Showing posts with label மோடி மீது பயம். Show all posts
Showing posts with label மோடி மீது பயம். Show all posts

Thursday, May 27, 2021

தமிழக சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள்!

மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா    வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும் இப்படி ஒருபாட்டு ஒன்பது ரூபாய் நோட்டு திரைப் படத்தில் வரும். மோடிக்கு எதிராக அரசியல் செய்யத் தெரியாதவர்கள் கூட அப்படி மனம் தளர்ந்து மோடி மீது வெறுப்பைக் கக்குவதே அரசியல் என்ற நிலைமைக்குப் பழகிப்போய் விட்டார்கள். விவசாயிகள் போராட்டம் என ஆரம்பித்து திக்குதிசை தெரியாமல் அந்தரத்தில் திரிகிற ஒருகூட்டத்தை, இங்கே உள்ள சில அரசியல்வாதிகள் ஆதரிக்கிற போர்வையில் மோடி மீது வெறுப்பையும் வன்மத்தையும் கக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட நாள்  மே 26. அந்த நாளுக்கு என்னவாம்?


சரக்கு, மிடுக்கு என வீரவசனம் பேசிய திருமா கூட இந்த மாதிரி சரக்கு தீர்ந்துபோன காமெடிப்பீசாகி விட்டார். 2014 இல் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்ட தினமான மே 26 ஆம் தேதியை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 

வேளாண் சட்டங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப்பார்த்து விட்டுத்தான் எதிர்க்கிறார்களா? வெறுப்பரசியல் செய்ய அதெல்லாம் தேவையே இல்லை என்பது இந்திய அரசியலின் தலைவிதி!  


3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும்! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோமென இசுடாலின் அறிவித்திருப்பதாக இந்த வீடியோ செய்தி.  அதுமட்டும் தானா?


 

இந்தமாதிரி வக்கிரமான பாடல் எழுதுகிறவருக்கு விருது! முதல்வர் பாராட்டு என்பதெல்லாம் தமிழகத்தின் சோகம்.
  


சிரிப்புத்தான் வரு.குதையா! 
இடுக்கண் வரும்போது சிரித்துத்தான் சமாளித்தாக வேண்டும்! வேறென்ன செய்ய? மேலே உள்ள ஸ்க்ரீன் ஷாட் நாச்சியாள் சுகந்தி என்பவருடைய முகநூல் பகிர்விலிருந்து எடுக்கப்பட்டது 


நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் கமல் காசர் கட்சி கரைந்து போனதும் சகாயம் என்கிற உத்தமருடைய சாயம் வெளுத்துப்போனதும் தான்! சகாயத்துடைய சாயம் தேர்தலுக்கு முன்பாகவே கடந்த ஜனவரியில் வெளுத்தது. கமல் காசர் யாருடைய B டீம்/ கைக்கூலி என்பது தேர்தலுக்குப் பின்னால் வெளுத்தது. அவரைக்  கருவேப்பிலையாகப்பயன்படுத்திக் கொள்ள அவரே யார் யாரிடம் விலைபோனார் என்பது கொஞ்சமல்ல  நிறையவே வினோதமான விஷயம்!  

மீண்டும் சந்திப்போம்.       

Monday, December 30, 2019

பிழைப்பின் பொருட்டே நரேந்திர மோடி எதிர்ப்பு!

ஒரு நல்ல ஊடகக்காரனின் பணி என்ன? ஜனங்களுக்கு முக்கியமான செய்திகளைக் கவனப்படுத்தவேண்டும் என்பது அடிப்படையானது. அவசியம் தேவைப்படுகிற இடங்களில் செய்தியை விளக்குவதும் கூட ஒரு நல்ல ஊடகக்காரன் செய்ய வேண்டிய வேலைதான்! நேர்காணல் என்று வரும்போதுகூட இந்த அடிப்படைகள் மாறுவதில்லை. கேள்விகள் கேட்பதும் கூட ஒரு தெளிவை ஏற்படுத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர, தன்னுடைய கருத்தை நேர்காணலில் அடிக்கடி குறுக்கீடாகப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தக் கூடாது. சில கிறித்தவக் கல்வி நிறுவனங்கள்  விஸ்காம் படிப்பிலும் கூட இடதுசாரி தறுதலைகளை உருவாக்கி சேனல்களில், ஊடகங்களில் ஊடுருவ விடும்போது, நாகரிகமான ஊடக நடைமுறைகள் முன்மாதிரிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்படும் என்பது தெரிந்த விஷயம் தான்.


மதன் ரவிச்சந்திரன் மாதிரி துடிப்பான இளைஞர்கள் இங்கே திராவிட சார்புள்ள, இடதுசாரி fringe  elements உருவாக்கி வைத்திருக்கிற திராவிடம் என்பது அசைக்க முடியாதது என்ற மாயையை உடைக்க முயற்சிக்கிற போது, வளரவிடாமல் அழித்து விட முயற்சிப்பதும் இயல்புதான்! புதிய தலைமுறை, காவேரி நியூஸ் சேனல் இரண்டிலும் அந்த இளைஞன் கொஞ்சம் துடிப்பாகச் செயல்பட்டதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வேலை செய்துகொண்டிருந்த சேனலை விட்டு வெளியேற்ற பழம்தின்று கொட்டைபோட்ட திராவிட சார்புள்ள சீனியர்கள் முயற்சித்ததை இந்தப் பக்கங்களிலேயே பேசியிருக்கிறோம். 

இந்த 60 நிமிட விவாதத்தில் மதன் ரவிச்சந்திரன் சில முக்கியமான விஷயங்களைக் கவனப்படுத்துகிறார். இன்றைக்கு எதிர்ப்பு நிலை எடுக்கிறவர்கள் இதற்குமுன் ஆதரித்தது முரண்பாடு இல்லையா என்பது முதலாவது. அடுத்தது நல்ல தமிழ்ப் பேச்சாளர் என்று அறியப்பட்ட நெல்லை கண்ணன் அப்பட்டமான திமுக மேடைப்பேச்சாளராகக் குறுகிப்போனதையும், தரம் தாழ்ந்து பேசியதையும் போகிறபோக்கில் விவாதத்தில் சொல்கிறார்கள். 


திமுக இந்த அளவுக்கு நரேந்திர மோடி /பாஜக எதிர்ப்பு என்று மும்முரமாக இறங்குவானேன்? இசுடாலின் மனதில் ஓடுகிற கணக்கென்ன என்பதை  துரை முருகன் கூட அறிந்திருப்பாரோ என்பதே சந்தேகம் தான்! ஆனால் மோடி எதிர்ப்பாளர்களோடு ஒட்டிக் கொள்கிறார். OMG சுனிலை விரட்டிவிட்டு IPAC பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் உத்திகளை வகுப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.இப்போது (2021இல்) இல்லையென்றால் இனி எப்போதும் முதல்வராகிற வாய்ப்பு இல்லை என்கிற தவிப்பின் வெளிப்பாடாகவே    நடப்பவைகளை அனுமானிக்க முடிகிறது.



ஆக, இசுடாலின் தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே மோடி எதிர்ப்பைக் கையில் எடுத்திருக்கிறார். கொள்கை சித்தாந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அதிமுகவை பிஜேபி காப்பாற்றி வருவதால் பிஜேபியை எதிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம்! இன்னொரு சட்டசபைத்தேர்தல் தோல்வி திமுகவைக் கரைத்துவிடும், தன்னுடைய தலைமை கேலிக்குரியதாகி விடும் என்று இசுடாலின் நினைத்தால். அதில் தவறேதுமில்லை.

மீண்டும் சந்திப்போம்        

Sunday, March 3, 2019

இன்னொரு முறையும் தேவே கவுடா பிரதமர்! நல்லாவா இருக்கு?

கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவருடைய கட்சி வருகிற தேர்தலில் 20 சீட்டு ஜெயித்தால், ஒரு  கன்னடரே பிரதமராகலாம் என்று பேசி முழுதாக 4 நாள் ஆகவில்லை! அடுத்த அரசியல் வெடியை எடுத்து வீசியிருக்கிறார்! முதலில் கன்னடர் பிரதமராவது பற்றி என்ன சொன்னார் என்று பார்த்துவிடலாமே!
நேற்று முன்தினம் மைசூரில் குமாரசாமி இன்னொரு அபசுரமாக அரசியல் வெடியை வெடித்திருக்கிறார் என்கிறது செய்தி. அவருடைய தந்தை தேவே கவுடா பிரதமராக இருந்தபோது தீவீரவாதிகள் குண்டு வெடிக்கவில்லையே யாரும் சாகவில்லையே என்று சொல்லி விட்டு ஏன் இப்போது அதெல்லாம் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.போதாக்குறைக்கு ஜம்மு காஷ்மீரில் இந்தோ பாகிஸ்தான் எல்லைக்கு திறந்த ஜீப்பில் சென்ற ஒரே பிரதமர் தேவே கவுடா என்பதையும் சொல்லியிருப்பதை என்னவென்று எடுத்துக் கொள்வது? அவர் சொன்னதை வைத்து, பாகிஸ்தானிகள் அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றும் புரிந்துகொள்ளலாம் இல்லையா?

World Economic Forum வருடாந்திரக் கூட்டம் ஸ்விஸ் நாட்டில் டாவோசில் நடப்பதை ஒட்டி வந்தவர் ரகுராம் ராஜன்  India Today TVக்கு அளித்த பேட்டியில் சில கற்பிதங்களை உடைத்துப் பேட்டி அளித்திருக்கிறார்முதலாவதாக, 2019 தேர்தலில் கூட்டணி ஆட்சி என்று வருமேயானால் இந்தியப் பொருளாதாரம் தேக்கநிலை அடையும் என்று சொல்லியிருப்பது!  இப்படி இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே எழுதியிருந்ததை  ஒரு முறை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது!   


அதோடு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூட!    
கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காத, வலிமையான மத்திய அரசை நிறுவுவதில், வாய்ப்பிருந்துமே கூடக் கோட்டை விட்டவர், இப்போதைய மாநிலக்கட்சிகளின் கூக்குரல்களுக்குக் காரணமாக இருந்தவர் தாத்தன் நேரு என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது ஜீவி சார்!

1971 போரில் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒன்றுக்குஇரண்டாக பாகிஸ்தான் தலைவலியை நிரந்தரம் தானோ என்ற அளவுக்கு வளர்த்துவிட்டவர் இந்திரா. நேரு, இந்திரா, ராஜீவ் மூவருக்கும் மெஜாரிடியுடன் வலுவான மத்திய அரசை நிருவாக கூடிய வாய்ப்பும் கிடைத்தது. என்ன நடந்தது? தெளிவான பார்வை, இலக்கு எதுவுமில்லாமல் தாங்களும் கெட்டு, தேசத்தையும் பாழடித்தார்கள்.
Defacto பிரதமராகப் பின்னிருந்து இயக்கிய சோனியா அண்ட் கோ பத்தாண்டுகளில் சாதித்தது வரிசையாக வெடித்துக் கிளம்பிய ஊழல்கள் மட்டுமே!

வாஜ்பாயிக்குக் கிடைத்த வாய்ப்பை, ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்தது

இந்தப் பின்னணியில், நரேந்திரமோடியின் முதல் ஐந்தாண்டுகளை எடைபோட வேண்டியிருக்கிறது. ஆனால் மோடிக்கெதிரான கூக்குரல்களில் எதை எடைபோட்டு, எது முக்கியமானது என்று சொல்ல முடிகிறது?

பதிவைத் தாண்டி, வாசிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டுமே என்றுதான் ரகுராம் ராஜனை முன்னிட்டு எழுதிய இந்தப்பதிவு!

மோடி மீது காங்கிரசுக்கு இருக்கிற பயம் என்னென்ன அரசியல் காமெடிகளை அரங்கேற்றிக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டிய அவசியமும் ஒரு தெளிவான நிராகரிப்பை உதிரிகளுக்கு மட்டுமல்ல, இடம் கொடுத்த காங்கிரசுக்கும் சொல்ல வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது!

 

Sunday, February 10, 2019

மாரிதாஸ் பேச்சும் எழுத்தும்! மாற்றுக்கருத்துக்கு செவி சாயுங்கள்!

இன்று இங்கே மாரிதாஸ் பேச்சும் .....

முகநூல் பக்கத்தில் நேற்று எழுதியதும்! மாற்றுக் கருத்துக்கும் கொஞ்சம் காதுகொடுங்கள்! 

"ரபேல் விமானம்" சார்ந்து தி இந்து பத்திரிக்கை & பத்திரிக்கையாளர் ராம் வெளியிடும் செய்திகள் முழுக்க தவறானது போலியாக ஜோடிக்கபட்டது என்று ஆதாரங்களுடன் தகவல்கள் வருகிறதே? தி இந்து பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் என் போன்றவர்களுக்கு தங்கள் பதில் என்ன மாரிதாஸ்? {கேள்வி: பிரியா}
எனக்குப் பிடித்த நிர்வாகியும், இந்தச் சமூகத்தினை சரியான எடைபோட்டவருமான பெஞ்சமின் பிராங்கிளின் ஒருமுறை இப்படிக் கூறுகிறார் "Half a Truth is often a great Lie". இன்று இந்த வாக்கியம் திஇந்து அதன் தலைவர் ராம் அவர்களின் பத்திரிக்கை தொழிலுக்குச் சரியாக பொருந்தும். {கட்டாயம் பெஞ்சமின் பிராங்கிளின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும். அதில் சூழ்நிலைகளை அவர் கையாளும் விதமும், தன் சக மனிதர்களை அவர் புரிந்து கொண்ட தெளிவும் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கிய பாடம்.}
சரி விசயத்திற்குள் வருவோம்:
இன்று The Hindu & ராம் தங்களது முழு மதிப்பையும் இழந்து நிற்கிறார்கள். இந்தச் செய்தித்தாளினை வாங்குவதை, இதன் செய்தி படிப்பதையும் அனைவரும் நிறுத்திவிடுவது என்னைக் கேட்டால் வீட்டுக் குழந்தைகளுக்கு நல்லது. ராம் தன்னுடைய வழக்கமான உண்மையைத் திரிக்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு படி மேலே சென்று அவதூறு பரப்புவதைத் தாண்டி கூச்சம் இல்லாமல் முழு உண்மை மறைக்கும் வேலையைச் செய்துவிட்டு "உண்மை ஆராய வேண்டும்" என்று தந்திரமாக நழுவுகிறார்.
அதுவும் இதைத் தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்துடனே வெளியிட்டுள்ளார். இவர் நரேந்திர மோதி எதிர்ப்பில் செய்வதாக சிலர் நினைக்கலாம். அப்படி அல்ல. தி இந்து ராம் பொதுவாக இந்த இந்தியாவை விடச் சீனாவுக்கு நல்ல விசுவாசி என்பது என் கருத்து. அவருக்கு இங்கே தி இந்து என்ற பத்திரிக்கை வியாபாரம் இருக்கு அவ்வளவு தான் மற்றபடி இந்த நாட்டை உடைக்க இந்த நாட்டின் ஒற்றுமையைக் கெடுக்க என்ன செய்யலாம் என்ற சீனாவின் எண்ணம் தான் ஓய்வில்லாத சிந்தனையாக உள்ளது பலகாலமாக. அதை நான் நன்கு பல நேரம் உணர்ந்தவன். சர்வதேச ஊடகங்கள் பலவற்றுடன் இணைந்து இதைச் செய்துகொண்டுள்ளார்.
இன்று அதன் உட்சபட்ச முகத்தைக் காட்டியுள்ளார் ராம் அவ்வளவு தான். அவருக்கு இந்தியா பிடிக்கவில்லை, இந்தியன் பிடிக்கவில்லை, இந்து பிடிக்கவில்லை அதனை நேசிக்கும் எவரையும் பிடிக்கவில்லை. அந்த இந்தியன் இந்து என்ற சிந்தனையை முழுமையாக உடைக்க வேண்டும் என்று கஷ்டப்படுகிறார்.
தி இந்து பத்திரிக்கையை மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று என்னைக் கேட்டால் சில எடுத்துக்காட்டு உங்களுக்கு:
1) சுவாதி படுகொலை செய்யப்பட்ட நேரம். பெரும் விவாதமாகிக் கொண்டிருந்த நேரம். ஒரு கட்டத்தில் அது பட்டியலினத்து சமூகம் ராம் என்றும் சுவாதி ஜாதியும் பிடித்து சாதிய விசயமாக உருமாறிக் கொண்டிருந்தது. அப்போது "35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரபரப்பில் மீனாட்சிபுரம்" என்ற கட்டுரையை தி இந்து வெளியிட்டது. நாள்: 03-07- 2016.
அந்தக் கட்டுரையில்
மதம் மாறிய சுலைமான் கூறும்போது, “மேல் வர்க்கத்தினரின் அடக்குமுறை காரணமாக ஒட்டுமொத்தமாக மதம் மாறினோம். மதம் மாறிய பிறகு எங்களது மரியாதை உயர்ந்துள்ளது. முன்பு எங்களை மேல்வர்க்கத்தினர் வா, போ என மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். இப்போது வாங்கள், போங்கள் என மரியாதையாகப் பேசுகிறார்கள். எங்களது வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்."
இந்தப் பகுதி திட்டமிட்டு சொருகப்பட்டிருக்கும். கொலை நடந்ததிற்கும் - கொலைக்குக் காரணமான ராம் மீனாட்சிபுரம் சார்ந்தவர் - அந்தக் கிராமம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த முக்கிய நிகழ்வுக்கும் தொடர்பு படுத்தலாம். தவறல்ல ஆனால் அந்தச் செய்தியை அந்த அதிர்வைப் பயன்படுத்தி மதம் மாறியதால் தான் நாங்கள் மரியாதையாக நடத்தப்படுகிறோம் என்ற சொருகல் எதற்கு???
இது எதனால் செய்தார்கள்? அதற்கு பதில் வேண்டும் என்றால் அடுத்த 20 நாட்களில் வந்த இன்னொரு செய்தியை பார்க்க வேண்டும் அது "வேதாரண்யம் அருகே கோவில் வழிபாட்டு பிரச்சனையில் 250 தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற முடிவு" என்று செய்தி. இதை தான் தூண்டிவிட நினைத்தார் ராம் அதை செய்தார்.
இது இதான் தி இந்து செய்யும் வேலை.... எந்தப் பரபரப்பு செய்தியில் எதைத் திணிக்கலாம் என்று கொஞ்சம் கூடக் கூசாமல் தந்திரம் செய்யும் கூட்டம் இது.
2) பக்கத்து நாடுகளின் ஆதரவை இழக்கிறோமா? அப்படி ஒரு ஆர்டிக்கல். நாள்: 30-08-2017, இதை எழுதியவர் சுஹாசினி ஹைதர். {எனக்குத் தெரிந்து ஒரு நாளு இல்லை ஐந்து விசயங்களை வைத்துக் கொண்டு 50,60 கட்டுரைகள் அதைச் சுற்றியே விதவிதமாக எழுதி பத்திரிக்கையாளராக சொல்லி இந்திய அரசு நடவடிக்கைகளை எழுதும் நபர்.}
அதில் விசயம் என்னவென்றால் "இலங்கை ஹம்பனதோட்டத் துறைமுகக் கட்டுமானத் திட்டத்தைச் சீனா கைபற்றிவிட்டது. இது நரேந்திர மோதி அரசு தவறாக செல்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கி இருப்பர்". இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த projects எடுத்துச் செய்ய ஆகும் செலவு குறைந்தது 28,000கோடி. அது அல்ல பிரச்சனை. ஆனால், அதை எடுத்தால் இங்கே செய்தி என்னவாக இருக்கும்? இலங்கை தமிழர்களைக் கொலை செய்கிறார்கள் - மோடி அரசு இலங்கைக்குத் துறைமுகம் கட்ட 28,000கோடி கொட்டி செலவு செய்கிறது? இது தமிழர்களின் மனதைக் காயப்படுத்துகிறது - என்று செய்தியை அப்படியே திரித்திருப்பர்.... ஆனந்த விகடன் எல்லாம் நான்கு பக்கத்துக்குச் சிறப்பு தொகுப்பே போட்டுவிடுவார்கள். அதில் விசேசம் என்னவென்றால் "அடுத்து சீனாவை ராஜதந்திரரீதியில் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும் இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அப்பட்டமாகச் சீனாவுக்கு பல்லக்கு தூக்கும் வேலையை வெளிப்படையாக தி இந்து எழுதியிருக்கும்.
மக்கள் மத்தியில் எப்படி தவறாக பிம்பத்தை உருவாக்குவது என்று தி இந்து அதன் கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம், சீனாவின் அடிமைகள் கூட்டம் எப்படியாவது இந்த மோடி அரசைக் கலங்கப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதற்கும் இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
3) நரேந்திர மோடி தலைமையிலான அரசு விளம்பரத்திற்கு ₹1,285 கோடி செலவு செய்துள்ளது RTI மூலம் வெளியாகியுள்ளது. இது 2017ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான செய்தி. இதே செய்தி அதே ஆண்டு டிசம்பரில், அடுத்து 2018 ஆம் ஆண்டு இரு முறை, "3,755 கோடி செலவு" , "4,300 கோடி செலவு" என்று செய்தி கிடைக்காத தகவல் கிடைத்தது போல் வெளியிட்டது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இதே செய்தியை Business Daily, தமிழ் இந்து, Frontline என்று தனது பிற செய்தி நிறுவனங்கள் வழியாகவும் வெளியிடப்பட்டது.
இதன் இடையே இதே செய்தியை NDTV போன்ற இன்னும் சில இடதுசாரி பத்திரிக்கைகள் சுமார் 20க்கும் மேற்பட்டவை வித விதமாக அடுத்த அடுத்த மாதங்கள் சரியான இடைவெளியில் வெளியிட்டன. ஆகக் கடந்த 3 வருடமாக இந்தச் செய்தி 2.3 மாதம் ஒருமுறை இல்லை விவாதம் ஆக்கவேண்டும் என்ற விதமாக வெளியிட்டுவந்தன. இதில் தவறு இல்லை. ஆனால் இவர்கள் வெளியிட மறுத்த உண்மை என்னவென்றால்... எதற்காக செலவிடப்பட்டது? எப்படிச் செலவிடப்பட்டது என்பது தான். பலமுறை நான் இதைத் தீவிரமாக எதிர்த்துள்ளேன்.
எந்த டீவி மீடியா மக்கள் நலத்திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக வேலை செய்யும்? தி இந்து ராம் இலவசமாக விளம்பரம் செய்வாரா அரசின் திட்டத்தை? இல்லை அவர் மகள் லண்டன் Global Markets பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு இங்கே இந்தியாவில் வந்து சேவை செய்வாரா இலவசமாக? ஆக மக்களுக்குத் திட்ட விவரங்களைக் கொண்டு செல்ல அரசு விளம்பரம் செய்வது ஆக அவசியமான தேவை. அது முறையாக நடக்கிறதா என்று விரிவாக ஒரு ஆய்வு அல்லவா ஒரு பத்திரிக்கை செய்தியாக இருக்க வேண்டும்? தி இந்து ராம், NDTV இவை எல்லாம் இதைச் செய்ய விரும்பவில்லை. ஏன் என்றால் இது பத்திரிக்கைகளே கிடையாது, குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தம் மனதில் வைத்துக் கொண்டு செய்யும் உள்ளடிவேலைகள் தவிர வேறு இல்லை.
கொடுமை என்னவென்றால் அரசு விளம்பரத்தில் லாபம் ஈட்டுவதே இவர்கள் தான். அரசு விளம்பரத்தையும் வாங்கிக்கொண்டு அதன் லாபத்தையும் திண்றுவிட்டு - அந்த விளம்பரத்தைச் செய்ததையே ஒரு செய்தியாக எதிர்மறையாகக் கொண்டு சேர்க்கும் அந்த கீழ்த்தரமான செய்தி திரிக்கும் புத்தி இருக்கே அது தான் தி இந்து.
எப்ரல் 2017ல் இந்திய ராணுவம் பாக்கிஸ்தான் எல்லையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டிருந்த நேரம் - போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் போது தி இந்து அந்தச் செய்தியின் இடையே வழக்கம் போல இரு பகுதியை இணைத்தார்கள். அதில் சொல்லப்பட்ட செய்தி "பொதுமக்கள் வெளியேற்றிய ராணுவம் அவர்கள் அன்றாட வேலைவாய்ப்பும் வருமானத்தையும் கணக்கில் கொள்வது இல்லை" என்ற ரீதியில் அந்த பகுதியைக் கோர்த்துவிட்டிருந்தது. ராணுவம் பாக்கிஸ்தான் இந்தியா என்று நாட்டு பற்று எங்கே வருமோ அந்த இடத்தில் இந்தவிதமான இடைச்செய்திகளை இணைத்து அழகாக மட்டப்படுத்தி அந்த இடத்தில் ராணுவத்தினைக் கேள்வி எழுப்பும் வேலையை திஇந்து அழகாக இழுத்துவிட்டுச் செய்யும் எப்போதுமே.
தி இந்து எந்த அளவிற்கு இந்தச் சமூகத்தில் தன் தந்திரமான வெக்கம்கெட்ட நரிதனத்தை காட்டுகிறது என்று, இப்படி என்னால் பல நூறு ஆதாரங்களைக் கொண்டு வர முடியும். அது பத்திரிக்கை சுதந்திரம் என்று ஏன் எடுக்கமுடியவில்லை என்றால் - தனிநாடு கோரும் (ஸ்பெயின்) கேட்டலோனியா விவகாரம் பற்றி வக்காலத்து வாங்கும் விதமாகக் கட்டுரைகள் பல எழுதியுள்ள இதே தி இந்து என்றாவது சீனா ஆக்கரமிப்பில்லுள்ள திபத் பற்றி வாய் திறக்குமா? கிடையாது!! வாய்ப்பே இல்லை. தி இந்து இல்லை ராம் இல்லை அதன் எந்த பிற செய்தி ஊடகவாயிலாகவும் திபத் மக்கள் குரல் வெளியிடப்படாது.
திபத் மட்டும் அல்ல மன்கோலியா, தைவான், ஜிங்ஜியாங் என்று எதைபற்றியுமே தி இந்து எழுதுவதில்லை. ஜிங்ஜியாங் இஸ்லாமியர்களுக்குச் சீனாவின் கம்யுனிஸ்ட் அரசு கொடுக்கும் மனித உரிமை மீறல்கள் சார்ந்து வாயைத் திறக்க கூறுங்கள் இந்த NDTV முதல் தி இந்து வரை? மாட்டார்கள்!
இறுதியாக :
தி இந்து, The Hindu (English), Business Daily, Frontline, Indian Express, NDTV இப்படி ஒரு கூட்டமே இங்கே உள்ளது. அதே போல் தமிழகத்தில் பெரும்பாலான செய்து ஊடகங்களில் இடதுசாரி சிந்தனையாளர்கள் தான் பொறுப்பில் இருப்பர். இந்த பெரும் கூட்டமே இன்று நேற்று அல்ல காலம் காலமாகச் செய்தி துறையைக் கையில் வைத்திருக்கிறார்கள். இதன் பலத்துடன் அரசு பொது துறை நிறுவனங்களை நாசம் செய்தது போதாதென்று நாட்டின் பிரிவினைக்கும் மறைமுகமாக வேலை செய்வர்.
ஆகச் செய்தி நிறுவனங்களில் வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களையும் சராசரி மீம்ஸ் கிரியேட்டர்களையும் பெரிய வித்தியாசம் பார்க்க தேவை இல்லை. உணர்வைத் தூண்டும் விதமாகச் செய்தி இருக்க வேண்டும் அவ்வளவு தான். அதை ஆராயும் அளவுக்கு எல்லாம் 99% பத்திரிக்கையாளர்களுக்கு நேரம் இல்லை என்பதை விட ஆர்வமோ அக்கறையோ இல்லை என்பது தான் உண்மை. அதை விட அசைக்க முடியாத உண்மை அவர்கள் பெரும்பாலும் சில அரசியல் கட்சிக்கு வேலை செய்கிறார்கள் எனவே தாங்கள் செய்தி வெளியிடுவதை விட தங்கள் எண்ணத்தை மக்களிடம் பரப்ப விரும்புகிறார்கள் என்று தான் கூறவேண்டும்.
கம்யுனிஸ்ட்களுக்கு உத்தரவுகள் இந்த நாட்டின் வெளியில் இருந்து வருகிறது அது நாட்டிற்கு நல்லதல்ல எனவே கம்யுனிஸ்ட் நம்பகமானவர்கள் அல்ல இது காந்தி இவர்களைப் பற்றி கூறிய அசைக்க முடியாத உண்மை. இது இன்றும் 100% பொருந்தும். படித்த நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஊடக சுதந்தரம் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் - தனிச் சட்டம் இயற்றி இந்தச் செய்தி ஊடகங்களைக் கொஞ்சம் ஒடுக்குவது நல்லது.
-மாரிதாஸ்

Monday, February 4, 2019

CBI அமைப்பே அரசியல்சாசனப்படி செல்லுபடியாகக் கூடியதா ?

பதிவின் தலைப்பாக வைத்திருக்கிற கேள்விக்கு இங்கேயே பதிலும் இருக்கிறது! ஊடகங்களில் வருகிற செய்தியை அப்படியே நம்பிவிட வேண்டாமென்பதற்கு இன்றைக்கு சூடாகிவரும் தேர்தல், அரசியல் களங்களைப்  பார்த்தாலேயே புரிந்து கொள்ளமுடிகிற விஷயங்களே ஒரு நல்ல உதாரணமாக இருப்பதை அறிந்திருக்கிறீர்களா?

வரம்புகள்  என்று சிபிஐ அதிகார வரம்பைப் பற்றி வைகுண்டராஜன் சேனல் வழக்கம்போலவே அரைகுறையான உண்மை பேசுவதை இந்தச் சிறு வீடியோவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்! முழுப்பொய்யை விட அரைகுறை உண்மைகள் அதிக ஆபத்தானவை. நிறையச் சேதம் விளைவிப்பவை.


இவர்கள் முடியாது,முடியாது என்று நீட்டி முழக்கும் இத்தனை விஷயங்களும், சாரதா   சிட் ஊழலில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீதான விசாரணைக்கு முகாந்திரமே, இந்த ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு 2014 இல் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு தான் என்பதில் அடிபட்டுப் போவதை யார் கவனிக்கப் போகிறார்கள்? கேள்வி கேட்கப் போகிறார்கள் என்கிற அலட்சியம் தவிர, வேறென்ன காரணம் இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்? 


2016இல் இப்படிப் பேசிய ராவுல் பாபாவுக்கு இப்போது வேறவாயில பேசவேண்டுமெனத் தோன்றியிருக்கிறது!
I spoke with Mamata Di tonight and told her we stand shoulder to shoulder with her. The happenings in Bengal are a part of the unrelenting attack on India’s institutions by Mr Modi & the BJP. The entire opposition will stand together & defeat these fascist forces.

அதிலும் கடைசி வரி திமுகவின் இசுடாலின் வசனத்தை அப்படியே காப்பியடித்து! இந்த அரசியல் கூத்துகளை

மீண்டும் மீண்டும் கலகக் குரல்கள்! அரசியல் களம் இன்று! பகிர்வில் சுருக்கமாக எழுதியிருந்தேன்

 

இந்தப்படத்தில், பதிவின் தலைப்பாக வைத்திருக்கிற கேள்விக்கு பதில் இப்படி இருக்கிறது 

ஆநம்பமான இடம்! கௌஹாத்தி உயர்நீதிமன்றம் அதிரடியாக 2013 இல் CBI அரசியல் சாசனப்படியான அமைப்பே அல்ல என்று ஒரேபோடு போட்டது.

உச்சநீதிமன்றத்துக்கு அன்று ஓடிப்போய் தடைவாங்கியது காங்கிரஸ் ஆட்சியாளர்கள்! இன்று ஆட்சியில் இல்லாதபோது அப்படியே மாற்றிப்பேசுவது .............

வெறும் குப்பை அரசியல்!

மம்தாவுக்கோ, மோடியிடம் பயந்து ஆதரவுக்கரம் நீட்டிவருகிற அரசியல் கட்சிகளுக்கோ உச்சநீதி மன்றத்தில் CBI சட்டப்படி செல்லுபடியாகக் கூடிய அமைப்புதானா என்றொரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியாதா?  அங்கே போய்ப் போராடினால், CBI அந்தஸ்து வேண்டுமானால் தெளிவாகலாம்!

தெருவில் இறங்கி குழாயடிச்சண்டை போட்டால், வீராங்கனை பட்டம், ஏமாந்த சோணகிரிகளிடம் வாக்கு, கேள்விகேட்பாரில்லாமல் ஊழல் செய்ய இடம் என்று ஏகப்பட்டது கிடைக்குமே!

அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!

இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குகிற தெளிவு நமக்கு என்றைக்கு வரும்?

              

       

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)