Tuesday, September 10, 2019

மோடி 2.0 முதல் நூறு நாட்கள்! என்ன செய்தது மத்திய அரசு?

இரண்டாவது முறையாகவும் மத்தியில் ஆட்சியமைத்த நரேந்திர மோடி அரசு தனது முதல் நூறு நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த நூறு நாட்களில் என்னென்ன சாதித்திருக்கிறோம் என்பதை இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாடியதன் வீடியோ தொகுப்பு


அமைச்சர் விலாவாரியாகச் சொல்லிக்கொள்ளா விட்டாலும், ஆட்சியமைத்த முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இரு அவைகளிலும் மிக முக்கியமான மசோதாக்களை நிறை வேற்றியிருப்பது, நூறுநாள் சாதனைகளில் மிகவும் முக்கியமான ஒன்று! அதுவும் ராஜ்யசபாவில் போதிய பலம் இல்லாத நிலையிலேயே, அருமையான floor management இல் முந்தைய ஐந்தாண்டுகளில் நிறைவேற்றமுடியாமல் கிடந்த பல மசோதாக்களை நிறைவேற்றியிருப்பதைச் சொல்லலாம். ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டவிதம் கூட மிக அருமை.


பிஜேபிகாரங்க ஆட்சியின்  நூறுநாள் சாதனைன்னு பேசினாக்க காங்கிரஸ் பதிலுக்குத் தன்னுடைய வேதனையை இப்படித் தான் வெளிப்படுத்தியாகணும்! ஆனால் திமுக கதை வேறுமாதிரியாக அல்லவா இருக்கிறது?



ரெண்டு முருகன் சமாசாரம் பார்த்து நாளாகிவிட்டதில்லையா? ஆனந்தவிகடன் தளத்தில் ஒரு சமாசாரத்தைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்!

ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த். தேர்தல் முடிவிலும் பலத்த இழுபறிக்கிடையே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றிபெற்று இதுவரை நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை. நாடாளுமன்றத்தில் இன்னும் பதவியேற்பும் செய்து கொள்ளவில்லை. ஆனால், அதற்குள் முக்கியப் பதவி ஒன்றைக் கைப்பற்றிவிட்டார், கதிர்ஆனந்த். தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்டத்துக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்கிற பதவியை தற்போது பெற்றுள்ளார், கதிர்ஆனந்த்.  கருணாநிதி கூடவே நீண்டகாலம் ஒட்டிக்கொண்டு இருந்த துரைமுருகனுக்கு இந்த சாமர்த்தியம் கூட இல்லையென்றால் எப்பூடி? !! 

படித்ததில் பிடித்தது இது! 

இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் ...சன் நியூஸ் க்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில்..அவரை தமிழன் என்று அடையாளப்படுத்தி... தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? என்று வழக்கமான வலையுடன் கேள்வி வீசப்படுகிறது.
அதற்கு...
'' முதலில் ஒன்று சொல்ல வேண்டும். நான் இஸ்ரோவில் பணியில் சேரும்போது ஒரு இந்தியனாக தான் சேர்ந்தேன். இஸ்ரோவில் அனைத்து மொழிபேசும் மக்களும் பணிபுரிகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மொழியை பேசும் மக்களோ ஒரு பகுதியை சேர்ந்த மக்களோ மட்டும் அங்கு இல்லை. நான் ..தமிழக பகுதியிலிருந்து இங்கு வந்து பணி செய்யும் ஒரு இந்தியன். அவ்வளவுதான். இதற்கு எந்த ஒரு தனி நிறம், மொழி, இனம் என்றெல்லாம் கலர் கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.''
விஷமத்தனமான & அரசியல்தனமான கேள்விக்கு ..உரிய இடத்தை காட்டிய சிறப்பான பளிச் பதில்.
Good !  

மீண்டும் சந்திப்போம்.    

10 comments:

  1. திரு சிவன் அவர்களின் பதில் சந்தோஷம் கொடுத்தது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! வீடியோவாகவே பகிர முடிந்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பீர்களா அல்லது எப்போதும்போல ஸ்கிப் பண்ணியிருப்பீர்களா? :-)))

      Delete
    2. சில விடியோக்கள் மட்டும் பார்க்கிறேன் ஸார்!

      Delete
    3. அந்த சில எவையென்று அவ்வப்போது சொன்னால்தானே எதையெல்லாம் மிஸ் பண்ணினீர்கள் என்று சொல்ல முடியும் ஸ்ரீராம்! :-)))

      Delete
  2. மற்றவர்கள் உளருவது நம்மை சந்தோஷப் படுத்ததான் என்று புரிந்து கொள்ள வேண்டும் ஜி.

    ReplyDelete
    Replies
    1. வெறுமனே உளறுவதாயிருந்தால் வெறும் காமெடி என்று போய்விடலாம் அம்மா! ஆனால் கழகங்கள் விஷம் கலந்து உளறுவதைத் தொழிலாகக் கொண்டவை!

      Delete
  3. காலையில் நீங்க வெளியிட்டு சில நொடிகளில் ட்விட்டரில் உங்களின் இந்த பதவி இணைப்பு பார்த்தேன். அலைபேசி வாயிலாக பார்த்த காரணத்தால் அப்புறம் உள்ளே வருவோம் என்று பார்த்து விட்டு அதன் பிறகு தேடத் தொடங்கினேன். ட்விட்டரில், கூகுள் வாயிலாக தேடினாலும் சிக்கவில்லை. எப்போதும் மின் அஞ்சல் வழியாக வரும். அப்படியே உள்ளே வருவேன். இன்று மாலை தான் வரும் போல. தலைப்பு மற்றும் பெயருக்கு (உங்கள் பெயர்) ஆங்கிலப் பெயர்களும் அவசியம் தேவை. அரை மணி நேரம் துழாவி உள்ளேன். காரணம் உங்கள் பதிவு மூலம் எனக்கு எப்போதும் பேஸ்புக்கில் எழுத விசயம் உடனே கிடைக்கும். எழுதியாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      என்னுடைய காலைப்பொழுது இணையத்தில் எப்போதும் 11.30 மணிக்கு மேல்தான்! ஒரு திரட்டி முடங்கியதில் அரைமணி நேரம் உங்களைத் தேட வைத்து விட்டதா? மாற்றுவழி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

      Delete
    2. எங்கள் பிளாக் ஸைட் பார் உதவுவது இல்லையா?!

      அங்கு வருவதே இல்லை என்கிறீர்களோ!

      Delete
    3. ஸ்ரீராம்! இந்தக் கேள்வி திருப்பூர்க்காரருக்குத் தானே! :-)))

      தானும் கமல்காசர் மாதிரி நடிக்கப்போயிருந்தால் என்று கௌதமன் அங்கே எபியில் கற்பனைசெய்து கொண்டிருப்பதைப் பார்த்தேனே!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)