கனிமொழி, என்ன அநியாயம் இது என்று ஒரே ஒரு கேள்விதான் சூடாகக் கேட்டார்! அதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் TK ரங்கராஜன் பரபரப்பான, பேசும் பொருளாகி விட்டார்! ஓசி விளம்பரமாகக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்! ஆனால் தெளிவான விடைகள் கிடைக்கிறதா என்பதை பார்க்கும் மக்கள் தான் வந்து சொல்லவேண்டும்!
red publicly
- இந்த ராஜ்ய சபையை தூக்காமல் இன்னமும் வைத்துக்கொண்டு அழவேண்டும். மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட லோக் ஸபா உறுப்பினர்களின் சட்ட திருத்தங்களை இந்த உதவாக்கரை ராஜ்ய சபா நியமன உறுப்பினர்கள் புறம் தள்ளுவது என்ன சனநாயக நடைமுறையோ..? ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் ஏதாவது ஒரு உதவாக்கரை ஜென்மம் அங்கே இடம் பிடிக்கிறதே.
REPLY 18m -
5m
- இந்த மனோபாவம் அணுகுமுறை சரிதானா மாணிக்கம்?
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை ஏற்றுக் கொண்டபிறகு checks and baalances இருக்கக் கூடாதென்று நினைப்பது எப்படி சரியாக இருக்கும்?
இந்திராகாந்தி கூட இப்படித்தான் நினைத்தார். எல்லா அதிகாரங்களும் ஒரே இடத்தில் இருக்கிற மாதிரி Presidential form of government என்று முயற்சி செய்தும் பார்த்தார். எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் இருந்து வரவில்லை! ஜெயப்ரகாஷ் நாராயண் என்கிற வினோபா பாவேவின் சீடர், அரசியலில் இருந்து ஒதுங்கி பூதான இயக்கத்தில் இயங்கி கொண்டிருந்தவர், அவர்தான் வரவேண்டியிருந்தது. #biharmovement என்று கூகிளில் தேடி பாருங்கள்! அவரை தலைமையேற்கும்படி அழைத்துவந்த மாணவர் தலைவர் யாரென்று அறிந்தால்... ஆச்சரியம்!
REPLY 4m -
- இங்கே வலைப்பதிவுகளிலும் கூட ஒரு அர்த்தமுள்ள விவாதம் கண்ணியமான முறையில் தொடர்ந்து நடக்கவேண்டும் என்கிற ஆசை ஏனோ இதுவரை கைகூடவே இல்லை.
- சீனா எழுபது! சீனா அறுபது என்று அங்கே எழுதியதற்குள் பத்தாண்டுகள் ஓடிவிட்டதா?
Four decades ago the Chinese Communist Party, under its new paramount leader Deng Xiaoping, decided to subordinate ideology to wealth creation, spawning a new aphorism, “To get rich is glorious.” The party’s central committee, disavowing Mao Zedong’s thought as dogma, embraced a principle that became Deng’s oft-quoted dictum, “Seek truth from facts.”
Deng’s Four Modernisations programme spurred China’s phenomenal economic rise. China’s economy today is 30 times larger than it was three decades ago. Indeed, in terms of purchasing power parity, China’s economy is already larger than America’s.
- உண்மையை சரியான தரவுகளிலிருந்து பெற வேண்டும் (மாவோவின் வறட்டு சித்தாந்த உளறல்களில் இருந்தல்ல) என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் டெங் சியாவோ பிங், கள யதார்த்தம், தேசத்துக்கு எது முக்கியம் என்பதில் தெளிவாக எடுத்த முடிவுகளில் சீனா இன்றைக்கு உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக, ராணுவ வலிமை மிக்க நாடாக, ஆகியிருக்கிறது . நாங்கள்தான் 21ஆம் நூற்றாண்டில் உலகத்தின் நட்டநடுநாயகம் (Tianxia) என்று இப்போது சீனா தன்னுடைய ஆதிக்கக் கனவுகளை செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
- மறுபடியும் கம்யூனிச முட்டுச்சந்துக்கே வந்திருப்பதாக இந்தச் செய்திக் கட்டுரையில் சொல்கிறார் ப்ரம்ம செலானி. கொஞ்சம் படித்துப் பார்த்துவிட்டு வாருங்கள்! விவாதிக்கலாம்!
ரங்கராஜன் அவர்களின் நிலைப்பாடு சரியாகத்தான் தோணுது. தொலைக்காட்சி சேனல், தங்களுடைய முதலாளிகளின் நிலைப்பாட்டைத் திணிக்க முயற்சி செய்வதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
ReplyDeleteகம்யூனிஸ்ட் கட்சியும், இட ஒதுக்கீடு பெற்ற சாதியினரிடையே, மூன்று முறை முன்னுரிமை பெற்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்றும் போராடணும். மூன்று தலைமுறையா பயன் பெற்றும், தங்கள் சாதியின் மற்றவர்களுக்கு உரிமை போய்ச்சேர வேண்டும் என்று எண்ண வேண்டாமா?
நெல்லைத்தமிழன்! முந்தைய பதிவில் நீங்கள் சொல்லியிருந்த ஐடியா ஒர்க் அவுட் ஆவுமா ஆவாதா என்றொரு கேள்வியை உங்கள் முன் வைத்திருந்தேனே!
Deleteமார்க்சிஸ்டுகள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற தங்கள் நிலையில் நிற்கிறார்கள் என்பது வரை சரி! ஆனால் விபி சிங் மண்டல் கமிஷன் பூதத்தைத் திறந்து விட்டபோது அதற்கும் ஆதரவு என்று தங்கள் நிலைபாட்டில் ஒரு மழுப்பலான இரண்டுங்கெட்டான் நிலையை எடுத்ததைப் போலவே, இப்போதும் பூசி மெழுகுகிறார்கள் என்பது புலப்படவில்லையா? தங்கள் நிலையை இங்கே தமிழகத்தில் வெளிப்படையாக அறிவித்து, அதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியதுதானே? தனியாக விடப்படுவோம் என்பதாலா?