Showing posts with label Change Management. Show all posts
Showing posts with label Change Management. Show all posts

Sunday, September 22, 2019

உலகம் போகிற போக்கும்! மாற்றங்களுக்குத் தயாராவதும்!

மாற்றங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. அந்த மாற்றங்கள் வளர்ச்சியாகவோ அல்லது சிதைவாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! அப்படியான  வளர்சிதை மாற்றங்கள் வளர்ச்சிக்கும் பின் சிதைவுக்குமாக தொடர்ந்து  நடந்து கொண்டே இருப்பதில் தான் மனித சமூகம், கற்கால மனிதனிலிருந்து இன்றைய நிலை வரை உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.நிறுவனப் படுத்தப்படுகிற எந்த ஒரு விஷயமும் இதற்குள் அடக்கம். ஒரு மடமோ மதமோ அரசியல் இயக்கமோ ராணுவமோ இப்படி எதுவானாலும், மாற்றத்துக்குத் தயாராக இருப்பதில் தான் எந்த ஒரு நிறுவனமும் நீடிக்கவும், நிலைத்து நிற்கவும் முடியும் என்பதை இந்தப்பக்கங்களிலேயே ஒரு புத்தக அறிமுகமாக ஒரு பதினோரு பதிவுகளில் பார்த்திருக்கிறோம். 


அந்தவகையில், எப்படி  நமது ராணுவமும் மாற்றங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை   ராணுவத்தளபதி பிபின் ராவத் அளித்த நேர்காணலின் சாரத்தை இந்த 21 நிமிட வீடியோவில்  சேகர் குப்தா சொல்கிறார். விரிவாக அச்சில் படிக்க இங்கே    


தனது 2 நாள் சவூதி அரேபிய பயணத்தை முடித்துக் கொண்டு ஐநா பொதுச்சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஒப்பாரி வைப்பதற்காக  பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பு இல்லை, அமெரிக்க அரசின் சார்பிலும் யாரும் வரவேற்றுப் பூங்கொத்து கொடுக்கவில்லை என்கிறது இந்த ஒன்றரை நிமிட செய்தி. 


ஆனால் தன்னுடைய மதிப்பு மிக்க விருந்தாளி சாமானியனைப் போல கமெர்ஷியல் விமானத்தில் போவதா என்று தடுத்து  அமெரிக்கா போக தன்னுடைய சொந்த விமானத்தைக் கொடுத்தார் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் MBS  என்கிறது இந்தச் செய்தி.  இம்ரான் கானுடைய  UNGA ஒப்பாரியைக் குறித்து இந்தியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.இதுபோல நிறைய நாடகங்களை ஐநா பொதுச்சபையில் பார்த்தாயிற்றே என்கிறது இந்தியத்தரப்பு! மாற்றங்களை புரிந்து கொள்ளாமல், மாற்றங்களுக்குத் தயாராகவும் இல்லாத ஒரு நாடு மேலும் மேலும் சிறுமைகளைச் சந்திப்பது ஒரு ஆரம்பம் மட்டும் தான்! 
    
    
ஸ்வீடனை சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் பருவ நிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலுக்கு எதிராகப் போராடி வருகிறார். தனி ஆளாகத் தொடங்கிய போராட்டம் தற்போது பல மில்லியன் மாணவர்களை இணைத்துள்ளது. ஒற்றை சிறுமியின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இந்தியாவிலும், ஏன் மதுரையில் கூட மாணவர்கள் இந்தச் சிறுமியின் அறைகூவலுக்குச் செவி கொடுத்துப் போராட்டம் செய்தார்களாம்! #fridaysforfuture  என்ற ஹேஷ்டாகுடன் 150 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் களம் இறங்கியிருப்பதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கிறது.  சரி, அப்புறம்?

மாற்றங்கள் நம்மிடமிருந்தே ஆரம்பமாகின்றன என்பதைப் புரிந்து கொண்டாலொழிய, சும்மா நானும் கொடி பிடித்தேன் கோஷம் எழுப்பினேன் என்கிறமாதிரி  வெறும் போராட்டங்களால் மட்டுமே மாற்றங்கள் வந்து விடுவதில்லை!

மீண்டும் சந்திப்போம்.    

Sunday, January 6, 2019

மாற்றங்களுக்குத் தயாராவது! Change Management

வருகிற 8, 9 தேதிகளில் வங்கி ஊழியர்களும் காப்பீட்டு ஊழியர்களும் இருநாள் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருப்பதை அடிப்படையாக வைத்து என்ற முந்தைய பதிவைத் தொட்டு, வேலைநிறுத்தங்கள்! அர்த்தமிழந்த சாங்கியம் என்ற தலைப்பில் என்னுடைய இன்னொரு வலைப்பதிவில்  வேலை நிறுத்தங்களைக் குறித்து ஒரு ஏழு கேள்விகளை முன்வைத்திருந்தேன்.

மந்தைத்தனம் மனிதர்களை பழமையில் இருந்து மீள விடாமல் பின்னோக்கி இழுக்கிற அடிப்படையான  பலவீனம்! மந்தையில் இருந்து விலகும்போது மாற்றத்துக்கான ஆரம்பமும் தொடங்கி விடுகிறது! #ChangeManagement

   
ஜான் பி கோட்டர் தன்னுடைய புத்தகத்தில், மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒரு எட்டு முக்கியமான தடைகளைப் பட்டியல்இடுகிறார். அதற்கப்புறம், ஒரு எட்டு முக்கியமான வழிகளில் எப்படி மாற்றத்தை நாம் விரும்புகிற விதத்தில் நிர்வகிக்க முடியும், சாதிக்க முடியும் என்பதையும் சொல்கிறார்.

அதுவும் சுருக்கமாக வெறும் நூற்று எண்பத்தேழு  பக்கங்களில்!


முதலில் அவர் மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் எட்டுக் காரணிகள் எவை என்று சொல்வதைப் பார்க்கலாம்.இதற்கு மாற்றாக, மாற்றங்களுக்கு ஒரு எட்டு வழிகளை சொல்வதையும் அதனதன் கீழேயே சேர்த்துப் பார்த்து விடலாம்!


இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும்.

1. Allowing too much complacency

Establishing a Grater sense of urgency.

2. Failing to create a sufficiently powerful guiding coalition

Creating the Guiding Coalition.
 
3. Underestimating the power of Vision

Developing a Vision & Strategy
4. Under communicating the Vision by a factor of 10 (or 100 or even 1000)

Communicating the Vision, Change.
 
5. Permitting obstacles to block the Vision

Empowering others to act.
 
6. Failing to create short-term Wins

Creating short-term Wins.
 
7. Declaring Victory too soon

Consolidating Gains and producing even more change
 
8. Neglecting to anchor Changes firmly in the Corporate Culture

Institutionalizing Changes in the Culture.
நிறுவனங்கள் தோற்பதற்கான முக்கியமான எட்டுக் காரணங்களைப் பட்டியலிடும் ஜான் பி கோட்டர், நிறுவனங்கள் ஜெயிப்பதற்கான எட்டு வழி முறைகளையும் அடுத்து சொல்கிறார்.

சிவப்பு, நீல வண்ணங்களில் இரண்டையும் அடுத்து அடுத்துப் பார்க்கிறீர்கள் இல்லையா?
கொஞ்சம் இந்த இரண்டு பட்டியல்களையும் பார்த்துவிட்டு, உங்கள் மனதில் என்ன கேள்வி எழுகிறதோ, அதை பின்னூட்டமாக எழுதுங்கள்!

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக, ஒரு விளம்பரம்! மாற்றங்கள் என்றால் நமக்கு என்னென்னமோ தோன்றுகிறது இல்லையா? 

காம்லின் நிறுவனத்துக்கோ அது ஒரு வினோதமான விளம்பரமாக! 


மாற்றங்கள் குறித்த ஒரு சிறு காணொளி கீழே 


இது எட்டு வருடங்களுக்கு முன்னால், ஒரு புத்தகத்தை வைத்து எட்டுப் பதிவுகளாக எழுதி    வந்ததில், இது எட்டாவது பதிவு, மீள்பதிவாக! மாற்றங்களுக்குத் தயாராவது எப்படி என்பதை மீளவும் நினைவு படுத்திக் கொள்வதற்காக.


பேராசிரியர் கோட்டர் முன்வைக்கும் மாற்றங்களுக்குத் தயாராவது குறித்த ஒரு விரிவான காணொளி 
  

Thursday, January 3, 2019

மாற்றங்களை எதிர்கொள்வது! தடுமாறும் வங்கி ஊழியர்கள்!

மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்தப் பக்கங்களில் #change management என்ற தலைப்பின் கீழ் பார்த்திருக்கிறோம்! மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத எதுவும் பாழ்பட்டுப் போகும் என்பதையும் காலம் நமக்குப் படிப்பித்துக் கொண்டே வருகிறது இல்லையா?!

பாங்க் ஆப் பரோடா, தேனா பாங்க், விஜயா பாங்க் மூன்றையும் இணைப்பதென மத்திய அரசு உறுதியான முடிவெடுத்துவிட்டது. நேற்றைக்கு ஒவ்வொரு வங்கியின் பங்குகளும் எப்படி swap செய்யப் படுமென்கிற அறிவிப்பும் வந்தாயிற்று. விஜயா வங்கியின் 1000 பங்குகளுக்கு 402 என்றும் தேனா வங்கியின் 1000 பங்குகளுக்கு 110 என்றும் பாங்க் ஆப் பரோடா பங்குகளாக மாற்றப்படும் என்கிற அறிவிப்பும் நேற்றே வந்தாயிற்று.

#வங்கிஊழியர்சங்கங்கள் நிலைமை பாடுதான் திண்டாட்டம்! என்னமாவது செய்தாகவேண்டுமே! #வேலைநிறுத்தம் தான்! வேறென்ன தெரியும் பாவம்?! வருகிற 8.9 இருநாட்கள் #bankstrike

ஸ்டேட் வங்கி, HDFC வங்கி இரண்டுக்கும் அடுத்து மூன்றாவது பெரிய வங்கியாக இந்த மூன்று வங்கிகள் இணைந்த பிறகு ஏப்ரல் முதல் தேதி முதல் இருக்கும். மூன்றாவது இடத்தில் இப்போது இருக்கும் ஐசிஐசிஐ வங்கி பின்னுக்குத் தள்ளப்படும்
இணைப்புக்குப் பின் எழக்கூடிய முக்கியமான பிரச்சினை, #workculture மற்றும் புறக்கணிக்கப் படுவதாக ஊழியர்களிடம் இருந்து எழுவது என்பதுபோக #வராக்கடன்வசூல் செய்வதும், மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தலைமையும் தான்! முந்தைய நாட்களில் வங்கிகளை இணைப்பது என்பது சரியான திட்டமிடல், சரியான தலைமை, சரியான தொடர்நடவடிக்கைகள் என்றெதுவுமே இல்லாமல் செய்யப்பட்டதில் பிரச்சினைகள் எழுந்தது உண்மை. அதற்காக, மறுபடி முயற்சி செய்யவே கூடாது என்று வங்கி ஊழியர்கள் குதிப்பதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? இப்படிச் செய்து தானே சோவியத் யூனியன் மீட்கமுடியாமல் சிதறுண்டு போனது? காம்ரேடுகளுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை என்றால், காம்ரேடுகளும் காணாமல் போய்விடுகிற நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்பதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

இங்கே கீழே சுட்டியில் பங்கு முதலீட்டாளர்களின் ஏமாற்றத்தை மட்டும் முன்னிறுத்திப் பேசுவதும் கூடப் பிரச்சினையைத் தீர்க்க உதவாது. நமக்கு உண்மையில் பிரச்சினை எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்பதுதான்!

Sunday, May 1, 2011

........போயிக் காமத் வந்தார் டும் டும் டும்!


ஊழலுக்கெதிராக இன்போசிஸ்! 

கொஞ்சம் வினோதமான இந்தக் காமெடியை முன்னமேயே  பதிவிட நினைத்திருந்தேன்!தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் செய்திகளைக் கவனித்துக் கொண்டிருந்ததில், அப்போது அவகாசமே இல்லாமல் போனது.அந்தத் தமாஷாவைப் பற்றிய செய்தி இங்கே!
"எங்களிடம் லஞ்சம் கேட்டார்கள் மறுத்துவிட்டோம்" என்று சென்ற பத்தாம் தேதி  முழங்கிய இன்போசிஸ்  மோகன்தாஸ் பை,  முழங்கிய ஒரு வார காலத்துக்குள்ளாகவே, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தது ஐடி துறையை மட்டுமல்ல, அதற்கு சம்பந்தமே இல்லாத என்னைப்போலப் பதிவர்களையும் கூடக்  கொஞ்சம் ஆச்சரியப்படுத்திய விஷயம்!

கார்பரேட் இந்தியா ஊழலை வளர்ப்பதில், காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை என்பதை வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மெகா ஊழலும் அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் கூட, மோகன்தாஸ் பை போன்றவர்கள் தங்கள் நிறுவனம் ஊழலுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாக சொல்வதை நம்பமுடியவில்லை!

ஜெனெரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் ஜாக் வெல்ஷ் தலைமைப் பொறுப்பேற்ற தருணத்தில் தயவு தாட்சணியமில்லாமல் ஆட்குறைப்பு செய்ததுபோல (ந்யூட்ரான் ஜாக் என்று பெயரிடப்பட்டதில் ஜாக் வெல்ஷுக்கு மிகவும் வருத்தமிருந்தது)  ஐடி துறையில் ஐ-ரேஸ் (iRace) என்ற முறையில் இன்போசிசில் பணியாற்றியவர்களைக் கடுமையாக வடிகட்டியதில் 4500 பேருக்கும் மேலாக வெளியேற்றக் காரணமாக இருந்தவர் பை  என்ற கசப்பான விமரிசனத்தை ஒரு முன்னாள் இன்போசிஸ் ஊழியரிடமிருந்து அறிய முடிந்ததுபிசினெஸ் லைன் நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்தக் கட்டுரை கொஞ்சம் இந்தப்


கர்நாடக அரசியல் தெரிந்தவர்கள், ஊழல் என்பது கர்நாடகாவில் it is a way of life என்பதையும் அறிந்தே வைத்திருப்பதை இந்தக் கொங்கணி எப்படி மறந்துபோனார் என்பது எனக்கு ஆச்சரியம்! கொங்கணிகளை இந்தியாவின் நிதித்துறை ஜாம்பவான்கள் என்று அவர்களே சொல்லிக் கொள்வார்கள்! வங்கித்துறையில், கர்நாடகாவைத் தலைமையகமாகக் கொண்ட வங்கிகள் சிலவற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதில், ஊழல், மோசடி செய்வதில் அவர்களுடைய திறமை நன்றாகவே தெரியும்.ஊழலைப் பெருமையோடு வளர்க்கிற ஒரு அமைப்பில் இருந்துகொண்டு ஒருவர், ஊழலுக்கெதிராகப் போர்க்கொடி தூக்குகிறார் என்று சொன்னால், கொஞ்சம் கேலிச் சிரிப்புடன் தான் பார்க்க வேண்டியிருக்கும் இல்லையா!
மோகன்தாஸ் பை இன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் கிளப்பிய போர்க் கொடி கூட அப்படித்தான்! ஒரு கேலிச் சிரிப்புடன் முடிந்து போனது! அதை மறந்துபோயிருந்த வேளையில், இந்த ராஜினாமா விவகாரம்!

 

ஒரு வழியாக இன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்சிக்யூடிவ் சேர்மனாக திரு கே வி காமத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.பிபிசி செய்தி, "நிறுவனத்தின் ஸ்தாபகரே தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவரது குடும்ப உறவினர்களின் கைகளுக்கே தலைமைப் பொறுப்பு மாறும் வழமையே இந்திய நிறுவனங்களில் இருந்துவருகின்ற நிலையில், வங்கித் துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவரான கே.வி காமத் இன்போஸிஸ் தலைவராக நியமிக்கப் படுகின்றமை பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது." என்று குறிப்பிட்டிருக்கிறது.

யார் வந்தாலும் ஜோராகக் கைதட்டுவது இந்தியாவில் சாதாரணமான ஒன்று தான் என்பது பிபிசி செய்தியாளருக்குத்  தெரியவில்லை, அவ்வளவுதான்!

நிறுவனத்தை உருவாக்க என்னென்ன பாடுபட்டோம் என்று விமரிசனம் செய்பவர்களுக்கு பதிலாக நாராயணமூர்த்தி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் வாசிக்க 



 

Saturday, January 15, 2011

மாற்றங்களுக்குத் தயாராவது - 8


வாசகர்களுக்கு உளங்கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! வான் மழை வழாது பொழிக ! மழைவளம் சுரக்க!பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

ஜான் பி கோட்டர் தன்னுடைய புத்தகத்தில், மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒரு எட்டு முக்கியமான தடைகளைப் பட்டியல் இடுகிறார். அதற்கப்புறம், ஒரு எட்டு முக்கியமான வழிகளில் எப்படி மாற்றத்தை நாம் விரும்புகிற விதத்தில் நிர்வகிக்க முடியும், சாதிக்க முடியும் என்பதையும் சொல்கிறார்.

அதுவும் சுருக்கமாக வெறும் நூற்று எண்பத்தேழு  பக்கங்களில்!

முதலில் அவர் மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் எட்டுக் காரணிகள் எவை என்று சொல்வதைப் பார்க்கலாம்.இதற்கு மாற்றாக, மாற்றங்களுக்கு ஒரு எட்டு வழிகளை சொல்வதையும் அதனதன் கீழேயே சேர்த்துப் பார்த்து விடலாம்!


இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும்.


1. Allowing too much complacency

Establishing a Grater sense of urgency.

2. Failing to create a sufficiently powerful guiding coalition

Creating the Guiding Coalition.
 
3. Underestimating the power of Vision

Developing a Vision & Strategy

4. Under communicating the Vision by a factor of 10 (or 100 or even 1000)

Communicating the Vision, Change.
 
5. Permitting obstacles to block the Vision

Empowering others to act.
 
6. Failing to create short-term Wins

Creating short-term Wins.
 
7. Declaring Victory too soon

Consolidating Gains and producing even more change
 
8. Neglecting to anchor Changes firmly in the Corporate Culture

Institutionalizing Changes in the Culture.

நிறுவனங்கள் தோற்பதற்கான முக்கியமான எட்டுக் காரணங்களைப் பட்டியலிடும் ஜான் பி கோட்டர், நிறுவனங்கள் ஜெயிப்பதற்கான எட்டு வழிமுறைகளையும் அடுத்து சொல்கிறார். சிவப்பு, நீல வண்ணங்களில் இரண்டையும் அடுத்து அடுத்துப் பார்க்கிறீர்கள் இல்லையா?

கொஞ்சம் இந்த இரண்டு பட்டியல்களையும் பார்த்துவிட்டு, உங்கள் மனதில் என்ன கேள்விகள் எழுகிறதோ, அதை எழுதுங்கள்!

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக, ஒரு விளம்பரம்! மாற்றங்கள் என்றால் நமக்கு என்னென்னமோ தோன்றுகிறது இல்லையா? 

காம்லின் நிறுவனத்துக்கோ அது ஒரு வினோதமான விளம்பரமாக! 



மாற்றங்களை, ஒரே நிமிடத்தில் விளக்கி விடுகிறார்களாம்!




என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்!
 



Tuesday, December 21, 2010

மாற்றங்களுக்குத் தயாராவதும் நிறுவனப் பண்புகளும்!

மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயாராவது என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது Organizations, Organizational behaviour  என்று  ஒரு நிறுவனம், நிறுவனப் பண்புகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவது நல்லது.


மாற்றங்களுக்குத் தயாராவது என்பதே ஒரு நல்ல தலைமை, எங்கே இருக்கிறோம்,அடுத்து எங்கே போகவேண்டும் என்பதில் தெளிவான பார்வை, அதைக் குழப்பமில்லாமல் செயல்படுத்துகிற லாவகம், ஊழியர்கள் என்றால் உத்தரவுக்காகக் காத்திருப்பவர்கள் என்று மட்டுமே இல்லாமல், தங்கள் பொறுப்பை உணர்ந்து பொறுப்புடன் செயல் படுகிறவர்களாக, தலைவர்கள் கொண்டு வர விரும்பும் மாற்றத்தை சாதிக்க ஆர்வத்துடன் ஈடுபடுகிற கூட்டாளிகளாக மாற்ற முடிவதில் தான் இருக்கிறது!

நிறுவனம் என்பது என்ன? நிறுவனப் பண்புகள் என்பது என்ன? இந்தியச் சூழ்நிலைகளில், நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர்மாறாகத் தான்  இவை பற்றிய விவரம், விளக்கம், வியாக்கியானம் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிறுவனப் பண்புகளைக் குறித்த பதிவொன்றை சென்ற மாதம், சேத் கோடின் பதிவுகளில் படித்தது, தொடர் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது.

இங்கே பெரும்பாலான நிறுவனங்கள், குறிப்பாக அரசுத்துறை, பொதுத்  துறையில் இயங்குபவை  தங்களை ஒரு கட்டமைக்கப் பட்ட, ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கிற அமைப்பாகவே உணராமல், ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியிலேயே செயல் படுவதையும், என்ன நோக்கத்திற்காக நிறுவனம் தொடங்கப்பட்டதோ அதற்கு எதிராகவே பல தருணங்களில் செயல் படுவதையும் பார்க்க முடியும். ஒரு சரியான தலைமை இல்லாதது, தெளிவான செயல் திட்டம் இல்லாதது, ஒரு தெளிவான பார்வை இல்லாதது இப்படி இந்த அமைப்புக்கள் குறைப் பிரசவங்களாகவே இருப்பதற்குக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமீபத்தில் சேத் கோடின் பக்கங்களில் கார்பரேட்டுகளுக்கு மனசாட்சி கிடையாது என்ற தலைப்பிலான பதிவைப் படித்துவிட்டு, இங்கே உள்ள பல நிறுவனங்களுடைய பிரச்சினைகளோடு, குறிப்பாக பொதுத்துறையில் இயங்கும்  ஒரு புள்ளிராசா வங்கியின் தோற்றுக் கொண்டே இருக்கும் இயல்போடு பொருத்திப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தேன். பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு மனசாட்சி மட்டுமில்லை, குறைந்தபட்ச மூளை கூடக் கிடையாது. எல்லாம் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் தான்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை என்பது, நன்றாகவே புரிகிறது.ஆனால் என்ன செய்ய?!

சேத் கோடின் சொல்வதைக் கொஞ்சம் என்னவென்று பார்த்து விடலாம்! அவர் சொல்கிறார், நிறுவனங்களுக்கு மனசாட்சி கிடையாது, அதெல்லாம்  அங்கே உள்ள நபர்களுக்கு மட்டும் தான்!

"நான் என்ன செய்யட்டும், என்னுடைய துறைக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது!", "நான் இங்கே வேலைதான் செய்கிறேன்" , "என்ன பண்ணுவது? இது என்னுடைய வேலை" இப்படிச் சொல்கிறபோதே, உங்களுடைய மனசாட்சியையும் கழற்றி வைத்து விட்டு, உங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்கிறார் சேத் கோடின்


பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, வேறெவர் மீதோ பழியை சுமத்தி விடுவது கொஞ்சம் சிரமமே இல்லாத குறுக்குவழிதான்!  

எதற்கு? இந்த மாதிரி ஆசாமிகளால் நிரப்பப் பட்ட நிறுவனம் அல்லது பிராண்ட், வேகமாகக் காணாமலேயே போவதற்குத் தான்! 

முந்தைய நாட்களைப் போல அல்லாமல், நிறுவனங்களுக்கு இப்போது அதிக பலம், முதிர்ச்சி இருக்கிறது. எந்த அளவுக்குத் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, திறமையாக, வேகமாகச் செயல் படுகிறார்களோ அந்த அளவுக்கு பொருளாதாரத்தையும் மக்களையும் மாற்றக் கூடிய வல்லமை உள்ளதாக இருக்கிறது.இப்படிச் சொல்கிற சேத் கோடின், ஆகக் கூடி நாம் செய்ய வேண்டியதெல்லாம், தனிநபர்களாகப் பார்த்து,  யாரோ வந்து இதை நீ தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று சொல்கிற வரை காத்திருக்காமல், (அப்படி எவரும் வந்து சொல்லவும் மாட்டார்கள் ) தாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு முழுப் பொறுப்பேற்று செயல்பட்டாகவேண்டும் என்றும் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.

இந்தப் பதிவைப் படித்துவிட்டுக் கொஞ்சம் யோசித்துக் கொண்டு இருந்ததில், ஏன் சில  நிறுவனங்கள், குறிப்பாகப் பொதுத்துறை நிறுவனங்கள், கற்றுக் கொள்ளும் நிறுவனங்களாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறிக் கொண்டே இருக்கின்றன என்பதைப் பார்த்தபோது, அருவருப்பும் ஆயாசமும் தான் மிஞ்சுகிறது

ஒரு நிறுவனம், கற்றுக் கொள்ளும் நிறுவனமாக, மாற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறனுடையதாக இருக்கிறதா என்பதை எப்படி அளவிடுவது? எதை வைத்துத் தெரிந்து கொள்வது?

எந்த ஒரு நிறுவனமும், ஒரு குறைந்தபட்ச நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் கட்டப் படுகிறது. அந்த நோக்கங்களை நிறைவேற்ற மனிதர்கள்  தேவைப்படுகிறார்கள். அப்படித் தேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்கள், எந்த அளவுக்கு நிறுவனத்தின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள் என்பது முதலில்! 

அதற்கப்புறம், அதை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்குத் திறமை, ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள் என்பது! இந்த இரண்டுக்கும் இடைவெளி எதுவும் இருக்கிறதா என்ற சுய சோதனை, இடை வெளியை நிரப்ப என்ன செய்கிறார்கள் என்பது அடுத்து. ஆக இப்படி  ஒரு நிறுவனம் நல்ல முறையில் இயங்குகிறதா இல்லையா என்பது ஒரு புறம்! காலத்துக்கேற்ற படி, மாற்றங்களுக்குத் தயாராக இருப்பது, மாற்றிக் கொள்வதும் இன்னொரு புறமுமாக, ஒரு நிறுவனம், அதில் உள்ள நபர்கள் பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டி இருக்கிறது. 

ஆக நிறுவனப் பண்புகள் என்று சொல்லும்போதே, அது அதில் பணியாற்றும் மனிதர்களுடைய ஒட்டு மொத்தப் பண்பை அளவீடாகக் கொண்டு சொல்லப் படுவது என்பது தெளிவு.

எந்த ஒரு நிறுவனமாக இருக்கட்டும், அது ஒரு கற்றுக்கொள்ளும் நிறுவனமாக இருக்கிறதா, வெற்றிகரமாகச் செயல் படுகிறதா என்பதை, அந்த நிறுவனம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறது என்பதைக் கவனித்தாலே புரிந்து கொள்ளக் கூடியது தான்.

ஒரு பிரச்சினை, சவாலை எதிர்கொள்ளும் தருணத்தில் ----

முதலாவதாக, அந்தப் பிரச்சினை அல்லது சவாலைப் புறக்கணிக்கிறார்களா , அதற்குரிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்களா?

இரண்டாவதாக, அடுத்தவர் மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களா?

மூன்றாவதாக, இந்த மாதிரிப் பிரச்சினை, புகார், குறை எப்போதுமே இருப்பது தான் என்ற மாதிரி அதைக் குறித்து ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களா? என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தத் தவறுகிறார்களா?

இந்த மூன்று கேள்விகளில் எந்த ஒன்றிற்கும் ஆமாம் என்பது பதிலாக இருக்குமானால், அந்த நிறுவனம் கற்றுக் கொள்ளத் தவறுகிற, சீக்கிரமே காலாவதியாகிப் போய்விடக் கூடிய நிறுவனம் தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்! அப்புறம், அதில் உள்ள ஆசாமிகளுமே கூட, அதே கதிக்குத் தான் போகவேண்டியவர்கள் என்பது தனியாகச் சொல்ல வேண்டிய ஒன்றா என்ன!

இப்படி இல்லாமல்-----

பிரச்சினைகள், புகார்கள், குறைபாடுகள் எல்லாம் அந்த நிறுவனம் செயல்படும் விதத்தில், பின்பற்றும் நடைமுறைகளில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும், அதே மாதிரி எதிர் காலத்தில் நிகழாமலும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, அந்த நிறுவனத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் பணியாற்றுகிறவர்கள் முன்வந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றிருந்தால், அந்த நிறுவனம் தன்னுடைய அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனமாக  இருக்கிறது, மாறிவரும் சூழலுக்கேற்றபடி, தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும், தன்னுடைய திறமையைப் பெருக்கிக் கொள்ளவும் தெரிந்த வளரும் நிறுவனமாகவும் இருக்கிறது.

பிரச்சினைகள், அவை விடுக்கும் சவால்கள் என்பவை பயமுறுத்துபவையோ, தலையைச் சீவி விட்டுப்
போகிறவையோ அல்ல! திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கிடைக்கும் அற்புதமான வாய்ப்புத் தான்! பிரச்சினை என்று பார்த்தால், பிரச்சினைதான்! அதே நேரம், அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு, அது ஒரு கற்றுக் கொள்ளும் அனுபவம் மட்டுமல்ல, அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்க்கும் ஏணியாகவும் இருக்கிறது.

இதில் புள்ளிராசா வங்கி எங்கே வருகிறது என்று கேட்கிறீர்களா? இங்கே இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!
 
புள்ளிராசா வங்கி,  தலையில் இருந்து வால் நுனி வரை, எவருக்கும் தன்னுடைய  பொறுப்பு என்னவென்பதே இன்றைக்கும் தெரிந்து கொள்ளாமலேயே வண்டி ஒட்டிக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகள், புகார்கள் வெடித்து வெளியே வரும் வரை எவரும் எதுவுமே செய்ய மாட்டார்கள்,   அப்படி வரும் சமயத்தில், எவர் மீதாவது பழியைச் சுமத்தி வெளியே அனுப்பி விட்டால், Off with his head, Off with her head! என்று  தலையை சீவ உத்தரவு போட்டு விட்டால்  எல்லாம் சரியாகப் போய்விடும் என்று நம்பி செயல்பட்டுக் கொண்டே புள்ளிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிற பொதுத் துறை வங்கி அது!

அவ்வளவு தான்!

இது இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே வெளியானதன் மீள்பதிவுதான், இந்த சந்தர்ப்பத்துக்குத் தேவையான சில மாற்றங்களுடன்!


 

Saturday, December 18, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது-6


மாற்றங்களுக்குத் தயாராவது எப்படி ஆரம்பிக்கிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த ஐந்து பதிவுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாற்றங்கள், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு ஜென் ஞானியைப் போல மேகங்கள் வந்தன போயின, நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் சாட்சி மட்டும் தான் என்று உலக வாழ்க்கையில் எல்லோராலும்  இருந்துவிட முடியாது அல்லவா?

மாற்றங்கள் எப்படி ஆரம்பிக்கின்றன? ஒரே நேரத்தில் எல்லோரிடத்திலும் மாற்றத்திற்கான ஆர்வம் ஆசை ஏற்பட்டு விடுவதில்லை என்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம். உண்மையை சொல்லப் போனால், மாற்றங்கள் எப்படி இருக்குமோ, நான் எதற்காக மாற வேண்டும்,
என்னை விட்டு விடுங்கள், நான் இப்படியே இருந்து விட்டுப் போய் விடுகிறேனே என்று முதலில் கெஞ்சலாகவும் பிறகு முரட்டுப் பிடிவாதமுமாக ஒரு எதிர்ப்பு நிலை ஏற்படுவதைத் தான் காலம் காலமாகப் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். மாற்றங்களுக்குத் தயாராக முரண்டு பிடிப்பது, பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவது என்பது மனித இனத்தின் பொதுவான தன்மைதான். ஆனாலும் மாற்றங்கள், அந்தப் பொதுவான தன்மையையும் உடைத்து, பழமையைப் புரட்டிப் போட்டுவிடுகிறதாக வந்து கொண்டே இருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா?

ஆக, மாற்றங்கள் என்பது, ஒரு தனிநபர் அல்லது ஒரு சிறிய குழுவினால் முன்னோடிகளாகக் கொண்டு ஆரம்பித்திருப்பதை வரலாற்றை சரியாகப் புரிந்துகொண்டாலே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக,கிறித்தவ திருச்சபையின் இறுக்கமான பிடியில் மத நம்பிக்கை, இந்த பூமி தான் படைப்பின் நடுநாயகமாக இருக்கிறது என்பதை நம்ப வைத்துக் கொண்டிருந்தது; மக்களும் ஆடு மந்தையைப் போல ஆமாம் ஆமாம் என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். கலீலியோ என்ற விஞ்ஞானி, உண்மையில் பூமி சூரியனைச் சுற்றி வரும் பல கிரகங்களில் ஒன்று தான் என்பதை சொன்னபோது முரட்டுத் தனமாக, எதிக்கத் தான் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து பழக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தெரிந்திருந்தது.வாடிகன் மிகக் கடுமையாக மத நம்பிக்கைத் திணிக்க முற்பட்டபோது என்ன நடந்தது என்பதை அறிவியல் வரலாறு சொல்கிறது. (அறிவியல் வரலாறு என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நூலின் அற்புதமான தமிழ்மொழி பெயர்ப்பாகத் திரு.பெ.நா. அப்புசாமி, எழுதியிருந்த நூலை இளம் வயதில் படித்த நினைவு வருகிறது.)

இந்த முன்னோடி அல்லது முன்னோடிகளைத் தான் மாற்றங்களைத் தலைமையேற்று வழிநடத்துபவர்கள் என்று சொல்கிறோம். கலீலியோவை ஆரம்ப கட்டத்தில் ஏளனம் செய்த, எரிக்க முயன்ற வெறியர்களுடைய பார்வையில் அவர் ஒரு கிறுக்கனாகத் தான் தெரிந்தார். ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப் பட்டதாகவோ, உலகம் என்ன சொல்கிறது என்பதை அடியொற்றித் தான் தானும் ஆமாம் சாமி போடுகிறவனாக இருக்கவேண்டும் என்பவராகவோ இருக்கவில்லை. தன்னுடைய கண்டுபிடிப்பில் அவர் உறுதியாக இருந்தார், அதைப் புரிந்து கொள்ள தயாராக இருந்த
நபர்களுக்குப் பொறுமையாக விளக்கவும் தயாராக இருந்தார். கடைசியில் என்ன ஆயிற்று என்பது இந்நேரம் உங்களுக்கே புரிந்திருக்கும்! எதிர்த்து நின்றவர்களுடைய எண்ணிக்கை, பயமுறுத்தல், ஏளனங்கள் அவரை சலனப் பட செய்யவில்லை. மாறாக, அவர் என்னதான் சொல்கிறார், அது உண்மையா என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவராக முன்வர ஆரம்பித்தார்கள். இங்கே ஒரு கருத்து, அதற்கு ஆரம்பத்தில் ஒட்டு மொத்த எதிர்ப்பு, அப்புறம் இதில் உண்மை இருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள ஒவ்வொருவராக முன்வந்த விதம், இப்படி சிறுதுளியாகப் பெருகிக் கொண்டே போனதில், எந்தக் கட்டத்தில் மாற்றத்திற்கான எதிர்ப்பு அடித்துச் செல்லப் பட்டது என்பதைத் துல்லியமாக எவராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.

ஜான் பி கோட்டர் முதலான ஆசிரியர்கள் எழுதிய பல நூல்களைப் படிப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. நடைமுறையில் நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முயற்சித்தாலேயே, புத்தகங்களையும் தாண்டிய அனுபவங்கள், நாம் சரியாகப் புரிந்து கொண்டு ஜெயித்தவை, புரிந்துகொள்ளத் தவறித் தோல்வியில் முடிந்தவை என்று பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.



Think differently  என்ற வலைப்பதிவில் ஒரு மாதத்திற்கு முன்னால், திரு மக்கின்னான், டெரெக் சிவெர்ஸ் என்பவர் யூட்யூபில் தலைமைப் பண்பு  குறித்து வலையேற்றம் செய்திருந்த வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி இருந்தார். இந்த மூன்று நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்.

மேல் சட்டை அணியாத ஒருவர், சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், நடனமாட ஆரம்பிக்கிறார். சிறிது நேரமானதும் இன்னொருவரும் சேர்ந்து கொள்கிறார்.  


அந்த முதல் பின்பற்றும் நபர்  கிடைக்கும் அந்தத் தருணம் தான் மிக முக்கியம். 

இரண்டுபேர் சேர்ந்து நடனமாட ஆரம்பித்ததும், மூன்றாவதாக ஒருவர் சேர்ந்து கொள்ள, நடனமாடும் விருப்பம் ஒரு கூட்டத்தின் விருப்பமாக மாற ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்!

மாற்றத்திற்குத் தயாராவதும் இப்படித் தான்! ஒரு தலைவன் அல்லது முன்னோடி, மாற்றத்திற்கு வித்தாக இருக்கிறான். அவனைப் பின்பற்றும் அந்த முதலாவது, இரண்டாவது ஆர்வலர்கள் தான் முக்கியம். அப்புறம் அது எல்லோருக்கும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது!

கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு என்ன தோன்றுகிறது என்பதை சொல்லுங்கள்!

தொடர்ந்து பேசுவோம்!


 

Monday, December 13, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது! - 5

மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயார் செய்து கொள்வது குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஜான் பி கோட்டர்
எழுதிய ஒரு புத்தகத்தை  அடிப்படையாக வைத்துக் கொண்டு, நாம் நம்முடைய அன்றாட வாழ்விலேயே பார்த்துக் கொண்டிருக்கிற, நடப்பு விஷயங்களோடும், நாம் அறிந்த சில நிறுவனங்களின் செயல்பாடுகள், அனுபவங்களில் இருந்தும் மாற்றம் என்பது என்ன, மாற்றத்திற்குத் தயார் செய்து கொள்வது என்றால் என்ன என்பதையும் சின்ன சின்ன உதாரணங்களோடும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

எனக்கு அதிகம் பரிச்சயமானது வங்கித் துறை என்பதால், நான் நன்கு அறிந்த ஒரு பொதுத்துறை வங்கி, புள்ளிராசா வங்கி என்று அதன் தன்மையை வைத்து அழைத்து, அதில் நடந்து கொண்டிருப்பதைப் பற்றியும் கொஞ்சம் இந்தத் தலைப்புக்குப் பொருத்தமான சம்பவங்களையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மாற்றங்களுக்குத் தடையாக இருப்பதாக ஜான் பி கோட்டர் ஒரு எட்டுக் காரணங்களைப் பட்டியலிடுவதை, அதற்கு மாற்றாக, மாற்றத்தைத் திறம்பட நிர்வகிக்க வேறொரு எட்டு வழிகளையும் அவர் பரிந்துரைப்பதை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 

அவர் தன்னுடைய புத்தகத்தின் மையக் கருத்தாக சொல்வது மூன்றே மூன்று அடிப்படையான விஷயங்கள் தான்! 

மாற்றங்களை சாதிக்கத் தெளிவான பார்வையும், தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுதலாக இருக்கும் நல்ல ஒரு தலைமை, தலைமையின் தெளிவான பார்வையைப் புரிந்து கொண்டு செயல்படும் ஊழியர்கள், தலைவர்களும், அவர்களைப் பின்பற்றி நடப்பவர்க்களுமான ஒரு நல்ல நிறுவனப் பண்பு இப்படி மூன்றே விதமாக மாற்றத்தை எதிர்கொள்வது, மாற்றத்துக்குத் தயாராவது, மாற்றத்தை சாதிப்பது என்பது நிகழ்கிறது.
தலைமைப் பண்பு என்பதும், நிர்வாகத் திறன் என்பதும் வேறு வேறானவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு நல்ல தலைமை, என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான பார்வையை உருவாக்கும் வல்லமை படைத்ததாக, தாங்கள் காணும் லட்சியத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதை அடைய செயல் படுகிறவர்களாக, தங்களைப் பின்தொடர்பவர்களாக ஊழியர்களை உருவாக்க முடிந்தவர்களாக என்று தலைமையேற்று  நடத்துபவர்களின் மீதுதான் முதலாவதாக ஆதாரப்பட்டு நிற்கிறது.


"You can’t expect your employees to exceed the expectations of your customers if you don’t exceed the employees’ expectations of management. "

— Howard Schultz


இந்த வார்த்தைகளை விளக்குவதாக ,பிசினெஸ் ஓர்ல்ட் வார இதழில் ஓராண்டுக்கு முன்னால் வெளிவந்த ஒரு கேஸ் ஸ்டடியை இங்கே படிக்கலாம்.


மாற்றங்கள் எங்கிருந்தோ எவராலோ திணிக்கப்பட்டு நிகழ்வதல்ல. அப்படித் திணிக்கப்படும்போது ஊழியர்களை
கொல்வதற்கு சமமாக இருக்கும் என்பதை ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ வலைத் தளத்தில் சென்ற மாதம் வெளிவந்த ஒரு பதிவின் சுட்டியை முந்தைய பதிவில் கவனித்துப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அதையும் படித்துப் பார்த்துவிடுங்களேன்!

ஸ்ரீ அரவிந்த அன்னை, தன்னிடம் வரும் அடியவர்களுக்கு சொன்னதன் ஒரு பகுதியை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாகவும், உபயோகமாகவும்  இருக்கும்.


No Imposition

“The Mother once told this writer that she could effect the desired changes in the Ashram collectivity in a trice but she did not wish to do so. She preferred to wait for the change to come about spontaneously, from within.

That was her way and that is also the Divine's way.

Changes imposed from above or outside are not natural. They do not last. When the pressure is relaxed, things tend to swing back to their original rhythm. It is only when the necessity of a change is realised within oneself and the will is exerted accordingly that the change is accepted in the whole of the being and integrated with the general nature. Only so can the change cease to be artificial and superficial and become natural.

Besides it is a law of this manifestation to let everything evolve in full freedom.

Freedom is the law of growth. Even though all has issued from the Divine and is essentially maintained by the Divine, each is given full freedom to follow its own choice of direction and pace. The Oversoul never takes possession of the soul, it oversees, presides over its evolution but does not interfere with its liberty. It is the soul below that has to make the effort to come closer to the Oversoul, aspire for its union with the higher counterpart. The latter patiently waits for it to be ready and want to unite with it. Only so can the union be joyous culmination of a movement that proceeds spontaneously from the embodied soul. The initiative and the onus of the operation lies with the lower term.

So too with the world. The universe has indeed emanated the Being of the Supreme Lord. It has been released into manifestation with a purpose; to manifest the Divine Will. The details of the working out of the process, however, are left to the Soul in Becoming. And this Soul is multiple. There may be, and are, deviations from the main Intention, deformations in the process consequent on this departure from the central Truth. But the Divine does not interfere.

The Divine allows full scope for the consequences of such aberrations to be worked out; it waits for the movement—collective and individual—to correct itself and put itself in time with the higher Will. The Divine does not participate. The universe has to take steps to orientate its directs towards the Divine, feel the need to be restored to its Parent Divine, to be possessed by the Divine, before the Divine Lord responds by taking possession of it. The movement on the part of the universe or the individual has to be conscious, willed effort to become one with the Divine Lord.

In all this operation the Divine's help is of course there to be drawn upon; but it is not imposed. That would be contrary to the Law of manifestation. For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


Excerpted from and acknowledged with thanks and gratitude:

“Commentaries on The Mother's Ministry” Part II 
by Sri M P Pandit, Published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

மாற்றங்களை வலிந்து திணிப்பதால் பயனேதும் இருக்காது. மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளவேண்டும், ஒருமித்துச் செயல் பட வேண்டும். வெறும் உத்தரவுகளால், அதை சாதிக்க முடியாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் படுவதைப் பின்னூட்டமாக எழுதுங்கள். இங்கே மாற்றங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது, Change Management  என்ற தலைப்பிலான பாடங்களோ பரீட்சையோ அல்ல. 

மாற்றங்களுக்கு  நம்மைத் தயார் செய்துகொள்வதற்கான, மாற்றங்களுக்கான விதையாக நாமே மாறுவதற்கான அச்சாரமாகத் தான் இந்தத் தொடர்பதிவுகள்!

தயார் தானே!!



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)