Sunday, January 20, 2019

தமிழ்ப் பதிப்புத்துறையினர் மாறுவார்களா?


சமீப காலங்களில் தமிழ்ப் பதிப்புலகில் முன்னணி எழுத்தாளர்களெல்லாம் பதிப்பாளர்களாக மாறிவருகிற ஒரு விசித்திரச் சூழல் உருவாகியுள்ளது. எழுத்தாளர்கள் சொல்லும் முக்கியக் காரணம், தாங்கள் எழுதிய புத்தகங்களுக்குச் சரியான அளவில் ராயல்டி கிடைப்பதில்லை. பதிப்பாளர்கள், எத்தனை புத்தகங்கள் அச்சடிக்கிறார்கள், எவ்வளவு விற்பனையாகிறது, மீதம் எவ்வளவு உள்ளது போன்ற தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. எழுத்தாளர்களைப் பதிப்பாளர்கள் விலைபொருளாகப் பார்ப்பதாகவும், உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்றும் எழுத்தாளர்கள் தரப்பில் மனம் குமுறுகின்றனர் என்று ஆரம்பிக்கிறது இந்தச் சிறு செய்திக்கட்டுரை 

சென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை; ஜனவரி 4-ம் தேதி தொட!ங்கிய கண்காட்சியில் 17 நாட்களில் 75 லட்சம் புத்தகங்கள் விற்பனை

9 comments:

  1. பதிப்புத்துறையின் இரட்டைவேடத்தை காவல்கோட்டம் காட்டிக்கொடுத்து விட்டது போல... அதுசரி, காவல் கோட்டம் சாகித்ய அகாதமி விருது பெற்றபோது இந்த வருடம் விருது வாங்கி இருக்கும் எஸ்ரா என்ன சொன்னார் என்று நினைவிருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. எஸ்ரா எழுதிய ஆயிரம் பக்க அபத்தம் கட்டுரைகளை விடுங்கள்! இங்கே பெத்தானியாபுரம் என்கிற பதிவில் மார்க்சிஸ்ட் கட்சித்தோழர் ஒருவரே சாஹித்ய அகாடெமி விருதுவாங்க ஏழரை லட்சம், விக்டோரியா எட்வார்ட் ஹாலில் விழா எடுத்தது என்று உரித்து எடுத்ததும் தான் நினைவில் இருக்கிறது!

      Delete
  2. சுஜாதாவின் பல புத்தகங்கள் உயிர்மை பதிப்பகத்தில் கிடைக்கும். அதே புத்தகங்கள் விசா பப்ளிகேஷனில் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அதாவது அவர்கள் முன்னர் பதிப்பித்த புத்தகங்களை அதே குறைந்த விலைக்கு இன்னமும் விற்று வருகிறார்கள்.

    ReplyDelete
  3. 75 லட்சம் புத்தகங்கள் 21 கோடி ரூபாய்க்கு பதினேழே நாட்களில் விற்று சாதனை என்று பபாசி தளம் தம்பட்டம் அடிக்கிறது ஸ்ரீராம்! ஹரன்ப்ரசன்னா இரண்டுநாட்களுக்கு முன்னால் டெல்லி அப்பளம் கையில் வைத்துக் கொண்டு பகடி செய்திருந்தார். அத்தனை கூத்துக்களையும் மீறி ஹிந்து ஒருவிதமாகச் செய்தி! பதிப்பகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகச் செய்தி போடுகிற வினோதம் இங்கே மட்டும்தான்!

    பதிப்பகங்கள் என்ற குறிச்சொல்லில் இரண்டாவது பதிவாக எட்டரை வருடங்களுக்கு முன்னால் எழுதிய பதிவு தினமணியில் வந்த செய்தியை வைத்து எழுதியதில் இன்னும் கொஞ்சம் விரிவாக.

    ReplyDelete
  4. வாசிப்பில் நேசிப்பும் ரசனையும் கூடாத வரை இப்படித்தான். ரூ.390/-க்கு அதை வாங்கியிருந்தாலும் வேஸ்ட் தான் என்பது தெரியாத வரை தான் ஏமாந்து விட்டோமோ என்ற நினைப்பு இருக்கும் தான்.

    ReplyDelete
  5. //அந்த வித்தியாசப் பணத்தை வைத்து இன்னொரு புத்தகமாவது வாங்கியிருக்கலாம் என்று யோசித்திருக்க மாட்டார்களா..?//

    இன்னொன்று வாங்குவதும் இதே போல இருந்தால் இன்னொரு தண்டம்! புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கும் விலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்தால் தான் நம் இழப்புகளை சரியாகக் கண்க்கிட முடியும்.

    ReplyDelete
  6. பொங்கல் என்றாலே ஏறு தழுவுதல் என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். அதன் பிரதிபலிப்பு புத்தகக் கண்காட்சியில் இருக்க வேண்டாமா?.. சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. தெரிந்தாலல்லவா வாங்குவதற்கு?.. ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் தான்
    எளிதில் வாங்குவோரை கவரும் என்பதனை இந்தப் பதிப்பகங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்தகங்களின் உள்ளடக்கத்தைக் குறித்து அத்தனை அலட்சியம்!

    ReplyDelete
  7. வாருங்கள் ஜீவி சார்!

    ஒரு எழுத்தாளராகவும் சென்னையில் வசிப்பவராகவும் இருப்பதில் உங்களுக்கு கிடைக்கிற தகவல்கள் அனுபவங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்க முடியும். ஆனால் ஒரு வாசகனாக இந்த மாதிரிக் கண்காட்சி செய்திகளை மட்டும் பார்க்கிற எனக்கு ?

    //எனக்கு, புத்தகக் கடைகளில் கிடைத்த அனுபவங்களே வேறு! மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையில், புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், பின்னால் மென்மையான குரலில், அந்தப் புத்தகத்தை பற்றியோ, அதை விட இன்னும் சிறப்பான புத்தகம் ஒன்றையோ அறிமுகம் செய்யும் குரல்! புத்தகத்தை விற்பனை செய்யவேண்டுமே என்ற விற்பனையாளனின் குரல் அல்ல அது! புத்தகங்களை நேசித்த, அதை முழுமையாக வாசித்தஒரு வாசகன், இன்னொரு வாசகனோடு ஆர்வமாகப் பகிர்ந்துகொள்ளும் குரல்!
    திரு நவநீத கிருஷ்ணன், அந்தப் புத்தக நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து, அதன் செயலாளராகவும் ஆனவர். சென்ற அக்டோபரில் தான் காலமானார்!
    பள்ளி இறுதிப் படிப்பை மட்டுமே முடித்த அவரால், வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கடைக்கு வருகிறவர்களிடமும் உண்டாக்கத் தெரிந்த வித்தையை நிறையத் தரம் அனுபவித்தவன் நான்.

    வாசிப்பை ஊக்குவிப்பது எப்படி என்பதை நான் பார்க்கும் விதம் வேறு! ஆர்ப்பாட்டமான கண்காட்சிகளை நடத்தி, அங்கே காண்டீனில் என்ன சாப்பிட்டோம் எந்த எந்தப் பிரபலங்களைப் பார்த்தோம் என்று பட்டியலும் புகைப்படமும் வெளியிடுவது மட்டுமே ஊக்குவிப்பது....//

    இது 2010 ஜனவரியில் பின்னூட்டமாக இங்கே எழுதியது https://suvasikkapporenga.blogspot.com/2010/01/blog-post_08.html இங்கே புத்தகக் கண்காட்சிகள் வாசிப்பை ஊக்குவிப்பதாகவோ, தேர்ந்தெடுத்து வாசிப்பது எப்படி என்று ஒரு க்ளூ கொடுப்பதாகவோ எப்போதும் இருந்ததில்லை என்பதை பிரிட்டனில் நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றின் சுட்டி கொடுத்து, குழந்தைகளுக்காக ஒரு செஷன் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்களின் ஆசிரியர்களோடு நேரடியாக interact செய்கிற மாதிரி, புதிது புதிதாக வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் 2009, 2010 காலங்களில் இந்தப்பக்கங்களிலேயே பேசியதுதான்.

    ReplyDelete
  8. அமெரிக்க வாசகசாலைகள் இளம் பிராய சிறார்களின் மனசில் வாசிப்பு நேர்த்தியை புகுத்துவதற்கு பாடுபடுவதை பார்த்து வியந்திருக்கிறேன். குழந்தைகளுக்குத் தான் எவ்வளவு ஊக்கூவிப்புகள்!.. இளம் பிராயத்தில குழந்தைகளுக்கு நூலகங்கள் மிகவும் பிடித்த இடமாக-- புத்தக வாசிப்பை அறிமுகபபடுத்தும் முதல் களமாக-- அங்கு திகழ்வதை இன்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கலாம். நம்மவர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அர்ப்பணிப்பு இது.

    அரசின் கையிலிருக்கும், இரண்டு மூன்று துறைகளில் நூலகத்தை ஒன்றாக பெருமையாகக் கொண்டிருக்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் என்ன, நூலகங்கள் வளர்ச்சியில் தான் தோன்றித்தனமான செயல்பாடுகள் இல்லவே இல்லை! பொதுவாக அமெரிக்க நூலகங்கள், அமெரிக்கர்களின் செல்லக் குழந்தையாக கொழுகொழுவென்று வளர்ந்திருக்கின்றன.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)