புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்! இட ஒதுக்கீட்டுக்காக எங்களையும் பட்டியலில் சேருங்கள் என்று புதிதாகப் பலசாதியினரும் போராடுகிற நேரத்தில், எங்களுக்கு அது வேண்டாம், தேவேந்திரகுலத்தவரை SC / ST பட்டியலில் இருந்து நீக்குங்கள் என்று குரல் கொடுப்பது மிகவும் வித்தியாசமாக ஒலிக்கிறது. தலித் அடையாளம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்!
124 வது திருத்தம் தொடர்பான இன்னொரு விவாதம் இங்கே! வழக்கறிஞர் விஜயன், மார்க்சிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் என்று மட்டுமில்லை பங்கு கொண்ட அனைவருமே தங்களது வாதங்களைக் கோர்வையாக எடுத்துச் சொன்னது, சீர்தூக்கிப் பார்க்க உதவியாக இருக்கலாம்!
மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி, கறுப்பு பலூன் பறக்கவிடுவது என்பதான திராவிட சிறுபிள்ளைத்தனத்தை வைகோ, மோடி வந்த இடத்தில் இல்லை, 10 கிலோமீட்டர் தள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகே அரங்கேற்றியிருக்கிறார்.வயதான காலத்தில் இத்தனை கஷ்டப்பட்டு மதுரைக்குத்தான் வரவேண்டுமா? இதற்கு கலிங்கப்பட்டி வீட்டிலிருந்தே காட்டி இருக்கலாமே வைகோ என்று பரிதாபப்படத் தான் முடிகிறது! மே 17 இயக்கத்தின் தி.மு.காந்தி தமிழக அரசியல் களத்தில் சிரிப்பு வில்லனாக உருவாகி வருகிறார்.
பிரதமராகும் தகுதி! கொல்கத்தா கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு இப்படிப் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி பெங்களூரு திரும்பியவுடன் வேற வாயில் பேசியிருக்கிறார்! ஆக, ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த ராசி இன்னமும் ஆக்டிவாகத்தான் இ!ருக்கிறது!
டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வது நானும் படித்தேன். பாராட்டத்தக்கது. ரொம்ப நாட்களாய் சொல்கிறார். அவர் சார்ந்த இனத்தில் இதுவரை அதற்கு எதிர்ப்புக்குரல் எழவில்லை என்பதும் ஆச்சர்யம்.
ReplyDeleteஸ்ரீராம்! ஏன் உண்மையை உடைத்துச் சொல்கிறடாக்டர் கிருஷ்ணசாமிக்கோ ஜான் பாண்டியனுக்கோ எதிர்க்குரல்கள் கேட்பதே இல்லை? சிம்பிள்! திராவிட அரசியல், தலித் அரசியல் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்பதுதான்!
Deleteஎந்தவொரு சமூகமும் இப்படி அடையாளப்படுத்தப் படுவதில், குறுகி அடங்கிவிடுவதில்லை என்பதைத்தான் உள்ளிருதே எழும் முரண்பாடுகள், கலகக்குரல்கள் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா?