நாகரீகம் இதுதானா? முந்தின கீச்சுகளில் ஆபாசமான வார்த்தைகளில் அர்ச்சித்ததை பொதுவெளியில் சொல்வதற்கு ஆண்மகனான எனக்கே வெட்கமாக இருக்கிறது.
எங்கே போகிறோம்? எப்போது மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளப் போகிறோம்?
சினிமா நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படங்களில் முகம் பிரபலமான உடனேயே முதலமைச்சர் கனவும் இங்கே வந்து விடுவது வரவேற்கத் தகுந்ததுதானா?
தெலுகுவாரி ஆத்மகௌரவம் கோசம் என்று தெலுகு தேசம் கட்சியை என் டி ராமராவ் ஆந்திராவில் ஆரம்பிப்பதுடன் முடிகிற NT ராமாராவின் biopic வாழ்க்கை சரிதத்தின் முதல்பகுதி பத்துநாட்களுக்கு முன்னால் ரிலீஸாகியிருக்கிறது
நூறுகிலோமீட்டர் வேகத்தில் ஓடிவருகிற ட்ரெயினை ஒருகை நீட்டியே நிறுத்துகிற சூப்பர் காட்சிகளில், பன்ச் டயலாக் டெலிவரிகளில் புகழ்பெற்ற நடிகர், NTR மகன் பாலகிருஷ்ணா இந்தப்படத்தில் NTR ஆக நடித்து இருப்பதில் தந்தையைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆனாலும், பாக்ஸ் ஆபீசில் படம் தேறவில்லை என்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவுக்கு இது எந்தவிதத்திலும் உதவப்போவதில்லையோ?
யூட்யூபில் பிரசாந்த் facts என்று NTR biopic என்று இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். நேரமிருந்தால் பார்க்க முதல் பகுதி இரண்டாம் பகுதி
கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதை அங்கே ஆந்திராவில் மட்டுமல்ல, இங்கே தமிழகத்திலும் நடந்திருக்கிறதே! புரிகிறதா? நினைவுக்கு வருகிறதா?
No comments:
Post a Comment