Wednesday, January 30, 2019

ஜாக்டோ ஜியோவுக்கு செக்! ஒழுங்கீனத்தை ஆதரிக்காதீர்!

வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்? தொடர்ந்து திமுக மாதிரியே ஒழுங்கீனத்தை ஆதரிக்க வேண்டுமா? 


வேலைசெய்ய வருகிறார்களா? வேலைநிறுத்தம் செய்யவா?  கீழே உள்ள வீடியோவில் ஒரே ஒரு உருப்படியான விஷயம்... அரசியல்வாதிகளுக்கும் ரிடையர்மெண்ட் வயது நிர்ணயிக்கவும் கோரிக்கைப் பட்டியலில் பெர்மனெண்டாக சேர்ப்பார்களாம்! மொதல்ல அதைச் செய்யங்கப்பு! "இதுநாள் வரை அறவழியில்(??) போராடிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்குமாறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய முறையில் நியாயமாகப் பரிசீலித்து நிறைவேற்றப் பட்டு, அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மனிதாபிமானம் போற்றப்படும் என்றும் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று இன்றைக்கு ஸ்டாலின் சொல்லி இருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது.  

இந்தக் கார்டூன் தி மு கழகத்துக்கு வாக்களித்தால் எவ்வளவு வருத்தப்படவேண்டிவரும் என்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்வதுபோல இருக்கிறது. இவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்குப் புதுப்புது ஐடியாக்கள் இப்படித் தெறிக்கிறதாம்! 


அரசுக்கு வருவாய் இல்லை . நட்டத்தில் இயங்க முடியுமா ? எனவே அரசை லாபகரமாக இயக்க நம்மால் முடிந்த சில யோசனைகளைச் சொல்லுவோம் .

முதலில் காவல் துறையால் அரசுக்கு பெரும் செலவு ; அதன் மூலம் வருவாயும் இல்லை .ஆகவே காவல் துறையைக் கலைத்துவிட்டு தனியார் கூலிபடைகளை ஊக்குவிக்கலாம் .

நீதித்துறையும் பெரும் செலவை ஈர்க்கிறது .எனவே நீதிமன்றங்களை மூடிவிட்டு நாட்டாமை ,கட்டப்பஞ்சாயத்து இவற்றை ஊக்குவிக்கலாம் . கொல்வதும் நானே கொல்லப்படுவதும் நானே என பகவான்கிருஷ்ண பரமாத்மா கீதையிலேயே சொல்லிவிட்டதால் இனி கொலை ,கொள்ளை போன்ற செயல் எதுவும் பகவான் திருவிளையாடலில் ஒன்று எனச் சேர்த்துவிடலாம் .

கல்வித்துறை ,சமூகநலத்துறை போன்ற சகல மக்கள் சேவைத்துறைகளையும் கலைத்துவிடலாம் .லாபம் தரும் டாஸ்மாக் மட்டுமே அரசு வசம் போதும் .

இன்னும் ஏகப்பட்ட பேஷான யோசனைகள் இருக்கு கேட்டால் சொல்லுவோம் …


.நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

6 comments:

 1. வெற்றிகரமாக பின்வாங்கியது ஜாக்டோ ஜியோ!

  ReplyDelete
  Replies
  1. தினசரிடாட்காமில் ஸ்ரீராம் கிண்டலாகச் சொல்லியிருக்கிறாரே! ஜாக்டோ ஜியோ ஓனரே சொல்லிட்டாரு..இனி வேலைக்குத் திரும்புங்க! ஸ்க்ரீன்ஷாட் பார்க்கவில்லையா ஸ்ரீராம்?

   Delete
 2. எச்சரிக்கை.. எச்சரிக்கை.. எச்சரிக்கை செய்கிறோம்!..

  நினைவுக்கு வந்த கோஷம்.

  ReplyDelete
  Replies
  1. எச்சரிக்கைக்கு நன்றி ஜீவி சார்! ஒருகாலத்தில் நானும் கையை உயர்த்தி அடிவயிற்றிலிருந்து கோஷங்கள் போட்டவன்தான்! அடுத்தவர் கோஷத்தைத் திரும்பிச் சொல்லவும் கோஷங்களை சொந்தமாக புதிதாக எழுதவும் தெரிந்து வைத்திருந்ததனால் தான் இப்போது ஒழுங்கீனத்தை ஆதரிக்காதீர் என்ற கோஷமும்!

   Delete
 3. எனக்கு ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

  அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தத்தம் குழந்தைகளை முழுவதுமாகப் படிக்கவைக்காத எந்த ஆசிரியருக்கும் போராட்டக் களத்திற்கு வருவதற்கு தார்மீக நெறி கிடையவே கிடையாது.

  ஒரு பஸ் வைத்திருக்கும் முதலாளி லாபத்தில் கம்பெனி நடத்துகிறார். ஒரு பள்ளி வைத்திருப்பவர் லாபத்தில் நடத்த முடிகிறது, குவாலிடி கல்வி கொடுக்க முடிகிறது. ஆனா அரசு நடத்தும் எல்லாம் நஷ்டமடைவதன் காரணம் என்ன? பயனாளிகளுக்கும் நஷ்டம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஒருவிதத்தில் நீங்கள் சொல்வது சரிதான் நெல்லைத்தமிழன்! இங்கே நான் வலியுறுத்த விரும்புகிற மிகவும் முக்கியமான விஷயம் accountability. பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தமிழ் நாட்டில் போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து சீரழிந்து வருகிறார்கள்.

   அரசியல்வாதிகள் தங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் புரிந்துகொண்டு, எவருடைய கைகளிலும் பகடையாக உருளவேண்டாமென்று மாறட்டுமே! அரசு ஊழியர், ஆசிரியர், தங்கள் பணியை ஒழுங்காகச் செய்தாலே போதும்! செய்கிறார்களா என்பதை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளட்டும்! அவரல்லவோ ஆசிரியர் என்று இந்தப் பதிவிலேயே தேடிப் பார்த்தீர்களானால், ஏதோ இதை இன்று புதிதாகச் சொல்லவில்லை என்பது புரியும்.

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (310) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)