Thursday, January 3, 2019

மாற்றங்களை எதிர்கொள்வது! தடுமாறும் வங்கி ஊழியர்கள்!

மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்தப் பக்கங்களில் #change management என்ற தலைப்பின் கீழ் பார்த்திருக்கிறோம்! மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத எதுவும் பாழ்பட்டுப் போகும் என்பதையும் காலம் நமக்குப் படிப்பித்துக் கொண்டே வருகிறது இல்லையா?!

பாங்க் ஆப் பரோடா, தேனா பாங்க், விஜயா பாங்க் மூன்றையும் இணைப்பதென மத்திய அரசு உறுதியான முடிவெடுத்துவிட்டது. நேற்றைக்கு ஒவ்வொரு வங்கியின் பங்குகளும் எப்படி swap செய்யப் படுமென்கிற அறிவிப்பும் வந்தாயிற்று. விஜயா வங்கியின் 1000 பங்குகளுக்கு 402 என்றும் தேனா வங்கியின் 1000 பங்குகளுக்கு 110 என்றும் பாங்க் ஆப் பரோடா பங்குகளாக மாற்றப்படும் என்கிற அறிவிப்பும் நேற்றே வந்தாயிற்று.

#வங்கிஊழியர்சங்கங்கள் நிலைமை பாடுதான் திண்டாட்டம்! என்னமாவது செய்தாகவேண்டுமே! #வேலைநிறுத்தம் தான்! வேறென்ன தெரியும் பாவம்?! வருகிற 8.9 இருநாட்கள் #bankstrike

ஸ்டேட் வங்கி, HDFC வங்கி இரண்டுக்கும் அடுத்து மூன்றாவது பெரிய வங்கியாக இந்த மூன்று வங்கிகள் இணைந்த பிறகு ஏப்ரல் முதல் தேதி முதல் இருக்கும். மூன்றாவது இடத்தில் இப்போது இருக்கும் ஐசிஐசிஐ வங்கி பின்னுக்குத் தள்ளப்படும்
இணைப்புக்குப் பின் எழக்கூடிய முக்கியமான பிரச்சினை, #workculture மற்றும் புறக்கணிக்கப் படுவதாக ஊழியர்களிடம் இருந்து எழுவது என்பதுபோக #வராக்கடன்வசூல் செய்வதும், மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தலைமையும் தான்! முந்தைய நாட்களில் வங்கிகளை இணைப்பது என்பது சரியான திட்டமிடல், சரியான தலைமை, சரியான தொடர்நடவடிக்கைகள் என்றெதுவுமே இல்லாமல் செய்யப்பட்டதில் பிரச்சினைகள் எழுந்தது உண்மை. அதற்காக, மறுபடி முயற்சி செய்யவே கூடாது என்று வங்கி ஊழியர்கள் குதிப்பதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? இப்படிச் செய்து தானே சோவியத் யூனியன் மீட்கமுடியாமல் சிதறுண்டு போனது? காம்ரேடுகளுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை என்றால், காம்ரேடுகளும் காணாமல் போய்விடுகிற நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்பதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

இங்கே கீழே சுட்டியில் பங்கு முதலீட்டாளர்களின் ஏமாற்றத்தை மட்டும் முன்னிறுத்திப் பேசுவதும் கூடப் பிரச்சினையைத் தீர்க்க உதவாது. நமக்கு உண்மையில் பிரச்சினை எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்பதுதான்!

4 comments:

  1. வருகிற 8,9 தேதிகளுக்குத் தொடர்ச்சியாக ஏதாவது விடுமுறை நாட்கள் வருகிறதா?.. சமீப கால வங்கி வேலை நிறுத்தங்கள் அனைத்தும் அப்படியே ஆகிப்போனதை தற்செயலானது என்று நம்பத் தோன்றவில்லை.

    ReplyDelete
  2. அவலை நினைத்து உரலை இடிக்கற கதை தான். காங்கிரஸ், பிஜேபி இரண்டும் தான் இன்றைய தேதி அ.இ. கட்சிகள். ஆட்சிப் பந்தை இவர்கள் இருவரும் தான் மாற்றி மாற்றி தூக்கிப் போட்டு விளையாடப் போகிறார்கள். வருகின்ற மாற்று அரசாங்கம் ஏதாவது மாற்றுத் திட்ட்டங்களைக் கொண்டுள்ளதா, என்ன?.. ஆக வேலை நிறுத்தங்கள் தொடர்கதை தான்.

    ReplyDelete
  3. வாருங்கள் ஜீவி சார்!

    வேலைநிறுத்தங்கள், தொழிலாளியின் கடைசி ஆயுதமாகச் சொல்லப்பட்டதெல்லாம் போய் தொடர்கதை என்பதையும் தாண்டி மெகாசீரியல் அபத்தங்களாக ஆகிவிட்டதை, ஒரு முன்னாள் தொழிற்சங்கவாதியாக வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

    எண்பதுகளிலேயே வேலைநிறுத்தங்கள் பயனற்றவைதான் என்றாகிப்போன பிறகும் கூட, இங்கே சங்கங்களோ பின்னிருந்து நடத்துகிற கட்சிகளோ படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவில்லை. ஒரு அரசியல் போராட்டமாகத் தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். Change Management மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி என்று ஏற்கெனெவே இங்கே ஒரு புத்தகத்தை முன்வைத்துப் பேசியதை மறுபடியும் நாட்டு நடப்புக்களை வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  4. ஒருநாள் வேலைநிறுத்தங்கள் பயனற்றுப்போனதால் இப்போது impact அதிகமாக இருக்க வேண்டுமென்று விடுமுறைநாட்களை ஒட்டியோ, அடுத்தடுத்து தொழில் சுணக்கம் ஏற்படுத்துகிற மாதிரி ஒருநாள் அப்புறம் இரண்டுநாள் என்று அறிவித்துக் கொண்டு போவதில் டிசம்பர் 21 க்கும் ஜனவரி 9க்கும் இடைப்பட்ட இருபது நாட்களில் இது மூன்றாவது! முந்தைய காலங்களைப்போல Indefinite Strike என்று அறிவிக்க எந்தத் தொழிற்சங்கத்துக்கும், பின்னிருந்து இயக்குகிற அரசியல் கட்சிகளுக்கும் இப்போது தைரியமில்லை

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)