ஒரு நல்ல ஊடகக்காரனின் பணி என்ன? ஜனங்களுக்கு முக்கியமான செய்திகளைக் கவனப்படுத்தவேண்டும் என்பது அடிப்படையானது. அவசியம் தேவைப்படுகிற இடங்களில் செய்தியை விளக்குவதும் கூட ஒரு நல்ல ஊடகக்காரன் செய்ய வேண்டிய வேலைதான்! நேர்காணல் என்று வரும்போதுகூட இந்த அடிப்படைகள் மாறுவதில்லை. கேள்விகள் கேட்பதும் கூட ஒரு தெளிவை ஏற்படுத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர, தன்னுடைய கருத்தை நேர்காணலில் அடிக்கடி குறுக்கீடாகப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தக் கூடாது. சில கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் விஸ்காம் படிப்பிலும் கூட இடதுசாரி தறுதலைகளை உருவாக்கி சேனல்களில், ஊடகங்களில் ஊடுருவ விடும்போது, நாகரிகமான ஊடக நடைமுறைகள் முன்மாதிரிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்படும் என்பது தெரிந்த விஷயம் தான்.
மதன் ரவிச்சந்திரன் மாதிரி துடிப்பான இளைஞர்கள் இங்கே திராவிட சார்புள்ள, இடதுசாரி fringe elements உருவாக்கி வைத்திருக்கிற திராவிடம் என்பது அசைக்க முடியாதது என்ற மாயையை உடைக்க முயற்சிக்கிற போது, வளரவிடாமல் அழித்து விட முயற்சிப்பதும் இயல்புதான்! புதிய தலைமுறை, காவேரி நியூஸ் சேனல் இரண்டிலும் அந்த இளைஞன் கொஞ்சம் துடிப்பாகச் செயல்பட்டதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வேலை செய்துகொண்டிருந்த சேனலை விட்டு வெளியேற்ற பழம்தின்று கொட்டைபோட்ட திராவிட சார்புள்ள சீனியர்கள் முயற்சித்ததை இந்தப் பக்கங்களிலேயே பேசியிருக்கிறோம்.
இந்த 60 நிமிட விவாதத்தில் மதன் ரவிச்சந்திரன் சில முக்கியமான விஷயங்களைக் கவனப்படுத்துகிறார். இன்றைக்கு எதிர்ப்பு நிலை எடுக்கிறவர்கள் இதற்குமுன் ஆதரித்தது முரண்பாடு இல்லையா என்பது முதலாவது. அடுத்தது நல்ல தமிழ்ப் பேச்சாளர் என்று அறியப்பட்ட நெல்லை கண்ணன் அப்பட்டமான திமுக மேடைப்பேச்சாளராகக் குறுகிப்போனதையும், தரம் தாழ்ந்து பேசியதையும் போகிறபோக்கில் விவாதத்தில் சொல்கிறார்கள்.
திமுக இந்த அளவுக்கு நரேந்திர மோடி /பாஜக எதிர்ப்பு என்று மும்முரமாக இறங்குவானேன்? இசுடாலின் மனதில் ஓடுகிற கணக்கென்ன என்பதை துரை முருகன் கூட அறிந்திருப்பாரோ என்பதே சந்தேகம் தான்! ஆனால் மோடி எதிர்ப்பாளர்களோடு ஒட்டிக் கொள்கிறார். OMG சுனிலை விரட்டிவிட்டு IPAC பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் உத்திகளை வகுப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.இப்போது (2021இல்) இல்லையென்றால் இனி எப்போதும் முதல்வராகிற வாய்ப்பு இல்லை என்கிற தவிப்பின் வெளிப்பாடாகவே நடப்பவைகளை அனுமானிக்க முடிகிறது.
ஆக, இசுடாலின் தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே மோடி எதிர்ப்பைக் கையில் எடுத்திருக்கிறார். கொள்கை சித்தாந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அதிமுகவை பிஜேபி காப்பாற்றி வருவதால் பிஜேபியை எதிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம்! இன்னொரு சட்டசபைத்தேர்தல் தோல்வி திமுகவைக் கரைத்துவிடும், தன்னுடைய தலைமை கேலிக்குரியதாகி விடும் என்று இசுடாலின் நினைத்தால். அதில் தவறேதுமில்லை.
மீண்டும் சந்திப்போம்
அடுத்த சில வாரங்கள் முழுக்க உங்கள் பதிவில் இதுவரையிலும் கொடுத்துள்ள அனைத்து விவாதங்களையும் காண்பது தான் என் முக்கிய பணியாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். பாஜக மிகச் சரியாக 2020 செயல்பட்டால் இந்தியாவில் உள்ள பிழைப்புவாதிகள் அனைவரும் அடையாளம் தெரியாமல் மறைந்து விடுவார்கள். பார்க்கலாம். 2020 உங்கள் எண்ணம் நிறைவேறக்கூடிய ஆண்டாக மலரட்டும். என் முன்கூட்டிய வாழ்த்துகள்.
ReplyDeleteஜோதி ஜி! நான் பிஜேபி ஆதரவாளன் இல்லை என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்!
Deleteபிஜேபியைக் குறித்து எனக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பு அல்லது ஏமாற்றங்கள் எதுவுமில்லை. ஆனால் நரேந்திர மோடி என்கிற மனிதர் மீது கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த இரண்டுவரிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
//2020 க்குள் உங்கள் எண்ணம் நிறைவேறக்கூடிய ஆண்டாக// ஏற்கெனெவே உங்களுக்கு ஒரு பதிலாகச் சொன்னபடி it is a tall order நிர்வாகம் நீதித்துறை அரசியல்களம் என்று எல்லாவற்றிலும் களையெடுத்தாக வேண்டும். அது 2020 க்குள் சாத்தியமாகுமா? களையெடுக்கிற வேலையை ஆரம்பித்து விட்டார்களா?
ஆனால் நரேந்திர மோடி என்கிற மனிதர் மீது கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது
ReplyDeleteஇது தான் என் எண்ணமும்.
நிச்சயமாக அமித்ஷா நினைத்தால் வாய்ப்புள்ளது.
காலம் மாதிரி மாற்றங்களைச் சாதிக்கக் கூடிய கருவி வேறொன்றில்லை ஜோதிஜி! இந்திய அரசியல் களம் மாற்றங்களை எதிர்கொள்ளும் காலம் நெருங்கிவிட்டதென்றே தோன்றுகிறது. மோடியோ அமித் ஷாவோ எவராய் இருப்பினும் மாற்றத்திற்கான கருவிதான்
Delete