+வால் பையன் வழக்கம்போல தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாக , ஆசிரியர் போராட்டத்தை குறித்து இன்றைக்கு இரண்டாவது பதிவாக கேள்விக்கு பதில் சொல்கிற விதத்தில் எழுதியிருக்கிறார். அங்கே பின்னூட்டம் எழுதினால் கவனிப்பதில்லை என்பதால், இங்கே தனிப்பதிவாக
இந்த விவாதத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்!
ஜாக்டோ ஜியோ சார்பில் பேசுகிற பேட்ரிக் ரேமன்ட் ஒன்பது அம்ச கோரிக்கையில் எதுவும் நிதிச் சுமையை புதிதாக ஏற்றுகிற மாதிரி இல்லை என்கிறார். ஆனால் உயர்நீதிமன்றம் இந்தக் கூற்றை மறுக்கிற மாதிரி கருத்து சொல்லிருக்கிறது. அடுத்து இந்த கோரிக்கைகள் 2007 இலிருந்தே பெண்டிங் என்கிறார்.ஆனால் தி மு கழகம் ஆட்சியில் இருந்த 2011 வரை என்ன செய்து கொண்டு இருந்தார்களாம்? எங்க காசு 27000 கோடி ரூபாயை ஆட்டையப் போட்டுட்டாங்க என்று கூசாமல் சொல்லத் தெரிந்தவருக்கு, அதை ஆரம்பித்து வைத்ததே தி மு கழக ஆட்சிதான் என்பது தெரியாதா?
தி மு கழகம் சார்பில் வசந்தி ஸ்டாலின்! வழக்கமான அராத்துப் பேச்சு! அடுத்துப் பேசுகிற மணிவாசகம்
தி மு கழகத்தின் இரட்டை நிலைப்பாட்டை நன்றாகவே தோலுரிக்கிறார், நம்மூரு நியாயமே தனி ரகம்தான் இல்லையா?
கடமையைச் செவ்வனே செய்கிற ஆசிரியர்களுக்கு கௌரவமான ஊதியம் கொடுக்கப்பட வேண்டுமென்பது எவ்வளவு நியாயமோ அதே அளவு, ஆசிரியர்கள் வாங்குகிற ஊதியத்துக்கு உண்மையாக வேலை செய்கிறார்களா என்ற கேள்விக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்குத் தயாராக இல்லாதவரை ........
தனியார் பள்ளிகள் வளர்வதற்கும், அரசுப் பள்ளிகள் மூடுவிழா காண்பதற்கும்தான் இந்தப் போராட்டம் கதவுகளைத் திறக்கிறது என்றால்.....
சரியா? இல்லையா? இதுதான் கேள்வி! இதுவே பதிலும்!
அரசு Vs ஆசிரியர்கள் நியாயம் யார் பக்கம் என்று நீட்டி முழக்குகிற இன்னொரு ஒன்றரை மணிநேர பொழுதுபோக்கு விவாதம் இங்கே!
ஒன்றரை மணிநேரமா? அடேங்கப்பா... நான் தொலைக்காட்சிகளில் மிகவும் வேகமாக தாண்டிச்செல்வது இதுபோன்ற டாக் ஷோக்கள்!!
ReplyDeleteநேற்றைய (அல்லது அதற்கு முதல் நாளோ?) ஹிந்து தமிழில் இது சம்பந்தமாக ஒரு நடுப்பக்கக் கட்டுரை வந்திருந்ததே, கவனித்தீர்களோ?
தமிழில் தொலைகாட்சி விவாதங்கள் இன்னமும் சரியான பக்குவத்துக்கு வரவில்லை என்பது உண்மைதான்! அதற்காக அவைகளைக் கடந்தும் போய்விட முடியாது ஸ்ரீராம்! கழுதைகளுக்கு வெள்ளிமூக்கு முளைத்து இவை குதிரையில்லை என்று ஒவ்வொரு அரசியல்கட்சியின் யோக்கியதையையும் தோலுரிக்கிறமாதிரி, நேற்றிரவு நியூஸ் 7 கேள்விநேரம் நிகழ்ச்சி இருந்தது. அந்த தமாஷாவையும் சேர்த்தே கடந்து போய்விடுகிறீர்கள்!
Deleteசட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் எப்படி இரண்டுகழகங்களும் ஒன்று மாற்றி ஒன்று வாக்குவங்கியைக் குறிவைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களைக் கொழுக்க வைத்தன, நிதிநிலைமை எப்படி மோசமானது என்பதை நன்றாகவே தோலுரித்தார்.
ஹிந்து நடுப்பக்கக் கட்டுரை? இல்லை, பார்க்கிறேன்.