ஜாடை ஒன்றே போதுமா?
காங்கிரஸ் கட்சி அப்படித்தான் நினைக்கிற மாதிரித் தெரிகிறது! தினசரி தளத்தில் இதைச் சொல்கிற விதமே மிகவும் அருமையாக!
நேரு உல்லாசப்பிரியர் என்று தெரிந்த அளவுக்கு, மகள் இந்திரா எப்படிப்பட்ட தறுதலை, ராவடி என்பதை எம் ஓ மத்தாய் தவிர இன்னும் பலபேர் புத்தகமாக எழுதியும் கூட, வெளியே பரவலாகத் தெரியவில்லையே என்கிற மனக்குறை எனக்குண்டு!
ஒரு தொலைகாட்சி விவாதத்தில் காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் பேசியத்தைக் கேட்ட பிறகு காங்கிரஸ்காரர்களே பழைய குப்பைகளைக் கிளறி எடுக்க வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிரகாசமாகத் தெரிகிறது.
மருத்துவர் ராமதாஸ் ட்வீட்டரில் ஏதாவது ஒரு செய்தியைப் பகிர்ந்தால், உள்ளூர் நிலவரத்தோடு முடிச்சுப்போட்டு எதிர்க்கேள்வி கேட்பவர்கள் இங்கே தமிழ்நாட்டில் அதிகம்!
நேரு உல்லாசப்பிரியர் என்று தெரிந்த அளவுக்கு, மகள் இந்திரா எப்படிப்பட்ட தறுதலை, ராவடி என்பதை எம் ஓ மத்தாய் தவிர இன்னும் பலபேர் புத்தகமாக எழுதியும் கூட, வெளியே பரவலாகத் தெரியவில்லையே என்கிற மனக்குறை எனக்குண்டு!
ஒரு தொலைகாட்சி விவாதத்தில் காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் பேசியத்தைக் கேட்ட பிறகு காங்கிரஸ்காரர்களே பழைய குப்பைகளைக் கிளறி எடுக்க வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிரகாசமாகத் தெரிகிறது.
போஸ்டரில் நாயகனாக வருவார் என்று எதிர் பார்க்கப் பட்டவரை போஸ்டர் ஒட்டுகிற விடலையாக கார்ட்டூன் வரைந்து சந்தோஷப் பட்டிருக்கிறது, வேறு யார்? ஹிந்து நாளிதழ் தான்!
அமேதி தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டு ராகுல் காந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற விவசாயிகள் பலர் ‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ எனக் கூறி ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்டனர். இது கூட ஹிந்து செய்திதான்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு பொ அகத்திய லிங்கம் ஜாக்டோஜியோவுக்காக இப்படி உருகுகிறார் கள யதார்த்தமோ வேறு மாதிரி இருக்கிறது. நேரெதிரான பாசிட்டிவ் செய்தி ஒன்று இங்கே
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தேர்தல் காலத்தை ஒட்டி, பிளாக்மெயில் செய்கிற மாதிரிப் போராட்டம் நடத்துவது ஒரு தொடர்கதையாகிக் கொண்டே இருப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது. Accountability கொஞ்சமும் இல்லாமல் சலுகைகள், சம்பளம் கேட்பது, இங்கே கழகங்கள் ஊட்டி வளர்த்த கோளாறு. ஜெயலலிதா ஒருமுறை சாட்டையைச் சுழற்றினார். அடங்கி கிடந்தார்கள். இவர்களிடம் தேர்தல் வேலை கொடுக்கப்படுவதை வைத்து இப்போது மீண்டும் துள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
பின்னணியில் ஒரு கழகம் இருப்பதும் கூட இங்கே எல்லோருக்குமே தெரிந்தது தான்!
அதிகம் முடிவளர்ந்தால் மொட்டை என்கிற கதை நிகழ்வது எப்போதோ?
8:33 PM - 24 Jan 2019
திருச்சியில் தேசம் காப்போம் என்று கூட்டம் நடத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியைத் தனக்காக கெலித்து விட்டார்! ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்காக என்னென்னவெல்லாம் கூவவேண்டி இருக்கிறது!!
பாட்டாளி மக்கள் கட்சி என்ன செய்யப்போகிறது? மருத்துவர் அதைப் பற்றி இன்னமும் ஒன்றும் சொல்லக் காணோம்!
இதே போல கதம்ப செய்திகளை தொடர்ந்து எழுதுங்க. நல்லாயிருக்கு.
ReplyDeleteஇங்கே அரசியலே இன்னதென்று விளங்கி கொள்ள முடியாத கதம்பமாக இருக்கும்போது , வேறு எப்படி எழுதுவது? வாசிப்பவரோடு ஒரு உரையாடல் நிகழுமானால், குறிப்பிட்டு விரிவாக எழுதலாம்! அது நிகழும்வரை இதுமாதிரி எழுதுவது தான் சரியோ? ஒன்றும் பிடிபடவில்லை!
Deleteசென்ற வேலை நிறுத்தத்தில் உள்ளே வந்த தற்காலிக ஊழியர்கள் என்ன ஆனார்கள்? உள்ளே செல்லும் வரை நீதி நேர்மையோடு பொங்குவார்கள். உள்ளே சென்றதும் அதே சம்பள உயர்வு, வேலையை நிரந்தரம் செய், ஓய்வூதியத்தை உறுதி செய் கோஷங்கள்தான்!
ReplyDelete4000 ரூபாய் சம்பளத்துக்கு அந்த நாட்களில் வேலைக்குவந்தவர்களை , ரெகுலர் ஆசாமிகள் இளப்பம் செய்ததும் ஒதுக்கி வைத்ததும் நடந்த கதை. இரண்டுதரப்பும் ஒட்டினார்களா என்பது எனக்கு டச் விட்டுப்போன தொழிற்சங்க செய்தி ஸ்ரீராம்!
Deleteஉண்மையில் பென்சன் கோரிக்கை நியாயமானது இவர்கள் சொல்லும் பென்சன் பின்னாளில் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
Deleteஉதாரணமாக போக்குவரத்து ஊழியர்கள் பணத்தை அன்றாட செலவுக்கு எடுத்து (2010முதல்கவனிக்கவும்) செலவுசெய்து விட்டு போய்விட்டார்கள்.இன்றுவரை அந்த தொகை எல்ஐசி பணம் வீட்டு கடன் பிடித்தம் சம்பந்தப்பட்ட பாங்க் செல்லவில்லை ஆகையால் வீட்டின் பத்திரம் கைக்கு வராமலும் சொசைட்டி பணம் வராமலும் நிலுவையில் உள்ளது.இரண்டு முறை ஸ்டிரைக் செய்தாயிற்று.இன்னும் முழமைமுழு கொடுக்க வில்லை இதுபோன்ற பென்சன் நம்புவாங்கலா?!
.?.
அவர்களும் இவர்களோடு ஒன்றி "ரெகுலர் அரசு ஊழியர்களா"கிப் போனார்கள் என்பது எங்கள் அலுவலக அனுபவம் ஸார்.
Deleteஇங்கே கழக டம்பாச்சாரிகள் ஆட்சிக்குவந்தபிறகு நிறைய கோளாறுகளும் கூடவே வந்தன. முதலில் பலியானது கணக்கிடும் முறை. பென்ஷன், பணிக்கொடை முதலானவைகளுக்குப் ப்ரொவிஷன் செய்வது இல்லாமலே போனதையும் மீறி, அசலையே விழுங்க ஆரம்பித்ததும்!
Deleteபென்ஷன் விஷயத்தில் இரண்டுவிதமான கவனிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் உண்டு. நான் பணியில் இருந்த நேரம், ஒரு ஜெனெரல் மேனேஜர் அந்தஸ்தில் இருந்தவர் சொன்னது இது. வங்கி ஊழியர்களுக்கு pension என்று வந்த பிறகு, தற்சமயம் வேலையில் இருப்பவர்கள் தங்களுக்காகிற சம்பளச்செலவுடன், முன்னாள் இருந்தவர்களுக்கும் சேர்த்து சம்பாதித்தாகவேண்டும், முதலீடு செய்தவர்களுக்கும் dividend கொடுப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பென்ஷன் எந்த ஒரு நிறுவனத்துக்கும் பெரும் சுமையாகிவிடக் கூடியது என்பதைப் புரிந்துகொண்டால் அடுத்து என்ன செய்வது என்பதையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
ஸ்ரீராம்! அப்படி ஜோதியில் ஐக்கியமாகாமல் புறக்கணிக்கப்படும் தரப்பும் இருக்கிறதே! இது எனக்குத் தெரிந்தது ஒரு சோறு பதம் என்று சொல்வதற்காக அல்ல.
ReplyDelete