இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே பேசப்பட்ட புத்தகம் இர்விங் வாலஸ் எழுதிய The R Document இது 1976 ஏப்ரலில் வெளியானது.
வார்த்தைகளில் மட்டும் தான்என்பதைச் சொல்லித் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!?
அதிகமான விவரங்கள் வேண்டுமானால் இந்த லின்கில் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்!
அதென்ன அவ்வளவு ரகசியமான R Document?
The R Document!
நீதிமுறையில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரத்தோடு கதை ஆரம்பிக்கிறது! நீதிமுறையைப் பாதுகாக்க முனைகிற அவருடைய உயிருக்கே உலை வைப்பதாகவும் கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

கிறிஸ்டோபர் காலின்ஸ்!
அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரலாகப் பதவியேற்கிறார். அந்தத் தருணத்தில், அமெரிக்காவில் பெருகி வரும் வன்முறை, குற்றங்களைக் களைவதற்காக, அமெரிக்க அதிபர் அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர உத்தேசித்திருக்கிறார். 35 வது திருத்தம் என்று அந்த முயற்சி அழைக்கப் படுகிறது. தேச நெருக்கடி காலங்களில், உரிமைகள் குறித்த அரசியல் சாசன உத்தரவாதத்தை அடியோடு ரத்து செய்ய இந்தத் திருத்தம் வகை செய்வதாக இருக்கிறது. எப்போதும் போல ஆதரிக்கிறவர்கள், எதிர்க்கிறவர்கள் என்று இரண்டு தரப்புமே, இந்த உத்தேசத் திருத்தத்தின் மீது சவுண்டு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
அட்டர்னி ஜெனரலான காலின்சுக்கோ இந்த உத்தேசத் திருத்தம், அவசியமில்லை என்று பட்டாலும், அதை அடியோடு எதிர்க்கிறவர்கள் கூச்சலிடுகிற மாதிரி, அதிகார துஷ்ப்ரயோகம் செய்யப் படாது, இருக்காது என்றே நம்புகிறார். உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
காலின்சுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தன்னுடைய மரணப் படுக்கையில், அவரை அழைத்து, இரகசியமானதும் அபாயமானதுமான ஆர் டாகுமென்ட் என்ற ஒன்றைப் பற்றி எச்சரிக்கைசெய்ய விரும்புகிறார். காலின்சை அழைத்துவரச் சொல்லித் தகவல் அனுப்பி, இவர் அங்கே போய்ச் சேர்வதற்குள் அவர் மரணமடைந்து விடுகிறார். கடைசித் தருணங்களில் ஒரு பாதிரியாரிடம், பாவ அறிக்கையைச் சொல்கிற தருணத்தில், இந்த விஷயத்தையும் சேர்த்தே சொல்கிறார். ஆனால் அந்தப் பாதிரியார், அது ரகசியமானது என்று காலின்சிடம் மேற்கொண்டு எந்த விவரமும் தர மறுத்து விடுகிறார். அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி, கிறிஸ்டோபர் காலின்சைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இந்த எச்சரிக்கையை காலின்ஸ் தொடர்ந்து ஆராய்கிறார்.
The R Document!
அது என்ன ஆர் டாகுமென்ட்? அதற்கும், உத்தேசித்திருக்கும் முப்பத்தைந்தாவது திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?
அமெரிக்க அதிபர் வாட்ஸ் ஒர்த்துக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது! சட்ட அமைச்சகத்துக்கும் எதுவும் தெரியாது! ஆனால், சிலந்தி லாவகமாக வலையைப் பின்னுவது போல, இந்த ஆர் டாகுமெண்டை மையமாக வைத்து என்னென்னமோ நடந்து கொண்டே இருக்கின்றன!
ஒவ்வொரு மாநிலமாக, இந்த சட்டத் திருத்தத்தை அங்கீகரித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கையில், காலின்ஸ் இந்தத் திருத்தத்தின் தலைமைச் செயலகமாக, மாக்கியவல்லி தனது இளவரசன் என்ற படைப்பில் சொல்கிற மாதிரி, நேர்மைத்திறமில்லாமல் வஞ்சகமும், சூதும், மோசம் செய்கிற இயல்பும், கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை கட்டமைக்கிற விதமாக எப் பி ஐ டைரக்டர் வெர்னான் டி. டினன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற டினன் முயற்சிப்பதை அறிகிறார்.தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சாக்காக இந்த சட்டத் திருத்தத்தை ஒவ்வொரு மாநிலமும் நிறைவேற்றித் தர, டினன் கொலை செய்கிறார், ப்ளாக்மெயில் செய்கிறார், தன்னுடைய முழு சாமர்த்தியத்தையும் பிரயோகிக்கிறார்.
எப்படி இந்தக் கதை முடிச்சை கதாசிரியர் அவிழ்க்கிறார் என்பதைப் புத்தகத்தை வாசித்து அனுபவிப்பது தான் பொருத்தமாக இ ருக்கும். முன்னூற்று அறுபது பக்கங்களுக்குள்ளாகவே, மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது! அதிகாரம் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்போது ஏற்படக் கூடிய விபரீதங்களை இந்த நாவல் மிக அழகாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது. எச்சரிக்கிறது.
இங்கே இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனம் என்ற ஜனநாயகப் படுகொலையை, ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற காந்தீய வாதி, வினோபா பாவேயின் சீடர் எப்படி தடுத்து நிறுத்தினார் என்பதை, இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராகவே கூடச் சொல்ல முடியும்!
இந்திரா காந்தி என்ற சர்வாதிகாரிக்கு எதிராக, எப்படி இந்த தேசத்தின் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணனுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றன, காங்கிரஸ் எப்படி பிரிட்டிஷ் குள்ள நரிகளிடமிருந்து கற்றுக் கொண்ட பிரித்தாளும் கலையைப் பயன்படுத்தி அந்த ஒற்றுமையைப் பிளந்தது என்பது கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சமகால சரித்திரம்!

தி ஆர் டாகுமென்ட்!
இந்தியாவின் அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட 42 வது திருத்தம் மாதிரி, அமெரிக்காவிலும் நடக்கிற மாதிரி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டது, அங்கே எழுத்தாளரின் வெறும் கற்பனை என்று மட்டும் ஒதுக்கி விட்டுப் போக முடியவில்லை.
நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டபோது நாடாளு மன்றம்,ஆட்சியாளர்களின் மனமறிந்து ஒத்து ஊதுகிற ஒரு இடமாக மட்டுமே ஆகிப் போனது, பத்திரிகைகளின் வாய்கள் கட்டப்பட்டன, நீதித்துறை செயலிழந்து நின்றது........

இந்திய அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 42 வது திருத்தம், திருத்தம் செய்யப்பட்ட அந்த சில வரிகளில் வாக்கியங்களில், அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அலங்காரக் கோஷங்கள் சேர்க்கப் பட்டன. இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு என்பது வார்த்தைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, இறையாண்மையுள்ள, சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக ஆகிப் போனது!
வார்த்தைகளில் மட்டும் தான்என்பதைச் சொல்லித் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!?
அதிகமான விவரங்கள் வேண்டுமானால் இந்த லின்கில் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்!
எமெர்ஜென்சி அமலில் இருந்த தருணங்களில் வெளியான இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் தீய அம்சங்களை தோலுரித்துக் காட்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லப் பட்ட இந்தப் புத்தகத்தை, 1985 வாக்கில் தான் படிக்க முடிந்தது. பெங்களுர், வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் தொண்ணூறு ரூபாய்க்கு சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினேன்.
இந்தப்புத்தகத்தை நேற்றைக்கு மீண்டும் வாசிக்க எடுத்துக் கொண்டிருப்பதில், இது ஒரு மீள்பதிவாக!
எமெர்ஜென்சி காலத்தின் இருண்ட நினைவுகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதற்காகவும், இளைய தலைமுறை தெரிந்து கொள்வது அவசியம் என்பதற்காகவும்!
சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது!
ReplyDeleteசுவாரஸ்யம் என்பதை விட இர்விங் வாலஸ் இந்தக்கதையை எழுதுவதற்கு உந்துகோலாக இருந்ததே இந்திரா கொண்டு வந்த 42வது சாசனத்திருத்தமும் எமெர்ஜென்சி பிரகடனமும் தான் ஸ்ரீராம்! இதேபோல அமெரிக்காவிலும் நடந்தால் என்கிற கற்பனை, ஊகத்தில் எழுதப்பட்ட நாவல் இதுபோல இனிமேல் எங்குமே . நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை என்பதுதான் சோகமான யதார்த்தம்.
ReplyDelete