மாற்றங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. அந்த மாற்றங்கள் வளர்ச்சியாகவோ அல்லது சிதைவாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! அப்படியான வளர்சிதை மாற்றங்கள் வளர்ச்சிக்கும் பின் சிதைவுக்குமாக தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதில் தான் மனித சமூகம், கற்கால மனிதனிலிருந்து இன்றைய நிலை வரை உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.நிறுவனப் படுத்தப்படுகிற எந்த ஒரு விஷயமும் இதற்குள் அடக்கம். ஒரு மடமோ மதமோ அரசியல் இயக்கமோ ராணுவமோ இப்படி எதுவானாலும், மாற்றத்துக்குத் தயாராக இருப்பதில் தான் எந்த ஒரு நிறுவனமும் நீடிக்கவும், நிலைத்து நிற்கவும் முடியும் என்பதை இந்தப்பக்கங்களிலேயே ஒரு புத்தக அறிமுகமாக ஒரு பதினோரு பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.
ஸ்வீடனை சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் பருவ நிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலுக்கு எதிராகப் போராடி வருகிறார். தனி ஆளாகத் தொடங்கிய போராட்டம் தற்போது பல மில்லியன் மாணவர்களை இணைத்துள்ளது. ஒற்றை சிறுமியின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இந்தியாவிலும், ஏன் மதுரையில் கூட மாணவர்கள் இந்தச் சிறுமியின் அறைகூவலுக்குச் செவி கொடுத்துப் போராட்டம் செய்தார்களாம்! #fridaysforfuture என்ற ஹேஷ்டாகுடன் 150 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் களம் இறங்கியிருப்பதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கிறது. சரி, அப்புறம்?
மாற்றங்கள் நம்மிடமிருந்தே ஆரம்பமாகின்றன என்பதைப் புரிந்து கொண்டாலொழிய, சும்மா நானும் கொடி பிடித்தேன் கோஷம் எழுப்பினேன் என்கிறமாதிரி வெறும் போராட்டங்களால் மட்டுமே மாற்றங்கள் வந்து விடுவதில்லை!
மீண்டும் சந்திப்போம்.
அந்தவகையில், எப்படி நமது ராணுவமும் மாற்றங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை ராணுவத்தளபதி பிபின் ராவத் அளித்த நேர்காணலின் சாரத்தை இந்த 21 நிமிட வீடியோவில் சேகர் குப்தா சொல்கிறார். விரிவாக அச்சில் படிக்க இங்கே
தனது 2 நாள் சவூதி அரேபிய பயணத்தை முடித்துக் கொண்டு ஐநா பொதுச்சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஒப்பாரி வைப்பதற்காக பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பு இல்லை, அமெரிக்க அரசின் சார்பிலும் யாரும் வரவேற்றுப் பூங்கொத்து கொடுக்கவில்லை என்கிறது இந்த ஒன்றரை நிமிட செய்தி.
ஆனால் தன்னுடைய மதிப்பு மிக்க விருந்தாளி சாமானியனைப் போல கமெர்ஷியல் விமானத்தில் போவதா என்று தடுத்து அமெரிக்கா போக தன்னுடைய சொந்த விமானத்தைக் கொடுத்தார் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் MBS என்கிறது இந்தச் செய்தி. இம்ரான் கானுடைய UNGA ஒப்பாரியைக் குறித்து இந்தியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.இதுபோல நிறைய நாடகங்களை ஐநா பொதுச்சபையில் பார்த்தாயிற்றே என்கிறது இந்தியத்தரப்பு! மாற்றங்களை புரிந்து கொள்ளாமல், மாற்றங்களுக்குத் தயாராகவும் இல்லாத ஒரு நாடு மேலும் மேலும் சிறுமைகளைச் சந்திப்பது ஒரு ஆரம்பம் மட்டும் தான்!
மாற்றங்கள் நம்மிடமிருந்தே ஆரம்பமாகின்றன என்பதைப் புரிந்து கொண்டாலொழிய, சும்மா நானும் கொடி பிடித்தேன் கோஷம் எழுப்பினேன் என்கிறமாதிரி வெறும் போராட்டங்களால் மட்டுமே மாற்றங்கள் வந்து விடுவதில்லை!
மீண்டும் சந்திப்போம்.
>>> மாற்றங்கள் நம்மிடமிருந்தே ஆரம்பமாகின்றன என்பதைப் புரிந்து கொண்டாலொழிய, சும்மா நானும் கொடி பிடித்தேன் கோஷம் எழுப்பினேன் என்கிறமாதிரி வெறும் போராட்டங்களால் மட்டுமே மாற்றங்கள் வந்து விடுவதில்லை!..<<<
ReplyDeleteநியாயமான வார்த்தைகள்...
வாங்க துரை செல்வராஜூ சார்!
Deleteசும்மாவந்ததில்லை சுதந்திரம்ன்ற மாதிரி நானும் ஒரு காலத்தில் கொடி பிடித்துக் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்ததில் பட்டும் கெட்டும் கிடைத்த அனுபவ ஞானமாக்கும்! :-)
வித்யாசமான அத்யாவசியமான தகவல்கள். நன்றி
ReplyDeleteவாருங்கள் அம்மா! உங்கள் கல்லூரிப் பேராசிரியை M A சுசீலாவுடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறீர்களா? எப்படி இருக்கிறார்?
Delete