நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய 124 வது சட்டத் திருத்தம், பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு தவிர வேறெங்காவது சர்ச்சை, விவாதங்கள் நடந்ததாக செய்திகள் உண்டா?
உண்மையை அறிந்துகொள்வதற்காகவாவது தேடிப் பார்த்திருக்கிறோமா? கனிமொழி மாநிங்களவையில் இந்த மசோதா மீது கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தவர்கள் யார் என்கிற விவரம், எண்ணிக்கை, என்னவென்று பார்த்தாலேயே, அல்லது முந்தைய பதிவில் மார்க்சிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜனுடைய நேர்காணலில் பார்த்தாலேயே கண்டுகொள்ளக் கூடிய எளிமையான தேடல்தான்!
உண்மையை அறிந்துகொள்வதற்காகவாவது தேடிப் பார்த்திருக்கிறோமா? கனிமொழி மாநிங்களவையில் இந்த மசோதா மீது கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தவர்கள் யார் என்கிற விவரம், எண்ணிக்கை, என்னவென்று பார்த்தாலேயே, அல்லது முந்தைய பதிவில் மார்க்சிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜனுடைய நேர்காணலில் பார்த்தாலேயே கண்டுகொள்ளக் கூடிய எளிமையான தேடல்தான்!
இங்கே தொலைகாட்சி விவாதங்களில் கூவுகிற கட்சி எதுவுமே, எங்கே விவாதம் முறையாக நடத்தியிருக்க வேண்டுமோ அங்கே நாடாளுமன்ற இரு அவைகளிலும் செய்யவில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு விவாதங்களைக் கவனிக்கவேண்டும். அரசு வேறு, அரசியல் கட்சி நிலைபாடு வேறு என்கிறார் நெறியாளர். அரசிலிருந்து, அரசியலை (கட்சிகளை) பிரித்துவிட முடியுமா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
அதிமுக மாநிலங்களவையில் எதிர்த்துப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டது ஏனென்றோ, அவர்களுடைய கட்சி நிறுவனர் எம்ஜியாரே பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேண்டுமென்று சொன்னதை மறந்தது ஏனென்றோ சொல்லாமல் நவநீதகிருஷ்ணன் MP கவனமாகத் தவிர்த்து விட்டார். ஆதரித்து வாக்களித்த காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணனும் இரட்டை நாக்கில் பேசுகிறார்.
By calling the Stafford Cripps Mission of 1942 a “post-dated cheque on a [failing bank]”, Mohandas Gandhi created a certifiably modern aphorism. It is also a neat description of the Union government’s proposal to amend the Constitution to permit reservations to “Economically Weaker Sections” upto 10% of seats and jobs. என்று சௌகரியப்படுகிற தருணங்களில் மட்டும் ஒரிஜினல் காந்தியை மேற்கோள் காட்டுவது டூப்ளிகேட் காந்திகளை ஆதரிக்கும் ஊடகங்களின் நிலை. இது மசோதா நிறைவேறுவதற்கு முன்னால் எழுதப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு படித்துப் பாருங்கள்!
ஜனாதிபதி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தந்திருக்கிற நிலையில், இந்தத்திருத்தம் சட்டமாகிவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட /படும் வழக்குகளில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதில் தான் இந்த விவாதங்களுக்கு சரியான முடிவு தெரியவரும்!
வறட்டுத்தவளைகளாக இங்கே தொலைக்காட்சிகளில் கூவிக்கொண்டிருப்பதில் எந்தவொரு தீர்வும் வராது.
No comments:
Post a Comment